நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் பேக்கரி, கடை, ஹோட்டல்களில் மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் குணசேகரன் தலைமையில் அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை நடத்தினர். அப்போது கடைகளில் பயன்படுத்திய 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர்களிடமிருந்து 3,200 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதனையடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினாலும் விற்பனை செய்தாலும் கடுமையான நடவடிக்கை […]
Tag: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்
டெல்லியில் காற்றின் தரம் ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசுபாட்டில் இன்று காற்றின் தரம் சிறிது முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால் காற்று மாசுபாடு மோசமான பிரிவிலிருந்து இன்னும் மாறுபடவில்லை. அதே சமயம் குறைந்தபட்ச வெப்பநிலை 8.3 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. இதனையடுத்து நகரின் அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியதாவது, இன்று […]
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர்க்காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகளில் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி இந்தியாவிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை கட்டுப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றார்கள். இந்த நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. அதாவது சென்னை அடுத்த மணலியில் உள்ள சிபிசிஎல் […]
மார்ச் மாதம் முதல் இதுவரை மருத்துவமனைகள், தனிமை முகாம்கள், ஆய்வகங்களில் இருந்து 4.90 லட்சம் கிலோ மருத்துவக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தகவல் அளித்துள்ளது. மேலும், இந்த மருத்துவ கழிவுகள் மூலம், கொரோனா தொற்று பரவாமல் தடுக்கப்படுவதாக வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. இதுவரை 4 லட்சத்து 90 ஆயிரத்து 46 கிலோ மருத்துவக்கழிவுகள் முறையாக அகற்றப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது. இந்த மருத்துவக்கழிவுகளை சுத்திகரிப்பு […]