படுகாயமடைந்த மயில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சங்காடு பகுதியில் பெண் மயில் ஒன்று காயங்களுடன் பறக்க முடியாமல் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சமூக ஆர்வலர் ராஜ்குமார், முகமது ஆகியோர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் படுகாயமடைந்த மயிலை மீட்டு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மயில் பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. […]
Tag: மயில்
கிணற்றில் விழுந்த மயிலை தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிரங்கி மேடு பகுதியில் 30 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கிணற்றில் நேற்று அவ்வழியாக சென்ற மயில் ஒன்று தவறி விழுந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நாகராஜன் என்பவர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி மயிலை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் […]
இளம்பெண் ஒருவர் மயில் அடைகாத்து வைத்திருக்கும் முட்டைகளை அபகரிக்க முயன்றபோது, ஆண் மயில் பாய்ந்து வந்து தாக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நமது நாட்டின் தேசிய பறவையாக மயில் இருக்கின்றது. இந்தியாவில் வயல்வெளி போன்ற அனைத்து பகுதிகளிலும் மயில்கள் வசித்து வருகின்றது. அதிலும் பொதுவாக மயில்கள் முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொரிக்கும். பெண் மயில் அடைகாக்கும் போது ஆண்மையில் இறை தேட சென்றுவிடும். ஆண் மயில் வந்த உடன் பெண்மயில் இரைதேடச் செல்லும். பெண் […]
இத்தாலிய நாட்டில் உள்ள ஒரு சிலையின் மேலிருந்து புல்தரையை நோக்கி வெள்ளை மயில் பறந்து வரக்கூடிய வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இத்தாலிய நாட்டின் ஸ்ட்ரெசாவிற்கு அருகேயுள்ள ஐசோலா பெல்லாவின் பூங்கா தோட்டத்தில் சிலை ஒன்று இருக்கிறது. இந்த சிலையின் உச்சியிலிருந்து ஒரு வெள்ளை மயில் பறந்து வந்து தரை இறங்குவது வீடியோவில் பதிவாகி இருக்கிறது. அந்த வெள்ளை நிற மயில் உலா வருவதை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். இந்த வகையான வெள்ளை மயில்கள் லூசிசம் […]
இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜினில் பெண் மயில் ஒன்று சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் 2-வது பிளாட்பாரத்தில் கோவையில் இருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட ரயில்வே காவல்துறையினர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜினில் பெண் மயில் ஒன்று அடிபட்டு இறந்து சிக்கியிருந்ததை பார்த்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் விரைந்து சென்று இறந்த பெண் மயிலை மீட்டு ரயில்வே காவல் நிலையத்திற்கு […]
பிரபல நடிகை மீது மயில் பாய்ந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘தனுசு ராசி நேயர்களே’ திரைப்படத்தில் நடித்தவர் நடிகை டிகங்கனா சூரியவன்ஷி. இவர் ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் போட்டியாளராகவும் பங்கேற்றுள்ளார். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த இவர் தற்போது ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை டிகங்கனா ஒரு மயிலின் அருகே சென்றுள்ளார். அப்போது […]
மயில் வேட்டையில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைதுசெய்தனர். வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்துள்ள பத்திரப்பல்லி, கம்பசமுத்திரம் காப்புக்காட்டில் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.. அப்போது, வனப்பகுதியில் துப்பாக்கி சத்தம் கேட்டது.. இளைஞர் ஒருவர் கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு மயில் உள்ளிட்ட பறவைகளை வேட்டையாடி கொண்டிருந்தார்.. அதனைத்தொடர்ந்து அந்த இளைஞரை மடக்கி பிடித்து, போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் அந்த இளைஞர் மதினாப்பல்லியை சேர்ந்த 18 வயதுடைய விக்னேஷ் என்பது தெரியவந்தது.. இதையடுத்து அவரை கைது செய்த […]
விவசாய தோட்டத்தில் 10க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து கிடந்ததையடுத்து வன மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள விளாங்காடு பகுதியில் வறட்சியின் காரணமாக மயில்கள் வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களிலுள்ள தானியங்களை சாப்பிட்டுவந்தன.. இந்தநிலையில் இன்று விளாங்காடு பகுதியை சேர்ந்த பழனிவேல் மற்றும் ஞானசேகரன் ஆகியோரின் விவசாய தோட்டத்தில் மர்மமான முறையில் 10க்கும் மேற்பட்ட மயில்கள் உயிரிழந்துகிடந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த வனத்துறை மற்றும் காவல் துறையினர், […]