மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 5 மீனவர்கள் உட்பட 12 மீனவர்கள் இலங்கை கடற்பறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மீனவர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை […]
Tag: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
உக்ரைனில் இருந்து மீட்கப்படும் இந்திய குடிமக்களை வெளியேற்ற உதவுவதற்காக 24×7 கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உக்ரைனில் சிக்கியுள்ள தனது நாட்டு மக்களை மீட்பது தான் இந்தியாவைப் பொறுத்தவரை தற்பொழுது பெரிய சவாலாக மாறி இருக்கிறது. உக்ரைனில் 16 ஆயிரம் இந்தியர்கள் மற்றும் மாணவர்கள் சிக்கி இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் உக்ரைனின் வான் பகுதி மூடப்பட்டதால் இந்தியர்கள் ருமேனியா மற்றும் ஹங்கேரி எல்லைகளுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இதனை தொடர்ந்து அங்கிருந்து தலை நகரங்களான முறையே […]
மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், மெக்சிகோ வெளியுறவு அமைச்சரை நேரில் சந்தித்து கலந்துரையாடினர். மெக்சிகோவிற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 3 நாள் பயணமாக சென்றுள்ளார். இவர் வட அமெரிக்கா நாடு ஒன்றிற்கு பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதல்முறையாகும். மேலும் இந்திய வெளியுறவுத் துறை மந்திரிகளில் கடந்த 41 ஆண்டுகளில் அங்கு சென்றிருப்பதும் இதுவே முதல் முறையாகும். இந்நிலையில் நேற்று முன்தினம் மெக்சிகோ சிட்டியில் அந்நாட்டின் வெளியுறவு துறை மந்திரி மார்செலோ எப்ரார்ட் கசாபனை இந்திய மத்திய […]
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்ய பயணத்திற்கு முன்பாக நேற்று ஈரானுக்கு சென்றுள்ளார் . மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறைபயணமாக ரஷ்யா செல்கிறார் . ஆனால் அதற்கு முன்பாக அமைச்சர் ஈரானுக்கு சென்றுள்ளார்.அவரை அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் சாரிஃப் வரவேற்றார். அதன் பிறகு ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் அதிகாரிகளுடன் உரையாடினார். இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் […]