ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதால் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது பற்றி விழிப்புணர்வு பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி நேற்று நடைபெற்றுள்ளது. இதில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக செய்ய வேண்டிய வழிமுறைகள் என்னென்ன என்பது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது பற்றி வடசென்னை தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அதிகாரி முருகன் பேசிய போது, கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மிகப்பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. […]
Tag: மருத்துவமனை
இந்தி திரை உலகில் காமெடி நடிகராகவும், குணசத்திர நடிகராகவும் அறியப்படுபவர் ராஜு ஸ்ரீவஸ்தவா. இவர் கடந்த பத்தாம் தேதி டெல்லியில் உள்ள ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென்று சரிந்து விழுந்தார். அவரை அங்கிருந்து மீட்ட அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. தற்போது டெல்லியில் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் . இந்நிலையில் ராஜ ஸ்ரீவஸ்தவா உடல் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என தெரியவந்துள்ளது நேற்று […]
பிரபல தமிழ் நடிகர் நாசர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐதராபாத்தில் உள்ள போலீஸ் அகடாமியில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது அவருக்கு விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நடிகை தபு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அஜய் தேவ்கன் நடிக்கும் போலா என்ற திரைப்படத்தில் நடித்து வரும் தபு, டிரக் ஒன்றை ஓட்டி வரும் காட்சியில் விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது டிரக்கின் கண்ணாடி உடைந்து தபுவின் வலதுபுற கண்ணிற்கு மேல் குத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணத்தில் புகைப்படங்கள் எடுப்பதற்கு கட்டுப்பாடு என பல்வேறு தடைகள் போடப்பட்டிருந்த நிலையில் தற்போது திருமண புகைப்படங்கள் ஒவ்வொன்றாக விக்னேஷ் சிவன் வெளியிட்டு வருகிறார். திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்ற இவர்கள் கடந்த மாதம் சென்னை திரும்பிய நிலையில் மீண்டும் அவரவர் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் நயன்தாரா சாப்பிட்ட […]
ஸ்விட்சர்லாந்தில் வெப்பநிலை தாக்கத்தின் காரணமாக முதியோர் அதிகமாக பாதிப்படைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் வயதானவர்களின் எண்ணிக்கை திடீரென்று உயர்ந்து கொண்டிருப்பதாக பல்கலைக்கழக மருத்துவமனை வருத்தம் தெரிவித்திருக்கிறது. அதிகரித்து வரும் வெப்ப தாக்கத்தால் முதியோர் அதிகம் பாதிப்படைகிறார்கள். ஏற்கனவே இதயத்தில் பாதிப்பு கொண்ட மக்களின் நிலை மேலும் மோசமடைந்திருக்கிறது என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். எனினும் வெப்பத்தின் காரணமாக அதிகமாக நீரிழப்பு நோய் தான் நேரடியாக ஏற்பட்டிருக்கிறது. மேலும் வயதானவர்களுக்கு வெப்பத்தின் தாக்கம் காரணமாக பசியின்மை ஏற்பட்டிருக்கிறது. […]
பிரபல பெங்காலி நடிகர் சாய்பால் பட்டாச்சார்யா தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு நடிக்க வாய்ப்புகள் இல்லாததால் தான் தற்கொலை செய்யப்போவதாக ஃபேஸ்புக்கில் வீடியோவும் வெளியிட்டுள்ளார். கூரான ஆயுதத்தால் அவர் தன்னை காயப்படுத்திக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பிரபல அமெரிக்க நடிகை ஆனி ஹெச் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் காரில் சென்ற போது, ஒரு வீட்டின் மீது கார் மோதி தீப்பிடித்து எரிந்ததால் ஆனி ஹெச் பலத்த காயமடைந்தார். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்த பிறகு, காரின் பின்புறத்தில் இருந்து ஹெச் மீட்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிரபல இயக்குனரும் நடிகருமான ஜி.எம்.குமார் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவன் இவன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் 1986 ஆம் ஆண்டு பிரபு மற்றும் பல்லவி நடிப்பில் வெளியான அறுவடை நாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு பிக்பாக்கெட்,இரும்பு பூக்கள் மற்றும் உருவம் உள்ளிட்ட படங்களை இவர் இயக்கியுள்ளார். வெயில்,மாயாண்டி குடும்பத்தார் மற்றும் அவன் இவன் போன்ற படங்களிலும் இவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. இவர் […]
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கலந்து கொள்ள நாடாளுமன்ற எம்பிக்கள் அனைவரும் டெல்லியில் இருக்கின்றனர். இவர்களோடு திமுக எம்பி திருச்சி சிவாவும் டெல்லியில் உள்ளார். இந்நிலையில் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் திமுக எம்.பி. திருச்சி சிவா உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருச்சி சிவா இன்று வீடு திரும்புவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில், கோட்டார் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 27 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவிகள் அங்கிருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். உடனடியாக அங்கு விரைந்த அமைச்சர் மனோ தங்கராஜ் மாணவிகளை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். மாணவிகளுக்கு லேசான அலர்ஜி மட்டும் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடும் வயிற்று வலி காரணமாக டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்து எந்த தகவலையும் மருத்துவமனை நிர்வாகம் இன்னும் வெளியிடவில்லை. கடந்த 7-ம் தேதி பக்வந்த் மானுக்கு, மருத்துவரான குர்ப்ரீத் கவுருடன் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சென்னை காவேரி மருத்துவமனையில் முதலமைச்சருக்கு கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டது. இந்தநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கும், மக்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார். அதில் கொரோனா தொற்றிலிருந்து தான் குணமடைய விரும்பிய மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின்னர் தன்னை ஆயிரக்கணக்கானோர் தொடர்புகொண்டு நலம்பெற வாழ்த்தியதாகவும் […]
கொரோனா பெருந்தொற்று காரணமாக முதல்வர் ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் கடந்த 14ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மேற்கொண்ட பரிசோதனைகளில் அவருக்கு நுரையீரலில் 10 சதவிகிதம் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து தொடர்ந்து சில நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை எடுக்க மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். மருத்துவர்களின் அறிவுறுத்தல் படி தொடர் நான்கு நாட்களாக மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார் முதல்வர் ஸ்டாலின். இந்த சூழலில் முதல்வர் டிஸ்சார்ஜ் குறித்து காவிரி […]
தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொற்று பாதிப்பு உறுதியானது. இதையடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு அதிகமாக இருந்ததன் காரணமாக கடந்த 14ஆம் தேதி சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா அறிகுறி, பரிசோதனை மற்றும் கண்காணிப்புக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், உடல் நிலையில் முன்னேற்றம் […]
ஓ.பன்னீர்செல்வம் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக சளி பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதையடுத்து நேற்று காலை அவருக்கு தொற்று பரிசோதனை மேற்கொண்ட பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. சென்னை அமைந்தகரையில் உள்ள எம் ஜி எம் ஹெல்த் கேர் […]
உடல்நலக் குறைவு காரணமாக ஓபிஎஸ், சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி மற்றும் உடல்சோர்வு இருப்பதால், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர்.
சிறுமியின் கருமுட்டை தானம் என்ற பெயரில் சட்டத்திற்கு புறம்பாக கருமுட்டை விற்பனை நடந்த விவகாரம் தமிழகத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 16 வயது சிறுமியின் புகாரின் பெயரில் அவருடைய தாயார் மற்றும் அவரின் இரண்டாவது கணவர், புரோக்கர் உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு சிறுமியின் கருமுட்டையை எடுத்து விற்பனை செய்த விவகாரத்தில் நான்கு மருத்துவமனைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கருமுட்டை தானம் குறித்த சாதக […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சி.டி.ஸ்கேன் மருத்துவ பரிசோதனைக்கு சென்ற நிலையில் முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில், ‘கொரோனா நோய் தொற்று அறிகுறி காரணமாக மருத்துவ பரிசோதனை மற்றும் கண்காணிப்பிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,’ என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வீட்டு தனிமையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருந்து வந்த நிலையில், தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
கனடா நாட்டில் வித்தியாசமாக பிரசவம் பார்க்கப்பட்ட குழந்தை பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் வசிக்கும் மனிஷ் மற்றும் ஸ்வாதி பட்டேல் என்ற தம்பதிக்கு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. ஆனால் குழந்தை பிறந்த இரண்டு நாட்களில் பரிதாபமாக பலியானது. அதற்கு காரணம் Brampton Civic என்னும் மருத்துவமனையின் வித்தியாசமான முயற்சி தான். அதாவது, அந்த தம்பதியிடம் அனுமதி பெறாமலேயே vaccum முறையில் பிரசவம் பார்க்கப்பட்டிருக்கிறது. […]
மத்திய பிரதேசம் அம்பா பத்ரா கிராமத்தை சேர்ந்தவர் புஜாராம். இவரது இளைய மகன் ராஜா(2)வின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதன் காரணமாக புஜாராம், குழந்தையை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவருடன் அவரின் மூத்த மகன் குல்ஷனும்(8) சென்றுள்ளார். மருத்துவமனையில் ராஜா சிகிச்சை பலனின்றி இறந்தவுடன் புஜாராம், ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்துதருமாறு மருத்துவமனை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். ஆனால் அவரது கோரிக்கையை மருத்துவமனை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். இதன்பின்னர்வேறு வாகனம் கிடைக்கிறதா என்று பார்க்க புஜாராம் தனது 2 வயது மகனின் […]
நடிகர் விக்ரம் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனையில் அனைவருக்கும் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்படவில்லை லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அவரது மேனேஜர் விளக்கம் அளித்தார். இந்நிலையில் சிகிச்சை முடிந்து விக்ரம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இதையடுத்து இரண்டு நாள் வீட்டில் ஓய்வெடுத்த பிறகு ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் கோப்ரா இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பார் என்று […]
உடல் நலக்குறைவு காரணமாக இறந்த தங்களது தாயின் உடலை மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளனர் அவரது மகள்கள். திருவொற்றியூர் ராமானுஜம் நகர் ஒத்தவாடை பகுதியை சேர்ந்த மீனா என்பவர் அச்சகத்தொழில் நடத்தி வருகிறார். இவரது கணவர் முருகானந்தம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இவர்களுக்கு காயத்ரி, சுவாதி என்ற இரண்டு மகள்கள் உள்ளன. இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு வந்த மீனா சிறுநீரகம் செயலிழந்த நிலையில் உயிரிழந்தார் . […]
நடிகர் விக்ரமுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இவருக்கு என தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மகான். இந்த படத்தில் விக்ரமும் அவரது மகன் துருவ் விக்ரமும் நடித்திருப்பார். இதைத்தொடர்ந்து அவர் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற […]
மாவட்ட ஆட்சியர் எச். கிருஷ்ணனுண்ணி மருத்துவமனையில் அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையில் அரசு மருத்துவக் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையை நேற்று மாவட்ட ஆட்சியர் எச். கிருஷ்ணனுண்ணி அதிரடியாக ஆய்வு செய்தார். இதில் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர். மணி, மருத்துவர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ரத்த பரிசோதனை மையம், மருந்து வழங்கும் […]
லத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஷாலுக்கு காலில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாக்கியுள்ளது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். செல்லமே படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் புதிய திரைப்படம் லத்தி. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் நூறு ரவுடிகள் […]
பாகலூர் அருகே ஆமணக்கு விதைகளை தின்ற சிறுவர் சிறுமியர் எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஓசூர் அருகே ஜீவமங்கலம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வட மாநிலத்தை சேர்ந்த மூன்று குடும்பங்கள் வந்து தங்கி கூலித்தொழில் செய்து வந்தது. இந்நிலையில் அந்த குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் எட்டு பேர் இன்று விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு கிடந்த ஆமணக்கு விதைகளை, விஷ விதை என்று தெரியாமல் எடுத்து சாப்பிட்டு விட்டனர். சிறிது நேரத்தில் […]
பிரபல நடிகரும், எழுத்தாளருமான பூ ராமு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். பூ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் அடையாளமாக இவர் பூ ராமு என்று அழைக்கப்படுகிறார்.இவர் நீர்ப்பறவை, தங்கமீன்கள், பேரன்பு, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.
தொழிலாளர் அரசு ஈட்டுறுதி நிறுவனம் நாடு முழுவதும் தொழிலாளர் ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் சேவையை வழங்கி வருகின்றது. இது தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டம் ஆகும். இந்த திட்டமானது தற்போது 443 மாவட்டங்களில் அமலில் இருக்கிறது. 153 மாவட்டங்களில் பகுதியாக அமல் படுத்தப் பட்டிருக்கிறது. மேலும் 148 மாவட்டங்களில் தொழிலாளர் ஈட்டுறுதி நிறுவனத்தின் வசதியே கிடையாது. இந்த நிலையில் தொழிலாளர் ஈட்டுறுதி திட்டத்தில் சேவைகளை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. மத்திய தொழிலாளர் […]
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில் மருத்துவமனையில் பணியாற்ற விருப்பம் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.maduraimeenakshi.org என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2 வாரத்தில் கொரோனா பரவல் 4 மடங்கு அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்துவரும் நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘அனைத்து மருத்துவமனைகளிலும் 50 முதல் 100 படுக்கைகளை கோவிட் சிகிச்சைக்காக தயாராக வைத்திருக்க வேண்டும். தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டு தனிமையில் உள்ளவர்களுக்கு லேசான அறிகுறிகள் உள்ளோருக்கு பாரசிட்டமால், சிங்க், வைட்டமின் சி மாத்திரைகள் வழங்கப்படவேண்டும். மேலும் வீட்டு தனிமைப்படுத்துதலில் […]
தமிழகத்தில் சமீப நாட்களாகவே கொரோனா அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3073 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனை மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளார்கள். கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 596 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 295, செங்கல்பட்டில் 122 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே முக கவசம், தனிநபர் இடைவெளி உள்ளிட்ட நோய்த் தடுப்பு வழிமுறைகள் பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா அதிகரித்துள்ள நிலையில் மருத்துவமனைகளில் […]
சென்னை பொழிச்சலூர், மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் லட்சுமி(35). இவர் தனது வீட்டில் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி வரும் அட்டகாச எலியை பிடிக்க முற்பட்டுள்ளார். தனது 12 வயது மகனோடு சேர்ந்து எலியை அடித்து கொல்ல வேண்டும் என எண்ணி அடிக்க முற்பட்ட அவர் எதிர்பாராத விதமாக மயங்கி கீழே விழுந்தார். இதில் நெற்றியில் அடிப்பட்டு ரத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரது மகன் நடந்ததை தந்தையிடம் கூறி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை […]
பெங்களூருவில் வசித்து வரும் நடிகை சுவாதி கன்னட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சுவாதிக்கு திடீரென்று பல் வலி ஏற்பட்டதை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர் அவருக்கு மருந்துக்கு பதிலாக ஊசி செலுத்தியுள்ளார். இதனால் சுவாதியின் முகம் வீங்கி மாறியுள்ளது. இதுகுறித்து மருத்துவமனையை தொடர்பு கொண்டு கேட்டபோது யாரும் சரியாக பதிலளிக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி இருக்கிறார். இவ்வாறு அவருக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்ததால் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தேதிமுக தலைவர் விஜயகாந்த் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் தலைமை கழகம் அறிவித்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே தேர் கவிழ்ந்து விழுந்ததால் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது .காளியம்மன் கோவில் விழாவில் பொதுமக்கள் தேரை இழுத்துச் சென்றபோது திடீரென அச்சாணி முறிந்ததால் தேர் தலைகீழாக சாய்ந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி டெல்லியில் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி லேசான காய்ச்சல் மற்றும் சில அறிகுறிகள் இருந்ததால், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல்நிலை சீராக உள்ளது, சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருப்பார் என கட்சி செய்தி தொடர்பாளர் […]
கொரோனா தொற்றுக்கு பிறகு தமிழகத்தில் மருத்துவமனைகள் கிளினிக்குகளுக்கு பதிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட சில அம்சங்கள் கட்டாயமாக படுகிறது. அதன்படி அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் வென்டிலேட்டர் வசதி இருப்பது அவசியம். அதேபோல் தீ விபத்து ஏற்படும்போது பயன்படுத்துவதற்கு ஏதுவாக சாய்தளம், பிரத்தியேக மின்தூக்கி வசதிகள் அமைப்பது கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் இல்லாத மருத்துவமனைகளுக்கு பதிவு உரிமம் வழங்கப்படமாட்டாது என மருத்துவ சேவைகள் இயக்கம் கூறியுள்ளது. தமிழகத்தில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள், கிளினிக்குகள், சிறிய அளவிலான […]
புதுச்சேரியில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளதாக மருத்துவர் கூறியுள்ளார். புதுச்சேரி மாநில முதன்மை சுகாதாரம் மையமாக விளங்குகிறது. இங்கு சிறந்த அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் உள்ளது. இருந்தபோதிலும் உயர் சிகிச்சைகளுக்கு சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு வந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. இதை மாற்ற வேண்டும் என்பதற்காக புதுச்சேரியில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையில் உயர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனையில் தற்போது […]
உத்திரபிரதேசம் மாநிலத்தில் முதாரி கிராமத்தில் சுரேந்தர ரைக்வார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மே 30 அன்று தனது கர்ப்பிணி மனைவி சீமாவுடன் மஹேபா மாவட்டத்தில் உள்ள மகளிர் மாவட்ட மருத்துவமனைக்கு சென்றார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. புதிதாக பிறந்த ஆண் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனையடுத்து மருத்துவர்கள் குழந்தையை பிறந்த குழந்தைக்கான சிறப்பு பிரிவில் அனுமதித்தனர். அந்த வார்டில் அழுக்கு மற்றும் எறும்புகள் இருப்பதாக குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்கள், […]
பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னாத். எல்லோராலும் கே.கே என்று அறியப்படுகிறார். டெல்லியை பூர்வீகமாகக் கொண்ட அவர், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் என இந்தியாவின் முக்கிய மொழித் திரைப்படங்களில் பல பாடங்களைப் பாடியுள்ளார். அவருக்கு பல மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தநிலையில், கொல்கத்தாவிலுள்ள குருதாஸ் நஸ்ரூல் மன்சா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாடல் பாடி முடித்த பிறகு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. pic.twitter.com/c1mXlhYKAJ — […]
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவனை அவனது பெற்றோரும் உறவினர்களும் இன்று அதிகாலை அங்குள்ள செஞ்சுரி மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். ஆபத்தான நிலையில் மூச்சு விடுவதற்கே சிரமப்பட்ட அந்த சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அளித்த முதல் கட்ட சிகிச்சையில் சிறுவனின் உடல்நிலை ஓரளவு தேறி உள்ளது. அதன் பின் என்ன காரணத்தினால் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டது என சிறுவனிடம் மருத்துவர்கள் கேட்டிருக்கின்றனர். அதற்கு முதலில் பதில் கூறத் […]
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் அடுத்த நெடுங்காடு மாவட்ட மருத்துவமனையில் செயல்பட்டுவந்த குடும்பஸ்ரீ கேன்டின் மூடப்பட்டுள்ளது. நேற்று மருத்துவமனை ஊழியர் ஒருவர் வாங்கிய முட்டை கிரேவியில் அட்டை பூச்சி இருந்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது. அப்போது சமையலறையில் சுத்தமற்ற சூழலில் சமையல் செய்யப்பட்டு வருவதாக கண்டறியப்பட்டு, உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அழுகிய பழங்களும் சாறு தயாரிப்பதற்காக இங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெண்கள் […]
காஷ்மீரில் உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பால் புதைத்த குழந்தையை வெளியே எடுத்தபோது உயிருடன் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் பனிஹால் நகரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் பங்கூத் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பஷாரத் அகமது குஜ்ஜார் மற்றும் ஷமீமா பேகம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். கர்ப்பிணியான பேகம் நேற்று காலை பிரசவித்து இருக்கின்றார். இதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கின்றது. இருப்பினும் மருத்துவமனை நிர்வாகம் குழந்தை இறந்து விட்டது […]
உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட பிரபல நடிகரும் இயக்குனருமான டி ராஜேந்தர் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். திரைப்பட நடிகரும் இயக்குனருமான டி ராஜேந்தர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வயிற்று வலி காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த போது இதயம் சம்பந்தமான பிரச்சனை ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து […]
கிண்டியில் உள்ள கொரோனா மருத்துவமனை முதியோருக்கான முதல் மருத்துவமனையாக மாற்றப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று தீவிரமடைந்த நிலையில் கிண்டியில் கொரோனா தொற்றுக்கு என்று புதிதாக மருத்துவமனை அமைக்கப்பட்டது. தற்போது தொற்று குறைந்து வருவதால் அந்த மருத்துவமனை பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இதனால் கிண்டியில் உள்ள கொரோனா மருத்துவமனை முதியோருக்கான முதல் மருத்துவமனையாக மாற்றப்படும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் இன்னும் […]
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பதிவுகள், சேவை புத்தகங்கள், சேவை கணக்குகள் என அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என இயக்குனர் உத்தரவிட்டிருக்கிறார். புதுச்சேரியில் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. ஜிப்மரில் புதுவை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல மாவட்டங்கள் வெளிமாநிலங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக வருகின்றனர். சில காலமாக ஜிப்மரில் மருந்து மாத்திரை விநியோக தன்மை தொடங்கி பலவித குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த […]
சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் உடல் நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ்-ற்கு 86 வயதாகிறது. இந்நிலையில் அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே, அவர் ஜெட்டா நகரத்தில் இருக்கும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி மன்னருக்கு, இதற்கு முன்பே கடந்த 2020-ஆம் வருடத்தில் பித்தப்பை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும், கடந்த மார்ச் மாதம் இதய பிரச்சனைக்கும் சிகிச்சை […]
மக்களவையின் முன்னாள் துணைத்தலைவர் கரிய முண்டா ஜார்கண்டின் குந்தி மாவட்டத்தில் உள்ள தனது வீட்டில் மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது பற்றி மருத்துவர்கள் கூறும் போது, வியாழன் இரவு குறைந்த இரத்த சர்க்கரை காரணமாக மயக்கம் அடைந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தற்போது நிலையாக இருப்பதாகவும், மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளனர். முன்டாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பசுமை வழிச்சாலை உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி நிமோனியா மற்றும் […]
ரஷ்யப் படைகளால் முற்றுகையிடப்பட்ட உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் உள்ள மருத்துவமனைகளுக்கு அவசரமாகத் தேவைப்படுகின்ற ஜெனரேட்டர்களை கொண்டு சேர்ப்பதற்கு போராடிக் கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கவலையுடன் தெரிவித்திருக்கிறது. மரியுபோலில் சுகாதார அமைப்புகள் மிகவும் மோசமாக கடுமையாகி பாதிப்புக்குள்ளாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. இந்தநிலையில் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளில் குறைந்தபட்சம் மின்னாற்றல் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த ஜெனரேட்டர் கள் உதவுகின்றன. ஆனால் ரஷ்யாவின் தாக்குதலால் கடுமையாக பாதிப்புக்குள்ளாக இருக்கும் அந்த பகுதிக்கு இப்போதைய […]