மத்திய மற்றும் மாநில அரசு சின்னங்களை தவறாக உபயோகப்படுத்துபவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். பதவியில் இல்லாத முன்னாள் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அரசு சின்னத்தை எந்த காரணத்திற்காகவும் பயன்படுத்தக்கூடாது. அதை மீறிப் பயன்படுத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக டிஜிபி கூறியுள்ளார். இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதிகள், அதிகாரிகள், தங்களின் வாகனம் விசிட்டிங் கார்டுகள், லெட்டர் பேடுகளில் அரசு சின்னங்களை உபயோகப்படுத்தக் கூடாது. […]
Tag: மத்திய மாநில அரசு
கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவியதை அடுத்து பல்வேறு சுகாதார நடவடிக்கை மாற்றங்களை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா குறித்து மத்திய மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் நோய் தொற்றை எதிர்த்து போராடக்கூடிய உடல் ஆரோக்கியத்திற்கு பயன் அளிக்கும் ஊட்டச்சத்து உணவு வகைகளையும் பட்டியலிட்டு வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் இவ்வாறான உணவு முறைகளை மேற்கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்பதை தெரிவித்துள்ளது. அதன்படி, பள்ளி மதிய உணவில் […]
புதுச்சேரியில் பஞ்சு ஆலைகளை மூடும் அறிவிப்பை மத்திய மாநில அரசுகள் திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் நூற்றாண்டு பழமைவாய்ந்த ஏ.எஃப்.டி சுதேசி மற்றும் பாரதி பஞ்சு ஆலைகள் இயங்கி வந்தன. கடந்த சில ஆண்டுகளாக நிதி நெருக்கடியால் பஞ்சு ஆலைகளை இயக்க சிரமம் ஏற்பட்டதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏ.எஃப்.டி பஞ்சு ஆலையை முற்றிலும் மூட அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் […]
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. விவசாயிகளின் விளை பொருட்கள் வர்த்தக மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா, விளைபொருள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மசோதா ஆகிய மூன்று மசோதாக்கள் நாடாளுமன்ற மக்களவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டன. இவை விவசாயிகளுக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வேளான் மசோதாக்களை மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோவர் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாக்கள் […]