இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்குப் பின் மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணை ஏறி உள்ளார். அதனை தொடர்ந்து நாடு முழுவதும் 3-ம் சார்லஸ் மன்னர் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் 3-ம் சார்லஸ் மன்னர் லண்டனில் உள்ள யூத சமூக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுள்ளார். அப்போது அங்கிருந்த நண்பர்களுடன் சேர்ந்து மன்னர் சார்லஸ் இசைக்கேற்ப நடனமாடி அசத்தியுள்ளார். இந்த வீடியோவானது பக்கிங்ஹாம் […]
Tag: மன்னர்
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மீது முட்டை வீச்சு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் மரணத்திற்கு பின் மூன்றாம் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றுள்ள நிலையில் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று வடக்கு லண்டனில் அமைந்துள்ள லுட்டன் நகருக்கு பயணம் செய்துள்ளார். பின்னர் அவர் பொதுமக்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது சார்லஸ்ஸை நோக்கி முட்டை வீசப்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக அவரது பாதுகாப்பு அதிகாரிகள் மன்னர் சார்லஸை மற்றொரு […]
சார்லஸ் முடிசூடும் விழா குறித்து அசர குடும்பம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தின் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவு காரணமாக தனது 96-வது வயதில் கடந்த மாதம் உயிரிழந்தார். அதன்பின்னர் புதிய மன்னராக சார்லஸ் அறிவிக்கப்பட்டார். இதனால் இவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுகிறார். இந்நிலையில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடி சூட்டு விழா நடைபெறும் தேதி குறித்து அரச குடும்பம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வருகின்ற 2023 -ஆம் ஆண்டு மே மாதம் […]
பிரிட்டன் மன்னருடன் அடுத்த வருடம் மே மாதத்தில் அவரின் மனைவி கமீலாவும் ராணியாக பதவியேற்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த பிரிட்டன் இளவரசி டயானாவை அதிகம் நேசித்த நாட்டு மக்களால் கமிலாவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மேலும், சார்லஸ்-டயானாவின் பிள்ளைகளான இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரியும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனை நன்கு உணர்ந்திருந்த கமிலா டயானாவிற்கு வழங்கப்பட்டிருந்த வேல்ஸ் இளவரசி பட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதாவது மக்கள் மிகவும் நேசிக்கும் டயானாவின் பட்டத்தை தான் பறித்து விட்டால் […]
புதிய மன்னர் சார்லஸ் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரித்தானியாவின் இளவரசியான ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த மாதம் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் மன்னராக அவரது மகன் சார்லஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அவர் முடி சூட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மூன்றாம் சார்லஸ் தனது முடி சூட்டு விழாவை ஒரு மணி நேரத்திற்குள் முடித்து விட வேண்டும் என திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து நிபுணர்கள் கூறியதாவது. இந்த […]
பிரித்தானிய நாட்டில் முடி சூடும் விழா ஒரு மணி நேரத்தில் முடிந்துவிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானிய மன்னர் சார்லஸின் முடிசூட்டும் விழாவானது ஒரு மணி நேரத்திற்குள் முடிவுக்கு வந்துவிடும் என ராஜ குடும்ப வட்டாரத்தினர் கூறியுள்ளனர். இந்நிலையில் வெஸ்ட் மின்ஸ்டர் குரு மடாலத்தில் நடத்தப்படும் இந்த விழாவானது குறைவான சடங்குகளுடன் முடிவுக்கு வரும் எனவும், ராணியாருக்கு சிறப்பு சடங்குகள் எதுவும் இருக்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. பொதுவாக 4 மணி நேரம் வரையில் சடங்குகள் நீடிக்கும் […]
சவுதி அரேபியாவின் இளவரசரான முகமது பின் சல்மான் நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கிறார். சவுதி அரேபியாவின் மன்னரான முகமது சல்மான் பின் அப்துல் அஜீஸிற்கு இந்த வருடம் இரண்டு முறை உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. எனவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதன் காரணமாக தன் மூத்த மகனான இளவரசர் பின் சல்மானை மன்னராக்குவதற்கு முடிவெடுத்திருக்கிறார். இந்நிலையில் மன்னர் அப்துல் அஜீஸ் நாட்டில் அமைச்சரவையை கலைத்துவிட்டு புதிய அமைச்சரவையை நிறுவிவிட்டார். அந்த வகையில், இளவரசரான முகமது பின் சல்மான் நாட்டின் […]
பிரிட்டன் நாட்டில் தற்போது மன்னராக சார்லஸ் பொறுப்பேற்று இருப்பதால், பணத்தாள்களில் இருக்கும் மகாராணியின் உருவம் நீக்கப்படுமா? என்பது குறித்து பல சந்தேகங்களுக்கு விடை கிடைத்திருக்கிறது. பிரிட்டன் நாட்டின் மகாராணியாரின் மறைவை அடுத்து நாட்டில் தேசிய கீதம் போன்ற பல விஷயங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. நாட்டின் பணத்தாளில் மகாராணியாரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. தற்போது, அதில் மாற்றம் செய்யப்படுமா? அப்படி மாற்றம் செய்யப்பட்டால், இதற்கு முன்பு நம்மிடம் இருக்கும் மகாராணியின் உருவம் கொண்ட பணத்தை என்ன செய்வது? என்று மக்களுக்கு […]
புதிய மன்னராக சார்லஸ் முடி சூடுவதால் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. பிரித்தானியாவின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த வியாழக்கிழமை அன்று உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அடுத்த மன்னராக அவரது மகன் சார்லஸ் முடிசூட இருக்கிறார். இந்நிலையில் கிளாரன்ஸ் ஹவுஸ் மாளிகையில் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா தங்கி இருந்தனர். தற்போது சார்லஸ் மன்னராக முடிசூடி பக்கிங்ஹாம் அரண்மனைக்கு குடிபெயர இருப்பதால் கிளாரன்ஸ் ஹவுஸ் மாளிகையில் பணிபுரிந்த 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் […]
மன்னரின் காரை வழிமறித்து ஒரு நபர் புகைப்படம் எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியா நாட்டின் மகாராணி கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் அங்கு அவரது மகனான இளவரசர் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் மன்னர் சார்லஸ் மகாராணியாரின் இறுதி சடங்கு தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக லண்டனில் இருந்து ஸ்காட்லாந்துக்கு தனது பாதுகாவலர்கள் க காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென சாலையின் குறுக்கே வந்த ஒரு நபர் மன்னரின் […]
இளவரசர் ஹரியையும் இளவரசர் ஆண்ட்ரூவையும் விட இளவரசர் சார்லஸ் தான் ராஜ குடும்பத்திற்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என பிரித்தானிய ராஜ குடும்ப நிபுணர்கள் கருதி வருகின்றார்கள். வெளிநாட்டு நன்கொடைகள் மற்றும் அது தொடர்பான தவறான முடிவுகளை எடுத்தல் போன்ற விஷயங்களில் இளம் பிரித்தானியர்களுக்கு இளவரசர் சார்லஸ் மீது நம்பிக்கை இல்லை என தீ டைம்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது. ராஜ குடும்ப உறுப்பினர்களில் இருந்து வித்தியாசமாக நடந்து கொள்ளும் இளவரசர் ஹரி மற்றும் ஆண்ட்ரூ போன்றவரால் உருவாகியுள்ள […]
தாய்லாந்து நாட்டு மன்னரின் காதலி Suthida Vajiralongkorn பல வருடங்களாக சுவிற்சர்லாந்தில் உள்ள பிரபல ஓட்டலில் தங்கியுள்ளது தெரியவந்துள்ளது. தாய்லாந்து நாட்டின் மன்னர் Maha Vajiralongkorn தன் காதலியான, தற்போதைய ராணி Suthida Vajiralongkorn ஒப்வால்டன் மண்டலத்தில் உள்ள Waldegg என்ற பிரபல ஹோட்டலில் தங்கியிருந்திருக்கிறார். மேலும் அவர் சுமார் நான்கு வருடமாக சுவிட்சர்லாந்தில் தங்கி இருந்ததாக தெரியவந்திருக்கிறது. இந்நிலையில் மன்னர் தன் காதலியைப் பார்ப்பதற்காக சுவிட்சர்லாந்திற்கு பல தடவை ரகசியமாக வந்து சென்றதாகவும், அப்போது ராணி […]
அமெரிக்க அதிபர் சவுதி மன்னருடன் இரு நாடுகளுக்ககு இடையேயான உறவு குறித்து தொலைபேசி வாயிலாக கலந்துரையாடியுள்ளார் . அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோபைடன் ஜனவரி மாதம் 20ஆம் தேதி பதவி ஏற்றார். மேலும் பதவியேற்றதிலிருந்து உலக நாடுகளின் தலைவர்கள் ஒவ்வொருவரையும் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு அவர்களுடன் உரையாடல் நடத்தி வருகிறார். இதுவரையில் சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோருடன் உரையாடல் நடத்தி வந்ததுள்ளார். இந்நிலையில் […]