தென்னாபிரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரானுக்கு எதிராக மாடர்னா தடுப்பூசியின் கூடுதல் தவணை சிறப்பாக செயல்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரானுக்கு எதிராக கொரோனா தடுப்பூசியின் கூடுதல் தவணை சிறப்பாக செயல்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசியின் 2 தவணைகள் ஓமிக்ரானுக்கு எதிராக மிகக் குறைந்த அளவில் செயல்படுவதாகவும், கூடுதல் டோஸ் மிக சிறப்பான பலனை தருவதாகவும் மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமின்றி தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரானை எதிர்கொள்ளும் தடுப்பூசிகளை தயாரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. […]
Tag: மாடர்னா
மாடர்னா தடுப்பூசியை மூன்றாவது தவணையாக செலுத்துவதற்கு ஐரோப்பிய மருந்து அமைப்பு பரிந்துரைத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்து கட்டுப்பாட்டாளர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “மூன்றாவது தவணையாக மாடர்னா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம். மேலும் இதனை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு போட்டுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது தவணை செலுத்தியவுடன் குறைந்தது ஆறு மாதம் கழித்து தான் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ள வேண்டும். தற்பொழுது பூஸ்டர் தடுப்பூசியை […]
அமெரிக்க தயாரிப்பான மாடர்னா கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் தொற்று தீவிரமாக பரவி வந்த காரணத்தினால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, தற்போது தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் பல மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதிக பாதிப்புக்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது கோவேக்சின், கோவிஷீல்டு […]
கொரோனா தடுப்பூசிக்கான விலையை மாடர்னா நிறுவனம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உலக மக்கள் எல்லோரும் கொரோனா வைரஸுக்கு தீர்வாக தடுப்பூசி ஒன்றை எண்ணி காத்துக்கொண்டுள்ளனர். பல்வேறு தடுப்பூசிகளும் இறுதிக்கட்ட பரிசோதனையில் தான் இருந்து வருகின்றன. ஆனால் உலக சுகாதார அமைப்பால் தற்போது வரை எந்த தடுப்பு மருந்துக்கும் அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் அமெரிக்க நிறுவனம் மாடர்னா தயாரிக்கும் தடுப்பு மருந்து 95% வெற்றி பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே கூடிய சீக்கிரம் இந்த மருந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு […]