கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் பால சுப்பிரமணியம் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் புற நோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு போன்றவற்றை ஆய்வு மேற்கொண்ட அவர், மருத்துவமனையில் உரியமுறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா..? என நோயாளிகளிடம் கேட்டறிந்தார். இதையடுத்து பெண்கள் பிரிவில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் பால சுப்பிரமணியம், பிரசவமான பெண்களிடம் உங்களுக்கு மருத்துவம் சரியான முறையில் நடக்கிறதா..?, வேறு ஏதாவது உதவிகள் தேவையா..? என கேட்டறிந்தார். அப்போது அங்கு பணியிலிருந்த மருத்துவர்களிடம் மருத்துவமனையை […]
Tag: மருத்துவனை
சிம்பு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்கள் ஒருவராக வலம் வருபவர் சிம்பு . சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ”மாநாடு” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ”வெந்து தணிந்தது காடு” படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில், சிம்பு திடீர் காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா […]
பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலா விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா, தனது நான்கு ஆண்டு சிறை வாசத்தை முடித்து விட்டு கடந்த ஜனவரி 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் […]