சிவந்திபுரம் ஊராட்சியில் மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் யூனியன் சிவந்திபுரம் ஊராட்சி துணை சுகாதார நிலையத்தில் மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொது மருத்துவம் மற்றும் எக்ஸ்ரே வேன் மூலமாக எக்ஸரே எடுக்கப்பட்டது. இந்த முகாமிற்கு வட்டார மருத்துவர் பிரவீன் தலைமை தாங்க பஞ்சாயத்து தலைவர் வக்கீல் ஜெகன் முன்னிலை வகித்தார். மேலும் இதில் ரமேஷ் ராஜா, சதீஷ்குமார், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சந்துரு ஜெயக்குமார் […]
Tag: மருத்துவ முகாம்
வானரமுட்டி கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாலாட்டின்புத்தூரில் இருக்கும் வானரமுட்டி கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளி சார்பாக இலவச மருத்துவ முகாம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்தது. இம்முகாமை பள்ளி தலைமை ஆசிரியர் தொடங்கி வைத்தார். இதன் பின் டாக்டர் சுகஸ்ரீ குணசேகரன் பங்கேற்று இடுப்பு வலி, மூட்டு வலி, கழுத்து வலி இருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகள் வழங்கி ஆலோசனைகளை […]
கவசம்பட்டு கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.குப்பம் அடுந்திருக்கும் கவசம்பட்டு கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் திவ்யா தலைமை தாங்க உள்ளாட்சிப் பிரதிநிதிகள் முன்னிலை வகித்தார்கள். மேலும் சுகாதார ஆய்வாளர் செழியன் வரவேற்க வட்டார வளர்ச்சி அலுவலர் கோபி முகாமை தொடங்கி வைத்தார். இம்முகாமில் ரத்த அழுத்தம், ரத்த பரிசோதனை, சர்க்கரை நோய், கண் பார்வை, கர்ப்பிணிகளுக்கான […]
திருவாடானையில் ஒருங்கிணைந்த மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானையில் ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமானது நடந்தது. இந்த முகாமில் மாற்று திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, தனித்துவ அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள், மாதாந்திர உதவித்தொகை, வங்கி கடன்கள், வேலை வாய்ப்பு போன்ற அரசின் சலுகைகளை மாற்றுத்திறனாளிகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள், மத்திய அரசு அலிம்கோ நிறுவனத்தின் மூலமாக செயற்கை கால், ஊன்றுகோல், மூன்று சக்கர மோட்டார், சைக்கிள் வீல் சேர், காது வலி […]
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொரோனா பணியின் போது உயிரிழந்த முன்கள பணியாளர் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாயை அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார். இதையடுத்து அவர் பேட்டியளித்தபோது, “தொலைதுார கிராமங்களுக்கும் மருத்துவ சேவை கிடைக்கும் அடிப்படையில் 70 கோடி ரூபாய் செலவில் 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்த வாரம் முதலமைச்சர் தொடங்கி வைப்பார். இதில் ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு மருத்துவர், செவிலியர், மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு வாகனம் […]
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இந்த மருத்துவ முகாம் வருகிற 22-ம் தேதி ராஜா மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 23-ஆம் தேதி கடியபட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், 24-ம் தேதி முன்சிறை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 25-ம் தேதி இறச்சகுளம் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், 26-ம் […]
தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனராக சைலேந்திரபாபு பதவியேற்றதிலிருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ரவுடிகளை ஒடுக்குவது, பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது போன்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். டி.ஜி.பி சைலேந்திரபாபு சிறப்பான நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் மனைவியர் சங்கம் அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து ஏற்பாடு செய்த பெண் காவலர்கள் மற்றும் காவலர்கள் குடும்பத்தினருக்கான மருத்துவ முகாமை டி.ஜி.பி சைலேந்திரபாபு, காவல் ஆணையர் […]
ஆதரவற்ற குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மணியக்காரன்பட்டி பகுதியில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான கருணை இல்லம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளுக்காக சிறப்பு மருத்துவ முகாம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த மருத்துவ முகாமில் குழந்தைகளுக்கு பல்வேறு விதமான உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்கள் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆதரவற்றோர் இல்லத்தில் சமையல் செய்பவர்கள் 6 மாத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டுமென […]
சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில், இலவச பொது சுகாதார மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் விம்கோ நகர்,எம்ஜிஆர் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையங்களில் நடந்துள்ள மருத்துவ முகாமில் 270 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று தியாகராயர் கல்லூரிகளிலும் கிண்டி மெட்ரோ ரயில் நிலையங்களிலும் நடக்கவிருக்கிறது. வருகின்ற 24 ஆம் தேதி அன்று ஹைகோர்ட் மற்றும் செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையங்களிலும், 27 தேதி புதுவண்ணாரப்பேட்டை மற்றும் வடபழனி […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு தற்போது ஜூலை 12 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு […]
ஈஷா ஆரோக்கிய அலை அமைப்பு சார்பில் இம்மாதம் தொண்டாமுத்தூர் மற்றும் தேவராயபுரம் ஆகிய கிராமங்களில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. கிராமப்புற ஏழை மக்களுக்கு தரமான மருத்துவ சேவை அளிக்கும் நோக்கத்தில் ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் ஆரோக்கிய அலை அமைப்பானது, முன்னணி மருத்துவமனைகளுடன் இணைந்து பல்வேறு விதமான இலவச மருத்துவ முகாம்களை கோவை மாவட்டத்தில் மாதந்தோறும் நடத்தி வருகிறது. அதன்படி, அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் முத்திபாளையம் நண்பர்கள் பொது நற்பணி மன்றம் ஆகியவற்றுடன் […]