மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் லாரி டிரைவர் குடிபோதையில் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள செம்மங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு தெருவில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வமணி என்ற மகன் உள்ளார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 6-ஆம் தேதி தனது கூரை வீட்டில் குடி போதையில் தீ வைத்துள்ளார். அதில் வீடு முழுவதும் மளமளவென்று பற்றி எரிந்தது. அதனை கண்ட அக்கம் […]
Tag: மயிலாடுதுறை மாவட்டம்
தொடர் மழையால் சீர்காழி பகுதியில் உளுந்து அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட தென்பாதி, சீர்காழி, செம்மங்குடி, கீழ தென்பாதி, திருக்கருகாவூர், விநாயகக்குடி, எடமணல், கடவாசல், விளந்திட சமுத்திரம், வழுதலைகுடி, அத்தியூர், மருதங்குடி, பெருமங்கலம், ஆதமங்கலம், பெருமங்கலம், புங்கனூர், கன்னியாகுடி, திருப்புங்கூர், வடபாதி, திட்டை, சட்டநாதபுரம், காரைமேடு, தில்லைவிடங்கன் ஆகிய பல்வேறு பகுதிகளில் சம்பா நெல் அறுவடை செய்த பின்னர் விவசாயிகள் உளுந்து உள்ளிட்ட பயிறு வகைகளை […]
மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு ஏதுவாக நுழைவாயில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை நகரில் இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. அதில் சிதம்பரம், சென்னை, பூம்புகார், கும்பகோணம் ஆகிய முக்கிய வழித்தடங்களில் செல்லும் பேருந்துகள் அனைத்தும் காமராஜர் பேருந்து நிலையம் வந்து செல்லும். ஒருநாளைக்கு 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் நகரின் முக்கியமான இந்த பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த பேருந்து நிலையத்திற்கு இதனால் ஆயிரக்கணக்கான […]
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள எருக்கூர் ரேஷன் கடையில் அட்டைதாரர்களுக்கு தரமற்ற அரசியை வழங்குவதால் அவற்றை கிராம மக்கள் சாலையோரம் கொட்டியுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள எருக்கூரில் ரேஷன் கடை ஒன்று இயங்கி வருகிறது. அந்த கடை புத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டுபாட்டில் இயங்கி வருகிறது. இந்த ரேஷன் கடையில் 3 ஆயிரம் அட்டைதாரர்களுக்கு மண்எண்ணெய், அரிசி, சர்க்கரை, பருப்பு ஆகிய அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி […]
மயிலாடுதுறை மாவட்டத்தில் நள்ளிரவில் வீட்டின் கதவை தட்டிய வாலிபரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கீழ்மாத்தூர் நடுத்தெருவில் இளவரசன் என்பவர் என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று ஒரு வீட்டின் கதவை நள்ளிரவில் தட்டியுள்ளார். அப்போது அந்த வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 17 வயது சிறுவன் எழுந்து வந்தார். அதன் பின் கதவை திறந்து எங்கள் வீட்டின் கதவு ஏன் தட்டுகிறாய் ? என்று கேட்டுள்ளார். இதன் காரணமாக […]
முககவசம் அணியாமல் சீர்காழி நகர்ப்பகுதியில் வாகனம் ஓட்டிச் சென்ற ஓட்டுனர்களுக்கு நகராட்சி சார்பில் ரூ.200 அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் பெரும்பாலான இடங்களில் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் பொறியாளர் தமயந்தி, பணி மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன், மேலாளர் காதர்கான் ஆகியோர் சீர்காழி நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி தலைமையில் சீர்காழி நகர் பகுதியில் முக கவசம் அணியாமல் சென்றவர்களிடம் […]
மயிலாடுதுறையில் முன்னாள் ராணுவ வீரரை கல்லால் தாக்கிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவிழந்தூர் நீடூர் மெயின் ரோட்டில் ரூபன் சார்லஸ் என்பவர் வசித்து வருகிறார். அவர் முன்னாள் ராணுவ வீரராக பணி புரிந்தவர். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறை நகரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அரசு மருத்துவமனை சாலையில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது இரண்டு பேர் 4 கால் மண்டபம் அருகே சாலை குறுக்கே நின்று […]
மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி மீனவ சிறுவர்கள் உட்பட 6 பேர் படகில் வைத்து மீனவர் அடித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டனர் . மாயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி தாலுகா வானகிரி மற்றும் புதுப்பேட்டை கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது புதுப்பேட்டை மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக வலையை வீசியுள்ளனர். அந்த வலையின் மேல் பூம்புகார் அருகே வானகிரி மீனவர்கள் மற்றொரு வலையை வீசியுள்ளனர். இதனால் புதுப்பேட்டை மீனவர்கள் வலை சேதமடையும் […]
மயிலாடுதுறை மாவட்டம் பனங்குடி கிராமத்தில் உள்ள சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பனங்குடி கிராமத்தில் சிறப்பு வாய்ந்த சீதளாதேவி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் தீமிதி திருவிழா நடைபெறும். இந்த வருடத்திற்கான தீமிதி திருவிழா கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு குங்குமம், மஞ்சள், சந்தனம், பால், தயிர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு […]
கொரோனா பரவலை தடுக்க தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் கிருமி நாசினி தெளிப்பு பணி நடைபெற்றது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அக்ரஹாரம், தலைஞாயிறு, சின்னக்கடை தெரு, கடை வீதி, ஆட்டோ நிறுத்தம், வேன் மார்க்கெட், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் கிருமி நாசினி தெளித்து பணி நடைபெற்றது. மேலும் முக கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ஒரு ரூ. 200 […]
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவிலில் திருவிழா ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒழுகைமங்கலம் கிராமத்தில் சிறப்பு வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 4-ஆம் தேதி பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு திருவிழாக்களுக்கு தடை விதித்துள்ளது. இதனால் கோவில் நிர்வாகத்தினர் மாரியம்மன் கோவில் திருவிழா ரத்து செய்யப்பட்டதாக அறிவித்துள்ளனர். மேலும் நடைபெறுவதாக இருந்த […]
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் என்ஜீன்கள் மற்றும் வலைகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 14-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் கடல் மீன்கள் இனப்பெருக்கத்தையொட்டி இழுவைப்படகு மற்றும் விசைப்படகு, இழுவை வலை மூலம் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க வழக்கம்போல் அரசு தடை விதித்துள்ளது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சந்திரபாடி, தரங்கம்பாடி, குட்டியாண்டியூர், சின்னூர்பேட்டை, புதுப்பேட்டை, பெருமாள் பேட்டை, தாழம்பேட்டை, வெள்ளக்கோவில் ஆகிய […]
மயிலாடுதுறையில் இரண்டு நாட்களாக பெய்த மழையால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து நாசமாகி வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 103 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது. மேலும் ரூ. 1 லட்சத்து 85 ஆயிரம் டன் நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. அதில் 60 ஆயிரம் டன் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் 25 ஆயிரம் டன் நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்கம் அடைந்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் […]
மயிலாடுதுறையில் உள்ள சீர்காழியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளுக்கு கொள்ளிடம் ஆற்றில் சுத்தமல்லி என்ற இடத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் குடிநீர் நகராட்சி வளாகத்தில் உள்ள நீர் தேக்கத் தொட்டியில் ஏற்றப்பட்டு அதன் பின்னர் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் சீர்காழி அருகே உள்ள பிரதான சாலையில் கடந்த […]
கொரோனா தடுப்பூசி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் இருப்பு இல்லாததால் தடுப்பூசி போட வரும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மயிலாடுதுறையில் நகர ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு பொது மருத்துவமனையில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றை இரண்டு முறை போட்டுக்கொள்ள வேண்டும். முதல் ஊசியை போட்ட பிறகு இரண்டாவது தடுப்பூசியை 15 நாட்களுக்கு பின் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி […]
மயிலாடுதுறையில் கணவன்-மனைவி உட்பட 3 பேரை சரமாரியாக தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தலைஞாயிறு வடக்கு தெருவில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தமயந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திநாதன் மற்றும் அவரைச் சார்ந்த 4 பேர் தமயந்தி வீட்டின் எதிரே குடி போதையில் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து […]
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே 1,000 லிட்டர் சாராயத்தை வேனில் கடத்திச் சென்ற டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் அரையபுரம் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு வந்த வேனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் டிரைவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் வேனை சோதனை செய்தனர். அந்த சோதனையில் 1,000 லிட்டர் சாராயம் […]
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி கடற்கரையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஓசோன் காற்று வாங்க குவிந்தனர். செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கடற்கரை பகுதிகளில் தமிழ்நாடு அரசு கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதித்துள்ளது. மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி கடற்கரையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் […]
மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயர் ஏ.வி.சி. கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார், சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய சட்டசபை தொகுதிகளில் கடந்த 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் ஏ.வி.சி. கல்லூரியில் உள்ள காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதை நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரவீன் நாயர் இந்த […]
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வயலுக்குச் சென்ற பெண் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் ஒன்றிய பகுதியில் தியாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் வயலுக்கு சென்றுள்ளார். அங்கு செல்வியை எதிர்பாராதவிதமாக பாம்பு கடித்துள்ளது. அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன்பின் அவர் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு […]
மயிலாடுதுறையில் அதிமுக நிர்வாகிகள் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பொறையாரில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார. இவர் தரங்கம்பாடி பேரூராட்சி முன்னாள் தலைவர் மற்றும் அதிமுக நிர்வாகி ஆவார். இவருடைய வீட்டிற்கு நேற்று முன்தினம் வருமான வரித்துறையினர் திடீரென வந்தனர். வீட்டில் சோதனை செய்யப் போவதாகக் கூறி கதவை அடைத்துள்ளனர். பல்வேறு அறைகளில் சென்று வீடு முழுவதையும் சோதித்தனர். அதில் சில பார்சல்கள் மற்றும் ஆவணங்களை […]
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று பணம் பட்டுவாடா செய்ததாக வி.சி.க. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அகரதிருகோலக்கா தெரு பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தி.மு.க. சார்பாக வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் பறக்கும் படை அதிகாரி சிவாஜி தலைமையிலான குழுவினர் அப்பகுதிக்கு […]
மயிலாடுதுறையில் சேதமடைந்த நிலையில் காணப்படும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்றி புதிதாக கட்டித்தரப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அசிக்காடு ஊராட்சி பூந்தோட்டம் பிள்ளையார் கோவில் தெருவில் நீர்தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இது கட்டப்பட்டு பல வருடங்கள் ஆகிறது. தற்போது தண்ணீர் குழாய்கள் உடைந்து, நீர் தேக்கத் தொட்டி மிகுந்த சேதம் அடைந்துள்ளது. அதிலுள்ள இரும்பு ஏணியும் பழுதடைந்து காணப்படுகிறது. கம்பிகள் தெரியும் வண்ணம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கான்கிரீட் பெயர்ந்து […]
மயிலாடுதுறையில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ராஜ்குமார் மணல்மேட்டில் அரசு மருத்துவமனையை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மணல்மேடு பேரூராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராஜகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவரை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். அங்கு அவர் பேசுகையில், நான் எம்.எல்.ஏ.வாக 2006- 2011-ஆம் ஆண்டு இருந்த போது வில்லியநல்லூர், மணல்மேடு, முருகமங்கலம், இளந்தோப்பு, காளி ஆகிய பகுதிகளில் ஆரம்ப […]
மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் ராஜகுமார் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக உள்ளதாக கூறியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நீடூரில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ராஜகுமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கு அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சிதான் அகில இந்திய அளவில் இஸ்லாமியர்கள் உட்பட சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக உள்ளது. தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சி பாதுகாப்பாக உள்ளது. எனவே சிறுபான்மையினரின் பாதுகாப்பையும், அவர்களுடைய மதிப்பையும் உறுதி செய்யும் தி.மு.க., காங்கிரஸ் […]
மயிலாடுதுறை ஐயாறப்பர் கோவிலில் நேற்று புதிய தேர் வெள்ளோட்டம் சிறப்பாக நடைபெற்றது. மயிலாடுதுறையில் சிறப்பு வாய்ந்த ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானது. இந்த கோவிலில் இருந்த தேர் ஏற்கனவே பழுதடைந்து சேதமடைந்த காரணத்தினால் புதிய தேர் தற்போது உருவாக்கப்பட்டது. அதன்படி புதிய தேர் ரூ. 30 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டது. நேற்று அதற்கான வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தேரை இழுத்து தொடங்கி வைத்தனர். […]
காங்கிரஸ் வேட்பாளர் ராஜகுமார் மயிலாடுதுறை பகுதி மேன்மேலும் வளர்ச்சியடைய பாடுபடுவேன் என்று வாக்குறுதி அளித்தார். மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூர், சித்தர்காடு, மல்லியம், மறையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மயிலாடுதுறை சட்டசபை தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ராஜகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவரை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். அங்கு அவர் பேசுகையில், நூற்றுக்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு குப்பைகள் அள்ள டிராக்டர்கள், சாய் விளையாட்டு அரங்கம் என இன்னும் […]
மயிலாடுதுறை மாவட்டமும், கடலூர் மாவட்டமும் சந்திக்கும் இடமான கொள்ளிடம் சோதனைச்சாவடியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டமும், கடலூர் மாவட்டமும் சந்திக்கும் இடத்தில் கொள்ளிடம் சோதனைச்சாவடி அமைந்துள்ளது. அனைத்து வகையான வாகனங்களும் இந்த சோதனைச் சாவடியை கடந்து தான் தேசிய நெடுஞ்சாலையில் மயிலாடுதுறை, சீர்காழி, கும்பகோணம் ஆகிய பகுதிகள் வழியாக செல்கின்றன. இந்த தேசிய நெடுஞ்சாலை வழியாக தொடர்ந்து 24 மணி நேரமும் போக்குவரத்து நடைபெற்று கொண்டிருக்கிறது. முக்கியமான சோதனை சாவடியாக […]
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் அகோர மூர்த்திக்கு நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவெண்காட்டில் சிறப்பு வாய்ந்த சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தனி சன்னதியில் சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம் அகோரமூர்த்தி சுவாமியாக அருள்பாலித்து வருகிறார். அஷ்ட பைரவர்கள் இவரின் திருமேனி அடிப்பகுதியில் காட்சியளிப்பது விசேஷமாக கருதப்படுகிறது. இவரை வழிபட்டால் செல்வம் செழிப்பதோடு, எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்குவதாக ஐதீகம். அகோர மூர்த்தி […]
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் சோதனைச்சாவடியில் பாதயாத்திரை வருபவர்கள், வாகன ஓட்டிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக வருபவர்களுக்கும், மயிலாடுதுறை மாவட்ட எல்லையான கொள்ளிடம் வழியாக செல்பவர்களுக்கும் கொரானா பரிசோதனை செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச்சாவடியில் கொரோனா பரிசோதனை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சண்முகசுந்தரம் அறிவுறுத்தலின்படி இந்த சோதனை நடைபெற்றது. இதற்கு வட்டார மருத்துவ […]
மயிலாடுதுறையில் கிராமங்களில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காட்டுச்சேரி தரங்கம்பாடி, பொறையாறு, திருக்களாச்சேரி, ஆயப்பாடி, சங்கரன்பந்தல் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் குரங்குகள் தொல்லை தற்போது அதிகமாக உள்ளது. இவை வீடுகளில் உள்ள தோட்டத்தில் பலா, மா, வாழை ஆகியவற்றை பறித்து சாப்பிடுவதோடு அதிக அளவில் வீணாக்கி விடுகிறது. சில வீடுகளில் குடிநீர் பைப்புகளை உடைத்து, உணவு பொருள்களை சாப்பிட்டு விட்டு செல்கிறது. மேலும் டிவி ஆண்டனாவில் ஏறி […]
மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சி வேட்பாளர் காசிராமனை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மயிலாடுதுறை மாவட்டம் சின்னக்கடை வீதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அந்த கட்சியின் வேட்பாளர் காசிராமனை ஆதரித்து நேற்று முன்தினம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது;- பணம் இருப்பவர்கள் மட்டும்தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் அதனை மாற்றி குணம் இருப்பவர்களும் அரசியல் செய்ய முடியும் என்று […]
மயிலாடுதுறையில் முன்விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் குத்திய 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் பகுதிக்கு உட்பட்ட வடக்கு தெருவில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருஞானசம்பந்தம் (38) என்ற மகன் உள்ளார். இவருக்கும் சீர்காழி ரயில்வே ரோடு பகுதியில் வசித்து வரும் சாகுல்அமீது என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தென்பாதியில் உள்ள ஒரு டீக்கடையில் கடந்த 25-ஆம் தேதி திருஞானசம்பந்தம் டீ குடிப்பதற்காக […]
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வீட்டிலிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் கிராமத்தில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற தாய் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர்கள் அதிகாலையில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் கதவை இரண்டு மர்ம நபர்கள் தட்டியுள்ளனர். […]
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடியில் பிச்சைக்காரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளவரசன் (26) என்ற மகன் இருந்தார். சம்பவத்தன்று இவரும் வ.உ.சி. தெருவில் வசித்து வரும் பாக்யராஜ் என்பவரது மகன் ஸ்ரீராமும் துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அதன்பின் அங்கிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது இளவரசன் மோட்டார்சைக்கிளை […]
மயிலாடுதுறை மாவட்டம் மாத்தூர் கைலாசநாதர் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாத்தூர் கிராமத்தில் சிறப்பு வாய்ந்த கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் கோலாகலமாக குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதற்கு முன்னதாக கணபதி ஹோமம் கடந்த 19-ஆம் தேதி அன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமிக்கு அலங்கார பூஜைகளும், தீபாராதனைகளும் தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்றது. மேலும் யாக சாலை பூஜை […]
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் சட்டமன்ற தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வேட்புமனு தாக்கல் 19-ஆம் தேதி நிறைவடைந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகள் உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 17 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. […]
மயிலாடுதுறை மாவட்டம் சந்திரபாடி கிராமத்தில் மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்கக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் இரட்டைமடி மற்றும் சுருக்குமடி ஆகிய வலைகளை மீன் பிடிக்கு பயன்படுத்துவதற்கு அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தடையை நீக்கி சுருக்குமடி வலையை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கக் கோரி சந்திரபாடி மீனவ கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்றும், இறால் பண்ணைகளை மூட வேண்டும் […]
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் சட்டமன்ற தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வேட்புமனு தாக்கல் 19-ஆம் தேதி நிறைவடைந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகள் உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 11 பேரின் வேட்பு மனுக்கள் […]
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 10 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் சட்டமன்ற தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வேட்புமனு தாக்கல் 19-ஆம் தேதி நிறைவடைந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகள் உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 12 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் […]
மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூரில் உள்ள பரிமள ரங்கநாதர் கோவிலில் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திரத் திருவிழா தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவிழந்தூரில் சிறப்பு வாய்ந்த பரிமள ரெங்கநாதர் கோவில் உள்ளது. இது பெருமாள் பள்ளி கொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க கோவில்களில் ஐந்தாவது கோவிலாக விளங்குகிறது. மேலும் 108 திவ்ய தேசங்களில் 22-வது திவ்ய தேசமாக திகழ்கிறது. இது திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். இந்த கோவிலில் வருடம்தோறும் பங்குனி உத்திர திருவிழா […]
மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசலில் சுருக்குமடி வலையை பயன்படுத்த அரசு அனுமதி வழங்குமாறு மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அருகே கூழையார், திருமுல்லைவாசல், தொடுவாய் ஆகிய மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் 60-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள், 100-க்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் ஆகியவற்றின் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். எனவே தொடுவாய், திருமுல்லைவாசல் ஆகிய கிராமங்களில் உள்ள மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்குமாறு […]
மயிலாடுதுறையில் தங்கை இறந்த மன வருத்தத்தில் அண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவிழந்தூரில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஷ் என்ற மகன் இருந்தார். இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இவருடைய தங்கை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அதிலிருந்தே வெங்கடேஷ் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்துள்ளார். அவருக்கு அவரது உறவினர்களும், நண்பர்களும் ஆறுதல் கூறியுள்ளனர். இருப்பினும் வெங்கடேஷ் தங்கை […]
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தேர்தல் கண்காணிப்பு குழு மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 12-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் […]
மயிலாடுதுறையில் முககவசம் மற்றும் சமூக இடைவெளி ஆகியவற்றை பின்பற்றாமல் செல்பவர்களுக்கு அபராதமும், உரிய நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பொது இடங்களில் செல்ல வேண்டும். மேலும் முக கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கும், முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கும் […]
ஆழிப்பேரலையால் மூழ்கடிக்கப்பட்ட ஆதி தமிழர் நாகரிகதின் அடையாளச்சின்னம் பூம்புகார். சிலப்பதிகார காட்சிகளை கண் முன்னே விளக்கும் பூம்புகார் கலைக்கூடம் 1306 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மாசிலா நாதர் ஆலயம் ஆகியவை புகழ்பெற்றவை ஆகும். இந்தியாவில் முதல் அச்சுக்கூடம், காகிதப்பட்டறை, பைபிளின் தமிழ் மொழி பெயர்ப்பு ஆகியவை நிகழ்ந்த தரங்கம்பாடி, கம்பராமாயணம் எழுதிய கம்பர் பிறந்த தேரிழந்தூர் ஆகியவை பூம்புகார் தொகுதியில் தான் உள்ளது. விவசாயம் மற்றும் மீன்பிடித்தல் ஆகியவை முக்கிய தொழிலாக பார்க்கப்படுகிறது. பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் […]
நாகை மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறையை தலைமை இடமாக கொண்டு கடந்த ஆண்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. வரலாற்று மற்றும் ஆன்மிக சான்றுகளும், சைவ மற்றும் வைணவ ஆலயங்களும் நிறைந்த பகுதி மயிலாடுதுறை தொகுதி ஆகும். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எனப்படும் எம். கே. தியாகராஜ பாகவதர் பிறந்த ஊர் இதுவாகும். பொன்னியின் செல்வன் தந்த கல்கி, மாயூரம் வேதநாயகம் பிள்ளை ஆகியோர் வாழ்ந்த ஊர். மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியை அதிகபட்சமாக திமுக 6 முறை கைப்பற்றியுள்ளது. […]
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தேங்கிக் கிடக்கும்நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்களில் இருந்து விரைவில் கொள்முதல் செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாமாகுடி, திருக்கடையூர், கிள்ளியூர் ஆகிய இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. அங்கு விவசாயிகள் கொண்டு சென்ற நெல் மூட்டைகளை 5 நாட்களாக அங்கு அடுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் பலத்த கனமழையால் நெல் பயிர்கள் சேதம் அடைந்ததால் மகசூலும் இல்லை. அதில் மிஞ்சிய நெற்பயிர்களை அறுவடை செய்து […]
கியாஸ் விலை உயர்ந்ததன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் டீக்கடை ஒன்றில் ஒரு லிட்டர் வெந்நீர் 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டீக்கடைகளிலும் குடிக்க தண்ணீர் கேட்டால் இலவசமாக தயக்கமின்றி கொடுப்பார்கள். மேலும் பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் சூடான வெந்நீரை டீக்கடைக்காரர்கள் தயக்கமின்றி பிடித்துக் கொடுப்பார்கள். இன்னும் இந்த பழக்கத்தை டீக்கடைக்காரர்கள் கடைபிடித்து வருகின்றன. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பட்டமங்கல கடைவீதியில் பிரபல டீக்கடை ஒன்று உள்ளது. அந்த டீக்கடையில் நோட்டீஸ் ஒன்று ஒட்டப்பட்டு […]
மயிலாடுதுறை மாவட்டம் திருச்சம்பள்ளி அங்காள பரமேஸ்வரி கோவிலில் நேற்று முன்தினம் மயானக்கொள்ளை விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருச்சம்ப்பள்ளி கிராமத்தில் சிறப்பு வாய்ந்த அங்காளபரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் மயான கொள்ளை விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு நவக்கிரக யாகம், கலச பூஜை, கணபதி யாகம், லட்சுமி யாகம் ஆகியவை நடந்தது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. […]