டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். பவினா படேல் காலையில் டேபிள் டென்னிஸ்க்கு வெள்ளி பதக்கம் வென்ற நிலையில், பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு அடுத்ததாக ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. 2.06 மீட்டர் உயரம் தாண்டி நிஷாத் குமார் வெள்ளி பதக்கம் வென்று சாதித்துள்ளார்.
Tag: மற்றவை
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரைபிள் வீராங்கனை கோனிகா லயாக் தான் மாநில அளவில் தங்கம் வென்ற போதும் தன்னிடம் சொந்தமான வாய்ப்பில்லை என்று கடந்த ஜனவரி மாதம் டுவிட் செய்திருந்தார். இதை பார்த்த நடிகர் சோனு சூட் ரைபிள் வாங்க தேவையான பணத்தை தான் தருவதாக உறுதி அளித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 26ஆம் தேதி 3 லட்சம் மதிப்பிலான ரைபிள் ஒன்றை வீராங்கனைக்கு சோனு சூட் பரிசளித்துள்ளார். இதனால் ரைபிள் வீராங்கனை கோனிகா லயாக் […]
உலகக் கோப்பை 10 மீட்டர் “”ஏர் பிஸ்டல்” கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த மனு பார்கர், சௌரப் சௌதிரி ஆகியோர் வெள்ளி பதக்கத்தை வென்றது. இறுதி சுற்றில் ரஷ்யாவை எதிர்கொண்ட இந்தியா 12 – 16 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்தது. இது மட்டுமல்லாமல் பெண்கள் பிரிவிலும், ஆண்கள் ஒற்றையர் பிரிவிலும் இந்தியா வெண்கலம் வென்றது. ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு ஊக்கமளிக்கும் ஒன்றாக இது அமைகிறது.
டோக்கியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டி 200 மீட்டர்(butterfly) பிரிவில் இந்திய வீரர் சஜன் பிரகாஷ் தகுதி பெற்றார். இத்தாலி ரோம் நகரில் நடைபெற்ற போட்டியில் 200 மீட்டர் தூரத்தை 1:56:38 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சஜன் பிரகாஷ் பெற்றுள்ளார்.
ஆசிய போட்டிகளிலும் காமன்வெல்த் போட்டிகளிலும் பல தங்கப் பதக்கங்களை குவித்த முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் தடகள வீரர் பிடி உஷா தனது முன்னோடியான மில்கா சிங் கொரோனா காரணமாக மரணமடைந்தது தனக்கு வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார். மேலும் அவருடைய உறுதியும் கடின உழைப்பும் கோடிக்கணக்கானவர்களுக்கு ஊக்கமாக இருக்கும் என்று தெரிவித்தார். […]