Categories
தேசிய செய்திகள்

ஹத்ராஸ் பெண்ணின் குடும்பம்… சந்திக்கச் சென்ற அனைவருக்கும் கொரோனா… பரிசோதனைக்கு மறுப்பு கூறிய குடும்பம்…!!!

ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தினர் கொரோணா பரிசோதனை செய்துகொள்ள மறுப்பு தெரிவித்ததாக பரிசோதனை செய்யச் சென்ற மருத்துவ குழு கூறியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை நேரில்  சந்தித்து ஆறுதல் கூற ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சென்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க சென்ற உள்ளூர் தலைவர்கள், அரசியல்வாதிகள், செய்தியாளர்கள்,பாதுகாப்பு பணியில் இருந்த […]

Categories
உலக செய்திகள்

தாவூத் இப்ராஹிம் தலைமறைவு… திடீரென பல்டி அடித்த பாகிஸ்தான்…!!!

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கராச்சியில் இருப்பதனை ஒப்புக் கொண்ட பாகிஸ்தான், தற்போது அதற்கு மறுப்பு கூறியுள்ளது. நிதி கண்காணிப்பு அமைப்பான எப்ஏடிஎப் பிரான்சைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளது. அந்த அமைப்பு பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் வைத்து, நிரந்தரமாக நிதி உதவி பெறுவதற்கு தடை விதித்து விடுமோ? என்ற அச்சத்தில், 88 தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத இயக்கங்களை தடை செய்வதாக பாகிஸ்தான் பட்டியலிட்டது. அந்தப் பட்டியலில் தாவூத் இப்ராஹிம் பெயர் இடம்பெற்றுள்ளதால், கராச்சியில் தாவூத் இருப்பதனை பாகிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டவர்கள் போட்டியாக பார்க்கிறார்கள்…ரஷ்யா கருத்து…!!!

வெளிநாடுகள் கூறியுள்ள தடுப்பூசிக்கு எதிரான கருத்துகளுக்கு, ரஷியா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருக்கிறது. ரஷியா உருவாக்கி இருக்கின்ற ஸ்புட்னிக்-5 என்னும் கொரோனா தடுப்பூசி மிக விரைவாக உருவாக்கப்பட்டிருக்கிறது, நம்பகத்தன்மையற்றது, பாதுகாப்பற்றது என்ற பல்வேறு குற்றசாட்டுகளை வெளிநாடுகள் முன்வைத்து வருகின்றன. இதனை ரஷிய சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் மாஸ்கோவில் நேற்று கூறுகையில், “ரஷிய தடுப்பூசிக்கு எதிரான வெளிநாடுகளின் விமர்சனங்கள் அனைத்தும் அடிப்படையற்றவை. வெளிநாட்டவர்கள் இதனை பெரும் போட்டியாக பார்க்கிறார்கள் என்றே நம்புகிறேன். […]

Categories
தேசிய செய்திகள்

முதல்வர் அலுவலகத்துடன் நெருங்கிய தொடர்பு – என்ஐஏ பரபரப்பு தகவல்

கேரளா தங்க கடத்தல் வழக்கில் கைதான சப்னா சுரேஷிற்கு பிணை வழங்கக் கூடாது என்று என்ஐஏ தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கேரள தங்க கடத்தல் வழக்கு இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ், சந்திப் நாயர் ஆகியவர்களை தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் கடந்த ஜூலை 11ஆம் தேதி கைது செய்தார்கள். இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சந்திப் நாயர், சரித் ஆகிய மூன்று நபர்களிடம் சுங்க […]

Categories
சினிமா

விஜய் படத்தில் கௌரவ கதாபாத்திரம்…. நடிக்க மறுத்த மூத்த நடிகர்…!!

பிரபல நடிகர் விஜயின் திரைப்படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முன்னணி மூத்த நடிகர் மறுப்பு தெரிவித்துள்ளார். தளபதி விஜய் அவர்கள் சென்ற 25 ஆண்டுகளாகவே உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அதனைத் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் சென்ற ஐந்து ஆண்டுகளாக சிறந்து விளங்கியும், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இணையாகவும் இருந்து வருகின்றார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜயின் நடிப்பில் உருவான மாஸ்டர் படமானது விரைவில் வெளிவர உள்ளது. இத்தகைய நிலையில் நடிகர் […]

Categories
மாநில செய்திகள்

கீழடி அகழாய்வில் நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டதாக பரவும் தகவல் வதந்தி… தொல்லியல் துறை!!

கீழடி, அகரம், கொந்தகை, மணலுார் உள்ளிட்ட பகுதிகளில் 6ம் கட்ட அகழாய்வு நடந்து வருகின்றன. தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம், மதுரை மாவட்ட உதவி இயக்குனர் சக்திவேல், தொல்லியல் அலுவலர்கள் ஆசைத்தம்பி, பாஸ்கரன் தலைமையில் 70க்கும் மேற்பட்ட பணியாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். அகழாய்வின் போது பானை ஓடுகள், உறைகிணறு, அடுப்பு போன்ற தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், விலங்கின் எலும்பு ஒன்று கண்டறியப்பட்டது. முழு உருவத்தோடு உள்ள அந்த எலும்பு எந்தவகையான விலங்கு […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து.. 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு..உச்சநீதிமன்றம் மறுப்பு..!!

கடந்த ஆண்டு சிறப்பு அந்தஸ்து ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டது. அதை ரத்து செய்வதற்காக வழக்குகளும் தொடரப்பட்டது. இந்த வழக்கை, 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதற்கு, உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அரசுஅரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 370ல் ரத்து செய்தது. இதற்கு உச்சநீதி மன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடும் எதிர்ப்பு கிளம்பி போராட்டக்களம் ஆனது காஷ்மீர். இந்த வழக்கின் மீதான தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் விசாரணையை 7 […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு நடக்கவில்லை – அமைச்சர் செங்கோட்டையன்..!

ஆசிரியர் தகுதி தேர்வில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகளை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஆசிரியர் தகுதி தேர்வு முறைகேடு புகார் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். சேலம் மாவட்டத்தில் கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டதாக சொல்வதையும் அமைச்சர்  திட்டவட்டமாக மறுத்தார். தமிழகத்தில் 10 மற்றும் 11,12ஆம் வகுப்பு பொது […]

Categories

Tech |