சென்னையில் நேற்று காலை மேகமூட்டம் காணப்பட்ட நிலையில் பிற்பகலில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும் குடியிருப்பு பகுதிகளுக்கும் தண்ணீர் புகுந்தது. இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் மழை பாதிப்புகளை குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் சாலையில் நடந்து சென்றே மழை பாதிப்புகளை ஆய்வு செய்தார். அதன் பிறகு பேசிய அவர், எதிர்பாராத […]
Tag: மழை நீர் தேக்கம்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான எந்த முன்னேற்பாடுகளையும் திமுக அரசு செய்யவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். சேலம் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வானிலை மையம் தகவல் தரும் தேவையான முன்னேற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்யத் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது அதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் தியாகராய நகர், கோடம்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து சுரங்க பாதைகளில் உள்ள மழைநீரை அப்புறப்படுத்துவதற்கு ஊழியர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். […]