சின்னங்குடி மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மிதந்துவந்த சாக்குப் பையில் 32 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்ததையடுத்து, அதனை தரங்கம்பாடி கடற்கரையோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சின்னங்குடி மீனவ கிராமத்தைச் சேர்ந்த 35 வயது ஜெயகாந்த், தன்னுடைய பைபர் படகில் சக மீனவர்களுடன் மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளனர்.. 28 நாட்டிகல் மைல் தொலைவில் காரைக்கால் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கடலில் வெள்ளைநிறத்தில் பெரிய சாக்குப்பை ஓன்று மிதந்து வந்ததாக சொல்லப்படுகிறது. […]
Tag: மயிலாடுதுறை
மயிலாடுதுறையை தனி மாவட்டமாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச் 7 ஆம் தேதி விதி எண் 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அடிப்படையில் மயிலாடுதுறையை தலைநகராகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்ற ஒரு அறிவிப்பை முதல்வர் அறிவித்தார். நிர்வாக வசதிக்காகவும், மக்களுக்கு அரசின் திட்டங்கள் விரைந்து சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு மாவட்டத்தை பிரித்ததாக முதல்வர் தெரிவித்த்திருந்தார். இந்தநிலையில் நாகப்பட்டினம் […]
மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவித்து தமிழக முதல்வர் எட்டப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விதி என் 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அடிப்படையில் மயிலாடுதுறையை தலைநகராகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்ற ஒரு அறிவிப்பை தற்போது முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதனால் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாகிறது.நிர்வாக வசதிக்காகவும், மக்களுக்கு அரசின் திட்டங்கள் விரைந்து சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு மாவட்டத்தை பிரித்ததாக முதல்வர் தெரிவித்துள்ளார். […]
மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமென்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார். மயிலாடுதுறை வட்டார மக்கள் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த கோரிக்கையான மையிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமாக மாற்றப்படுவது அரசின் பரிசீலனையில் உள்ளது என்று தெரிவித்தார். மக்களின் கோரிக்கையை துரிதமாக பரிசீலித்து அரசு நடவடிக்கை எடுக்கும் காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை […]