Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்கள்”….. பொதுமக்கள் சாலை மறியல்…. போக்குவரத்து பாதிப்பு….!!!!!!

திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபர்களின் உடலை மீட்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் அருகே இருக்கும் பேரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் மற்றும் பரத் உள்ளிட்டோர் சென்ற 17ஆம் தேதி தென்பெண்ணை ஆற்றில் சக நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்கள். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“குடிநீர் விநியோகம் சரியாக இல்லை”…. ஆத்திரத்தில் கிராம மக்கள் செய்த செயல்… போலீஸ் பேச்சுவார்த்தை…..!!!!

திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகில் கணவாய்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைகாரன்பட்டி கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் 200 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இங்கு குடிநீர் விநியோகம் முறையாக இல்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக கோபமடைந்த கிராமமக்கள் திண்டுக்கல்-நத்தம் சாலையில் ஒத்தக்கடை என்னு இடத்தில் திரண்டு வந்தனர். இதையடுத்து அவர்கள் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர். இதுபற்றி தகவலறிந்த சாணார்பட்டி போலீசார் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இழப்பீடு கொடுக்கல…. விவசாயிகளின் போராட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

இழப்பீடு கொடுக்காததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஆண்டியப்பனூரில் கடந்த 1998-ஆம் ஆண்டு அணை கட்டுவதற்காக சுற்றி இருந்த விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தியது. இந்நிலையில் அணை கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக சிலருக்கு மட்டுமே இழப்பீடு கொடுக்கப்பட்டதாக தெரிகின்றது. இந்நிலையில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை எனக் கூறி திடீரென ஆண்டியப்பனூர் அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் திருப்பத்தூர்-ஆலங்காயம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ரொம்ப தாமதம் ஆக்குறாங்க…. மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்…. வேலூரில் பரபரப்பு….!!

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் சடலத்தை தாமதமாக தருவதாக உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் கடப்பா ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அதிகமான நோயாளிகள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செல்கின்றனர். எனவே மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் கொரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனையடுத்து மருத்துவமனையில் கொரோனா தொற்றால் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

உயிரே போய்டுச்சு… நடவடிக்கை எடுக்க மாட்டீங்களா? தர்மபுரியில் சடலத்துடன் போராட்டம்…!!

விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் உயிரிழந்த நிலையில் காவல்துறையினர் உரிய  நடவடிக்கை எடுக்காததால் சடலத்தை அம்பேத்கர்  சிலை முன்பு வைத்து உறவினர்கள் போராட்டத்தில்  ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னாகரம் பகுதியை சேர்ந்தவர் ரவிவர்மன்(19). இவர் கடந்த 13ஆம் தேதி சமத்துவபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது  அடையாளம் தெரியாத வாகனம்  அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் படுகாயமடைந்த ரவிவர்மனை அவரது உறவினர்கள் மீட்டு  சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அவர் […]

Categories
தேசிய செய்திகள்

பஞ்சாப் அரியானாவில் 2வது நாளாக விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் …!!

மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக வடமாநிலங்களில் கொதித்து எழுந்துள்ள விவசாயிகள் இரண்டாவது நாளாக ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் தொடர்ந்து 2-வது நாளாக விவசாயிகள் குடும்பத்துடன் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 3 வேளாண் மசோதாக்களும் சட்டம் ஆனால் தங்களது எதிர்காலமே கேள்விக் குறியாகிவிடும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.  ஆகவே 3 மசோதாகளையும் மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என்று விவசாயிகள் முழக்கங்களை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குளச்சலில் தண்டி யாத்திரை செல்ல முயன்றவர்கள் மீது தடியடி!

காந்தியடிகள் தண்டி யாத்திரை சென்றதன் நினைவு நாளை  முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸார் குளச்சலில் இருந்து  இரணியல் வரை யாத்திரை பயணம் செல்ல முயன்றனர். இந்த யாத்திரை செல்வதற்கு போலீஸார் அனுமதி மறுத்துவிட்டதால் இளைஞர் காங்கிரஸார் மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில்  மறியல் செய்த காங்கிரஸார் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |