மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சிவபுரி மாவட்டத்தில் பைடர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் மகான் தகட் என்பவர் ஆர்டிஐ அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதான் மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கப் பட்ட ஆவணங்களை கேட்டு விண்ணப்பித்திருந்தார். இந்த ஆவணங்களை பெறுவதற்கு நகராட்சி நிர்வாகம் 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்துமாறு கூறியது. இந்த பணத்தை மகான் கட்டி 2 மாதங்களான நிலையில் நகராட்சி […]
Tag: மாட்டு வண்டி
ஸ்ரீரங்கம் ரெங்கநாதசாமியை தரிசனம் செய்ய திருச்சி மாவட்டம் அருகிலுள்ள காவல்காரன் பட்டி கிராமத்தை சேர்ந்த சுமார் 1500 பக்தர்கள், சுமார் 200 இரட்டை மாட்டுவண்டியில் நேற்றிரவு புறப்பட்டு, இன்றுகாலை ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தனர். இந்த கிராமமக்கள் மூதாதையர் காலந்தொட்டே 5 வருடங்களுக்கு ஒருமுறை பாரம்பரிய மாட்டுவண்டியில் வந்து ஸ்ரீரங்கம் நம்பெருமாளை வழிபட்டுச் செல்வது வழக்கம் ஆகும். அந்த அடிப்படையில் 2வது அணியாக இன்று ஸ்ரீரங்கம் வந்தனர். அதன்பின் நாளை வட திருக்காவிரி என்று அழைக்கப்படும் கொள்ளிடம் ஆற்றில் […]
மாட்டு வண்டியை எதிர்கால டெஸ்லா என கூறி அதனை ட்விட்டரில் பதிவிட்டு அதோடுகூட எலான் மஸ்க்கின் புகைப்படத்தையும் டேக் செய்து தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா வெளியிட்டுள்ள பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது. அவருடைய டுவிட்டர் பதிவில் இரண்டு மாடுகள் பூட்டப்பட்ட வண்டியில் சிலர் படுத்து உறங்குவது போன்ற படத்தை வெளியிட்டு முற்றிலும் தானாக இயங்கக்கூடிய இந்தியாவின் எதிர்கால டெஸ்லா என பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த வண்டியை இயக்குவதற்கு கூகுள் மேப் தேவை இல்லை, எரிபொருள் வாங்க […]
சட்டவிரோதமாக மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 8 மாட்டு வண்டிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வெள்ளாற்று பகுதியில் அறந்தாங்கி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வெள்ளாற்றிலிருந்து மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட 8 மாட்டு வண்டிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிலட்டூரை சேர்ந்த முருகன், மூக்குடி பகுதியைச் சேர்ந்த இளையராஜா, கருப்பையன், ரமேஷ். விஸ்வநாதன், அழியாநிலையை சேர்ந்த குமரேசன், கருப்பையா, சிங்காரவேலு ஆகிய 8 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை […]
மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள கார்குடி கிராம நிர்வாக அதிகாரி ராஜ்குமார் தனது உதவியாளருடன் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்தப் பகுதியில் மாட்டுவண்டியில் சிலர் வருவதைக் கண்டு அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது கார்குடி சுத்தமல்லி ஓடையில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தது அதிகாரிக்கு தெரியவந்தது. இதனையடுத்து மாட்டுவண்டி தொழிலாளர்களான வேணாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி, கார்குடி கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன், […]
சட்டவிரோதமாக மணல் கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கீழ்முருங்கை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாலாற்றில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வருவது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று சட்டவிரோதமாக மணல் கடத்திய கீழ்முருங்கை பகுதியைச் சேர்ந்த ரமேஷ், சங்கர் ஆகியோரை கைது செய்ததோடு 2 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பச்சை துண்டை தலையில் கட்டிக் கொண்டு மாட்டு வண்டி ஓட்டியபடி வீதி உலா வந்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி “நான் ஒரு விவசாயி” என்று சமீபகாலமாக சொல்லிக் கொண்டு வருகிறார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அவ்வாறு தேர்தல் பிரசாரத்தில் […]
ஈரோடு மாவட்டம், கோபி அருகே பழங்கால முறைப்படி மணமக்கள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்றுள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள வெள்ளாள பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் ஓய்வு பெற்ற தமிழாசிரியர். இவருடைய மகன் கௌதமன் இவர் இன்ஜினியர் படித்துவிட்டு சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நாமக்கல் மாவட்டம் கதிராநந்தூரைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகள் சௌந்தர்யாவை இவர் நேற்று கோபியின் திருமணம் செய்து கொண்டார். சௌந்தர்யாவும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் […]