கொரோனா தடுப்பூசி மையத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் அந்த தடுப்பூசி மையம் மூடப்பட்டது . உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மலேசியாவில் செலங்கார் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி போடும் மையம் இயங்கி வந்தது. ஆனால் இந்த மையத்தில் பணியாற்றி வந்த 204 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த தடுப்பூசி மையம் மூடப்பட்டுள்ளது. மேலும் […]
Tag: மலேசியா
மலேசியாவில் இருக்கும் ரீஃப் வகை சுறாக்கள் ஒரு வகையான தோல் நோயால் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபாடன் கடற்பகுதியில் வாழக்கூடிய ரீஃப் வகை சுறாக்களை நீச்சல் வீரர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படத்தில் சுறாக்களின் தலை பகுதியில் புண்கள் இருந்தது தெரிய வந்திருக்கிறது. எனினும் சிபாடன் கடல் பகுதியில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதால் சுறாக்களின் இந்த பாதிப்பிற்கு மனிதர்கள் காரணமில்லை. எனினும் கடல் மேற்பரப்பின் வெப்பநிலை கடந்த மே மாதத்தில் 29.5 டிகிரி செல்சியஸ் ஆக அதிகரித்திருக்கிறது. […]
மலேசியாவில் தெரெங்கானு என்ற மாநிலத்தில் ட்ரோன்கள் மூலமாக பொது வெளிகளில் மக்களின் அதிகமான உடல் வெப்பநிலை கண்டறியப்படுகிறது. மலேசியாவில் ட்ரோன்களை பயன்படுத்தி தொலைவிலிருந்தே மக்களின் உடல் வெப்பநிலையை கண்டறியும் தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டுள்ளது. ட்ரோன்கள் தரையில் சுமார் 20 மீட்டர் தொலைவிலிருந்து, அதிக வெப்பநிலை உடைய மனிதர்களை கண்டறிந்து விடும். அப்போது உடனடியாக சிவப்பு நிற எச்சரிக்கை ஒளியானது, காவல்துறையினருக்கு தெரியப்படுத்தப்படும். அதன் பின்பு அதிகாரிகள் உரிய நடவடிக்கையை மேற்கொள்வார்கள். அதாவது கொரோனாவின் இந்த அலையானது எளிதில் […]
சீன விமானப்படைக்குரிய 16 விமானங்கள், மலேசியாவின் வான் எல்லைக்குள் வரம்பு மீறி நுழைந்துள்ளது. சீனா, தென் சீன கடலில் ஆதிக்கத்தை செலுத்தும் விதமான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. எனவே சீன நாட்டிற்கும், சீன கடல் பகுதியை சுற்றி இருக்கும் நாடுகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வருகிறது. அதன்படி தென் சீன கடல் பகுதியில் இருக்கும் மலேசியாவின் வான் எல்லைக்குள், கடந்த 31ம் தேதியன்று சீனாவின் விமானப்படைக்குரிய 16 விமானங்கள் விதியை மீறி நுழைந்திருக்கிறது. இதனைத்தொடர்ந்து சீன விமானங்கள் […]
இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவைத் துண்டிப்பதாக வடகொரியா அறிவித்ததற்கு மலேசியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மலேசியாவில் முன் சோல் மியோங் என்பவர் 10 ஆண்டுகள் மேலாக வசித்துவருகிறார். இவர் வடகொரியா நாட்டை சேர்ந்தவர். அவரின் மீது அமெரிக்கா பண மோசடியில் வழக்குப்பதிவு செய்துள்ளது. அதனால் அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று மலேசிய அரசுக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது . அந்த கோரிக்கையை ஏற்ற மலேசிய அரசு அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டுள்ளது. இதை பற்றி […]
வோல்டரோ மோட்டர்ஸ் என்ற மிதிவண்டி தயாரிக்கும் நிறுவனம் தற்போது புதிதாக ஒரு மின்சார மிதிவண்டியை அன்றாட பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மின்சார மிதிவண்டி பள்ளி செல்லும் மாணவ- மாணவியருக்கு ஏற்றவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று வோல்டரோ மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. இதுகுறித்து, வோல்டோ மோட்டார்ஸின் தலைமைச் செயலாளர் பிரசாந்தா கூறும்போது,” இந்த மின்சார மிதிவண்டியை தயாரிப்பதற்கு முன்பு நாங்கள் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வாகனங்களுக்கு ஏன் சரியான வரவேற்பு கிடைப்பதில்லை என்பது குறித்து பொது மக்களிடம் என்று ஆராய்ச்சி […]
மலேசியாவில் கடந்த 2014 ஆம் வருடத்தில் மாயமான விமானம் குறித்து அதிகரமான தகவலை பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் வருடத்தில் மார்ச் மாதம் MH 370 என்ற மலேசிய விமானம் சுமார் 239 நபர்களுடன் சென்ற போது மாயமானது. இதுகுறித்த அதிர்ச்சிகரமான செய்தி புலனாய்வு பத்திரிகையாளர் புளோரன்ஸ் என்பவரால் தெரியவந்துள்ளது. அதாவது இந்த விமானமானது மலேசியாவில் உள்ள கோலாம்பூர் என்ற பகுதியில் இருந்து புறப்பட்டு சீனாவில் உள்ள பீஜிங் நகருக்கு செல்ல இருந்தது. அச்சமயத்தில் ஒரு […]
மலேசியாவில் வளர்ப்பு மகளை இரண்டு வருடத்தில் 105 முறை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 105 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தினம்தோறும் உலகின் ஏதாவது ஒரு பகுதியில் […]
வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைகள 24 தடவை பிரம்பால் ஆதி கொடுக்குமாறு விதித்துள்ளது. சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரமான தந்தைக்கு 1050 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் வளர்ப்பு மகளை இரண்டு ஆண்டுகளில் 105 முறை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 1050 ஆண்டுகள் சிறை மற்றும் பின் பகுதி பழுக்க பழுக்க 24 தடவை பிரம்பால் அடிக்க வேண்டும் […]
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா, மலேசியாவை வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. பாங்காக்கில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கலப்பு இரட்டையர் பிரிவின் காலிறுதிச் சுற்று இன்று நடைபெற்றது. இதில், இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, சாட்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி – மலேசியாவின் பெங் சூன் சான், லி யிங் கோச் இணையை எதிர்கொண்டனர். இப்போட்டியின் முதல் செட்டை பெங் சூன் இணை 21-18 […]
கொரோனா பரவலை தடுப்பதற்காக மலேசியாவிற்கு சுற்றுலாப்பயணிகள் வர இந்த வருடத்தின் இறுதி வரை தடை நீடிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் தொலைக்காட்சி மூலமாக மக்களிடம் உரையாற்றிய பிரதமர் முகைதின் யாசின் கூறுகையில், உலகின் மற்ற நாடுகளில் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. நம் நாட்டில் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டு இருந்தாலும் சில இடங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் மலேசியா வருவதற்கு போடப்பட்ட தடை இந்த வருடத்தின் இறுதி வரை நீட்டிக்கப்படுகிறது. […]
பூனைகளை வாஷிங்மெஷினில் போட்டு கொலை செய்த காணொளி வெளியாகி பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது மலேசியாவில் ஒருவர் பூனைகளை வாஷிங்மெஷினில் பிடித்து போடும் காணொளி கிடைக்கப்பெற்றுள்ளது. வெளியான அந்த காணொளியில் மூன்று பூனைகளை ஒருவர் பிடித்து வெவ்வேறு வாஷிங்மெஷினில் போட்டு ஆன் செய்து விடுகிறார். பின்னர் அவர் அங்கிருந்து செல்ல பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக இயங்கிவந்தது சலவை நிலையமான அங்கு மற்றொரு பெண் துணி துவைப்பதற்காக வந்துள்ளார். ஒரு வாஷிங் மிஷினை திறந்தபோது பூனை இருப்பதை கண்டு அதிர்ந்து மற்றவர்களையும் […]
மலேசியாவில் 35,000 தகுதி வாய்ந்த பள்ளி பேருந்து ஓட்டுநர்களுக்கு RM600 அதாவது இந்திய மதிப்பில் ரூ.10,578 சிறப்பு உதவிக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் (MOT) டத்துக் செரி டாக்டர் வீ கா சியோங் தெரிவித்தார். கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் பள்ளிகளும் மூடப்பட்டன. இதனால் பள்ளிப்பேருந்து ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளான நிலையில் அதற்கு தற்போது வழிகிடைத்திருக்கிறது. மலேசியாவில் வாடகை வண்டி ஓட்டுநர்களுக்கும் உதவி வழங்கப்பட்டிருக்கிறது. இதில், பள்ளிப்பேருந்து ஓட்டுநர்கள் விடுபட்டிருந்தார்கள். […]
வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்ப 50,000 தமிழர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமேரிக்கா, சிங்கப்பூர், துபாய் உட்பட சுமார் 100 நாடுகளில் பணிபுரியும் தமிழர்கள் இந்தியா திரும்ப இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். முன்னதாக, வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் நாடு திரும்ப பிரத்யேக இணையதள முகவரியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. http://nonresidenttamil.org என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, இந்தியா திரும்ப வெளிநாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் பதிவு செய்துள்ளனர். அதில், தமிழகத்தை சேர்ந்த […]
மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை விமானங்கள் மூலம் அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துபாய் மற்றும் மலேசியாவில் இருந்து தலா 2 விமானங்களில் தமிழர்களை சென்னை மற்றும் திருச்சிக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் நாடு திரும்ப பிரத்யேக இணையதள முகவரியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. http://nonresidenttamil.org என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, இந்தியா திரும்ப வெளிநாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் பதிவு […]
ஏற்கனவே ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏப்.28ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் கூறியுள்ளார். உலகளவில் சுமார் 210 நாடுகளை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் கொரோனாவால் 1,614,369 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உயிரிழப்புகள் மட்டும் 96,788 ஆக உள்ளது. மேலும், இதுவரை 362,409 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இதுவரை 16,697 […]
சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் மலேசியா செல்ல முயன்ற 10 பேர் மீது 8 பிரிவின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற 10 பேரும் மலேசியா செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர்.கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு நாடுகளுக்கு சென்ற விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக மலேசியா நாட்டவா்கள் பலா் இந்தியாவில் சிக்கியுள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டில் அதிக அளவு மலேசியா்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், […]
மலேசியாவில் கொரானாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் 6 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பதிவான 37 இறப்புகளில் இருந்து இன்று 43 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 2,766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 94 நோயாளிகள் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) உள்ளனர். சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில்; புதியதாக இறந்த 6 பேரில் 5 பேர் மலேசியாவை சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் இந்தோனேசியாவை சேர்ந்தவர் என்று அறிவித்தார்.
அரண்மனை ஊழியர்கள் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் மலேசிய மன்னர் மற்றும் இராணி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரசால் உலக அளவில் இதுவரையில் பலியானோரின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஏழை நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள், பணக்கார நாடுகள் என்று வேறுபாடு எதையும் காட்டாமல் கொன்று குவித்து வருகிறது இந்த கொரோனா வைரஸ். அந்த வரிசையில் மலேசியாவும் இருக்கிறது. ஆம், அந்நாட்டில் 2,031 பேர் பாதிக்கப்பட்டதுடன், 23 பேர் பலியாகி […]
மலேசியாவின் கோலாலம்பூரில் சிக்கி தவித்த 113 தமிழர்கள் சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தனர். தமிழக அரசின் முயற்சியால் ஏர்ஏசியா விமானத்தில் 113 பேரும் சென்னை அழைத்து வரப்பட்டனர்.சென்னை விமான நிலையத்தில் 113 பேருக்கு சுகாதார துறை சார்பில் கொரானா பரிசோதனை நடந்தது. அந்த பரிசோதனையில் 9 தமிழர்களுக்கு கொரானா அறிகுறி இருந்ததால் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். எஞ்சிய 104 பேரும் பரங்கிமலையில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மலேசியாவின் கோலாலம்பூரில் சிக்கி தவித்த 113 தமிழர்கள் சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தனர். தமிழக அரசின் முயற்சியால் ஏர்ஏசியா விமானத்தில் 113 பேரும் சென்னை அழைத்து வரப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் அவர்களுக்கு சுகாதார துறை சார்பில் பரிசோதனை நடந்தது.
கோவிட்-19 காரணமாக மலேசியாவில் பலி எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது தான் கொரோனா வைரஸ். இந்த கொடூர வைரஸ் தற்போது உலகின் 192 நாடுகளில் பரவி மிரட்டி வருகிறது. இதை கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டாலும் வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் செல்கிறது. மலேசியாவில் இன்று காலை கோலாலம்பூரின் பண்டார் துன் ரசாக்கில் உள்ள துவான்கு முஹ்ரிஸ் மருத்துவமனையின் (Hospital […]
கோவிட்-19 காரணமாக பலி எண்ணிக்கை 9 ஆக இருந்த நிலையில் மலேசியாவில் மேலும் ஒருவர் இறந்துள்ளார். சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது தான் கொரோனா வைரஸ். இந்த கொடூர வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவி மிரட்டி வருகிறது. இந்த கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டாலும் வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் செல்கிறது. இந்நிலையில் மலேசியாவில் இதுவரை கோவிட்-19 இறப்புகளின் எண்ணிக்கையை 10 ஆக […]
கோவிட்-19 காரணமாக பலி எண்ணிக்கை 8 ஆக இருந்த நிலையில் மலேசியாவில் மேலும் ஒருவர் இறந்துள்ளார். இதுவரை மலேசியாவில் கோவிட்-19 இறப்புகளின் எண்ணிக்கையை 9 ஆக உயர்ந்துள்ளது” என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார். 49 வயதான அவர் மருத்துவர் ஆவார். அவர் அண்மையில் துருக்கிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. இன்றுவரை, தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மொத்தம் 153 புதிய நோய்த்தொற்றுகள் […]
மலேசியாவில் சிக்கி தவித்த இந்திய மாணவர்கள் 150 பேர் விசாகப்பட்டினம் அழைத்து வரப்பட்டனர். கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் மிரண்டு வருகின்றது. பல்வேறு நாடுகளும் அண்டை நாடுகளுடனான போக்குவரத்து சேவையை இரத்து செய்துள்ளது. இந்தியாவில் பரவி உள்ள இந்த வைரஸ் காரணமாக 120க்கும் மேற்பட்ட பாதிக்கபட்டுள்ளனர். இந்நிலையில் மலேசியாவில் 100க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது மலேசியாவில் பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாலும், விமானங்கள் தாமதமாவதாலும் மாணவர்கள் இந்தியா திரும்ப […]
இந்தியாவில் சிக்கியுள்ள 50 மலேசிய பயணிகள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். உலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வந்திருக்கக்கூடிய பயணிகள் மிகப் பெரிய சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.நேரடியாகவே சுற்றுலாத்துறை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்று நாம் தெரிந்து கொள்ளலாம். தற்போது மலேசியாவில் இருந்து 50 க்கும் மேற்பட்ட மலேசிய வாழ் தமிழர்கள் மற்றும் மலேசியர்கள் என 50க்கும் மேற்பட்டோர் இந்தியாவுக்கு வந்து இருக்கிறார்கள். இங்குள்ள நிறைய இடங்களுக்கு சுற்றுலா சென்றிருந்த அவர்கள் மீண்டும் இந்தியாவில் […]
மலேசியாவில் 100க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் மிரண்டு வருகின்றது. பல்வேறு நாடுகளும் அண்டை நாடுகளுடனான போக்குவரத்து சேவையை முடக்கியுள்ளது. இந்தியாவில் பரவி உள்ள இந்த வைரஸ் காரணமாக 100க்கும் மேற்பட்ட பாதிக்கபட்டுள்ளனர். இந்நிலையில் மலேசியாவில் 100க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலேசியாவில் பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாலும், விமானங்கள் தாமதமாவதாலும் மாணவர்கள் இந்தியா திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். மலேசியாவில் […]
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து பயணிகள் இந்தியா வர மத்திய அரசு தடை விதித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து […]
மலேசியா செல்லும் 2 ஏர் ஏசியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து மலேசியா செல்லும் ஏர் ஏசியா நிறுவனத்தில் இரண்டு விமானங்கள் மார்ச் 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரானாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது
கொரோனா வைரசுக்கு அஞ்சாதது பிரிட்டன் நாட்டு மக்கள் என்று கருத்துக் கணிப்பில் உண்மை வெளியாகியுள்ளது. உலகையே அச்சுறுத்தி , மரணபயத்தை காட்டிவரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.ஆனால் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வதில் பிரிட்டன் கடைசி இடத்தில் இருப்பதாக கருத்துக் கணிப்பு பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு 90 பேருக்கு உறுதியாகியுள்ளதாக பிரிட்டன் அந்நாட்டு மருத்துவ அதிகாரிகள் , சுகாதாரத்துறை அதிகாரி தெரிவிக்கின்றனர்.பிரிட்டனில் கொரோனா வைரஸ் மிக […]
2003ம் ஆண்டு அரசியலில் இருந்து ஓய்வுபெற்றவர் மகாதீர் மொஹமத். உலகின் மிகவும் வயதான பிரதமர் என்று சிறப்பை பெற்றவர் இவர் கடந்த 2018ல் இவர் மீண்டும் மலேசியாவின் பிரதமர் ஆன போது உலகமே இவரை கொண்டாடியது. இவர் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற நிலையில், கூட்டணிக்குள் கடந்த சில நாட்களாக பெரிய அளவில் சண்டை நிலவி வந்ததால் மகாதீர் மொஹமத், அன்வர் இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் விமர்சித்து கொண்டனர். இதனையடுத்து திடீர் திருப்பமாக மகாதீர் மொஹமத் […]