BF-7 வைரஸ் மாறுபாட்டின் பரவலால், சீனா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளில் மீண்டும் ஒரு பதற்றம் உருவாகியுள்ளது. இது குறித்து மருத்துவ நிபுணர்கள் முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளனர். அதாவது சீனாவில் இருந்து மேலும் ஆபத்தான மாறுபாடுகள் வெளிவர வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார். அங்குள்ள ஜீரோ கோவிட் கொள்கை நீக்கப்பட்டதே அதற்குக் காரணம் எனவும், சீனாவின் முழு மக்களும் இப்போது ஒரே நேரத்தில் வைரஸுக்கு ஆளாகியிருப்பதால் அதிக மாறுபாடுகள் உருவாக வாய்ப்பு உள்ளது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Tag: மருத்துவ நிபுணர்கள்
கொரோனாவுக்கு பின்பு நீண்ட கால பாதிப்புக்கள் என்ன அவற்றுக்கான சிகிச்சை என்ன என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கம் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றின் 3-வது அலை இறுதிகட்டத்தில் உள்ளது .ஆனால் சிகிச்சைக்கு பின்னர் அதிலிருந்து மீண்ட பலரும் பல்வேறு உடல் உபாதைகளுக்கு நீண்டகாலம் ஆளாக நேர்கிறது. நாட்டில் தற்போது கொரோனா குறைந்த போதும் ஒரு சில இடங்களில் அதற்கான அறிகுறிகளை காணமுடிகிறது. அப்படி நீண்ட காலமாக நோயாளிகள் எத்தனை பேர் உள்ளனர் என்பது பற்றி அதிகாரப்பூர்வ […]
சீன நாட்டில் புதிதாக இரண்டு நபர்களுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹாங்காங் மாகாணத்தின் சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சீனாவில் H5N6 என்ற பறவை காய்ச்சல் பரவிக் கொண்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து தற்போது இரண்டு நபர்களுக்கு இந்த பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிச்சுவான் மாகாணத்தில் வசிக்கும் 68 வயது நபருக்கும் ஜெஜியாங் மாகாணத்தில் 55 வயது பெண்ணிற்கும் இந்த பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த […]
இந்தியாவில் இதுவரை 21 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒமைக்ரான் தொற்று இந்தியாவை பாதிக்குமா? என்பது 6 முதல் 8 வாரங்களில் தெரியும் என்று மும்பையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான ஒமைக்ரான் பாதிப்பு பயணம் தொடர்பானது. தடுப்பூசி செலுத்தும் பணியை விரைந்து முடிப்பதில் அனைத்து மாநில அரசுகளும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இதுவரை இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் 9 பேருக்கும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 8 பேருக்கும், […]
சீன நாட்டில் மருத்துவ நிபுணர்கள், பாரம்பரிய மருத்துவ முறையில் மருந்து தயாரிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். சீன மக்கள் வயிறு மற்றும் மண்ணீரல் தொடர்பான பாதிப்புகளுக்கு மேற்கத்திய மருத்துவ முறை தகுந்த பலனை தருவதில்லை என்று கூறுகிறார்கள். எனவே, சீன அரசாங்கம் பாரம்பரிய மருந்துகளை மீண்டும் தயாரிக்கலாம் என்ற புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி, வயிறு வலிக்கு 5 மூலிகைகளை பயன்படுத்தி முக்கோண அமைப்பிலான மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது. மேலும், விண்வெளி வீரர்களுக்காகவே சிறப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டின் […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]
கொரோனா பரிசோதனைக்கு காது-மூக்கு-தொண்டை நிபுணர்களை பயன்படுத்திக்கொள்ள மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம், மாநில அரசின் முதன்மை செயலாளர் மற்றும் தலைமை செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. கடிதத்தில் கூறியிருப்பதாவது “கொரோனா அறிகுறிகளுடன் இருப்பவர்களின் சளி மட்டும் உமிழ்நீரை மாதிரியாக எடுக்க வேண்டியது அவசியம். அதற்கு பயிற்சி எடுத்த மற்றும் தகுதி வாய்ந்த நிபுணர்களை பயன்படுத்த வேண்டும் . அவ்வகையில் மூக்கு, காது, தொண்டை நிபுணர்களை மாநில அரசு விரைவாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதுகுறித்து […]