Categories
உலக செய்திகள்

“கொரோனாவிற்கு எதிராக அதிக செயல்திறன் கொண்ட தடுப்பூசி!”…. வெளியான தகவல்…!!

மாடர்னா தடுப்பூசி, கொரோனாவிற்கு எதிராக அதிக செயல்திறனை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மக்களுக்கு மாடர்னா தடுப்பூசியின் இரண்டாம் தவணை ஐந்து மாதங்களுக்கு முன் செலுத்தப்பட்டது. இந்நிலையில் மாடர்னா தடுப்பூசி, 87% கொரோனா தொற்றை தடுக்கும் செயல்திறனை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தாக்கத்தை எதிர்த்து 95% பாதுகாப்பு அளிப்பதாகவும், உயிரிழப்பை 98% தடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, அந்த தடுப்பூசியை எடுத்துக்கொண்ட 3,52,878 நபர்களுடன், தடுப்பூசி செலுத்தாத, அதே எண்ணிக்கையுடைய மக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

Categories
உலக செய்திகள்

மாடெர்னா தடுப்பூசிக்கு தடை விதித்த நாடுகள்.. என்ன காரணம்..? வெளியான தகவல்..!!

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளில் 30 வயதிற்கு குறைவானவர்கள் மாடர்னா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மனி நாட்டில்  தடுப்பூசி ஸ்டாண்டிங் கமிஷன் என்ற நிபுணர்கள் குழுவானது,  மாநிலங்களுக்கு தடுப்பூசி தொடர்பில் ஆலோசனை அளித்துவருகிறது. இக்குழு, 30 வயதுக்கு குறைவான நபர்கள் Pfizer-BioNTech தடுப்பூசியைத் தான் செலுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தது. மாடெர்னா தடுப்பூசி செலுத்தியவர்களை விட பைசர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட இளம் வயது நபர்கள், இதய அலர்ஜியின் விகிதங்களை குறைவாக பெற்றிருப்பதாக இந்த குழு தெரிவித்திருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவில் பூஸ்டர் தடுப்பூசி!”.. உணவு மற்றும் மருந்து நிறுவனம் மாடெர்னா தடுப்பூசிக்கு பரிந்துரை..!!

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், முதியவர்கள் மற்றும் எளிதில் தொற்று பாதிக்கும் நிலையில் இருப்பவர்களுக்கு மாடர்னா நிறுவனத்தின் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்த பரிந்துரை செய்திருக்கிறது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் இந்த பரிந்துரைக்கு நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் இன்னும் சில நாட்களில் அனுமதியளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் வெள்ளை மாளிகை, வரும் ஆகஸ்ட் மாதத்தில் அனைத்து மக்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசியளிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதனால், விரைவில் மக்களுக்கு மூன்றாம் […]

Categories
உலக செய்திகள்

பாதிப்பை ஏற்படுத்தும் தடுப்பூசி…. தடை செய்த ஸ்வீடன் அரசு…. தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை….!!

பக்க விளைவுகள் ஏற்படும் என்பதற்காக மாடர்னா தடுப்பூசியை ஸ்வீடன் அரசு தடை செய்துள்ளது. உலக நாடுகளில் பரவி வரும் கொரோனா தொற்றிற்கு எதிராக மக்கள் பல்வேறு நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஸ்வீடனில் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மாடர்னா தடுப்பூசி அளிக்க தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.  குறிப்பாக மாடர்னா தடுப்பூசியினால்  இளைஞர்களுக்கு இதய பாதிப்பு ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் மாடர்னா தடுப்பூசியின் பக்கவிளைவுகளை தொடர்ந்து ஆராய்ந்ததை […]

Categories
உலக செய்திகள்

12 முதல் 17 வயது குழந்தைகளுக்கு… மேலும் ஒரு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி… வெளியான முக்கிய தகவல்..!!

பிரித்தானிய மருத்துவ கண்காணிப்பு அமைப்பு 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மாடர்னாவின் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அங்கீகாரம் அளித்துள்ளது. மாடர்னாவின் கொரோனா தடுப்பூசி 12 முதல் 17 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போட அங்கீகாரம் வழங்கப்பட்ட இரண்டாவது தடுப்பூசி ஆகும். மேலும் மருந்துகள் மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு பொருள்கள் ஒழுங்குமுறை நிறுவனம் (MHRA) மாடர்னாவின் கொரோனா தடுப்பூசிக்கு இன்று அங்கீகாரம் அளித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டு குழு (JCVI) ஸ்பைக்வாக்ஸ் […]

Categories
உலக செய்திகள்

“12 வயது சிறுவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தலாம்!”.. அமெரிக்க மருந்துகள் ஆணையம் பரிந்துரை..!!

ஐரோப்பிய மருந்து நிறுவனம், 12லிருந்து 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மாடர்னா தடுப்பூசி அளிக்க  ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா தடுப்பூசி 18 வயதுக்கு அதிகமான நபர்களுக்கு தான் செலுத்தப்பட்டு வருகிறது. என்றாலும் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் செலுத்தப்படுகிறது. மேலும் பல தடுப்பூசிகள் 18 வயதுக்கு குறைந்த நபர்களுக்கு செலுத்தலாமா? என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க நாட்டின் மாடர்னா தடுப்பூசி சுமார் 3600 க்கும் அதிகமான சிறுவர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

அதிபர் வெளியிட்ட அறிவிப்பு… பிரபல நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள்… அமெரிக்க தூதரகம் தகவல்..!!

அமெரிக்க அரசு 20 லட்சம் “மாடர்னா” தடுப்பூசிகளை “கோவேக்ஸ்” திட்டத்தின் கீழ் வியட்நாம் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் ஜோ பைடன் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்க அரசு சார்பில் உலக நாடுகளுக்கு 8 கோடி கொரோனா தடுப்பூசிகள் பகிர்ந்தளிக்கப்படும் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் அடுத்த 6 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை உள்ள நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறியிருந்தார். அந்த வகையில் ஜான்சன் & […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! இது 90% செயல்படுமாம்…. ஒப்புதல் அளித்த இந்திய மருத்துவ நிறுவனம்….!!

கொரோனாவுக்கு எதிராக 90% செயல்படக்கூடிய மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசிகளை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய சிப்லா நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாடு நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக 90% செயல்படக்கூடியதாகவும், 28 நாட்கள் இடைவெளியில் செலுத்தக்கூடியதாகவும், 2 டேஸ் முறையைக் கொண்டதாகவும் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி திகழ்கிறது. இந்நிலையில் இதனை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு நிறுவனம் சிப்லா நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி சிப்லா நிறுவனம் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்.. மாடர்னா தடுப்பூசிக்கு அனுமதி..!!

இந்தோனேசியாவில் அவசரகால உபயோகத்திற்கு மாடர்னா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா அதிகமாக பரவி வருகிறது. எனவே அந்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த வருடம் மார்ச் மாத முடிவிற்குள் நாட்டிலுள்ள மொத்த மக்கள் 27 கோடியில் சுமார் 18 கோடி மக்களுக்கு தடுப்பூசி அளிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்கள். எனவே ஒவ்வொரு நாளும் சுமார் 10 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

மாடர்னா கொரோனா தடுப்பூசிக்கு…. இந்தியா அனுமதி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின்,  ஸ்புட்னிக் தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகளை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மாடர்னா தடுப்பூசிக்கு…. இன்று மத்திய அரசு ஒப்புதல்?….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
உலக செய்திகள்

அஸ்ட்ராஜெனேகா பிரச்சனைகள்…. நேரத்தை வீணாக்க கூடாது…. பிரிட்டன் அரசு எடுத்த முடிவு….!!

பிரிட்டன் அரசு மக்களுக்கு முதல் கட்ட மாடர்னா தடுப்பூசி போடும் பணியை தொடங்கியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சுமார் 22 மில்லியன் மக்களுக்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் 5.5 மில்லியன் மக்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளும் […]

Categories

Tech |