தேனி மாவட்டத்தில் குள்ளப்புரம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த மே மாதம் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. அப்போது அந்த வழியாக ஊர்வலம் சென்ற பெண்களை ஒரு பிரிவினர் தரக் குறைவாக பேசியது மட்டுமல்லாமல் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உடல்நல குறைவால் உயிரிழந்த மூதாட்டியின் உடலை அந்த பாதை […]
Tag: மனு
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை தாலுகா கட்டவிலாகப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, திருவாடானை பகுதியில் இந்த வருடம் நெல் விவசாயத்திற்காக நகைகளை அடகு வைத்தும், கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் பெற்றும் விவசாயத்தை மேற்கொண்டு வருகிறோம். இந்த நிலையில் தற்போது பயிர்கள் அனைத்தும் தண்ணீர் இல்லாமல் கருகிப் போய்விட்டது. இதன் காரணமாக தற்போது எங்களது வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் அரசு இழப்பீடு நிவாரணம் […]
நியாய விலை கடை பணியிடங்கள் நிரப்புவது குறித்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கோமல் கிராமத்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது, “நமது தமிழ்நாட்டின் வேளாண் கூட்டுறவு வங்கியின் கீழ் செயல்படும் நியாய விலை கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணிக்கான நேர்முகத் தேர்வுகள் பல மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எந்த தேர்வு நடைமுறைகளும் பின்பற்றாமல், விற்பனையாளராக […]
மீரா மிதுன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மீரா மிதுன் நடிகையாகவும் மாடல் அழகியாகவும் வலம் வருகின்றார். இவர் சென்ற 2018 ஆம் வருடம் தனியார் நிறுவனம் சார்பாக நடத்தப்பட்ட மிஸ் சென்னை போட்டியில் தனியார் நிறுவனத்தை பிரபலப்படுத்துவதற்காக ரூபாய் 50,000 வாங்கிக் கொண்டு இவர் ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டது. இந்த நிலையில் வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை […]
பியூட்டி பார்லர் செல்ல கணவர் பணம் தராததால் மனைவி விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண் கடந்த 2015-ஆம் ஆண்டு டெல்லியை சேர்ந்த அமித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பெண் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து […]
பிரபல நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னையில் அமைந்துள்ள தீவுத்திடலில் ஆண்டுதோறும் இந்திய சுற்றுலா மற்றும் தொழிலக பொருட்காட்சியை நடத்துவதற்கான டெண்டர் அறிவிப்பது வழக்கம். அதேபோல் 2023-ஆம் ஆண்டிற்கான டெண்டரை சுற்றுலாத்துறை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரை சேர்ந்த ஃபன் வேர்ல்டு ரீசார்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் எங்கள் நிறுவனம் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் இந்த டெண்டருக்கு விண்ணப்பித்திருந்ததாகவும், ஆனால் […]
300-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் ஒன்று திரண்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்ரீரங்கம், பாலக்கரை, உறையூர், கண்டோன்மெண்ட், எடமலைபட்டிபுதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் ஒன்று திரண்டு மனு ஒன்றை அளித்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, திருச்சி அனைத்து டிரைவர்களும் மீட்டர் கட்டணத்தை 1.8 கிலோ மீட்டருக்கு ரூபாய் 50-க்கும் அதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூபாய் 16 […]
தொடர்ந்து இலவசமாக உலர் சாம்பலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு உலர் சாம்பல் செங்கல் பிளாக்ஸ் நிர்வாகிகள் மனு ஒன்றை கொடுத்தார்கள். அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நாள்தோறும் 3,500 டன் நிலக்கரி உலர் சாம்பல் கழிவுநீர் வெளியேற்றப்படுகின்றது. இதில் 20 சதவீதம் சாம்பல் கழிவு சாம்பல் செங்கல் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு […]
நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கும் வகையில் மனு தாக்கல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் வாடகை வீட்டை காலி செய்வது தொடர்பாக ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை நேற்று நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது அவர் கூறியதாவது, “இந்த வழக்கை கிளை நீதிமன்றம் 2 வாரத்திற்குள் விசாரிக்க வேண்டும். மேலும் வழக்கை நீண்ட நாட்கள் கொண்டு செல்லும் நோக்கில் மனுக்கள் தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கு நீதிமன்றங்கள் உதவ […]
வீட்டுமனை பட்டா வழங்கவில்லை என்றால் காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்போம் என ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இச்சிப்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர்கள் மனு ஒன்றை அளித்தார்கள். அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, எங்கள் பகுதியைச் சேர்ந்த கல்குவாரி உரிமையாளர்கள் எங்களுக்கு பட்டா வழங்காமல் இருப்பதற்கு அதிகாரிகள் துணையுடன் நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். சென்ற 2021 ஆம் வருடம் பட்டா வழங்குவதற்கான நிலத்தில் பூங்கா அமைப்பதற்கு செடிகளை […]
குப்பை லாரிகளுக்கு காலை, மாலையில் தடை விதிக்கக்கோரி ஐகோர்ட்டில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் இரவில் மட்டுமே குப்பை லாரிகளை இயக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார். அதில், வெளிநாடுகளைப் போல சென்னையில் குப்பை லாரிகளை இரவில் இயக்க உத்தரவிட வேண்டும். பள்ளி, அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகளை இயக்க தடை விதிக்க வேண்டும். காலை, மாலை நேரங்களில் குப்பை லாரிகளை இயக்குவதால் மாணவர்கள், பொதுமக்கள், பணிக்கு செல்வோருக்கு […]
ஜல்லிக்கட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக ஜல்லிக்கட்டு உள்ளது. அதனால் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும். ஆனால் சில இடங்களில் மாடு தாக்கி உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. எனவே தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தடை செய்ய வேண்டும் என பல அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. […]
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது குறித்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நமது தமிழ்நாட்டில் 2.36 கோடி மின் பயனாளர்கள் உள்ளனர். அதில் விவசாயிகள், கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்கள் என 21 லட்சம் பேருக்கு தமிழக அரசு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கியது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த இலவச மின்சாரத்தை பெற ஆதார் எண்ணுடன் மின் எண்ணை இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் அறிவித்தது. இதுகுறித்து தேசிய […]
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரத்தை அடுத்த சின்னக்கம்பாளையம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஆர்.டி.ஓ குமரேசனிடம் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, சுமார் நூற்றாண்டு பழமை வாய்ந்த குளம் ஒன்று சின்னக்கம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது. அந்த குளத்திற்கு ஊத்துப்பாளையம் கிராமத்தில் இருந்து மழை நீர் சின்னக்கம்பாளையம் கிராமம் பாதை வழியாக சின்ன புத்தூர் கிராம எல்லைக்குட்பட்ட பஞ்சபட்டியில் உள்ள சின்னக்கரை ஓடையில் கலக்கிறது. இந்நிலையில் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அந்த வழியாக செல்லும் […]
தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டது குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1985-ஆம் ஆண்டு முதல் ஐஏஎஸ் அதிகாரியான அருண் கோயல் மத்திய அரசின் கனரா தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 37 ஆண்டு மத்திய அரசில் பணியாற்றி வந்த இவருக்கு தற்போது 60 வயதாகிறது. இதனால் டிசம்பர் 31-ஆம் தேதி இவரது பதவி காலம் முடிவடைகிறது. இந்த நிலையில் அருண் கோயல் கடந்த […]
இடிந்து விழும் நிலையில் இருக்கும் பள்ளி கட்டிடத்தை சரி செய்யக்கோரி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை அருகே இருக்கும் தினையத்தூர் கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று மனு ஒன்றை கொடுத்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, எங்கள் கிராமத்தில் இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளியில் 150 குழந்தைகள் படித்து வருகின்றார்கள். இந்த கட்டிடம் முறையான பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருக்கின்றது. சில பகுதிகளில் இடிந்து விழும் […]
காவல் நிலையத்திற்கு வரும் பொது மக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தியுள்ளார். குமரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் திடீர் ஆய்வு மேற்கொள்வது வழக்கமாகும். அந்த வகையில் நேற்று நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் வருகை பதிவேடு போன்றவற்றை பார்வையிட்டுள்ளார். அதன் பின் முதல் […]
சவுதி அரேபியாவிற்கு சென்ற மீன் பிடி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்பாலைக்குடி காந்தி நகரை சேர்ந்த முனீஸ்வரன் என்பவரது மனைவி ஞான சிந்து நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, எனக்கு முனீஸ்வரன் கனவர் உள்ளார். எங்களுக்கு திருமணம் ஆகி மூன்று வயதில் இசையமுதன் என்ற மகன் இருக்கின்றான். இந்நிலையில் குடும்ப வறுமையின் காரணமாக என்னுடைய கணவர் முனீஸ்வரன் கடந்த வருடம் மீன்பிடித் தொழில் செய்வதற்காக […]
மாற்று இடம் வழங்க கோரி மக்கள் மனு கொடுத்துள்ளார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு குட்செட் தெருவை சேர்ந்த மக்கள் மனு ஒன்றை கொடுத்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, தேனி குட்செட் தெரு பகுதியில் 56 குடும்பங்களை சேர்ந்தவர்கள் சென்ற 46 வருடங்களாக வசித்து வருகின்றோம். ரயில்வே துறை சார்பாக எங்களின் வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கின்றது. மாவட்ட நிர்வாகத்திடம் இது குறித்து பலமுறை மனு அளித்தும் […]
தூய்மை பணியாளர் கொடுத்த மனுவால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தூய்மை பணியாளர் துரைராஜ் என்பவர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருக்கின்றது. ஆனால் ஊராட்சி நிர்வாகம் சென்ற சில மாதங்களாக எனக்கு ஊதியம் கொடுக்கவில்லை. இதனால் என்னுடைய குழந்தைகளின் கல்வி செலவு, வீட்டு செலவு, மருத்துவச் செலவு ஆகியவைக்கு பணம் இல்லாமல் தவிர்த்து வருகின்றேன். இதனால் நான் தற்கொலை செய்து கொள்ள அனுமதி […]
தமிழகம் முழுவதும் உணவகங்களில் சிசிடிவி கேமரா பொருத்தக் கோரிய வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள ஹோட்டல்களில் உணவகங்கள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும், உணவு தயாரிக்கும் பொழுது சுத்தமான நடைமுறைகள் பின்பற்ற வேண்டும் எனவும் சென்னையை சேர்ந்த ஒருவர் ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தார். அந்தமனுவில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உணவகங்களில் சாப்பிட்டவர்களுக்கு உணவு விஷமாகி உயிரிழந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. அதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான உணவகங்களிலும், ரெஸ்டாரண்டுகளிலும், சமையல் […]
கடந்த அக்டோபர் 26ம் தேதி சென்னை கே.கே நகரில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பேச்சாளர் சைதை சாதிக் என்பவர் பாஜகவை சேர்ந்த நடிகைகள் குஷ்பூ, காயத்ரி, நமீதா, கௌதமி, ரகுராம் போன்றோரை பற்றி அவதூறாக பேசியிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனை அடுத்து சமூக வலைதளங்களில் காணொளி பரவிய நிலையில் திமுக எம்பி கனிமொழியும் வருத்தம் தெரிவித்து இருந்தார். மேலும் பாஜக மாநில மகளிர் அணி செயலாளர் நதியா சீனிவாசன் தலைமையில் கட்சியினர் சென்னை காவல் […]
செங்கோட்டை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2000-ஆம் ஆண்டு செங்கோட்டையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்த வழக்கில் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த முகமது ஆரிப் என்பவர் கைது செய்யப்பட்டார். கடந்த 2005-ஆம் ஆண்டு அவருக்கு தூக்குத் தண்டனை விதித்து விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அந்த உத்தரவை கடந்த 2007-ஆம் ஆண்டு டெல்லி ஐகோர்ட் உறுதி செய்தது. […]
சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நகை கடன் தள்ளுபடி செய்யுமாறு இலங்கை தமிழர்கள் மனு ஒன்றை கொடுத்துள்ளார்கள். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள சத்யா நகர் பகுதியில் இருக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பத்துக்கு மேற்பட்டோர் ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, இலங்கை […]
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 இன் படி தமிழகத்தில் தகவல் ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர் ராஜகோபால் செயல்பட்டுக் கொண்டிருந்தார். அவர் மற்றும் நான்கு தகவல் ஆணையர்களின் பதவிக்கால முடிவுக்கு வந்த நிலையில் புதிதாக தகவல் ஆணையர்கள் நியமிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஜி எம் அக்பர் அலி தலைமையில் தெரிவு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் நகராட்சி […]
நாட்டு துப்பாக்கி இல்லாததால் பெண் தர மறுப்பதாக ஆட்சியரிடம் நரிக்குறவர்கள் புகார் மனு அளித்தார்கள். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள்கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் தங்களின் கோரிக்கைகளை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனுக்களாக கொடுத்தார்கள். அப்போது சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியபட்டணம் குறவன் காடு பகுதியில் இருக்கும் நரிக்குறவர்கள் சிலர் ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, குறவன் காடு பகுதியில் 80க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றோம். நாங்கள் […]
புதிது புதிதாக பரவும் நோய்களுக்கான காரணத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கோயமுத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மருந்து கொள்முதல் அதிகாரியாக முத்துமாலை ராணி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் தேவைக்கு அதிகமான மருந்துகளை கொள்முதல் செய்துள்ளார். ஆனால் அந்த மருந்துகள் அனைத்தும் காலாவதியாகிவிட்டது. இதனால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டது என இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனால் முத்துமாலை ராணி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். […]
சின்னத்திரை நடிகை ஆன நடிகை திவ்யாவை சின்னத்திரை நடிகர் அர்னவ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அர்னவ் தற்போது புதிய தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். அதில் அவருடன் நடிக்கும் கதாநாயகியுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி கடந்த சில வாரங்களாக கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதற்கு இடையே கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாக திவ்யா சென்னை போலீஸ் கமிஷனர் […]
அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார். தமிழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் மனுவை பற்றி பேசுகிறார்கள் அவர்கள் மனு என்றால் என்ன என்பதை தெளிவாக கூற வேண்டும். மனுவைப் பற்றி அவர்கள் தெளிவாக பேசினால் மக்கள் கல்லைக் கொண்டு அவர்களை அடிப்பார்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் மக்கள் மனுவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இப்போது வேதனையில் […]
உதவி அதிகாரி பணிக்கு தேர்வானவர்கள் பட்டியலை ரத்து செய்யக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மதுரை டாக்டர்கள் சுகந்தி, முஜிதா பாய் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது, சென்ற 2017 ஆம் வருடம் சித்த மருத்துவ துறையில் தற்காலிக அடிப்படையில் மருத்துவத் தேர்வு வாரியம் வெளியிட்ட உதவி மருத்துவ அறிக்கையில் தேர்வானவர்களின் இறுதி பட்டியலில் எங்கள் பெயர் இடம்பெறவில்லை. ஆனால் உரிய மதிப்பெண் பெற்றும் ஆதிதிராவிடர்களின் இட ஒதுக்கீட்டின்படி தேர்வு செய்யப்படவில்லை. […]
நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. தேசிய அளவில் பொது மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய படிப்பில் சேர்வதற்காக நீட் எனப்படும் national Eligibility Entrance test என்ற தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இது கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் நடுவண் இடைக்கல்வி வாரியம் மூலம் நடத்தப்பட்டு வந்தது. கடந்து 2019-ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்த தேர்வில் இயற்பியல், […]
ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு தடை கோரி திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் அமைப்பு அணிவகுப்பு நடத்த பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டிவிசிக கட்சி தலைவர் திருமாவளவன் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். […]
உங்கள் துறையில் முதல்வன் திட்டத்தின் கீழ் மனுக்களை முதலமைச்சர் பெற்றுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள காமராஜர் சாலையில் அமைந்துள்ள காவல் துறை இயக்குனர் அலுவலகத்தில் மகிழம்பூ மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட ஏராளமான காவல்துறையினர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அதன்பின்னர் அவர் உங்கள் துறையில் முதல்வர் எந்த திட்டத்தின் கீழ் காவலர்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பெற்றுக் கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சரிடம் அருணாச்சலேஸ்வரர் கோவில் தற்காலிகத் தூய்மை பணியாளர்கள் மனு ஒன்றை கொடுத்தார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவரிடம் அருணாச்சலேஸ்வரர் கோவில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் மனு ஒன்றை கொடுத்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, திருவண்ணாமலை நகரப் பகுதியில் நாங்கள் அனைவரும் வசிக்கின்றோம். சென்ற 13 வருடங்களாக அருணாசலேஸ்வரர் கோவிலில் தனியார் ஒப்பந்ததாரர் மூலமாக கோவில் தூய்மை […]
ஹரியானா மாநிலத்தில் துலி சந்த் (102) என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதம் தோறும் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் திடீரென கடந்த மார்ச் மாதத்தோடு முதியவருக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது முதியவர் இறந்து விட்டதாக தகவல்கள் வெளிவந்ததால் அதிகாரிகள் பென்சனை நிறுத்தி விட்டதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர் சரியான ஆவணங்களை எடுத்துச் சென்று அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டுள்ளார். இருப்பினும் ஏப்ரல் மாதம் கிடைக்க வேண்டிய பென்ஷன் தொகை கிடைக்க வில்லை. இதன் […]
காற்று மாசுபாடு காரணமாக உடல் பாதிப்பு ஏற்படுவதாக குறிப்பிட்டு மத்திய மற்றும் டெல்லி அரசாங்கத்திடம் ரூ.15 லட்சம் இழப்பீடு மற்றும் ரூ.25 லட்சம் சுகாதார காப்பீடு கோரி கல்லூரி மாணவர் டெல்லி ஐகோட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், காற்று மாசுபாடு நுரையீரலை பாதிக்கிறது மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களை ஏற்படுத்தும் மாசு என்பது ஒரு நபரின் வாழ்க்கையை 5 முதல் 9 ஆண்டுகள் வரை குறைக்கும் என ஒரு பொதுவான விஷயமாகும் […]
கூடலூர் அருகே ஸ்ரீ மதுரை மீனாட்சி மண் வயல் நூலகம் முன்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுனில் தலைமை தாங்கியுள்ளார். செயலர் சோனி சஜி வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்துள்ளார். இதனை தொடர்ந்து மத்திய அரசின் ஜல்ஜூவன் திட்டம் முழுமை பெறாமல் இருக்கின்றது. இதற்கான சில இடங்களில் மின் இணைப்புகள் வழங்காததால் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க முடியவில்லை. அதனால் மின் இணைப்புகள் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் […]
இந்தியாவில் வருடம் தோறும் ஆகஸ்ட் 15ஆம் தேதி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றுவது நடைபெற்று வருகின்றது. மாநிலங்களைப் பொறுத்தவரை 1973 ஆம் வருடம் வரை குடியரசு தினம் சுதந்திர தினம் போன்ற நாட்களில் கவர்னர்கள் மட்டுமே கொடி ஏற்றியது வழக்கமாக இருந்து வந்தது. இந்த சூழலில் முன்னாள் முதல்வர் கருணாநிதி கோரிக்கையை ஏற்று மாநில முதலமைச்சர்கள் சுதந்திர தினம் அன்று கவர்னர்கள் குடியரசு தினம் அன்று கொடியேற்றம் சட்டத்தை […]
தமிழகத்தில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்ற சுகாதாரத்துறையின் அரசாணையை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பத்தாயிரம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கின்றது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து பொது இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் எனவும் அவ்வாறு அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த […]
சாதி சான்றிதழ் கேட்டு மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை சித்தமல்லி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரி அதே பகுதியை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட மாணவர்-மாணவிகளுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்று அளித்துள்ளார். அதில் நொச்சியூர் பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நான் 12- ஆம் வகுப்பு முடித்தேன். அதன் பிறகு கல்லூரி சேர விண்ணப்பித்து […]
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த உஷா என்ற பெண் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் நானும் ஆனந்தபாளையம் கிராமத்தை சேர்ந்த கவுதமன் என்பவரும் காதலித்து வந்தோம். கடந்த 2014- ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி சார் பதிவாளர் அலுவலகத்தில் வைத்து நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு எனது குடும்பத்துடன் வசித்து வந்தோம். இந்நிலையில் நான் […]
ஆணாக மாறி காதலித்து திருமணம் செய்த தனது மனைவியை மீட்டு தருமாறு ஒருவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் பகுதியில் 24 வயதுடைய இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது பெயரை மாற்றி ஆணாக மாறினார். இந்நிலையில் அவர் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் நானும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 21 வயதுடைய ஒரு இளம் பெண்ணும் காதலித்தோம். கடந்த […]
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு கிராமங்களில் ஏரி, ரேடியோ பூங்கா போன்ற இடங்களில் ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமாக பால் குளிரூட்டும் நிலையங்களுக்கான கட்டுமானங்களை உருவாக்கி வருவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் நிலுவையில் உள்ளது என அவரது மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரனார் […]
இங்கிலாந்தில் ஆபாச வீடியோக்களுக்காக பள்ளி சீருடைகளை விற்பதை தடை செய்ய வேண்டும் என்று பள்ளி மாணவிகள் அரசாங்கத்திற்கு மனு அளித்திருக்கிறார்கள். இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் இருக்கும் ஒரு பள்ளியை சேர்ந்த மாணவிகள் ஆயிரக்கணக்கான மக்கள் கையெழுத்திட்ட மனு ஒன்றை அரசாங்கத்திற்கு அனுப்பி இருக்கிறார்கள். இது குறித்து ஒரு மாணவி கூறுகையில், அரசு பேருந்தில் பள்ளி சீருடை அணிந்து நாங்கள் சென்றால் எங்களை அவமரியாதையாகவும் பாலியல் ரீதியாகவும் கிண்டல் மற்றும் கேலி செய்கிறார்கள். பேருந்து ஓட்டுனரும் நாங்கள் அணிந்திருக்கும் […]
மகனை கொலை செய்த 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மனு அளித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழமுட்டும் பகுதியில் அல்மாண்ட்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிக்சன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நிக்சன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று நிக்சனின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் […]
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே வெம்பக்கோட்டை சிபியோ உண்டு உறைவிடப்பள்ளி பள்ளி வளாகத்தில் பெண்கள் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ஆடு வழங்கும் திட்டத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு அருப்புக்கோட்டை அருகே பொதுமக்கள் மனு கொடுக்க கூட்டமாக திரண்டு இருந்தனர். மக்கள் என்ன உங்கள் அடிமைகளா? விருதுநகர்,பாலவனத்தம் கிராமத்தில் தீர்வு தேடி வந்த ஏழைத்தாயை அடித்த @arivalayam அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் அடுத்த 48 மணி நேரத்திற்குள் அமைச்சர் […]
நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் நடைபெற்ற நிலையில், ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அதிமுக தலைமை அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டதுடன், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. நேற்று இடைக்கால பொதுசெயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவர் கட்சி அலுவலகம் வருவதற்குள் சீல் வைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ள இபிஎஸ், […]
கோயம்புத்தூர் மாவட்ட பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சப் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தலமை தாங்கினார். அதன் பிறகு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். அப்போது கோவை மாவட்ட கருப்பட்டி உற்பத்தியாளர் நலம் நாடு சங்கத்தினர் மனு அளித்தனர். அந்த மனுவில், பொள்ளாச்சி மற்றும் உடுமலை வட்டாரத்தில் 1500 பேர் பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து பதநீர் இறக்கி கருப்பட்டி காய்ச்சி கூட்டுறவு சங்கங்கள் […]
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட தீர்மானம் மற்றும் பொதுகுழுவில் கட்சி விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தாக்கல் செய்தது. பொறுப்பாளர்கள் மாற்றம், விதிகளை திருத்தம் செய்தது குறித்து தேர்தல் ஆணையத்தில் அதிமுக மின்னஞ்சல் மூலம் தாக்கல் செய்து இருந்தது. இதற்கு பதிலடியாக அதிமுக பொதுக்குழுவில் சட்ட விதிகள் மீறப்பட்டு இருப்பதாக குற்றஞ்சாட்டி ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக இடைக்கால […]