மர்ம நோயால் கால்நடைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில் வசிக்கும் ஏராளமான மக்கள் தங்களது வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக கால்நடைகளை ஏதோ ஒரு மர்மநோய் தாக்கி வருவதால் அவைகள் சரியாக தீவனம் சாப்பிடுவதில்லை. மேலும் ஆடுகள் சில நாட்களில் இறந்து விடுகின்றன. இந்நிலையில் வன்னிகுடி கிராமத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். […]
Tag: மாடுகள் பலி
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பகுதியில் மூன்று மாடுகள் மர்ம நோய் தாக்கி பரிதாபமாக பலியாகின. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தெப்பக்குளத்துப்பட்டியில் விவசாயியான சக்திவேல் வசித்து வருகிறார். இவர் வளர்த்து வந்த 2 மாடுகள் மர்ம நோய் தாக்கியதால் காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் அதே பகுதியில் வசித்து வரும் முத்துசாமி என்பவருடைய பசுமாடுக்கும் காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு பசு மாடுகளுக்கு உடனே சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் […]
பெரம்பலூர் மாவட்டம் திருவிளக்குறிச்சியில் இரண்டு மாடுகள் மின்னல் தாக்கி பரிதாபமாக செத்தன. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருவிளக்குறிச்சி கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 2 கறவை மாடுகளை வளர்த்து வந்தார். அந்த மாடுகளை பட்டியில் கட்டியிருந்தார். இந்நிலையில் அப்பகுதியில் கடந்த 12-ஆம் தேதி திடீரென மழை பெய்தது. அப்போது இரண்டு மாடுகளும் மின்னல் தாக்கி பரிதாபமாக செத்தன. இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் ரங்கநாதன் தகவலறிந்து அங்கு வந்து பார்வையிட்டார். மேலும் அங்கே இருந்தவர்களிடம் விசாரணை […]