உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள மதுராவில் சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் அங்குள்ள பள்ளி ஒன்றில் அதனுடைய வளாகம் முழுவதுமாக மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனையடுத்து அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் பள்ளிக்குள் நுழைய செய்துள்ள காரியம் இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. தனது கால்கள் மழைநீரில் படக்கூடாது என்பதற்காக அங்கு படிக்கும் மாணவர்கள் வைத்து வரிசையாக நாற்காலிகளை போட வைத்து […]
Tag: மழை வெள்ளம்
இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக, அதிகமான மழைப்பொழிவு இருந்து வருகிறது. அவ்வாறு, அசாம் மாநிலத்தில் கூடுதல் மழைபொழிவின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அசாமில் உள்ள பொது மக்களின் வாழ்வாதாரம், இக்கனமழையின் காரணமாக பாதிப்படைந்துள்ளது. மேலும் 4.03 லட்சம் மக்கள் அசாம் மாநிலத்தில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் இருந்து அஸ்ஸாம் மாநிலத்துக்கு செல்லும் ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, […]
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஏவா.வேலு, சென்னை மாநகராட்சியில் ஒரு முக்கியமான சாலையான வால்டாக்ஸ் ரோடு. இந்த பெய்யாமழை பெய்தபோது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த பகுதியிலே வந்து பார்வையிட்டார்கள். கிட்டத்தட்ட பார்த்தால் முட்டுக்கால் அளவு தண்ணி போய்க்கொண்டிருந்தது. ஏனென்றால் இந்தத் தண்ணி செல்ல கூடிய அளவிற்கு நிலைமைகள் இல்லை, சீர் செய்யப்படாத ஒரு நிலைமை . அதை அறிந்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின் அடிப்படையில், நானும் நம்முடைய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களும், மத்திய சென்னையின் […]
வியட்நாமில் கடந்த சில தினங்களாக கொட்டித் தீர்த்து வரும் கனமழை காரணமாக 18 பேர் மாயமாகி உள்ளனர். வியட்நாமில் கடந்த சில தினங்களாக கொட்டித் தீர்த்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வயல்வெளிகளில் புகுந்துள்ள வெள்ள நீரால் சுமார் 750 ஹெக்டேர் விளைநிலங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. மேலும் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக போக்குவரத்து தடைபட்டுள்ளது. இந்த கனமழை மற்றும் […]
நாகை மாவட்டத்தில் பருவ மழை ஓய்ந்த பின்னரும் மழைநீர் வடியாததால் பயிர்களை காப்பாற்ற முடியவில்லை என விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கொட்டித் தீர்த்து வந்த நிலையில் தற்போது படிப்படியாக மழை குறைந்து வருகிறது. இதனை தொடர்ந்து நாகப்பட்டினம் அருகே உள்ள செல்லூர், பாறையூர், புலியூர், கீழ்வேளூர்,திட்டச்சேரி, கருங்கண்ணி,பட்டமங்கலம், வடக்கு வெளி ஆகிய பகுதிகளில் சுமார் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மழை ஓய்ந்த பின்னரும் […]
மழை வெள்ளத்தால் சென்னை மாநகர மக்கள் எத்தகைய துன்பத்தை அனுபவிக்கிறார் என்பதை நன்கு அறிந்துள்ளதாகவும், தானும் தனது இல்லத்திலிருந்து நீந்தி வரக்கூடிய சூழல் இருப்பதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார். ஒரு பிரிவு தொண்டர்களால் தியாகத் தலைவி சின்னம்மா எனப் போற்றப்படுபவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா. சிறையில் இருந்து விடுதலையான பின் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்வதாக அறிக்கை விடுத்த சசிகலா, தற்போது படிப்படியாக தனது அரசியல் நகர்வுகளை நிகழ்த்தி வருகிறார். இதன் […]
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்ததால் பல்வேறு அணைகள் நிரம்பி வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை குறைந்தாலும் வெள்ள நீர் இன்னும் குறையவில்லை. இந்த நிலையில் மது பிரியர்கள் ஒரு கோரிக்கை வைத்துள்ளனர். அவை என்னவென்றால் திருவள்ளூர் அருகே கனமழை பெய்ததால் அங்கு வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அதைத்தாண்டி ஆபத்தான முறையில் மதுபான கடைகளுக்கு செல்ல வேண்டியுள்ளதால், அந்தப் பகுதியில் சாலை அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த […]
கோவில்களில் இருப்பதையெல்லாம் கொள்ளை அடிக்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலினும், அமைச்சர் சேகர்பாபும் கோணிச் சாக்கை போட்டுக்கொண்டு கஜினிமுகமது போல் சென்றதாக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜா விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, கோணிச்சாக்கை தோளில் போட்டுகொண்டு கோவில் கோவிலாக தங்கம் எடுக்க போனார்கள் இந்த திராவிடியன் ஸ்டாக் ஸ்டாலினும், சேகர்பாபுவும். வேறு ஏதும் செய்யல. எப்படியாவது கோவிலை அழிச்சுடனும், கோவிலில் இருப்பதையெல்லாம் எடுத்துவிடனும் என கோணிச்சாக்கை போட்டுக்கிட்டு, கஜினி முகமது போல போனாங்க. […]
சைக்கிள் வாங்க சேமித்த பணத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுமி நிவாரண பொருட்களையளித்தார். சென்னையில் உள்ள புளியந்தோப்பு குட்டி தம்புரான் தெருவை சேர்ந்தவர்கள் காந்தி நாகராஜன்-சிவரஞ்சனி தம்பதியினர். இத்தம்பதியினரின் மகள் தான் ஜனனி (வயது 7). இவர் அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். சென்னையில் பலத்த மழை காரணமாக ஜனனியின் வீடு உட்பட அருகில் இருக்கும் வீடுகளுக்குள் மழை நீர் தேங்கியது. இதனால், அந்த பகுதியில் இருக்கும் மக்கள் உணவுக்காக அவதிபட்டனர். இந்நிலையில், ஜனனி வீட்டுக்கு […]
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் 6-வது நாளாக ஆய்வு பணியை மேற்கொண்டார். கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 6-வது நாளாக முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் முதலமைச்சர் வழங்கினார். 50 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களையும் முதலமைச்சர் வழங்கினார். பள்ளிக்கரணையில் உள்ள நாராயணபுரம் ஏரியை நேரில் பார்வையிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். மண்ணிவாக்கம், முடிச்சூரில் வெள்ள நிவாரண பணிகளை பார்வையிட்ட […]
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே வெள்ளத்தில் சிக்கி தவித்த 7 குடும்பங்களை தீயணைப்பு படையினர் மீட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள பொய்கை அணை நிரம்பி மறுகால் பாய்ந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் செண்பகராமன்புதூர் பெரிய குளத்திற்கு சென்றடைகிறது. இதையடுத்து நேற்று பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரித்து கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. அதனால் அருகில் உள்ள தனியார் கல்லூரிகளுக்கு வெள்ளம் புகுந்து பல இடங்களில் சுற்றி இறுதியாக பெரிய குளத்தை அடைகிறது. மேலும் தனியார் கல்லூரி […]
சென்னையை உலுக்கிய மழை வெள்ளம் சற்றே ஓய்ந்திருக்கும் நிலையில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பெரும் சேதத்தை விளைவித்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உள்வட தமிழகம் […]
சென்னையில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், பொதுமக்கள் அழைப்பை எடுத்து பதில் அளித்து பேசி புகார் குறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உட்பட பல மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும், மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக சென்னை தியாகராய நகர் பகுதியில் மழைநீர் சற்று […]
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 20 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான தெருக்களில் மழைநீர் தேங்கி வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் ஏழை எளிய மக்கள் பெரும் அவதி பட்டு கொண்டிருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் மழையை காரணமாக வைத்து காய்கறிகளின் […]
சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால், பல்வேறு இடங்களில் மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னை கிண்டி, சைதாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்கின்றனர். வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மாநகராட்சியும் தமிழக அரசும் முறையாக வடிகால்களை தூர்வார வில்லை என்றும், தண்ணீர் தேங்கி இருந்தால் அதனை சரி செய்வதற்கும் அதிகாரிகள் வருவதில்லை எனவும் […]
மழை வெள்ளத்தில் முதலைகள் சுற்றி திரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்கு மெக்சிகோ நாட்டிலுள்ள தபாஸ்கோ மாகாணத்தில் தற்போது பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் அங்குள்ள ஆறுகள் நிரம்பி வழிந்து வருகின்றன. இந்த வெள்ளத்தால் இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர். மேலும் சுமார் 175 ஆயிரம் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தெருக்களில் நுழைந்த வெள்ளத்தில் சுற்றி திரிந்த முதலைகளால் மக்கள் பயத்தில் உள்ளனர். தெருக்களில் உள்ள இந்த முதலைகள் […]
வெள்ளத்தால் பாலம் இடிந்து விழுந்த போது பக்கத்தில் நின்று கொண்டிருந்த நிருபர் மயிரிழையில் தப்பித்த விடியோவை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தென்கிழக்கு அமெரிக்காவின் வட கரோலினாவில் தற்போது கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் வெள்ளத்தால் சாலைகள் மற்றும் பாலங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மேலும் இந்த பயங்கர மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 14 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் பலர் வெள்ளத்தில் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில் வட கரோலினாவில் உள்ள அலெக்சாண்டர் கவுண்டியில் பாலம் ஒன்று வெள்ளத்தில் சிக்கி […]
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு உடனடி நிவாரணமாக 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் திரு. சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார். தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் ஹைதராபாத்தில் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் ஏராளமான வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. மழை வெள்ளத்தால் […]
வளைக்குள் வெள்ளம் புகுந்து விட தனது குட்டிகளை தாய் எலி உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய காணொளி சமூகவலைதளத்தில் கடந்த சனிக்கிழமை அன்று திருப்பூரில் சுமார் ஒரு மணி நேரம் நன்றாக மழை பெய்த நிலையில் பெருக்கெடுத்து சாலையில் ஓடிய வெள்ளம் ஒரு எலி வளைக்குள் புகுந்தது. இதனைத்தொடர்ந்து வளைக்குள் குட்டிகள் இருக்க மழைநீரில் மூழ்கிய குட்டிகளை காப்பாற்றுவதற்கு தனது உயிரைப் பொருட்படுத்தாமல் தாய் எலி ஒவ்வொரு குட்டியாக காப்பாற்றி கொண்டு வந்தது. இந்த காட்சியை மழைக்கு […]