இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் திரையுலக பிரபலங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது மலையாள பிரபல நடிகரான துல்கர் சல்மானுக்கு கோவிட் 19 பாசிட்டிவ் இருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே தந்தை மம்முட்டிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் துல்கர் சல்மான் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “எனக்கு covid-19 பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது லேசான அறிகுறிகள் தான் […]
Tag: மலையாள நடிகர்
நடிகர் ஜி. கே.பிள்ளை (97) மலையாளத் திரையுலகின் பிரபல மூத்த நடிகர் ஆவார். இந்திய ராணுவத்தில் பணியாற்றிய இவர் ஸ்நேகசீமா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் 325 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், அதிகமாக வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த இவர் டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி கலைஞரான விவேக்கின் மறைவிற்கு மலையாள நடிகர் மம்முட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் தொடங்கியதுசிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் காலமானார். அவரின் உடல் […]
மிகப் பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி நிமோனியா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழில் தீனா, சமஸ்தானம் மற்றும் ஐ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மலையாள நடிகர் சுரேஷ் கோபி நிமோனியா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படப்பிடிப்பின் போது அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கேரளாவில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் பட்டியலில் அவர் பெயரும் நேற்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.