Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

சாதாரண உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் சமையலறை மருத்துவமனை..!!

உங்களுக்கு ஏற்படக்கூடிய சாதாரண உடல் நல பிரச்சனைகளுக்கு சமையலறையிலே தீர்வு காணலாம். அருகில் உள்ள மருத்துவமனை என்பதை நினைவில் வையுங்கள். ஊரடங்கு உத்தரவால் நாம் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி உள்ளோம். இதனால் பலபேரிடையே மனதில் பயம் தான் குடி கொண்டிருக்கும். சாதரணமாக ஏற்படக்கூடிய வாந்தியும், வயிற்று வலியும் கூட அவர்களை கவலை அடைய செய்துவிடுகிறது. அப்படிப்பட்ட கவலை ஏதும் இனி தேவையில்லை. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு மருத்துவமனை செல்லவேண்டும் என்ற அவசியமும் கூட தேவையில்லை. உங்களுக்கு ஏற்படும் பெரும்பாலான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் பெண் மருத்துவருக்கு கொரோனா… மருத்துவரின் வீடு மற்றும் மருத்துவமனைக்கு சீல்..!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் 27 வயது பெண் மருத்துவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கடந்த 3ம் தேதி வரை மருத்துவமனையில் பணியாற்றிய இந்த பெண் மருத்துவருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த பெண் மருத்துவரின் தந்தைக்கு கடந்த 4ம் தேதி கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது, இருவரும் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

நாளை மருத்துவமனை, தெரு விளக்குகளை அணைக்க வேண்டாம் – மத்திய மின் அமைச்சகம் அறிவுறுத்தல்!

நாளை இரவு 9 மணிக்கு வீட்டில் உள்ள மின் விளக்குகளை மட்டும் அணைக்க வேண்டும் என மத்திய மின் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மருத்துவமனை, வீட்டு உபயோக பொருட்களுக்காக ஸ்விட்சை அணைக்க வேண்டாம். குளிர்சாதன பெட்டி, மின்விசிறி, டிவி போன்ற சாதனங்களை அணைக்க தேவையில்லை. தெரு விளக்குகளை அணைக்க வேண்டாம், ஒவ்வொரு தெருவிலும் விளக்கு எரிவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஒரே நேரத்தில் மின் விளக்குகளை அணைத்து எரிய […]

Categories
உலக செய்திகள்

மின்னல் வேகத்தில் கொரோனா… ராக்கெட் வேகத்தில் மருத்துவமனை… அசத்திய பிரிட்டன்!

பிரிட்டனில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 9 நாட்களில் மிகப்பெரிய மருத்துவமனையை அந்நாட்டு அரசு கட்டியுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் பிரிட்டனையும் விட்டு வைக்கவில்லை. அந்நாட்டில் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதால் மருத்துவமனை நிரம்பி வழிகிறது. எனவே, பல்வேறு பகுதிகளில் தற்காலிகமாக மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன. அந்தவகையில், பிரிட்டனில் தீவிர சிகிச்சை தேவைப்படும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்காக மிகப் பெரிய மருத்துவமனையை அந்நாட்டு அரசு கட்டியிருக்கிறது. […]

Categories
செங்கல்பட்டு திருவாரூர் மாநில செய்திகள்

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 51 பேருக்கு திருவாரூர், செங்கல்பட்டு மருத்துவமனையில் சோதனை!

தமிழகத்தில் கொரோனா வைரசால் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 124ஆக உயர்ந்துள்ளது. இதனால் பாதிப்பில் இந்தியளவில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நேற்று புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கு மருத்துவமனை கட்டி கொடுக்க தயார்… அனுமதிக்கு காத்திருக்கும் சீனா!

கொரோனா வைரசுக்கு சிகிச்சையளிக்க இந்தியாவிலும் உடனடியாக மருத்துவமனை கட்டிக்கொடுக்க தயார் என சீனா அறிவித்துள்ளது. சீனாவில் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் தான் கொரோனா வைரஸ் தொற்று நோய் முதலில் பரவியது. காட்டு தீயை போல வேகமாக பரவியதால், அங்கு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிலை சென்று விட்டது. இதையடுத்து சீனா உடனே அவசர அவசரமாக புதிய மருத்துவமனைகளை உருவாக்கியது.அதாவது, வூஹான் நகரில் சீன ரெயில்வே கட்டுமான கழகம் வெறும் 10 நாளில் மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றை […]

Categories
உலக செய்திகள்

நிரம்பிய படுக்கைகள்… தரையில் படுத்திருக்கும் கொரோனா நோயாளிகள்… நெஞ்சை உருக்கும் வீடியோ!

ஸ்பெயின் நாட்டின் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வரிசையாக தரையில் படுத்திருக்கும் காட்சி வெளியாகி வேதனையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 192 நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஒன்று ஸ்பெயின். இதுவரை ஸ்பெயினில் ஆயிரத்து 772 பேர் பலியாகி இருக்கின்றனர். மேலும் 28 ஆயிரத்து 768 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பலியானோர் […]

Categories
செய்திகள்

தமிழகத்தில் 8 புதிய மருத்துவக் கல்லூரிகள் – மார்ச் 1ம் தேதி முதல்வர் பழனிசாமி அடிக்கல்!

தமிழகத்தில் புதிதாக 8 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மட்டுமின்றி மேலும் புதிய  மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய சுகாதாரத்துறையானது இதற்கானஒப்புதலை கடந்த மாதம் வழங்கியது. இதையடுத்து தமிழகத்தில் புதிதாக 8 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள், அதற்கான கட்டமைப்பு , இடவசதி உள்ளிட்டவை எந்தெந்த மாவட்டங்களில் உள்ளது […]

Categories

Tech |