Categories
தேசிய செய்திகள்

பவானிபூர் எம்எல்ஏ ராஜினாமா… சொந்த தொகுதிக்கு திரும்புகிறாரா மம்தா பானர்ஜி…?

மேற்கு வங்க மாநிலத்தில் பவானிபூர் தொகுதியில் வெற்றிபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து மம்தா பானர்ஜி அந்த தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்குவங்க தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. இருப்பினும் மம்தா பானர்ஜி நந்திகிராமம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். ஆனாலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் முதல்வராக மூன்றாவது முறை மம்தா பானர்ஜி பதவி ஏற்றுக்கொண்டார். […]

Categories
தேசிய செய்திகள்

3வது முறையாக மேற்கு வங்க முதல்வராக பதவியேற்றார்… மம்தா பானர்ஜி…!!

மேற்குவங்க மாநில முதல்வராக 3வது முறையாக மம்தா பானர்ஜி பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் மே 2-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் மேற்கு வங்க மாநிலத்தில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றியைத் தட்டிச் சென்றது. இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மீண்டும் மேற்கு வங்கத்தின் முதல்வராக பதவியேற்றார். கொல்கத்தாவில் ஆளுநர் மாளிகையில் மம்தா […]

Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்கத்தில் முன்னிலை வகிக்கும் மம்தா பானர்ஜி… டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வாழ்த்து…!!

முதல்வர் மம்தா பானர்ஜிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது.மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. நடந்துமுடிந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றது. தொடக்கம் முதலே அதிக தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னணி வகிக்கின்றது. இதைத்தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் 205 தொகுதிகளிலும், பாஜக 84 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

மோடி ராஜினாமா செய்ய வேண்டும்… மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு..!!

தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதற்கு காரணம் மோடிதான். எனவே அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவிவருகிறது. தனது செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்காக பிரதமர் மோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்கிறார் என்று மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியிருந்தார். தற்போது கொரோனா மீண்டும் அதிகரிப்பதற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தற்போதைய நிலைமைக்கு மோடி தான் காரணம் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா […]

Categories
தேசிய செய்திகள்

மேற்குவங்க மாநிலத்தில் ஜூன் 10ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது: மம்தா பானர்ஜி அறிவிப்பு

மேற்குவங்க மாநிலத்தில் ஜூன் 10ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அதேபோல, மேற்குவங்க மாநிலத்திலும் ஏப்.30 வரை ஊரடங்கை நீட்டிக்க பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் ஊரடங்கை சில இடங்களில் கடுமையாகவும், சில இடங்களில் தளர்த்தியும் அமல்படுத்தலாம் என்று திட்டமிட்டுள்ளார்.  கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக இன்று காலை 11 மணி அளவில் காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தி வருகிறார். […]

Categories

Tech |