உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]
Tag: மருத்துவமனைகள்
இந்த வருடம் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை அன்று காலையில் எழுந்து தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்து பட்டாசு வெடிப்பது வழக்கம். தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவமனைகள் வரை அனைத்து இடங்களிலும் தீக்காய சிகிச்சை பிரிவு மற்றும் மருந்துகளை தயார் நிலையில் வைக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனா நோயாளிகள் விவரங்களை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தயார் நிலையில் வைத்திருக்க மருத்துவ கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் வசதிகள், மருந்துகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும். அனைத்து […]
தமிழகத்தில் மொத்தம் 2672 அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனைகள் சுகாதாரமாகவும் பாதுகாப்பானதாகவும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனைகளின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த பிற துறைகளுடன் இணைந்து செயல்பட மாவட்ட ஆட்சியர் மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக “நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் தமிழகம் முழுவதும் மொத்தமாக 5120 சுகாதார பணியாளர்கள் 2179 உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்களும் சேர்ந்து மருத்துவமனைகளை சுத்தப்படுத்தி வருகின்றனர். இந்த பணியில் […]
ஹாங்காங்கில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருப்பதால் மருத்துவமனைகள் நிரம்பி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாங்காக்கில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கையானது 6,000-த்தை தாண்டியுள்ளது. கடந்த காலங்களில் கொரோனாவை எளிதில் கட்டுப்படுத்திய சீனா, இம்முறை அதிக பாதிப்புகளை சந்தித்து கொண்டிருக்கிறது. ஹாங்காங்கில் கொரோனா தொற்று தொடங்கிய காலத்தில் 12,000 நபர்களுக்கு மட்டும் தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. எனவே, ஹாங்காங் அரசு அறிகுறி இல்லாமல் லேசான பாதிப்பு உடைய நோயாளிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டும் என்று […]
ஹாங்காங்கில் கொரோனா தொற்று தீவிரமடைந்து, மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறையால் நோயாளிகள் கடுமையான குளிரில் வெளியில் சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஹாங்காங்கில் இந்த மாத தொடக்கத்தில் தினசரி உறுதி செய்யப்படும் கொரோனா தொற்று எண்ணிக்கை 100 க்கும் குறைவாக இருந்தது. ஆனால், இரண்டு வாரங்களில் அந்த எண்ணிக்கை 40 மடங்காக உயர்ந்து, நாட்டில் தற்போது வரை இல்லாத அளவிற்கு கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதற்கு, மக்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ள தயங்குவது தான் முக்கிய காரணம் […]
ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கான உபகரணங்களை பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “சிறப்பு மருத்துவ வசதிகள் தொற்று நோய்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும் கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. ரோபோடிக் அறுவை சிகிச்சை சாதனம் 35 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அறுவை சிகிச்சை அரங்கு 50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் முதல் […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் ஆட்சிக்கு வந்த பின்னர் மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாடு தலீபான்களின் தேசமாக மாறி விட்டது. இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் முற்றிலுமாக குன்றி சோதனை காலம் தொடங்கியுள்ளது. மேலும் அந்நாட்டின் சொத்துக்கள் சுமார் 1000 கோடி டாலர் முடக்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் ஒரு வேளை உணவுக்கே திண்டாடுகின்றனர். மேலும் 90 சதவீத மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் தனது […]
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, அடுத்த இரண்டு வாரங்களுக்கு அவசர நோயாளிகள் மட்டுமே மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது. அடுத்த இரண்டு வாரத்துக்குப் பிறகே மருத்துவமனைக்கு பிற நோயாளிகள் வரலாம் என்றும், அதுவரையிலும் புறநோயாளிகளாக சிகிச்சை பெற வேண்டியோர் ஆன்லைன் மூலம் மருத்துவ சேவையைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டிக்கும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, உடல்நலம் பாதிக்கப்பட்ட மற்றும் அவசர உதவி தேவைப்படும் நோயாளிகள் மட்டும் மருத்துவமனைகளுக்கு பல்நோக்கு […]
நிதி உதவிகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதால் மருத்துவமனைகள் மீண்டும் திறக்கப்படும் என்று தலீபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனை அடுத்து அந்நாட்டுக்கு அளித்து வந்த நிதி உதவியை உலக நாடுகளும் பல்வேறு அமைப்புகளும் நிறுத்தின. குறிப்பாக நிதி உதவி நிறுத்தப்பட்டதால் அங்கு செயல்பட்டு வந்த 34 கொரோனா மருத்துவமனைகளும் மூடப்பட்டன. இதனால் கொரோனா தொற்று பரிசோதனை உட்பட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியாமல் போனது. மேலும் இதன் காரணமாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து சுகாதார […]
ஜெர்மனியில் இதுவரை இல்லாத அளவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டில் கொரோனா பரவல் தொடங்கியதிலிருந்து, நேற்று தான் அதிகமான தொற்று எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ராபர்ட் கோச் என்ற தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம், தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று 37,120 நபர்களுக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுதான் அதிகமான தொற்று எண்ணிக்கையாக பதிவாகியிருந்தது. இந்நிலையில், நேற்று மட்டும் 39,676 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. நாட்டில் இருக்கும் பல்வேறு […]
இங்கிலாந்தின் தெற்குப்பகுதிகளில் இடி மின்னல் மற்றும் புயலும் உருவாகி லண்டன் முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. லண்டன் முழுக்க தெருக்கள் மற்றும் சுரங்க ரயில் பாதைகளில் வெள்ளம் பெருகி சாக்கடைகள் நிரம்பி வழிகிறது. இதுமட்டுமல்லாமல் சில மருத்துவமனைகளிலும் வெள்ளம் புகுந்ததால் மின்வெட்டு ஏற்பட்டு ஜெனரேட்டர்களும் செயல்படவில்லை. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வரும் நோயாளிகள் பிற மருத்துவமனைகளை நாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. https://videos.dailymail.co.uk/video/mol/2021/07/26/6319679684750886267/640x360_MP4_6319679684750886267.mp4 ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கிலாந்தின் தெற்குப் பகுதிகளில், ஒரு மணி நேரத்தில் மட்டும் 50 […]
பிரிட்டனில் மருத்துவமனையில் இறந்த நோயாளி ஒருவர் 5 மணி நேரம் வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் கொரோனா எண்ணிக்கை அதிகமாக பரவி வருவதால் மருத்துவமனைகளில் பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ளது. எனவே பல மருத்துவமனைகளில் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது நோயாளி ஒருவர் கீழே விழுந்ததால் உயிரிழந்த சம்பவம் பர்மிங்காம் NHS அறக்கட்டளை தொடர்புடைய பல்கலைக்கழக மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் மருத்துவமனைகள் சிலவற்றில் செவிலியர்கள் ஒரே சமயத்தில் சுமார் 17 நோயாளிகளை கவனித்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். […]
அனைத்து கொரோனா மருத்துவமனைகளிலும் சித்த மருத்துவத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நோய்க்கான மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கொரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸிக்குளோராக்குயின் உள்ளிட்ட மருந்துகள் சில நாடுகளில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் மருத்துவர்களின் பரிந்துரையின் படி சில மாநிலங்களில் கொரோனா சிகிச்சைக்கு சித்த மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கபசுரக் குடிநீர் உள்ளிட்ட சில சித்த மருந்துகள் கொரோனா தடுப்புக்காக பரவலாக […]
சென்னையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் வெண்டிலேட்டர்கள் எண்ணிக்கையை வெளியிட வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையையும் இனிமேல் மாநில கட்டுப்பாட்டு அரை வெளியிட வேண்டும் என ஸ்டாலின் அரசுக்கு கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை மாநகரில் சமூக பரவல் வந்து விட்டதா? இல்லையா? என்பதை பற்றி ஆய்வு செய்யவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், சென்னையில் அறிவியல் ரீதியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]
கொரோனவை தடுக்க அரசு, தனியார் மருத்துவமனைகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு: * அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு பற்றி பயிற்சி அளிக்க வேண்டும். * அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் தனிநபர் பாதுகாப்பு உடை அணிந்த பின்னரே கொரோனா நோயாளிக்கு சிகிச்சையளிக்க வேண்டும். * இறந்தவர்களின் உடலை கையாளும் விதம், மருத்துவ உபகரணங்களை உபயோகப்படுத்தும் முறையை தெரிந்து வைத்திருக்க வேண்டும். * அனைத்து மருத்துமனைகளிலும் […]
பிளாஸ்மா பரிசோதனை சிகிச்சை 21 மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள 5 மருத்துவமனைகள், குஜராத்தில் 4, தமிழகம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 2 மருத்துவமனைகள், பஞ்சாப், தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு மருத்துவனைக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் லாவ் அகர்வால் கூறியதாவது, ” தகவல்களை ஆராய்ந்த பின்னர், சிவப்பு, ஆரஞ்சு […]