தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் சுயநிதி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீடு இடம் பெற்ற மாணவர்கள் அனைவரும் கல்வி கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற டிசம்பர் இரண்டாம் தேதி வரை கல்லூரிகளில் கட்டணம் செலுத்தலாம் என மருத்துவ கல்வி இயக்ககம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்த நவம்பர் 30ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் கல்லூரிகளில் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தை […]
Tag: மருத்துவக் கல்லூரி
ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 32 லட்சம் மதிப்பீட்டில் நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை மையங்களை அமைச்சர் மா. சுப்ரமணியன் திறந்து வைத்துள்ளார். மேலும் ஸ்டான்லி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையத்திற்கான இணையதள முகவரி அமைச்சர் திறந்து வைத்துள்ளார். இந்த நிலையில் இந்தியில் மருத்துவம் கற்றுக் கொடுப்பது போன்று தமிழிலும் கற்றுக் கொடுக்கப்படுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு பதில் அளித்து பேசிய அவர் தமிழில் மருத்துவம் […]
தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கட்டணம் அதிகரித்துள்ளது. அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான ஓராண்டு கட்டணம் ரூபாய் 4.3 லட்சம் முதல் 4.5 லட்சம் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான ஓராண்டு கட்டணம் ரூபாய் 12.5 லட்சத்திலிருந்து ரூபாய் 13.5 லட்சம் உயர்த்தி உள்ளது. மேலும் வெளிநாடு வாழ் இந்தியர் இடங்களுக்கான ஆண்டு கட்டணம் ரூபாய் […]
அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் ஆறு பேராசிரியர்கள் மருத்துவ கல்லூரியின் முதல்வராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குனராக பணிபுரிந்து வந்த கே நாராயணசாமி செங்கல்பட்டு கல்லூரி முதல்வராகவும், கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி பேராசிரியரான சீனிவாசன் கரூர் மருத்துவ கல்லூரி முதல்வராகவும், கடலூர் மருத்துவக் கல்லூரி முதல்வராக திருப்பதி, திண்டுக்கல் மருத்துவ கல்லூரி முதல்வராக ராஜாஶ்ரீ நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி முதல்வராக செந்தில்குமார், தூத்துக்குடி மருத்துவக் […]
சென்னை சைதாப்பேட்டையில் மார்க்கெட்டை ஆய்வு மேற்கொண்ட பின் அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது பேசிய அவர் சென்னை சைதாப்பேட்டை மார்க்கெட் என்பது வரலாற்று சிறப்புமிக்க வணிக வளாக பகுதி தற்போது மார்க்கெட்டை புதுப்பிக்கும் பணி நடைபெற இருப்பதால் இங்கு கடை வைத்திருப்பவர்களுக்கு மாற்று இடத்தில் ஒரு மாத காலத்திற்கு இடம் ஒதுக்கப்பட்டு பணிகள் முடிவடைந்த பிறகு மீண்டும் அவர்களுக்கான கடைகள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் நீட் தேர்வு கடந்த 2017 ஆம் வருடம் அதிமுக […]
பாமக நிறுவனர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். மத்திய அரசு நிதியுதவியின் மூலம் 75 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட இருக்கிறது. இந்த மருத்துவக் கல்லூரிகள் பல்வேறு மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசின் நிதியுதவியுடன் மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கு சாத்தியம் இல்லை. இதன் காரணமாக தமிழகத்தில் மாவட்டத்திற்கு வரும் மருத்துவக் கல்லூரி அமைக்கும் திட்டமானது சற்று பின்னடைந்துள்ளது. அதன்பிறகு மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப் பட்டுள்ளன என்றும், மீதமுள்ள […]
நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் ‘சிசிடிவி கேமரா’ கட்டாயம் பொருத்த வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து எம்என்சி தலைவர் டாக்டர் சுரேஷ் சந்திர சர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டியது முக்கியமானதாக உள்ளது. அதன்படி, வளாக முகப்பில் 1, நோயாளிகள் பதிவு இடத்தில் 2 மற்றும் புறநோயாளிகள் பிரிவில் 5 என கேமராக்களை பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர விரிவுரை கூடங்கள், ஆய்வகங்கள், அவசர […]
முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களை இறுதி ஆண்டு மாணவர்கள் ராகிங் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் மருத்துவ மாணவர்கள் படிக்கும் விடுதில் அமைந்துள்ளது. இந்த விடுதியில் வைத்து முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களை இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் ராகிங் செய்துள்ளனர். அதாவது முதலாம் ஆண்டு மாணவர்களிடம், இறுதியாண்டு மாணவர்கள் தலையணையுடன் உடலுறவு செய்ய சொல்வது, தோப்பு காரணம் போட […]
தமிழக மருத்துவக் கல்லூரிகளின் டீன்களுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்ற சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மருத்துவ கல்லூரி டீன் ரத்தினவேல் காத்திருப்பு பட்டியல் மாற்றப்பட்டுள்ளார். மேலும் இதுபற்றி விளக்கம் அளித்த மாணவர்கள் சமஸ்கிருதத்தில் நாங்கள் உறுதிமொழி ஏற்க வில்லை என்றும், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தேசிய மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ள மகரிஷி சரக் சப்த் உறுதிமொழியைத்தான் […]
உலகின் சிறந்த 100 மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் சென்னை அரசு மருத்துவக் கல்லூரிக்கு 60-வது இடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலை வணிக சிஇஓவேர்ல்டு இதழ் வெளியிட்டது. இதில் அமெரிக்காவின் ஹார்வார்ட் மருத்துவ கல்லூரி முதல் இடத்திலும், இரண்டாவது இடத்தை ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி பிடித்துள்ளது. தொடர்ந்து 21 இடங்களையும் அமெரிக்காவை சேர்ந்த பல்கலைக் கழகங்கள் பிடித்துள்ளன. இந்தியாவை சேர்ந்த 5 மருத்துவ கல்லூரிகள் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது. அதில் 22-வது இடத்தில் டெல்லி […]
மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். அதாவது மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை சந்தித்தார். அதன்பிறகு பேசிய அவர், அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியார் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்த உத்தரவை அமல்படுத்த […]
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் ஆகியோர் சிவகங்கை மருத்துவக்கல்லூரியில் படித்த 300 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கினர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் சிவகங்கை மருத்துவக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் வரவேற்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, கடந்த 2012-ஆம் ஆண்டு சிவகங்கை மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டது. இதுவரை 300 பேர் ஐந்து ஆண்டுகள் படித்து முடித்து பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து சென்றுள்ளனர். […]
போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் காணொலி காட்சி வாயிலாகத் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடல் செய்தார். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிடக்கூடிய செய்திக்குறிப்பில்: “சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியை அரசே ஏற்றப் பிறகும், தனியாரை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதைக்கண்டித்து போராடும் மாணவருடன் காணொலி காட்சிமூலம் கலந்துரையாடினேன். கோரிக்கையின் நியாயத்தை உணராது போராட்டத்தை முடக்குவதிலேயே அடிமை அரசு குறியாகவுள்ளது என மாணவர்கள் வேதனைப்பட்டனர். அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள […]
டிசம்பர் 1 ஆம் தேதிக்கு முன்பாக மருத்துவ கல்லூரிகளை திறக்க மத்திய அரசு அறிவித்துள்ளது. டிசம்பர் 1ஆம் தேதி அதற்கு முன்பாக மருத்துவக் கல்லூரிகளை திறக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கல்லூரிகள் திறக்கப்பட்ட பிறகு சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. மாணவர்கள், கல்லூரிகளில் கருத்து கேட்டு டிசம்பர் 1-ஆம் தேதிக்கு முன்பு கல்லூரிகளை திறக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசுகையில் இந்தியாவின் மருத்துவ தலைநகர் தமிழ்நாடு என கூறியுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு பல்வேறு தற்காப்பு வழிமுறைகளை கொடுத்து சிறப்பாக செயலாற்றி வருகிறது. மேலும் பல்வேறு தலைவர்கள் நோய் தடுப்பு மையங்கள் மற்றும் பரிசோதனை மையங்களுக்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பழனிசாமி பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறார். இந்நிலையில் அண்மையில் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றின் பட்டமளிப்பு […]
ராமநாதபுரத்தில் அமையவுள்ள புதிய மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மட்டுமின்றி மேலும் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய சுகாதாரத்துறையானது இதற்கான ஒப்புதலை கடந்த மாதம் வழங்கியது. அதன்படி ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவள்ளூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளானது […]