கோவை நகரில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. ஆனால் நகரில் உள்ள நூறு வார்டுகளில் பல இடங்களில் சரியான வடிகால் வசதிகள் இல்லாத சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் சில இடங்களில் மழைநீர் வடிகால் தூர்வாரப்படாமல் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் தண்ணீர் செல்லும் ரோட்டில் அவல நிலை ஏற்பட்டு இருக்கிறது. மேலும் பலத்த மழை பெய்கின்ற போது வீதிகளில் தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றது. இதனால் வீடுகளில் இருக்கும் […]
Tag: மழை நீர்
சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட ராமாபுரத்தில் 20 கோடி மதிப்பீட்டில் மழை நீர் கால்வாய் கட்டுமான பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் சென்னையில் பருவமழையின் போது கடந்த வருடம் ஏற்பட்ட பாதிப்பு போல் இந்த வருடம் ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு துறைகளில் இருந்து மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக வளசரவாக்கம் பகுதிகளில் மழை பெய்யும் பொழுது மழை நீர் போவதற்கு இடம் இல்லாமல் […]
சென்னையில் எவ்வளவு கனமழை பெய்தாலும் தண்ணீர் தேங்காதவாறு அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப் பட்டுள்ளதாக அமைச்சர் கே.என். நேரு கூறியுள்ளார். தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என் நேரு சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, தமிழக முதலமைச்சர் அவர்கள் அதிகமாக மழைபெய்யும் மாவட்டங்களை தேர்வு செய்து அம்மாவட்ட கலெக்டர் ஆலோசனை நடத்தினார். சென்னை மாநகராட்சி பகுதிகளில் தண்ணீர் தேங்கும் இடங்கள் குறித்த விவரம் அனைத்தும் ஏற்கனவே தெரியும். எனவே இந்த பகுதிகளில் தண்ணீர் […]
சென்னையில் தொடர் கனமழை காரணமாக செம்மஞ்சேரி சுனாமி நகர் குடியிருப்பு பகுதியை மழை வெள்ளம் சூழ்ந்தது. சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்நிலையில் சோலிங்கநல்லூர் 15வது மண்டலம் செம்மஞ்சேரி சுனாமி நகர் குடியிருப்பு பகுதியை கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் இந்த பகுதி முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்து குளம் போல் காட்சியளிக்கிறது .சாலையில் சுமாராக இரண்டு அடிக்கு மேல் மழைநீர் சூழ்ந்துள்ளதால் இங்கு வசிக்கும் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் […]
சாலையில் தேங்கிக் கிடந்த மழை நீரில் முதியவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வட்டபழஞ்சி பகுதியில் மேரி கமலம் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் காஞ்சாம்புறம் பகுதியில் உள்ள ஒரு கடையில் பால் வியாபாரம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மேரிகமலம் எப்போதும் போல் கடையை திறப்பதற்காக சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் 3 நாட்களாக பெய்த கன மழையால் சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கி கிடந்ததால் மேரிகமலம் […]
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மணல் பரப்பில் குளம்போல் தேங்கி நிற்கும் மழை நீரால் பொதுமக்கள் உற்சாகமாக படகு சவாரி செய்து வருகின்றனர். சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை தொடர்கிறது. ஒரு சில நேரத்தில் வெளுத்து வாங்கும் மழையால் நகரே தண்ணீர் சூழ்ந்து சிறு சிறு தீவுகள் போல காட்சியளிக்கிறது. இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மணல் பரப்பில் வெளுத்து வாங்கிய மழையால் நீர் தேங்கி குளம் போல காட்சி […]
அரியலூர் மாவட்டத்தில் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. அரியலூர் மாவட்டம் தாபலுர் அருகே சாத்தாம்பாடி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேல தெரு, வடக்கு தெரு உள்ளிட்ட தெருக்களிலிருந்து வடிகாலாக மழை நீர், வாய்க்கால் மூலம் வடக்கு தெருவில் உள்ள சிவன் கோவில் குளத்தில் வடிகாலாவது வழக்கம். இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீர் வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்படமால் உள்ளது. இதுகுறித்து மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் […]