கேரளாவில் முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் போன்றோருக்கு உடனடியாக கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கேரளாவில் மீண்டும் கொரோனா கண்காணிப்பு பிரிவு தொடங்கப்பட்டது. மேலும் கூட்ட நெரிசலான பகுதிகளில் முக கவசம் அணிய அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
Tag: மந்திரி
ஜப்பானில் புகுஷிமா மற்றும் பிற பேரிடர் பாதித்த பகுதிகளின் மறு சீரமைப்பு துறையின் மந்திரியாக இருந்தவர் கென்யா அகிபா. இவர் அரசியல் மற்றும் தேர்தல் நிதிகளை தன்னுடைய சொந்த தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் புமியோ கிஷிடா, கென்யா அகிபாவை மந்திரி பதவியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளார். இதனை தெரிந்து கொண்ட கென்யா அகிபா நேற்று பிரதமரை சந்தித்து தன்னுடைய ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் புமியோ […]
இலங்கை மந்திரி நிமல் சிறிபால டி சில்வா இந்தியா மற்றும் இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். இந்த கப்பல் சேவையானது புத்தகயா செல்லும் யாத்திரீகர்களுக்கும் வர்த்தக பயணங்களை மேற்கொள்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என அவர் கூறியுள்ளார். இது குறித்து கொழும்புவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வருகிற ஜனவர் மாத மத்தியில் இருந்து இந்த திட்டத்தின் முதற்கட்டமாக இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கும், பாண்டிச்சேரிக்கும் இடையான கப்பல் […]
சிவமெக்காவில் நேற்று முதல் மந்திரி பசவராஜ் பொம்மை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, கர்நாடகத்தின் வக்பு வாரிய தலைவர் முஸ்லிம் பெண்களுக்காக 10 கல்லூரிகள் திறக்கப்படுவதாக கூறியுள்ளார். இது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும். ஆனால் முஸ்லிம் பெண்களுக்காக 10 கல்லூரிகள் திறக்கும் திட்டம் தற்போது இல்லை. மேலும் ஹிஜாப் பிரச்சனைக்கு பின் கல்வி நிலையங்களுக்கு வருகின்ற முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக சொல்வது உண்மை இல்லை. ஏனென்றால் முஸ்லிம் பெண்களின் வருகை வழக்கம் போல தான் […]
கலை நிகழ்ச்சியில் மந்திரி ரோஜா மேடையில் ஏறி நடனமாடிய விடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆந்திர மாநில அமைச்சரவையில் ரோஜா கலாச்சாரம், சுற்றுலா மற்றும் இளைஞர் மேம்பாட்டு மந்திரியாக இருக்கிறார். இந்நிலையில் சுற்றுலாத்துறை சார்பாக நேற்று திருப்பதியில் வைத்து நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் ரோஜா கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு ரசித்தார். இதனையடுத்து மந்திரி ரோஜா கலை நிகழ்ச்சியை பார்த்துக் […]
ஆட்டோ குண்டுவெடிப்பு சம்பவத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக முதல் மந்திரி தெரிவித்துள்ளார். மங்களூருவில் நேற்று முன்தினம் மாலை ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து முதல் மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று நிபுணர்களிடம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் இந்த […]
இங்கிலாந்தில் போரீஸ் ஜான்சனுக்கு பின் பிரதமராக கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்ட லிஸ்ட்ரஸ் அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண்ணான சுவில்லா பிரேவர் மேன் உள்துறை மந்திரி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் மந்திரியான பெண் அவர் அளித்த பேட்டி இந்தியா உட்பட சர்வதேச அரங்கில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. அதாவது அவர் அளித்த பேட்டியில் விசா காலகெடு முடிவடைந்த பின்பும் இங்கிலாந்தில் தங்கி இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும் இங்கிலாந்து […]
இலங்கை மந்திரியான டயானா கேமேஜ் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவராக இருப்பினும் இலங்கை பாஸ்போர்ட் வைத்திருக்கின்றார். இந்த நிலையில் சமீபத்தில் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் எம் பி ஆவதை தடை செய்வதற்கான அரசியல் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து டயானா காமெேஜுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயா கொழும்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த நிலையில் அதனை விசாரித்த தலைமை மாஜிஸ்திரேட் டயானா கேமேஜ் எப்படி இலங்கை பாஸ்போர்ட் பெற்றார் […]
கர்நாடக மந்திரி ஒரு பெண்ணை கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கர்நாடக வீட்டு வசதி துறையில் மந்திரியாக பணியாற்றி வரும் சேமண்ணா சாம்ராஜ் நகர் மாவட்ட பொறுப்பு மந்திரி ஆகவும் இருக்கின்றார். இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன் குண்டலுப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது மந்திரி சேமண்ணா ஒரு பெண்ணை கன்னத்தில் அடித்துள்ளார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு […]
இலங்கையில் மீண்டும் மஹிந்த ராஜபக்சே பிரதமராக வாய்ப்பு இருக்கிறது என்று மந்திரியான லோகோன் ரத்துவதை கூறியிருக்கிறார். நிதி நெருக்கடி இலங்கை நாட்டையே மொத்தமாக புரட்டிப் போட்டது. இதனால், மக்கள் பணியிழப்பை சந்தித்ததோடு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, அதிகபட்சமான விலை ஏற்றம் என்று கடுமையாக பாதிப்படைந்தார்கள். மேலும் அரசாங்கத்தை எதிர்த்து தீவிரமாக போராட்டம் நடத்தினர். எனவே, அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே மற்றும் அதிபர் கோட்டபாய ராஜபக்சே இருவரும் ராஜினாமா செய்தனர். எனவே, அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை […]
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் முதல் முறையாக நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் அதனை முடித்துக் கொண்டு ஆஸ்திரேலியா நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி அந்த நாட்டின் கேன்பெர்ராவுக்கு அவர் இன்று சென்றடைந்திருக்கின்றார். இந்த நிலையில் அவருக்கு இந்தியாவின் மூவர்ண கொடியின் வண்ணம் வெளிப்படும் விதமாக நாடாளுமன்ற இல்லம் ஒளியூட்டப்பட்டு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. இது பற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டிருப்பதாவது மூவர்ண வரவேற்புடன் கேன்பெர்ரா வந்தடைந்து இருக்கின்றேன். ஆஸ்திரேலியாவின் பழமையான நாடாளுமன்ற இல்லம் […]
அமுல் மற்றும் பல கூட்டுறவு சங்கங்கள் இணைக்கப்படும் என மத்திய உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்திற்கு 3 நாள் பயணமாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வந்துள்ளார். இதனையடுத்த அவர் வடகிழக்கு கவுன்சிலின் 70-வது மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இயற்கை விவசாயம் மற்றும் டிஜிட்டல் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது. இந்நிலையில் அமுல் உள்ளிட்ட பல கூட்டுறவு சங்கங்களை இணைத்து பல மாநிலங்களில் கூட்டுறவு சங்கம் […]
உத்திரபிரதேசத்தின் லக்னோ நகரில் 81 வது வருடாந்திர இந்திய சாலைகள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது நான் யோகிஜிக்கு வாக்குறுதி அளித்துள்ளேன். 2024 ஆம் வருடம் முடிவதற்குள் உத்தரபிரதேசத்தில் அமெரிக்காவிற்கு இணையான சாலை உட்கட்டமைப்பை நாங்கள் ஏற்படுத்தி தருவோம். இதற்காக உத்தரப்பிரதேசத்தில் ரூபாய் 5 லட்சம் கோடி மதிப்பில் சாலை திட்ட பணிகள் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இதனை […]
இங்கிலாந்தின் உள்துறை மந்திரி பதவியை இந்தியா வம்சாவளி பெண் கைப்பற்றியுள்ளார். இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. அதில் லிஸ் டிரஸ் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் லிஸ் டிரஸ் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே பிரித்தி படேல் தன்னுடைய உள்துறை மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் நாட்டின் உள்துறை மந்திரியாக சூலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் […]
பாகிஸ்தானில் தென்மேற்கு பருவ மழை கடந்த 30 வருடங்களில் இல்லாத அளவில் மழைப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் நாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்து இருக்கின்றது. வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்கும் இடம் மற்றும் உணவு இல்லாமல் தவித்து வருகின்றார்கள். பாகிஸ்தானில் கனமழை வெள்ளத்திற்கு இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றன என தேசிய பேரிடர் ஆணையம் கூறியுள்ளது. நாடு முழுவதும் தேசிய அவசர நிலையை அறிவித்து மீட்பு பணிகளை அரசு […]
ஆசிய நாடுகளுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் வரலாற்று ரீதியாக இருந்து வரும் வர்த்தக பாதையை மேம்படுத்தும் நோக்கத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த 2013 ஆம் வருடம் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை செயல்படுத்ததாக அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலமாக உலக நாடுகள் சீனா தங்கள் நாட்டுடன் போக்குவரத்து மூலமாக இணைத்துக்கொள்ளும். மேலும் சீனாவிற்கும் பெருநாட்டிற்கும் இடையில் சாலை போக்குவரத்தை ஏற்படுத்தும் அதே போல கடல் வழியை போக்குவரத்து ஏற்படுத்தி சீனாவில் இருக்கும் துறைமுகங்களை உலகில் இருக்கும் […]
இமாச்சலப் பிரதேசம் முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் சிம்லாவில் நடைபெற்ற பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அதில் ரக்சாபந்தன் திருவிழாவை முன்னிட்டு அவருக்கு பள்ளி மாணவ மாணவிகள் ராக்கி கட்டி விட்டு ஆரத்தி எடுத்துள்ளனர். ரக்சா பந்தன் தினம் வருடம் தோறும் சகோதரர் மற்றும் சகோதரியின் பாசத்தினை வெளிப்படுத்தும் விதமாக முக்கியத்துவம் வாய்ந்த திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரக்சா பந்தன் தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கின்றது. இதனை முன்னிட்டு ராக்கி கயிறுகள் விற்பனையும் […]
ஆந்திர மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை மந்திரி ஆக செயல்பட்டு வருகிறார் ரோஜா. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக மந்திரி ரோஜாவை ஒரே நேரத்தில் 3000 பேர் போட்டோ எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி ஆந்திரா தெலுங்கானாவை சேர்ந்த 3000 பேர் போட்டோகிராபர்கள் நேற்று விஜயவாடாவில் உள்ள தனியார் மண்டபத்தில் குவிந்துள்ளனர். இதனை அடுத்து அமைச்சர் ரோஜா திருமண மண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறினார். அவரை சுற்றிலும் 3000 பேர் போட்டோகிராபர்கள் […]
மேற்கு வங்காளத்தின் வணிகம் மற்றும் தொழில்துறை மந்திரியாக செயல்பட்டு வருகிறார் பார்த்தா சாட்டர்ஜி. இவர் கடந்த 2014 முதல் 2021 ஆம் வருடம் வரை மாநில கல்வி துறை மந்திரியாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். அந்த காலகட்டத்தில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து விசாரிக்க சிபிஐக்கு கொல்கத்தா ஹை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணம் மாற்றம் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இது குறித்து அமலாக்க […]
பீகாரில் இடி மின்னல் தாக்கி 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் பல நகரங்களில் இடி மின்னல் தாக்கியதில் சிக்கி பல பேர் உயிரிழக்கின்றனர். இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் 4 பேரும், போஜேபூர் மற்றும் சரண் மாவட்டங்களில் தலா மூன்று பேரும் உயிரிழந்திருக்கின்றனர் என கூறப்பட்டுள்ளது. இதேபோல் மேற்கு சாம்பிரான் மற்றும் அராரியா மாவட்டங்களில் தலா 2 பேரும், வங்கம் மற்றும் முசாபர்பூர் போன்ற மாவட்டங்களில் […]
இந்தியாவில் வாகனங்கள் வைத்திருப்போர் அவற்றை நிறுத்தி வைப்பதற்கான இடங்களை உருவாக்கிக் கொள்ளாமல் சாலைகளை ஆக்கிரமித்து பொது போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுத்துகிறது. இதனால் பல விபத்துகளும் நடைபெறுகிறது. இப்படி தவறாக நிறுத்துகிற வாகனங்களை படம் எடுத்த அனுப்புவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்ற சட்டம் விரைவில் வரப்போகிறது. இதுகுறித்து டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி கூறியது, நான் ஒரு புதிய சட்டம் கொண்டு வரப் போகிறேன். அதாவது தவறாக நிறுத்திய வாகனங்களை […]
கேரள முதல்-மந்திரியின் அமெரிக்க பயணத்திற்கான அனைத்து செலவுகளையும் கேரள அரசு ஏற்கும் என தலைமை செயலாளர் அறிவித்துள்ளார். கேரள முதல் மந்திரி பிரனாயி விஜயன் தனது உடல்நிலை பிரச்சனை காரணத்தினால் அமெரிக்காவின் மின்னிசோட்டா மாகாணத்தில் அமைந்திருக்கும் மாயோ கிளினிக்கில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். இதற்கு முன்பாக 2018 மற்றும் கடந்த ஜனவரி மாதத்தில் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று திரும்பியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் மூன்றாவது முறையாக அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றிருக்கின்றார். சிகிச்சைக்கு இடையே ஓய்வு வேளையில் […]
ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய ரயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் அறிவித்துள்ளார். இந்திய ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய ரயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் நேற்று கூறியுள்ளார். ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலனை செய்ய கூடாது என மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, பதிலளித்த ரயில்வே […]
அமெரிக்க முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் (வயது74),. இவருக்கு நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் உள்ளது. ஆனால் நலமாக இருக்கிறார். இதனை அவரே தெரிவித்திருக்கிறார். அதே நேரத்தில் அவரது கணவரும் முன்னாள் ஜனாதிபதியுமான கிளிண்டனுக்கு தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்படவில்லை. இதனை பற்றி ஹிலாரி கிளிண்டன் கூறும்போது, “கடுமையான நோய்க்கு எதிராக தடுப்பூசி வழங்கும் […]
மேகதாது அணை திட்டத்திற்காக கர்நாடக பட்ஜெட்டில் ரூ 1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது காவிரி ஆற்றின் குறுக்கே ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் 66 டிஎம்சி கொள்ளளவு கொண்ட புதிய அணை கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த திட்டம் 9,000 கோடி ரூபாய் செலவில் அமைக்கவும் வரைவுத் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு தமிழக அரசு […]
ஹாங்காங்கின் உள்துறை மந்திரி கொரோனாவை கட்டுப்படுத்த அங்கு போடப்பட்ட விதிமுறையை மீறி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் ஹாங்காங் உள்ளது. இந்த ஹாங்காங்கில் தீவிரமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மிகக்கடுமையான விதிமுறைகள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா விதிமுறையை மீறி ஹாங்காங்கின் உள்துறை மந்திரியான காஸ்பர் கடந்த மாதம் 3 ஆம் தேதி பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டுள்ளார். […]
பாகிஸ்தானின் மந்திரி, ஷிப்லி பராஸின் வாகனத்தை மர்மநபர்கள் சுற்றிவளைத்து சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் மந்திரி சபையில், அறிவியல், தொழில்நுட்பத்தின் மந்திரியாக இருக்கும் ஷிப்லி பராஸ், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலையில் கைபர் பக்துங்வா என்னும் மாகாணத்தில் இருக்கும் கோட் மாவட்டத்தில் வாகனத்தில் சென்றிருக்கிறார். அந்த சமயத்தில், அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென்று அவரின் வாகனத்தை வழி மறித்து சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதில், நூலிழையில் […]
நாடாளுமன்ற மாநிலங்களவையில் மந்திரி மனசுக் மாண்டவியா பேசியபோது, நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றுக்கு 161 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நாங்கள் தினந்தோறும் நிபுணர்களைக் கொண்டு ஒமைக்ரான் தொற்றை கண்காணித்து வருகிறோம். இதையடுத்து கொரோனா தொற்று பரவல் முதல் மற்றும் 2-வது அலைகளை கட்டுப்படுத்த அனுபவம் எங்களுக்கு இருப்பதால் வைரஸ்களையும் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமான மருந்துகளை இருப்பில் வைக்க நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம். இன்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் போதுமான […]
இந்தியா முழுவதும் தூய்மை இந்தியா என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு முன்னெடுத்து செல்லப்படுகிறது. இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் ஆற்றல் துறை மந்திரியாக இருப்பவர் ரகுமான் சிங் சவுகான். இவர் குவாலியரில் உள்ள அரசு பள்ளியில் கழிவறையை நீரால் கழுவி சுத்தம் செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், மாணவர் ஒருவர் என்னிடம் எங்களுடைய பள்ளியின் கழிவறைகள் தூய்மையாக இல்லை. இதனால் மாணவிகள் பல சிக்கல்களை சந்தித்து […]
உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஷாஜகான்பூரில் நடந்த விழாவில் 549 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கங்கா எக்ஸ்பிரஸ்வேக்கு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து விழாவில் பிரதமர் மோடி கூறியதாவது, மீரட், கபூர், அம்ரோஹா, சம்பல், பதவான் ஷானகான்பூர் ஹர்தோய், உன்னாவ், வந்தவாசி போலீசார் ரேபரேலி, பிரதாப்கார்க் மற்றும் பிரயாக்ராஜ் மக்கள் அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 600 கிலோ மீட்டர் தூரம் எக்ஸ்பிரஸ்வே திட்டத்திற்கு சுமார் 36,000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், எக்ஸ்பிரஸ்வே காரணமாக […]
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் ஆட்சி நடைபெறுகிறது. ராஜஸ்தான் சட்டமன்றத்தில் உதய்பூர்வதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ராஜேந்திர குடா எம்.எல்.ஏ. பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த வாரம் முதல்வர் அசோக் கெலாட் தனது மந்திரி சபையில் மாற்றம் செய்த போது ராஜேந்திர குடாவுக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மந்திரியான பிறகு முதல் முறையாக ராஜேந்திர குடா பாவோன்க் கிராமத்தில் உள்ள மக்களிடம் உரையாடினார். அப்போது அவரிடம் மக்கள் தரமான சாலைகளை அமைத்து தரவேண்டும் என்று […]
முகக் கவசம் தொடர்ந்து அணிய வேண்டும் என்று மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். நேற்று மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை மந்திரி அனுராக் தாகூர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது: சில நாடுகள் 75 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டிருந்தால் முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை என்று தெரிவித்திருந்தது. அவர்களின் விருப்பத்தின் பெயரில் மூலம் முக கவசம் அணிந்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்திருப்பது குறித்து நிபுணர்கள் கேள்வி […]
இலங்கையில் ராஜபக்சே சகோதர்களின் இளைய சகோதரரான, பசில் ராஜபக்சே நேற்று நிதி மந்திரியாக பொறுப்பேற்றார். இலங்கை அதிபராக கோட்டபாய ராஜபக்சேவும், பிரதமராக மஹிந்த ராஜபக்சேவும், வேளாண் மந்திரியாக சாமல் ராஜபக்சேவும் இருக்கிறார்கள். இந்நிலையில் ராஜபக்சே சகோதரர்களின் இளைய சகோதரரான, பசில் ராஜபக்சே நேற்று மந்திரியாக பதவியேற்றுள்ளார். அவருக்கு நிதி இலாகா வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியை சேர்ந்த ஒரு எம்பி பதவி விலகினார். எனவே அதற்கு பதிலாக இவர் எம்.பி ஆனார்.தற்போது இவர் மந்திரி […]
மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மேலும் ஒரு மந்திரி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் சுந்தர வனத்துறை பகுதி மந்திரியாக மந்துரம் பக்கிரா என்பவர் இருந்து வருகிறார். அவர் கடந்த செவ்வாய்க்கிழமை உடல்நலக்குறைவால் சிறப்பு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு பலியாகட்டா ஐடி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்ட அவருக்கு ஒரு பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு வெளியான முடிவுகளில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் […]
அயர்லாந்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கியுள்ளது. அவற்றுள் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் பொது இடங்களில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளில் 200 பேர் வரை பங்கேற்கலாம் என்று […]
ஒரு வருடத்திற்குள் தன்னை முதலமைச்சராக அறிவிக்க வேண்டுமென சச்சின் பைலட் கோரிக்கை வைத்ததாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் முதல் மந்திரியாக உள்ள அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்-மந்திரியாக உள்ள சச்சின் பைலட்டுக்கும் இடையில் அதிகார மோதல் ஏற்பட்டிருக்கின்றது. இதனைத் தொடர்ந்து துணை முதல்வர் பதவியில் உள்ள சச்சின் பைலட்டும் அவருடைய ஆதரவாளர்கள் இரண்டு பேரும் மந்திரி பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். மேலும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட […]