கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்குகிறது. அதன்படி சென்னையிலும் கனமழை செய்தது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் வீட்டிற்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் இரவு பகல் பாராமல் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் சென்னையில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகளை நேற்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். திண்டுக்கல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மதுரை விமான நிலையத்திலிருந்து […]
Tag: மழைநீர்
சேலையூர் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சி 65-வது வார்டு குட்பட்ட சேலையூர் சீனிவாச நகர் விரிவு பகுதியில் சென்ற 10 நாட்களுக்கு மேலாக மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ளது. மழைநீர் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் போன்ற காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. சாலைகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் கல்லூரி மாணவ-மாணவிகள் வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள். […]
எழும்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாள பகுதிகளில் மழைநீர் தேங்கி ரயில் போக்குவரத்து பாதிக்கப்படுவது வழக்கமாகி கொண்டிருந்த நிலையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மழை நீர் வடிகால் பணியால் நிலைமை மேம்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வ பிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்தும் தண்டவாளங்களில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இது பற்றி ட்விட்டர் பதிவில் வீடியோவுடன் தகவல் கூறப்பட்டிருக்கிறது. இதனால் தண்டவாள பகுதிகளில் மழைநீர் தேங்காாமல் வழக்கம்போல் ரயில்கள் […]
ராஜபாளையம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக நகரின் முக்கிய பகுதிக்குள் மழைநீர் புகுந்து பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் அப்பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான 2 குடிநீர் தேக்கங்களுக்கும் வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து ராஜபாளையத்தில் நேற்று இரவு […]
சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாநகராட்சியின் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கேஎன் நேரு நேற்று (நவ. 1) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி போன்றோரும் உடன் இருந்தனர். இதற்கிடையில் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களையும், அதன் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றியும் அமைச்சர்கள் மற்றும் மேயர் கேட்டறிந்தனர். இதையடுத்து அமைச்சர் நேரு […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் நல்ல மழை பெய்து வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மழை நீர் வடிகால் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. சில இடங்களில் தேங்கியுள்ள நீரை மாநகராட்சி நிர்வாகத்தினர்கள் வெளியேற்றி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை மாநகராட்சி பகுதியில் எங்காவது மழைநீர் தேங்கி இருந்தால் அது குறித்து புகார் அளிக்க உதவி எண்கள் […]
சென்னை மணலி புது நகர் கொசஸ்தலை ஆறு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இந்நிலையில் முதற்கட்டமாக சென்னை வடிவுடையம்மன் கோயில் தெரு அருகே கொசஸ்தலை ஆறு பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து சென்னை, கொருக்குப்பேட்டையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால், கால்வாய் கட்டும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, கார்கில்நகர், எக்ஸ்பிரஸ் […]
சென்னையில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க மற்றும் வெள்ள நீர் வடிகால்வாய் வடிவமைப்பதற்காகவும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இதன் மூலம் அனைத்து சுற்றுச்சூழல் நகர திட்டமிடுதல், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 14 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஆலோசனை கூட்டம் கடந்த நவம்பர் மாதம் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. அதில், கனமழையால் ஏற்பட்ட வெள்ள சேதங்கள் மற்றும் மழைநீர் தேங்கி தாழ்வான பகுதிகள் போன்ற பல்வேறு […]
மழைநீர் வடியும் பேருந்தில் நின்றவாறு மாணவ-மாணவிகள் பயணம் செய்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடியில் 100-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் இருக்கிறது. இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்கள் தினசரி அரசு பேருந்தில் சென்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கூடம் முடிந்து மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என 15 பேரை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து தாளவாடியில் இருந்து பெலத்தூருக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து புறப்பட்ட […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளிலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி உள்ளது. அதுமட்டுமின்றி ஒருசில பகுதிகளில் வீடுகளுக்கு உள்ளேயும் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பல்வேறு இடங்களிலும் நீர் தேங்கியுள்ளது. நேற்று மாலை 6 மணி […]
முதல்வர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான குளத்தூர் மீண்டும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல முக்கிய இடங்களில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சுரங்கப் பாதைகளில் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டிருந்த சென்னை அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தது. தற்போது கடந்த இரண்டு நாட்களில் […]
ஆத்தூர் அருகே உள்ள தாம்போதி பாலத்தில் மழை வெள்ளம் செல்வதால் திருச்செந்தூர் தூத்துக்குடி வழியாக செல்லும் பஸ்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. ஆறுமுகநேரி, ஆத்தூர்,காயல்பட்டினம், குரும்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருச்செந்தூர் தூத்துக்குடி மெயின் ரோட்டில் உள்ள ஆத்தூர் தாம்போதி மேம்பாலம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இந்த பாலத்தில் சுமார் இரண்டு அடி உயரம் வரை தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக போக்குவரத்து […]
மன்சூர் அலிகான் தேங்கிய மழைநீரில் பாட்டு பாடியவாறு படகு சவாரி செய்கிறார். தமிழகம் முழுவதும் கனத்த மழை பரவலாக பெய்து வருகிறது. மழையை ரசிப்பவர்கள் கூட இந்த மழையை கண்டு எப்போது மழை நிற்கும் என புலம்ப ஆரம்பித்துவிட்டனர். இதற்கு காரணம் தேங்கி நிற்கும் மழைநீரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது. இதனையடுத்து, தேங்கிய மழைநீரால் மக்கள் பலர் கஷ்டப்பட்டு வரும் நிலையில், பிரபல நடிகர் மன்சூர் அலிகான் தேங்கிய மழைநீரில் பாட்டு பாடியவாறு படகு […]
கடந்த ஆட்சியின் போது சென்னையில் வடிகால் அமைப்புகள் சீர்குலைக்க பட்டதே மழைநீர் தேங்கியதற்கு காரணம் என அமைச்சர் சேகர் பாபு குற்றம் சாட்டியுள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை ரிசர்வ் வங்கி சுரங்க பாதையின் உறுதி தன்மை குறித்து அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, முந்தைய அதிமுக ஆட்சியில் மழைநீர் வடிகால்கள் சரியாக சீரமைக்க படவில்லை. இதனால்தான் சென்னையில் பல இடங்களில் […]
குருவாயூர், கன்னியாகுமரி, கொல்லம் ரயில்கள் 3-வது நாளாக பாதிவழியில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி- நாகர்கோவில் இடையே ரயில் தண்டவாளங்களில் மழைநீர் புகுந்ததால் இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூருக்கு இயக்கப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் இன்று திருநெல்வேலி- குருவாயூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு இன்று இயக்கப்பட வேண்டிய கொல்லம் எக்ஸ்பிரஸ் கொல்லம்- நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படுகிறது. திருச்சி-திருவனந்தபுரம் இடையே […]
சென்னையில் மழை நீர் தேங்குவதை தடுப்பதற்கும் ஆலோசனை வழங்கவும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மழைநீர் தேங்காத வகையில் நிரந்தர தீர்வு காண பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர் தலைமையில் 14 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தக் […]
சென்னையில் 17 சுரங்கப்பாதையில் மழைநீர் அகற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் அதிக மழை பெய்தது. இதனால் சென்னையின் பல முக்கிய இடங்கள் வெள்ள காடாக மாறியது. மேலும் வெள்ளநீர் வீட்டுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் சுரங்கப்பாதைகள் முழுவதும் மழை நீரால் மூழ்கியது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி அதனை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில் தற்போது வரை […]
குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை நகரின் பல இடங்களில் கனமழையானது கொட்டி தீர்த்தது. இதனை அடுத்து லேசான சாரல் மழை நீடித்தது. மேலும் இந்த நான்கு நாட்களாக சென்னைவாசிகள் கனமழையால் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். அதிலும் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்துள்ளது. பல இடங்களில் மழை நீரானது தேங்கியுள்ளதால் மக்கள் பெரும் இன்னலை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. […]
வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா விற்கு இடையே கடல் ஊரை ஒட்டி கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சற்று வடக்கே நகர்ந்து மகாபலிபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று மாலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதனால் கடலோர மாவட்டங்களில் […]
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சுரங்கப்பாதைகளில் நீர் புகுந்து போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மழை நீரானது தாழ்வான பகுதிகளில் இருக்கும் குடியிருப்புகளில் புகுந்துள்ளதால் அங்குள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனை அடுத்து மழைநீரால் சூழ்ந்துள்ள பகுதியில் இருப்பவர்கள் தங்குவதற்கு வசதியாக மாநகராட்சி பள்ளிகள், தனியார் பள்ளிகள், திருமண மண்டபங்கள் மற்றும் கோவில்கள் என […]
தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலை சுற்றி மழைநீர் தேங்குவதை தடுக்க நிரந்தர வடிகால் வசதி அமைக்ககோரி பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தாராசுரத்தில் பிரசித்தி பெற்ற ஐராவதீஸ்வரர் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் நான்கு பிரகாரங்கள், அம்மன் சன்னதி, நந்தி மண்டபம் 1008 சிற்பங்கள் மற்றும் வளாகம் முழுவதும் கலை நுணுக்க வேலைப்பாடுகளுடன் கொண்ட சிலைகள் இருக்கின்றது. இங்கு தினசரி வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலை […]
மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள தென்றல்நகர் பகுதியில் கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணி நடைபெற்றது. இதனை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியபோது வடகிழக்கு பருவமழை காரணமாக குடியிருப்புப் பகுதிகளில் தேங்கி நிற்கும் நீரால் டெங்கு மற்றும் மலேரியா நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும். மேலும் மழைநீரில் சாக்கடை நீரும் கலந்து தேங்குவதால் நோய்கள் பரவும் அபாயம் இருக்கின்றது. ஆகவே […]
சாக்கடை கால்வாய் அமைக்ககோரி தேங்கி நிற்கும் மழை நீரில் கிராமபெண்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள சேசம்பட்டி வன்னியர் தெரு மேல்வீதியில் இருக்கும் 150-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சாக்கடை கால்வாய் வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களாக அப்பகுதியில் மழை பெய்து வருவதால் வீடுகள், சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கி காட்சியளித்தது. […]
தேனியில் பெய்த கனமழையால் சாலையில் மழையின் நீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. தமிழகத்தில் தற்போது கோடை கால சூழ்நிலை நிலவுகிறது. இதனால் அனைத்து பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அதேபோல் தேனி மாவட்டத்திலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதற்கிடையே கூடலூர் மற்றும் அதனுடைய சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பொழிவு ஏற்பட்டது. இதனால் சாலைகளில் மழையின் நீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. மேலும் இந்த மழைப் பொழிவால் கூடலூரிலிருக்கும் மெயின் பஜாரில் மழை நீருடன் சேர்ந்து கழிவு […]
திருச்சியில் 5 வயது சிறுமி நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ராஜமாணிக்கம் பிள்ளை நகரை சேர்ந்தவர் சக்திவேல் என்பவர். திருமணமாகிய சக்திவேல் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இவரது வீட்டின் பக்கத்தில் உள்ள காலி மனையில் வீடு கட்டுவதற்காக அடித்தளம் போட குழிகள் தோண்டப்பட்டு இருந்தது. மழையின் காரணமாக அந்தக் குழியில் நீர் நிரம்பியிருந்தது. இந்நிலையில் தனியார் […]
சென்னையில் தொடர் கனமழை காரணமாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்தில் மழைநீர் புகுந்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்துள்ளது. அதனால் இன்று மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே நிவர் புயல் கரையை கடக்க உள்ளது. அதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. மேலும் கனமழை காரணமாக சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. அதன்படி தொடர் கனமழையால் சென்னையில் உள்ள முன்னாள் […]
சென்னையில் பிற்பகலில் இருந்து கனமழை பெய்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 100 மீட்டர் தூரத்தை கடப்பதற்கு வாகனங்கள் அரை மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது ஓரளவு மழை குறைந்துள்ளதால் அனைவரும் வீட்டிற்கு செல்ல தயாராகி புறப்படுகின்றனர். ஒரே சமயத்தில் பலர் செல்வதால் இந்த நெரிசல் ஏற்படுகின்றது. நேற்றிரவு முதலே சென்னையில் பலத்த மழை கொட்டித் தீர்ப்பதால் சாலைகளில் நீர் தேங்கி கடும் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது புயல் சென்னையில் […]
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை ராட்சத வாகனங்களைக் கொண்டு அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பூந்தமல்லி போரூர் மாநகரம் மதுரவாயல் உள்ளிட்ட இடங்களில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி உள்ளது. பூந்தமல்லி பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் மழைநீர் அதிக அளவில் தேங்கிய உள்ளது. இதனால் வாகனங்கள் மழைநீரில் ஊர்ந்து செல்கின்றது. முக்கிய சாலைகளில் […]
கடலூர் மாவட்டம் கம்மாபுரம் அருகே நெய்வேலி சுரங்கப் பகுதியில் வெளியேறிய நீரில் நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை பெய்தது. நெய்வேலி பகுதிகளில் பெய்த மழை காரணமாக நெய்வேலி இரண்டாவது சுரங்க பகுதியில் மண்மேடுகளில் இருந்து வெளியேற்றப்படும் நீர் அருகில் உள்ள கிராமங்களில் விளைநிலங்களில் தேங்கியது. இதனால் அப்பகுதி நெல்வயல்கள் 50 ஏக்கருக்கு மேல் நீரில் மூழ்கியது. நெய்வேலி சுரங்கம் மண் மேடுகளில் இருந்து வரும் மழை நீரினால் […]