Categories
மாநில செய்திகள்

தனியார் பேருந்தில் விபத்து…. படிக்கட்டில் பயணித்த பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம்….!!!!

இன்று மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றில் பள்ளி மாணவர்கள் உட்பட ஏராளமானவர்கள் பயணம் செய்தனர். அந்த பேருந்து சீர்காழி தென்பாதி அருகே சென்ற போது முன்னால் சென்ற டிராக்டரை முந்தி செல்ல முயன்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது பேருந்து உரசியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் படியில் பயணம் செய்த விஜயராஜ் (வயது15 ), அர்ஜுனன்(17) என்று 2 பள்ளி மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களின் திடீர் முடிவு…. அதிர்ச்சியில் தமிழக அரசு…!!!!

தமிழக அரசு ஊழியர்கள் எடுத்துள்ள திடீர் முடிவு தமிழ்நாடு அரசு வட்டாரத்தை கதிகலங்க வைத்துள்ளது. தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மயிலாடுதுறை திரு இந்தளூரில் மாநில தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் பழனிவேலு வரவேற்று பேசியுள்ளார். தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதற்கு முன்னதாக மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வேலை அறிக்கையை முன்வைத்து […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ காப்பீடு திட்டம்… வெளியான செம சூப்பர் அறிவிப்பு…!!!!!

மருத்துவ காப்பீடு தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாடுதுறை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கீழ் பிறப்பு முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் மயிலாடுதுறை மற்றும் குற்றாலம் ஆகிய ஊர்களில் நடைபெற உள்ளது. எனவே மாற்று திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை தேவைப்படுபவர்கள், உதவி உபகரணங்கள், மூன்று சக்கர வண்டி, சக்கர நாற்காலி, காதொலி கருவி, நடைபயிற்சி […]

Categories
மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதியில்லை… புதிய கட்டிடம் வேண்டும்… SFI தலைமையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்..!!

மயிலாடுதுறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம்,  குத்தாலம் தாலுகா மாதிரிமங்கலம் ஊராட்சியில் உள்ள சிவராம புரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த கல்லூரிக்கு இடம் ஓதுக்கிடு செய்யவில்லை என்பதால்  மாதிரிமங்கலம் கிராம சேவை மைய கட்டிடத்தில் தற்போது கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி […]

Categories
மாவட்ட செய்திகள்

என்னோடு வா…. இனி பிரச்சனை வராது… பிளேடால் மனைவியின் கழுத்தை வெட்டிய கணவன்… பரபரப்பு சம்பவம்..!!

மயிலாடுதுறையில் கணவர் மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள செம்பனார் கோவில் அருகே இருக்கும்  நல்லுச்சேரி கூடலூர் கிராமத்தில் வசித்து வருபவர் வினோத் குமார்(35). இவருக்கு புவனேஸ்வரி என்கிற ஹேமா ஜூலியட்(37) என்ற மனைவி இருந்துள்ளார். ஹேமா ஜூலியட் சங்கரன்பந்தலில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியராக பணிபுரிகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். கடந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

OMG: மின் விளக்கால் ஏற்பட்ட விபரீதம்…. மயிலாடுதுறையில் பரபரப்பு …!!!

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வேட்டங்குடி கிராமத்தில் கூலி தொழிலாளியான ரத்தினம்- ஹேமா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு நீகன்யா என்ற 2 வயது மகள்  இருந்துள்ளார். இந்நிலையில் ரத்தினம் தனது வீட்டின் பின்புறம்  உள்ள மின் விளக்கை எரிய  வைப்பதற்காக  மின்  ஒயரை  சரி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ரத்தினத்தின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனை பார்த்த அவரது மனைவி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குரூப் -2 ,குரூப் -2ஏ தேர்வுக்கு… தயாராகும் மாணவர்களுக்கு… இலவச பயிற்சி முகாம்… கலெக்டர் அறிவிப்பு…!!

மயிலாடுதுறையில் குரூப் -2 குரூப் -2 ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி இன்று தொடங்கி நடைபெறுகிறது என்று மாவட்ட கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா கூறியதாவது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 5,529 பணியிடங்களுக்கான குரூப்-2,குரூப்-2 ஏ தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்விற்கு  விண்ணப்பிக்க கடைசி தேதி வருகின்ற 23-ஆம் தேதி ஆகும். மேலும் இதற்கான முதல்நிலைத் தேர்வு வருகின்ற மே மாதம் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சாலை பணிக்காக… புதிய பஸ் நிலையம் இடமாற்றம்… பயணிகள் அவதி..!!

மயிலாடுதுறையில்  புதிய பேருந்து நிலையம் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதால்  பயணிகள் அவதிப்பட்டனர். மயிலாடுதுறை நகரில் காமராஜர் பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் என இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. இதில் புதிய பேருந்து நிலையத்தில் நகர பூங்கா சாலையில் நேற்று தார் சாலை போடும் பணி நடைபெற்று வந்தது. இதனால் புதிய பேருந்து நிலையத்துக்குள் வரும் பேருந்துகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அங்கு வரக் கூடிய பேருந்துகள் அனைத்தும் நேற்று சின்ன கடைவீதி நகராட்சி அலுவலகம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எனக்கு அமைச்சரை தெரியும்… ரூ.8½ லட்சம் கொடுங்க…. உங்களுக்கு ஆசிரியர் வேலை… ஏமாற்றிய நபரை தூக்கிய போலீஸ்..!!

ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி 8 1/2 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். மயிலாடுதுறை ரெயிலடி மேல ஒத்தசரகு தெருவில் வசித்து வருபவர்கள்  விஜயகுமார்- வெற்றிச்செல்வி தம்பதியினர். இவர்களிடம் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ரோடு காந்தி நகரை சேர்ந்த 37 வயதான முருகன் என்பவர் கடந்த ஆண்டு 2021, ஜூலை மாதம், நான்  தனியார் வங்கி மேலாளராக பணிபுரிவதாகவும்  தற்போது பணியிட மாற்றம் காரணமாக மயிலாடுதுறைக்கு வந்துஇருக்கிறேன் என்றும்  […]

Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே…. இப்படி ஒரு திட்டமா..? அரசு பள்ளி ஆசிரியர்கள் ஷாக்…!!!

அரசுப்பணி வாங்கி தருவதாக கூறி மயிலாடுதுறை தம்பதியரிடம் 8, 50,000 ரூபாய் மோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் மேல் ஒத்த சரக தெருவைச் சேர்ந்த தம்பதியர் விஜயகுமார், வெற்றிச்செல்வி. இவர்களின் வீட்டின் மாடியில் திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் தன் ஜீவன் வங்கியில் வேலை செய்து வருவதாகவும், பணி மாறுதலுக்காக மயிலாடுதுறைக்கு வந்துள்ளதாகவும் கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி குடியேறி இருக்கிறார். அதன் […]

Categories
மாநில செய்திகள்

கனமழை காரணமாக இன்று ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

மயிலாடுதுறையில் கனமழை காரணமாக இன்று (மார்ச்.7) 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் மயிலாடுதுறையில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

Categories
மாநில செய்திகள்

தலைகீழாக கவிழ்ந்த பள்ளி வேன்…. 24 மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை….!!!

மயிலாடுதுறை நகரிலுள்ள 5-க்கும் மேற்பட்ட  தனியார் பள்ளிகளில் படிக்கும்  மாணவர்களை, தனியார் வேன் ஒன்று  ஏற்றிக்கொண்டு, வடக்கு சாலிய தெருவில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் வேனில் இருந்த 24 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வேனுக்குள் சிக்கியிருந்த மாணவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதன்பின் ஆம்புலன்ஸ் உதவியுடன் அந்த மாணவர்களை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

சீர்காழியில் நடந்த சோகம்… பாயிலர் வெடித்து 2 பேர் உயிரிழப்பு… 3 பேர் சிகிச்சை…!!!

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழியில் பாய்லர் வெடித்து ஜார்கண்ட் மாநிலத்தை சார்ந்த இரண்டு நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூன்று நபர் காயமடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி தாலுக்கா தொடுவாய் கிராமத்தை சார்ந்த அலி உசேன் சொந்தமாக பிஸ்மி  பிஷ் பிரைவேட் லிமிடெட் நடத்தி வருகின்றார். இத்தொழிற்சாலையில் மீனிலிருந்து எண்ணெய் மற்றும் இறால் பவுடர் தீவனம் தயாரிக்கப்படுகின்றது. இத்தொழிற்சாலையில் இன்று மதியம் ஒரு மணி அளவில் பாய்லர் வெடித்து பயங்கரமாக விபத்து ஏற்பட்டது.   இவ்விபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் […]

Categories
மாநில செய்திகள்

3-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம்…. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மீனவர்கள்….!!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பழையாறு துறைமுகத்தில் 3-வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் பங்கு மூலம் விற்பனை செய்யப்படும் டீசல் விலையை விட மீன்பிடி துறையின் மூலம் விற்பனை செய்யப்படும் மானிய டீசலின் விலை அதிகமாக உள்ளது. இதனை கண்டித்து டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

குறைந்தது பயண நேரம்…. ரயில் பயணிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

மயிலாடுதுறை- காரைக்குடி இடையில் இயக்கப்படும் ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளதால் பயண நேரம் 4 மணி நேரமாக குறைந்துள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு முன்னதாக திருவாரூர்- காரைக்குடி இடையில் அகல ரயில்பாதை மாற்றும் பணிகளானது நடந்து வந்ததால் அந்த வழித்தடத்தில் கடந்த 7 வருடங்களாக ரயில்கள் இயக்கப்படாமல் இருந்தது. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு 2019ம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி ரயில் இயக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட ரயில் சேவை மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரி…. அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப்பேரவையின் 3-வது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படுமா […]

Categories
மாவட்ட செய்திகள்

காட்டில் அழுகுரல்…. தொப்புள் கொடியுடன் அழகிய ஆண் சிசு…. போலீஸ் விசாரணை….!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகிலுள்ள திருமையிலாடி கிராமத்தில் மனோஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் வயல் பகுதிக்கு சென்றார். அப்போது அங்குள்ள மூங்கில் காட்டில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. உடனே மூங்கில் காட்டிற்குச் சென்று பார்த்தபோது பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை தொப்புள் கொடியுடன் கிடந்தது. அந்தக் குழந்தையை பத்திரமாக எடுத்து சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து கொள்ளிடம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எனக்கு திருமணம் ஆகிடுச்சு… மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி… மயிலாடுதுறையில் பரபரப்பு…!!

நிச்சயதார்த்தம் முடிந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கிளியனூர் கிராமத்தில் தங்கயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த சின்னத்தம்பி என்ற  மகன் இருந்து உள்ளார். கடந்த  சில நாட்களுக்கு  முன்பு ஊருக்கு திரும்பி  இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். அதற்காக மயிலாடுதுறையில் உள்ள கிராமத்தில் ஒரு பெண்ணை நிச்சயம் செய்துள்ளனர். கடந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“இவ்வளவு கூட்டத்தோட என்னால பஸ் ஓட்ட முடியல”…. நடுவழியில் நிறுத்தி சென்ற ஓட்டுநர்…. பெரும் பரபரப்பு….!!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிக அளவிலான பயணிகளை ஏற்றிச் சென்ற அரசு பேருந்தை இயக்க முடியாமல் கோபமடைந்த ஓட்டுநர், நடு சாலையில் பேருந்தை நிறுத்தி விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் தினசரி மயிலாடுதுறை நகருக்கு பேருந்து மூலமாக வந்து செல்கிறார்கள். அதில் சில உள் கிராமங்களுக்கு ஓரிரு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. அதனால் கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் பேருந்தில் தொங்கியபடி பயணம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மயிலாடுதுறை மாவட்டத்தில்…. கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும்,  அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, கனமழை காரணமாக தூத்துக்குடி, திருவண்ணாமலை உள்ளிட்ட […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மயிலாடுதுறையிலும் லீவு விட்டாச்சு…. மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும்,  அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, கனமழை காரணமாக தூத்துக்குடி, திருவண்ணாமலை உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

BREKING : மேலும் 2 மாவட்டங்களில் பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும்,  அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, 21 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மயிலாடுதுறை மாவட்டத்திலும்…. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும்,  அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, கனமழை காரணமாக காஞ்சிபுரம், தூத்துக்குடி, நெல்லை, […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மேலும் ஒரு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் கடந்த வாரம் முழுவதும் மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்துள்ளதால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் […]

Categories
மாவட்ட செய்திகள்

சற்று முன்… நாகையை தொடர்ந்து… மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை லீவு.!!

தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கடந்த சில நாட்களாக பெய்து வருகின்றது.. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது.. தங்கள் மாவட்டங்களில் மழையின் தாக்கத்தை பொருத்து விடுமுறை அளிப்பது பற்றி ஆட்சியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.. இந்நிலையில் கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பள்ளிகள் மற்றும்  கல்லூரிகளுக்கு விடுமுறை என்று ஆட்சியர் லலிதா அறிவித்துள்ளார்.. ஏற்கனவே புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்டத்திற்கு விடுமுறை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

BREAKING: மயிலாடுதுறையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.தொடர் கனமழையால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றன.அதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி கடந்த மூன்று நாட்களாகவே தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக ஏற்கனவே […]

Categories
மாவட்ட செய்திகள்

தீயில் எரிந்த மளிகை கடை…. ரூ.4,00,000 பொருட்கள் சேதம்…. போலீஸ் விசாரணை…..

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகிலுள்ள பழையாறு கிராமத்தில் கோட்டையா கோவில் தெருவில் காசியம்மாள்(65) என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது வீட்டை ஒட்டி மளிகை கடை நடத்திவருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை இந்த மளிகை கடை திடீரென தீப்பிடித்து விட்டது. அதன்பிறகு கடையிலிருந்து புகைமூட்டம் வெளியேறுவதை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தினால் கடைக்குள் இருந்த ஃப்ரிட்ஜ், மின்விசிறிகள், […]

Categories
மாவட்ட செய்திகள்

Happy News: 1000 மாணவர்களுக்கு இலவச கல்வி…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் தர்மபுரத்தில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனம் அமைந்துள்ளது. இந்த ஆதினத்தில் 27 மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தம் பிரம்மச்சாரியார் சாமிகள் இருந்து வருகிறார். மேலும் அவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து பல்வேறு நலத் திட்டங்களை செய்து வருகிறார். அதன்படி கொரோனா காலகட்டத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள், உணவு மற்றும் மருத்துவ சாதனங்கள் ஆகியவை இலவசமாக அரசு மருத்துவமனைக்கு வழங்கினார். அதுமட்டுமில்லாமல் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கல்லூரியில் சிகிச்சை மையம் அமைத்து கொடுத்தார். இந்நிலையில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மது பிரியர்களே…. இனி மதுபானம் வாங்க இது கட்டாயம்…. ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. அதிலும் சில மாவட்டங்களில் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க தடுப்பூசி கட்டாயம் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட ஆட்சியர் இம்முயற்சியை கையில் எடுத்துள்ளார். அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளே… மயிலாடுதுறை டூ திருச்சி… வெளியான ஹேப்பி நியூஸ்….!!!

மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு முன்பதிவு இல்லாத ரயில் சேவையை நேற்று கொடியசைத்து எம்பி ராமலிங்கம் துவங்கி வைத்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் ரயில் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் நிலைமை படிப்படியாக சரியாகி கொண்டு இருப்பதால் தற்போது மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் தற்போது முன்பதிவு செய்யப்பட்ட ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் மயிலாடுதுறை மார்க்கத்தில் அனைத்து ரயில்களும் மீண்டும் இயக்கப்பட வேண்டும் என்று அந்தத் தொகுதி எம்பி ராமலிங்கம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வயிற்று வலி …. முதியவரின் விபரீத முடிவு …. போலீஸ் விசாரணை ….!!!

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே கன்னியாநத்தம் மேலத்தெருவை சேர்ந்தவர்  ராஜாங்கம்(வயது 75).இவர் கடந்த சில மாதங்களாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார் .இந்நிலையில் சம்பவ தினத்தன்று இவருக்கு வயிற்று வலி அதிகமானதால் வலி தாங்க முடியாமல் வயலுக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயக்கமடைந்தார். இதைக் கண்ட அவரது உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக தகராறு ….. கட்டையால் கொடூரமாக தாக்கிய காவலர் …. 2 பேர் படுகாயம் ….!!!

சீர்காழி அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் காவலர் உட்பட  4 பேர் மீது காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்துள்ளனர் . மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே  ஈசானிய தெருவை சேர்ந்த  தனசேகரன் என்பவர் வைத்தீஸ்வரன் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சீர்காழி  பன்னீர்செல்வம் நகரை சேர்ந்த பிரதீப் என்பவருக்கும், தனசேகரன் உறவினருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது .இந்நிலையில் நேற்று முன்தினம் பிரதீப் அவரது உறவினரான  கொண்டத்தூர் கிராமம் தெற்கு பண்டாரவாடை கிராமத்தைச் சேர்ந்தஅமித் ராஜ் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மனைவி பிரிந்த துக்கம் …. இறப்பிலும் இணைபிரியா தம்பதி …. சோகத்தில் குடும்பத்தினர் ….!!!

மயிலாடுதுறை அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மயிலாடுதுறை மாவட்டம் திருவாடுதுறை ஊராட்சியில் டி.மேலக்கடை முடுக்கு தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும் 3 மகள்களும் ,                          2 மகன்களும்  உள்ளனர் . இந்த வயதான தம்பதிக்கு திருமணமாகி 60 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த வயதான தம்பதிகள்  மூத்த மகன் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்த 2 கடைகளில் …. மர்ம நபர்களின் கைவரிசை …. வலைவீசி தேடும் காவல்துறையினர் ….!!!

மயிலாடுதுறையில் 2 கடைகளின் பூட்டை உடைத்து  பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை  காவல்துறையினர் தேடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அருகே பணமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜசெல்வம் என்பவர் சட்டநாதபுரம் ரவுண்டானா அருகே மளிகை கடை ஒன்றை வைத்துள்ளார். இவர் நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரூபாய் 25,000 மதிப்புள்ள மளிகை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ….பெண் எடுத்த விபரீத முடிவு …. காவல்துறையினர் விசாரணை ….!!!

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்து தின்று பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள  வழுவூர் வடக்கு தெருவை சேர்ந்த கேசவன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நிலை பாதிப்பால் உயிரிழந்துவிட்டார். இதனால் அவரது குடும்பத்தினர் துக்கநிலையிலிருந்து மீள முடியாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் அவருடைய மகள் பிரியா(35) சம்பவ தினத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்தை தின்று விட்டார். இதை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

உண்டியலை உடைத்து பணம் திருட்டு …. ஒருவர் கைது ….. காவல்துறையினர் விசாரணை …. !!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய நபரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் . மயிலாடுதுறை 2-வது புதுத்தெருவில் மகாகாளியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்நிலையில்  கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடு போய் இருந்ததை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மயிலாடுதுறை காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதன் பின்னர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மருத்துவமனையில் திருட்டு …. வசமாக சிக்கிய வாலிபர் …. கைது செய்த காவல்துறையினர் ….!!!

மருத்துவமனை மேலாளரிடம் பணம் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது   செய்துள்ளனர் . மயிலாடுதுறை மாவட்டத்தில்  பழைய ஸ்டேட் பேங்க் சாலையில் தனியார் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. இந்து தனியார் மருத்துவமனையில் கடந்த 13 ஆம் தேதியன்று நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் மருத்துவமனை கதவின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்துள்ளார். இவர் திருட முயற்சி செய்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி ,சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அத்துடன் அன்றைய தினமே பகலில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட பொருட்கள் ….. வசமாக சிக்கிய 3 பேர் …. கைது செய்த காவல்துறையினர் ….!!!

தடை செய்யப்பட்ட  புகையிலை பொருட்களை விற்பனை செய்த  3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் . மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி ,வைத்தீஸ்வரன் கோவில் ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. இந்நிலையில் சீர்காழி ரயில் நிலையம் அருகே  புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்படி மாவட்ட தனிப்படை போலீசார் அறிவழகன் ,பாலச்சந்திரன் மற்றும் போலீசார் ஆகியோர் நேரில் சென்று சோதனையிட்டனர் .அப்போது […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்றபோது …. மனைவி கண் முன்னே கணவருக்கு நடந்த கொடூரம் …. மயிலாடுதுறையில் பரபரப்பு ….!!!

மயிலாடுதுறை அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதியதில் மனைவி கண் முன்னே கணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் எலந்தங்குடியை சேர்ந்த முகமது ரபீக் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இவர் கடந்த மாதம் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் எலந்தங்குடியில் இருந்து மயிலாடுதுறை வழியாக ஆடுதுறைக்கு முகமது ரபீக்கும்  அவரது மனைவி அபாரத் நிஷாவும் இருசக்கர வாகனத்தில் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மயிலாடுதுறை கண்ணாரதெரு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நண்பரை பார்க்க சென்ற போது …. என்ஜினீயருக்கு நடத்த விபரீதம் …. சோகத்தில் மூழ்கிய குடும்பம் ….!!!

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் என்ஜினீயர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார் . மயிலாடுதுறை அருகே திருக்கடையூர்  ரயிலடி தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார் .இவருடைய தம்பி சுரேஷ்  என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நண்பரை  பார்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தை தம்பி சுரேஷ் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் திருக்கடையூர் மெயின் ரோட்டில் வந்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சைக்கிளில் சென்ற போது ….முதியவருக்கு நேர்ந்த சோகம் …. காவல்துறையினர் விசாரணை….!!!

சைக்கிளில் சென்ற முதியவர் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே  முதியவர் உயிரிழந்தார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள  மேலச்சாலை கிராமம் பெரிய தெருவை சேர்ந்த எத்திராஜ்(70) என்பவர் விவசாய தொழில் செய்து வந்துள்ளார். இவர் நேற்று மாலையில் சீர்காழி அருகே உள்ள  அண்ணன் பெருமாள் கோவில் வழியே சைக்கிளில் சென்று  கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக இவரது சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ரயிலில் அடிபட்டு …. பெண் உயிரிந்த சம்பவம் …. போலீசார் விசாரணை ….!!!

சீர்காழி அருகே  ரயிலில் அடிபட்டு பெண் உயிரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . மயிலாடுதுறை மாவட்டத்தில்  சீர்காழி அருகே கன்னியாக்குடி வடக்கு தெருவை சேர்ந்த விஜய் என்பவரின் மனைவி விஜயா. இவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை அதிகாலை நேரத்தில் அவரது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில்  உள்ள ரயில் தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு விஜயா உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை ரயில்வே […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வாகன சோதனையின் போது …. வசமாக சிக்கிய வாலிபர் …. கைது செய்த போலீசார் ….!!!

மணல்மேடு அருகே  இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் எலந்தங்குடி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (31) என்பவர் கொள்ளிடத்தில் குளிக்கச் சென்ற போது கரையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். இதன் பின்னர் கரைக்குத் திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மணல்மேடு போலீசில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மாயமான சிறுவன் …. துறைமுகத்தில் பிணமான மீட்பு …. மயிலாடுதுறையில் சோகம் …..!!!

மயிலாடுதுறை பூம்புகாரில் கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது ராட்சத அலையில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மயிலாடுதுறை மாவட்டம்  நீடூர்-நெய்வாசல் பகுதியை சேர்ந்த பாபு என்பவரின் மகன் ஆதித்யன்(16). இவர் கடந்த 25-ஆம் தேதி  தனது குடும்பத்தினருடன் பூம்புகார் கடற்கரைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது கடற்கரை மணலில் ஆதித்தியன் விளையாடிக்கொண்டிருந்தார். இதன் பின்னர் அவர் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று வந்த ராட்சத அலையில் சிக்கி ஆதித்தியன் மாயமானார். இதுகுறித்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சுற்றி வளைத்த போலீசார் …. வசமாக சிக்கிய நபர் …. போலீசார் அதிரடி நடவடிக்கை ….!!!

கஞ்சா விற்ற நபரை  கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர் . மயிலாடுதுறை மாவட்டத்தில்  ரெயிலடி கிட்டப்பா பாலம் அருகே  இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்ற  நபர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். ஆனால் மற்றவர்கள் தப்பிச் சென்ற நிலையில் ஒருவர் மட்டும் பிடிபட்டார். இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் ரெயிலடி கிட்டப்பா பாலம் வேதம்பிள்ளை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து …. மர்ம நபர்கள் கைவரிசை …. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!!

மயிலாடுதுறையில் வீட்டின் பூட்டை உடைத்து  தங்க நகைகள் ,வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர் . மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலத்தை அடுத்துள்ள திருவாலங்காடு அக்ரஹாரம் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் திருவாவடுதுறை ஆதீனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் திருக்கோடிக்காவல் கிராமத்தில் இருக்கும் இவருடைய தாயாருக்கு திடீரென்று உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தனது தாயாரை பார்ப்பதற்காக ராஜேந்திரன் தனது மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டு திருக்கோடிக்காவல் கிராமத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையை …. குறைக்கக்கோரி தபால் நிலையத்தில்…. மதிமுக-வினர் போராட்டம்….!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை குறைக்கக்கோரி மதிமுக- வினர் தபால் நிலையத்தில் மனு அளித்து போராட்டம் நடத்தினர் . மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை குறைக்கக்கோரி பிரதமருக்கு மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கும், டீசல் விலை 90 ரூபாய்க்கும் விலை உயர்ந்துள்ளதை  கண்டித்து குத்தாலத்தில் உள்ள துணை அஞ்சலகத்தில் மனு அளித்து போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 6 கோடி மதிப்பு …. ஆலையை மாற்றியமைக்கும் பணி …. மாவட்ட ஆட்சியர் ஆய்வு ….!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சித்தர்காடு பகுதியில் தமிழ்நாடு அரசு நுகர்வோர் வாணிப கழகத்தின் அரிசி ஆலை ஒன்று அமைந்துள்ளது. இந்த நவீன அரிசி ஆலையை சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன அரிசியாக மாற்றி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த அதி நவீன அரிசி ஆலைகளில்  தானியங்கி மூட்டை தைத்தல், கொதிகலன் பகுதி, அரவை பகுதி மற்றும் அவியல் பகுதி ஆகிய பணிக்கு நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஏலத்தில் அதிக விலைக்குபோன பருத்தி …. விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி….!!!

மத்திய அரசின் ஆதார விலையை விட பருத்தி அதிக விலைபோனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் . மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 4,556 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடைசெய்யப்பட்ட பருத்தியை  விவசாயிகள் மயிலாடுதுறை சீர்காழி, குத்தாலம் மற்றும் செம்பனார்கோவில் ஆகிய பகுதிகளிலுள்ள அரசின்  ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில்  விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி செம்பனார்கோவில்  விற்பனைக் குழு செயலாளரான ரமேஷ் தலைமையில் மறைமுக ஏலம் நடத்தப்பட்டது. இந்த ஏலத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தடுத்து நிறுத்தியதால் ஆத்திரம் …. மீனவர்கள் திடீர் சாலை மறியல் …. வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்  ….!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்ககோரி சாலை மறியலில் ஈடுபட்ட 700 பேர் மீது காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்துள்ளனர் . மயிலாடுதுறை மாவட்டத்தில்உள்ள  திருமுல்லைவாசல்,கூழையார் மற்றும் தொடுவாய் ஆகிய  கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் சுருக்குமடி வலையைப்  பயன்படுத்தி கடலில் மீன்பிடிக்க அனுமதிக்க வழங்க வேண்டும் என்று கடந்த 17-ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் உட்பட பல்வேறு போராட்டங்களில் மீனவர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த 19-ம் தேதியன்று  […]

Categories

Tech |