மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி வலி நிவாரணி உள்ளிட்ட மருந்துகளை விற்பனை செய்ய மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்க இருக்கிறது. மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி எந்த மருந்தையும் விற்பனை செய்ய கூடாது என்ற விதி நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியமான DTAB, குறிப்பிட்ட சில மருந்துகளை , மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி விற்பனை செய்ய அனுமதிக்கலாம் என்ற கொள்கைக்கு அனுமதி அளித்துள்ளது. இதற்கான அறிவிப்பை சுகாதாரத் துறை […]
Tag: மருந்து சீட்டு
பிரித்தானியாவில் மருந்துச் சீட்டு இல்லாமல் மருந்து விற்பனை செய்துவந்த நபருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள எந்த ஒரு மருந்து கடையிலும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வழங்கப்படும் மருந்து சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்க மருந்து கடை உரிமையாளர்களுக்கு அனுமதி இல்லை. இந்நிலையில் பிரித்தானியாவில் வெஸ்ட் பிரோம்விச் என்ற நகரில் பல்கித் சிங் கைரா என்பவர் மருந்து கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவர் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்.கடந்த 2016 மற்றும் 2017 ஆம் […]
நோயாளிகளுக்கு கொடுக்கும் மருந்து சீட்டில் மருத்துவர்கள் புரியும்படி, மருந்தின் பெயர்களை பெரிய எழுத்துக்களில் எழுத வேண்டும் என்று ஒடிசா உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பனிகிரஹி, மருந்து சீட்டில் மருத்துவர்கள் புரியாதபடி கிறுக்கல் போன்று எழுதுவதால் நோயாளிகள், மருந்தாளுநர்கள், போலீஸ், நீதிபதிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டி கூறியுள்ளார். மேலும் 2016ஆம் ஆண்டு மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தலின் அடிப்படையில் கேப்பிட்டல் லெட்டர் எனப்படும் பெரிய எழுத்துக்களில் மருத்துவர்கள் மருந்தின் பெயரை […]