கர்நாடகா மாநிலம் உடுப்பு மாவட்டம் ஹவாஞ்சே எனும் பகுதியில் 23 வயதான ஜோஸ்னா லூயிஸ் என்ற பெண் தன் உறவினர் வீட்டிற்கு சென்று உள்ளார். இந்த நிலையில் அங்கு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் ஜோஸ்னா லூயிஸ் நடனம் ஆடிக்கொண்டே சென்றுள்ளார். அப்போது திடீரென்று அப்பெண் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதை பார்த்து அதிர்சியடைந்த உறவினர்கள் ஜோஸ்னா லூயிசை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு ஜோஸ்னா லூயிசை பரிசோதனை செய்ததில் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதே […]
Tag: மயக்கம்
கேரள மாநில காசர்கோடு பகுதியில் வசித்து வந்த 19 வயது இளம் பெண் ஒருவர் மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் இவர் தங்கியிருந்த வீட்டின் கதவானது நேற்று காலை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டை திறந்து பார்த்தபோது மாடல் அழகியின் உடல் முழுவதும் காயங்களோடு மயங்கி கிடந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த காவல்துறையினர் […]
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத், கஸ்தூரிபா அரசு கல்லூரியில் உள்ள ஆய்வகத்தில் கேஸ் வாயு கசிந்ததாகக் கூறப்படும் நிலையில், 25 மாணவர்கள் மயக்கம் மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எந்த வாயு கசிந்தது என்பதை அறிய தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.. Hyderabad, Telangana | 25 students suffer from giddiness and fall ill after an alleged chemical gas leak in […]
படப்பிடிப்பு தளத்தில் பிரபல ஹீரோ மயங்கி விழுந்துள்ளார். தெலுங்கு சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நாக சவுர்யா. இவர் தற்போது அருணாச்சலம் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்கின்றார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை அடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளித்தபின் இயல்பு நிலைக்கு திரும்பினார். இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாவது, இவர் இந்த படத்திற்காக தனது உடலை சிக்ஸ்பேக் வைப்பதற்காக கடுமையான பயிற்சிகளை செய்து […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜ் காலனியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 1300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் மதியம் பள்ளி மாணவர்கள் உணவு அருந்திய பிறகு வழக்கம்போல் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, திடீரென பள்ளியில் விஷவாயு போல துர்நாற்றம் வீசியுள்ளது. உடனடியாக பள்ளியிலிருந்த ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு மாணவர்கள் சிலர் மயக்கமடைந்து விழுந்துள்ளனர். மேலும் சிலர் வாந்தி எடுத்துள்ளனர். இதை அடுத்து மருத்துவத் துறைக்கு தகவல் […]
திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியில் வசிப்பவர் விக்னேஷ். இவருடைய ஐந்து மாத கர்ப்பிணி மனைவிக்கு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து இருபதுக்கும் மேற்பட்டவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை முடிந்து 15 பேர் வீடு திரும்பி உள்ளனர். மேலும் 5 பேர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வ முருகன் என்பவர் […]
பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் உடலை 24 மணி நேரங்களும் மெய்காப்பாளர்கள் பாதுகாத்து வரும் நிலையில், ஒரு காவலர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் மகாராணியார், கடந்த 8-ஆம் எட்டாம் தேதி அன்று உடல் நலம் பாதிக்கப்பட்டு பால்மோரல் கோட்டையில் மரணமடைந்தார். அவரின் உடலை அரண்மனையிலிருந்து நேற்று லண்டனில் இருக்கும் வெஸ்ட்மின்ஸ்டர் என்ற அரண்மனைக்கு கொண்டு சென்றனர். வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இறுதிச்சடங்கு நடக்கவிருக்கிறது. அதுவரை, அந்த அரண்மனையில் வைக்கப்பட்டிருக்கிறது. 24 மணி நேரங்களும் […]
பல்லி விழுந்த சத்துணவு சாப்பாட்டை சாப்பிட்ட 47 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதைத்தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு தானிப்பாடி அருகே இருக்கும் மோத்தக்கல் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக ஏழுமலை என்பவர் பணியாற்றி வருகின்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவால் விடுமுறையில் இருக்கின்றார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மதிய உணவை சமையலர் லட்சுமி மற்றும் சமையல் உதவியாளர் பல்ஹீத் உள்ளிட்ட இருவரும் சமைத்துள்ளார்கள். […]
சேலம் மாவட்டம் ஆத்தூரில் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை பள்ளி மாணவிகளுக்கு வழக்கம் போல் ஊட்டச் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாத்திரையை சாப்பிட்ட மாணவிகளுக்கு சில மணி நேரத்திலைலேயே வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்க வந்த ஆம்புலன்சுகள் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட மாணவிகளை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது […]
Maine அருகில் அமைந்துள்ள Bangor எனும் பகுதியைச் சேர்ந்தவர் Lyndsi Johnson(28). இந்த பெண்ணுக்கு மிக அரியவகை பிரச்சனை ஒன்று இருக்கிறது. அதாவது Postural Tachycardia எனும் தொற்று வாயிலாக Lyndsa பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், இதனால் அவர் உட்காரும் போதோ (அல்லது) நிற்கும் போதோ கால் கீழே படும் சமயத்தில் அவரது இதய துடிப்பு அசாதாரண நிலைக்கு போகும் என தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் புவி ஈர்ப்பு (Gravity) மீதுள்ள அலர்ஜி காரணமாக தனக்கு இப்படி நிகழ்வதாக […]
ஆரணி டவுன் பகுதியில் கோவில் திருவிழாவில் கபடி பயிற்சியின் ஈடுபட்டிருந்த கபடி வீரர் கரணம் அடிக்கும் போது மரணம் அடைந்தார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் களத்து மேட்டு தெருவில் எட்டாம் தேதி மாரியம்மன் கோவில் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது. இதில் கபடி குழுவினர் கபடி போட்டிக்கான […]
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசு அறிவித்துள்ள மின்கட்டண உயர்வு அனைத்து தரப்பு மக்களை பாதிக்கும் என்பதை கண்டித்து தமிழக முழுவதும் திங்கட்கிழமை போராட்டம் நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் சென்னையில் இன்று அதிமுக சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் […]
நாகர்கோவில், கோட்டார் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 27 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவிகள் அங்கிருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். உடனடியாக அங்கு விரைந்த அமைச்சர் மனோ தங்கராஜ் மாணவிகளை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். மாணவிகளுக்கு லேசான அலர்ஜி மட்டும் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கனடா நாட்டை சேர்ந்த ஒரு நீச்சல் வீராங்கனைக்கு யாரோ மயக்கம் மருந்து கொடுத்து சுயநினைவை இழக்க செய்ததாக கூறியிருக்கிறார். புதாபெஸ்ட்டில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக 22 வயதுடைய Mary-Sophie Harvey என்ற வீராங்கனை சென்றிருக்கிறார். அப்போது, போட்டியின் கடைசி நாளில் அவர் திடீரென்று மயக்க நிலைக்கு சென்றார். கண்விழித்த உடன் தான் படுக்கையில் இருந்ததாகவும், குழுவின் மேலாளர் மற்றும் மருத்துவர் இருந்ததை பார்த்தவுடன் திகைத்து போனதாகவும் கூறியிருக்கிறார். சுமார் 6 மணி நேரங்களாக […]
கறிவிருந்து சாப்பிட்ட கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் 70 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகில் மேலந்தல் கிராமத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் தற்சமயம் கரும்பு வெட்டும் சீசன் முடிந்து விட்டதால் அதை கொண்டாடுகின்ற வகையில் தொழிலாளர்கள் சுமார் 100 பேர் கடந்த 28-ஆம் தேதி அதே கிராமத்தில் ஒன்று திரண்டு கோழி கறி விருந்து வைத்து சாப்பிட்டார்கள். அதன்பின் அன்று இரவு முதல் கறி […]
நடுவானத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தில், விமானி மயக்கமடைந்ததால் பயணி ஒருவர் விமானத்தை இயக்கி பாதுகாப்பாக தரையிறக்கிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வடக்கு பகுதியில் இருக்கும் அட்லாண்டிக் கடலில் பஹாமா என்ற தீவு நாட்டிலிருந்து பயணிகள் இருவருடன் சிறிய வகை விமானம் சென்றிருக்கிறது. ப்ளோரிடா நோக்கி பயணித்த அந்த விமானத்தின், விமானிக்கு திடீரென்று உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவர் மயங்கி விட்டார். இதனை பார்த்துக் கொண்டிருந்த பயணி ஒருவர், விமானி அறைக்கு சென்று கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். […]
ஆய்வகத்தில் இருந்து மெக்னீசியம் பாஸ்பேட்டை உப்பு என்று நினைத்து சாப்பிட்ட 11 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த மோரணபள்ளியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 941 மாணவர்கள் படித்து வருகிறார்கள். அதில் 392 மாணவர்கள் மேல்நிலை கல்வி படிக்கிறார்கள் அவர்களுக்கு ஆய்வக தேர்வு நடைபெற்று வருகின்ற நிலையில், கடந்த 25 ஆம் தேதி அன்று பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் 180 பேருக்கு […]
கடந்த 29ஆம் தேதி அர்ஜென்டினாவில் உள்ள Buenos Aires அருகே ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மயக்கமடைந்த அந்த பெண் தடுமாறி ஓடும் ரயிலில் விழுந்துள்ளார். நல்ல வேளையாக அவர் ரயில் பெட்டிக்கும், பிளாட்பாரத்திற்கும் நடுவே விழுந்ததால் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். https://www.instagram.com/tv/CcgY0oFFeCM/?igshid=YmMyMTA2M2Y= இதையடுத்து அருகில் இருந்த சிலர் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பிலான வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் சந்திப்பின் போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவெற்றியூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் மற்றும் செய்தியாளர்கள் சீமானுக்கு உடனடியாக முதலுதவி செய்து மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது […]
ஊத்தங்கரை அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் திடீரென்று மயக்கம் போட்டு விழுந்ததால் பெற்றோர்கள் பதட்டம் அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கல்லாவி அருகே உள்ள சூலக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று பள்ளி மாணவிகளுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்பட்டது. மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் திடீர் என்று மயங்கி விழுந்தனர். […]
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கிராமத்தில் உயர்நிலை பள்ளியில் மதிய உணவுடன் முட்டை சாப்பிட்ட 9 மாணவர்கள் மயக்கம் அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 100 மாணவர்கள் மற்றும் 88 மாணவிகள் பயின்று வருகின்றனர். இன்று பள்ளியில் மதிய உணவுடன் முட்டை வழங்கியுள்ளனர். இந்த முட்டையை சாப்பிட்ட 8 மாணவர்கள் மற்றும் ஒரு மாணவி மயக்கம் அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து தலைமையாசிரியர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்கள் உதவியுடன் அருகில் […]
மராட்டிய மாநிலம் அருகே நவராத்திரி விழாவில் உணவு உண்ட 30 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் உள்ள அம்பாட் தாலுகாவை சேர்ந்த கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நேற்று முன்தினம் நவராத்திரி விழாவை கொண்டாடினர். பின்னர் அவர்களுக்கு தினையால் செய்யப்பட்ட ஒரு உணவு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதை பலரும் வாங்கி சாப்பிட்டனர். இதில் 30க்கும் மேற்பட்டவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களின் உடல் நிலை சீராக […]
மயங்கி விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள சூரமங்கலம் பகுதியில் கோவிந்தன் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி இருந்தார். இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். இவர்களது பக்கத்து வீட்டில் சுப்பிரமணியசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. அந்த குழந்தை அடிக்கடி சாந்தி வீட்டிற்கு சென்று விளையாடுவது வழக்கமாக இருந்தது. இதேபோன்று அந்த குழந்தை சாந்தி […]
அமெரிக்காவில் மயக்கத்தில் இருந்த இளம்பெண்ணை அத்துமீறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள லின்கால்னை பகுதியில் வசித்து வரும் ஜோசிப் பராசா (24) எனும் இளைஞர் மயக்கத்தில் இருந்த இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த காட்சிகளை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணும் அந்த இளைஞர் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அந்த இளம்பெண் ஜோசிப் தன்னை போதை மருந்துகளை கொடுத்து மயக்கமடைய செய்தார். அதன் பிறகு தன்னை […]
சென்னையில் உள்ள வியாசர்பாடி சர்மா நகரில் உள்ள திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திடீரென மின்கசிவு ஏற்பட்டு மின்சார பெட்டி வெடித்து சிதறியது. அதனால் மண்டபத்தில் இருந்தவர்கள் அனைவரும் அலறி அடித்து கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேறினார்கள். இதையடுத்து மணமக்களின் உறவினர்கள் மின்சார பெட்டியை சரி செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் இரண்டு மணி நேரம் ஆகியும் மின்சார பெட்டியை சரி செய்யவில்லை. இதனால் மண்டபத்தில் இருந்த மணமக்களின் உறவினர்கள் அனைவரும் மூலக்கடை சாலையில் […]
தென்னை மரத்தில் ஏறியபோது தொழிலாளி திடீரென மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அக்ராகரம் நாட்டான்வட்டத்தில் உள்ள தென்னந்தோப்பில் தென்னை மரங்களை அபிமன்னன் என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். இந்நிலையில் தென்னை மரத்தில் உள்ள தேங்காய்களை பறிப்பதற்காக அந்தியூர் பகுதியை சேர்ந்த மரம் ஏறும் தொழிலாளி ராமன் என்பவரை அழைத்து வந்தனர். அப்போது அவர் 4 மரங்களில் தேங்காய் பறித்து விட்டு 60 அடி உயரமுள்ள 5-வது தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க காலில் அணியும் மெட்டு […]
ஆண்ட்டிகுவாவில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 2வது டி20 சர்வதேச போட்டியின் போது மே.இ.தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணியின் சினெல் ஹென்றி மற்றும் செடியன் நேஷன் என்ற இரு வீராங்கனைகள் அடுத்தடுத்து மைதானத்திலேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முதலில் சினெல் ஹென்றி மயங்கி விழ அவரை ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் சென்றனர். 10 நிமிடங்களுக்குப் பிறகு செடியன் நேஷன் என்ற வீராங்கனையும் மயங்கி விழுந்தார், இவரையும் ஸ்ட்ரெச்சரில் கொண்டு சென்றனர். இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இப்போது உடல் நிலை […]
பிரேசில் நாட்டில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பதற்றத்துடன் சென்ற நபர் திடீரென மயங்கி கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் தீவிரமடைந்துள்ள கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. ஆனால் பெரும்பாலான மக்கள் கொரோனா தடுப்பூசி என்றாலே அச்சம் அடைகின்றனர். இந்தநிலையில் பிரேசில் நாட்டில் உள்ள மகிழ என்ற நபர் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக தடுப்புசி மையத்திற்கு வந்துள்ளார். ஆனால் தடுப்பூசி போடுவதற்கு முன்பு சிறிது பதற்றத்துடன் […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடந்த திருமண விழா ஒன்றில் அடுத்தடுத்து 50 பேர் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் சீதாப்பூர் அடுத்துள்ள மஹமதாபாத்தில் திருமண விழா ஒன்று நேற்றிரவு நடைபெற்றது. இந்த திருமண விழாவில் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நேற்றிரவு விருந்தினர் அனைவருக்கும் உணவு அளிக்கப்பட்டது. அப்போது திடீரென விருந்து சாப்பிட்ட ஒருவர் அங்கேயே மயக்கம் அடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மயக்கமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு […]
ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் திருமணத்திற்கு அளிக்கப்பட்ட விருந்தில் உணவு உண்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் கேந்திராபாரா மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் மாட்டியா கிராம மக்கள் பலருக்கும் உணவு அளிக்கப்பட்டது. உணவு அருந்திய பின்னர் அதில் பலருக்கு வாந்தி, வயிற்று வலி மற்றும் குமட்டல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 12 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட சுகாதாரத்துறை […]
கொரோனா தடுப்பூசி போட்ட மூவருக்கு மயக்கம் ஏற்பட்டதற்கு தடுப்பூசி காரணமில்லை என்று கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 10 ஆயிரத்து 122 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மட்டும் இதுவரை 2908 பேருக்கு செலுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று மருத்துவமனையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் என 220 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்ட 220 பேரில் விமலா மேரி, மனோகர், சாந்தி ஆகிய மூன்று பணியாளர்களும் […]
குடிபோதையில் திருட வந்த நபர் அதே வீட்டில் மயங்கிக்கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சமையல் கலைஞர் சேகர் (58) இவரது மனைவி ஆனந்தி (55) இவர்கள் தற்போது சென்னையில் உள்ள தில்லைகங்கா நகர் பகுதியில் வசித்து வருகின்றனர். இருவரும் நேற்று காலை சமையல் வேலைக்கு சென்று விட்டனர். இந்நிலையில் மாலையில் வீடு திரும்பிய ஆனந்தி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார்.அப்போது […]
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஏலூர் என்ற பகுதியில் 200க்கும் மேற்பட்டோர் வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஏலூர் என்ற பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள மக்கள் 200க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் தற்போது வரை அடுத்தடுத்து 200 பேர் மயங்கி விழுந்துள்ளனர். மேலும் மயங்கி விழுந்த மக்கள் வாயில் நுரை வெளியேறி […]