நட்சத்திரம் நகர்கிறது பட இசை வெளியீட்டு விழாவில் பா.ரஞ்சித் கபாலி படம் குறித்து பேசியுள்ளார். முன்னணி இயக்குனரான பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “நட்சத்திரம் நகர்கிறது”. இந்த படம் முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்டதாக தயாராகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். அத்துடன் கலையரசன், ஹரிகிருஷ்ணன், சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் உட்பட பலர் இத்திரைப்படத்தில் நடித்து […]
Tag: மன உளைச்சல்
கர்நாடகா மாநிலம் மைசூரு பகுதியிலுள்ள குண்டுராவ் நகரில் வசித்துவருபவர் அர்பிதா. இவர் ஒரு மருத்துவர் ஆவார் .இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணமாகி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து அர்பிதாவின் ஒன்பது மாத குழந்தை சரியாக தாய்ப்பால் குடிக்காததாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அர்பிதா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு […]
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. அடுத்தடுத்து இருமொழி படங்களிலும் நடிக்கவுள்ள சமந்தா ஹாலிவுட் படத்திலும் நடிக்கவுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா தி ரைஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். அந்தப்பாடல் சமந்தாவின் கேரியரை மேலும் உயர்த்தி விட்டது. உலகமெங்கும் பிரபலமடைந்த அந்த பாடல் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட வியூஸ்களை குவித்து நம்பர் ஒன் பாடலாக சாதனை படைத்துள்ளது. […]
பொது மக்களின் உளவியல் ரீதியான பிரச்சனைகளை போக்குவதற்கு “க்ரையிங் ரூம்” என்ற முறையை மனநல நிபுணர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். ஸ்பெயின் நாட்டில் பொதுமக்களின் உளவியல் ரீதியான பிரச்சனைகளை போக்க “க்ரையிங் ரூம்” முறையை மனநல நிபுணர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். அதாவது செயற்கை முறை வாழ்க்கையால் மக்கள் அதிக மன அழுத்தம், சோர்வு, மன உளைச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஆளாவதாக உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டவரை “க்ரையிங் ரூம்” என்ற அறையில் அடைத்து தான் விரும்பும் நபரை தொடர்பு […]
தேனி மாவட்டத்தில் குடிபோதையில் இருந்த நபர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள சீலையம்பட்டி பகுதியில் முனியப்பன்(36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி முத்துமாரி சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மனைவி இறந்த துக்கத்திலும், குழந்தை இல்லாத காரணத்தாலும் மிகவும் மனமுடைந்த முனியப்பன் குடி பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனையடுத்து முனியப்பன் நேற்று மது அருந்திவிட்டு போதையில் தற்கொலை செய்து கொள்ள […]
10 திருமணங்கள் செய்த பெண்ணுக்கு சரியான வாழ்க்கைத்துணை கிடைக்காததால் 11 வது திருமணம் செய்ய இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வசிப்பவர் கேசி. இவருக்கு 56 வயது ஆகியுள்ள நிலையில் தற்போது 11 வது திருமணம் செய்ய தயாராக இருக்கிறார். இதுகுறித்து கேசி கூறுகையில், “என்னுடைய ஆசை என்னவென்றால் என்னை மட்டுமே நேசிக்கும் ஒரு கணவன் வேண்டும். ஆனால் இதுவரை அப்படி ஒரு கணவர் கிடைக்கவில்லை. மேலும் அவருக்கு என சில கட்டுப்பாடுகள் இருக்கிறது” என்று கூறினார். […]
நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளை மன உளைச்சலலிருந்து பாதுகாக்க மத்திய அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஒருபுறம் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தரமான சிகிச்சை என்பது நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கிட்டத்தட்ட 14 நாட்களுக்கும் மேலாக தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால், அவர்களுக்கு மன உளைச்சல் என்பது ஏற்படுகிறது. பலர் தங்களது […]
ஆன்லைன் வகுப்புகளால் மன உளைச்சல் மட்டுமே அதிகம் ஏற்படுவதாக தெலுங்கானாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது ஆறாவது கட்ட நிலையில் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பதற்கான நடவடிக்கைகளை தனியார் பள்ளிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கானாவில் ஆன்லைன் வகுப்புகள் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில், மாணவர்களுக்கு வீட்டில் […]