முறையான பேராசிரியா்கள் இல்லாத மருத்துவக் கல்லூரிகளின் மீது கடுமையனா நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சரான மன்சுக் மாண்டவியா எச்சரிக்கை விடுத்தாா். அதுமட்டுமின்றி , தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம்) மருத்துவக் கல்லூரிக்கு அமைக்கப்பட்டு வரும் சொந்த கட்டிடம் சிறந்த முறையில் கட்டி முடிக்கப்படும். ஆகவே அது குறித்து கவலை வேண்டாம்” என்றும் மக்களவையில் அவா் தெரிவித்தாா். இதற்கிடையில் மருத்துவக் கல்லூரிகள் அனுமதிக்கான விண்ணப்பத்துடன் பிரமாண […]
Tag: மருத்துவ கல்லூரி
நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள முதுநிலை மருத்துவம் மற்றும் உயர் சிறப்பு மருத்துவர் படிப்பு மாணவர்களின் விவரங்கள் அனைத்தையும் இளைய தளம் மூலமாக பதிவேற்ற வேண்டுமென தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் முதுநிலை மருத்துவ படிப்புகள் மற்றும் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை உயர்நீதிமன்றம் மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வெளிப்படை தன்மை உடன் நடத்த வேண்டும். நீட் தேர்வு தகுதி அடிப்படையில் மற்றும் அனுமதிக்கப்பட்ட இடங்களின் […]
நாகை மாவட்டம் வேதாரணியம் தாலுகாவிற்கு உட்பட்ட நெய் விளக்கு வடகாடு பகுதியைச் சேர்ந்த வீரசாமி ராணி தம்பதியினர் வசித்து வருகின்றார்கள். இவர்களுடைய மகன் ஸ்ரீபரன்(21), மகள் சுபஸ்ரீ (18) கூலி வேலை பார்த்து வந்த வீராசாமி சுமை தூக்கும் போது முதுகு தண்டுவடம் பாதித்ததால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கடந்த 2016 ஆம் வருடம் முதல் வீட்டிலேயே இருந்து வருகிறார். அதன்பின் ராணி தையல் வேலை செய்தும் ஆடுகள் வளர்த்தும் குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். எவ்வளவு துன்பங்களை […]
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பில் ஒவ்வொரு வருடம் 100 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இங்கு எம்.எஸ், எம்.டி ஆகிய முதுநிலை படிப்புகளில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், எலும்பு மருத்துவம் போன்ற பாடப்பிரிவுகள் இருக்கிறது. மேலும் இங்கு விபத்து மற்றும் அவசர சிகிச்சை, முதல் நிலை மருத்துவ பாட பிரிவை தொடங்க இந்த தேசிய மருத்துவ ஆணையத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து […]
தூத்துக்குடியில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சித்த மருத்துவ பல்கலைகழகம், ஒமைக்ரான் தொற்று, சுகாதாரத் துறை காலிப் பணியிடங்கள் என பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அப்போது அமைச்சர் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர்கள் உடன் இருந்தார்கள். அப்போது பேசிய சுகாதாரத்துறை அமைச்சர், தமிழ்நாடு பட்ஜெட்டில் கூறியவாறு சுகாதார துறையில் உள்ள 4000 க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை எம்ஆர்பி மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்காக செவிலியர்கள், […]
மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. மேலும் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் எய்ம்ஸ் அரசு மருத்துவக் கல்லூரி தற்காலிகமாக செயல்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் மாவட்டந்தோறும் ஒரு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். நேற்று மக்கள் மருந்தகம் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக மக்கள் மருந்தகங்கள் பயனர்களோடு உரையாற்றினார். அப்போது ஏழை மக்களின் மருத்துவச் செலவைக் குறைப்பதற்காக இந்த மருந்தகங்கள் தொடங்கப்பட்டன என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், எதிர்கால சவால்களை மனதில் கொண்டும் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த அரசு தொடர்ந்தும் செயல்பட்டு வருகிறது. அதற்காக நாடு முழுவதும் மாவட்டந்தோறும் ஒரு […]
தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களுக்கு அரசு கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அடுத்த கல்வி ஆண்டுகளிலிருந்து தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் மருத்துவ இடங்களுக்கும் கல்வி கட்டணத்தை நிர்ணயிப்பது குறித்த தேசிய மருத்துவ ஆணையம் நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழுவிற்கு 26 வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை சமர்ப்பித்தது. கடந்த ஆண்டு மே மாதம் அந்த நெறிமுறைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு மக்களின் கருத்து கேட்கப்பட்டது. அதில் கிடைத்த 1800 […]
தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்பிற்கான கட்டணம் குறித்த விதி முறைகளை தேசிய மருத்துவ ஆணையம் மாற்றியுள்ளது. அதன்படி தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 50% இடங்களுக்கு சம்பந்தப்பட்ட மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பல்கலைக்கழகங்களில் பயிலும் 50 சதவிகிதம் மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கு வசூலிக்கப்படும் கட்டணம் மட்டுமே தனியார் கல்லூரிகளிலும் […]
தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வர உள்ளார். தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரியை திறந்து வைப்பதற்காக ஜனவரி 12ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வர உள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதன்படி விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் திறக்க உள்ளது.
இங்கிலாந்தில் மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த மாரெட் ப்லூகஸ் (21) என்ற மாணவி தனது இரண்டாம் ஆண்டு மருத்துவக்கல்வி படிப்பை கார்டிப் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் மாரெட் ப்லூகஸ் மூன்றாம் ஆண்டு செல்வதற்கான தேர்வை எழுதி 39% மதிப்பெண் பெற்று தோல்வியை சந்தித்துள்ளார். அதன் பிறகு அவர் மறுதேர்வையும் எழுதியுள்ளார். அந்த தேர்வின் முடிவுகள் மாரெட் ப்லூகஸ்-ன் இமெயிலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த […]
திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விழா நடந்தது. அதில் நான்காம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவன் இரண்டாமாண்டு மாணவனை ராக்கிங் செய்து கடுமையாக தாக்கியுள்ளார். அதனால் காயமுற்ற மாணவன் மருத்துவமனை ஐசியூ வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மாணவனின் தந்தை கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனிடையே விடுதியில் மாணவர்களிடையே மேலும் மோதல் ஏற்படும் சூழல் நிலவியதால் 10 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் […]
நாட்டு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு ஒருசில மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் மருத்துவ கல்லூரிகள், மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மருத்துவக் கல்லூரியை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை பின்பற்றி கல்லூரிகள் செயல்பட […]
மருத்துவ கல்வியில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கபட்டுள்ளது. பாவூர்சத்திரத்தில் வசிக்கும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்நிலையில் இதற்கு உரிய நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சருக்கு தி.மு.க மாணவரணி சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இப்பகுதியில் பேருந்து நிலையத்தின் முன்பாக பொதுமக்கள் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இதற்கு தி.மு.க செயலாளர் வக்கீல் போ. சிவபத்மநாதன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் பொதுமக்களுக்கு […]
ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரிக்கு கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் […]
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி சுகாதாரத்துறையின் கீழ் கொண்டு வருவதற்கு தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை சுகாதாரத்துறையின் கீழ் கொண்டு வர தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்ற அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கல்வி கட்டணத்தை தங்களிடம் பெற வலியுறுத்தி 40 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் உயர் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு […]
கிருஷ்ணகிரியில் அமையவுள்ள புதிய மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மட்டுமின்றி மேலும் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய சுகாதாரத்துறையானது இதற்கான ஒப்புதலை கடந்த மாதம் வழங்கியது. அதன்படி ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவள்ளூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளானது […]