கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி பேரூராட்சி 4-ஆவது வார்டு திருவள்ளுர் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச் சாவடி எண் 4-ல் இன்று (பிப்.24) மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. புவனகிரி பேரூராட்சியில் பதிவான வாக்குகளை எண்ணும் போது 4-வது வார்டில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் திடீரென பழுதானது. இதனால் 4-வது வார்டுக்கான எண்ணிக்கை நிறுத்தப்பட்டு தற்போது மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.
Tag: மறுவாக்குபதிவு
நேற்று தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சியின் 4-வது வார்டில் வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதனால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு, அந்த வார்டில் நாளை (பிப்.24) மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நடைபெறும் அன்றே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (பிப்.21) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நிறைவு பெற்றது. அதாவது இன்று காலை 7 மணி அளவில் தொடங்கிய மறுவாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தடுப்பு விதிகளுடன் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.