ரயில் தண்டவாளத்தை கடக்கச் முயன்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஊரப்பாக்கம் ஐயஞ்சேரி யமுனை நகரில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சாய் கிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவன் சாய் கிருஷ்ணன் திரும்பி வராததால் குடும்பத்தினர் தேடி வந்துள்ளனர். அப்போது ஊரப்பாக்கம்-கூடுவாஞ்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தை கடந்து […]
Tag: மாணவன்
வீட்டிற்கு டியூஷன் வந்த மாணவனுடன் டியூசன் டீச்சர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் பானிபட் என்ற பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது பெற்றோர்களுடன் வசித்து வந்துள்ளான். தற்போது கொரோனா காலம் என்பதால் பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் கடந்த மூன்று மாதங்களாக தனது வீட்டின் அருகில் உள்ள ஆசிரியர் வீட்டிற்கு சென்று டியூஷன் படித்து வந்துள்ளார். மேலும் ஒரு நாளைக்கு அந்த மாணவனுக்கு […]
பாலின வேறுபாட்டை எதிர்ப்பதற்காக ஆசிரியர்கள் குட்டை பாவாடை அணிந்து கொண்டு பள்ளிக்கு வந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. வெலோடோலிட் என்ற நகரத்தில் இருக்கும் பள்ளியில் பயின்ற மிக்கேல் கோம்ஸ், என்ற 15 வயது மாணவன், கடந்த நவம்பர் மாதத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் பாலின வேறுபாடு பார்க்கக் கூடாது என்பதற்காக குட்டை பாவாடை அணிந்து கொண்டு பள்ளிக்கு சென்றிருக்கிறார். எனினும் பள்ளி நிர்வாகம், மனநல மருத்துவரை அணுகி சிறுவனை ஆலோசிக்க வைத்தது. மேலும் பள்ளியிலிருந்தே நீக்கிவிட்டது. […]
18 வயது மாணவனான கொரோனா நோயாளிக்கு மருந்து வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த அங்கித் குமார் என்பவர் தனது உறவினருக்கு ரெம்டெசிவர் மருந்து அவசரமாக தேவைப்பட்டுள்ளது. இதனால் வெளியில் எங்கும் கிடைக்காததால் கூகுளில் தேடியபோது வர்திகா ராய் என்பவரின் விற்பனையாளரின் தொடர்பு எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது ஐந்து குப்பைகளுக்கு 32 ஆயிரத்து 400 ரூபாய் பணத்தை யுபிஐ மூலம் அனுப்பும்படி அவர் கூறியுள்ளார். இதை நம்பி […]
கோவில் திருவிழாவில் பத்தாம் வகுப்பு மாணவன் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் வன்னி கொன்னு பகுதியில் அம்புலிகுமாரின் குடும்பம் வசித்து வருகின்றனர். இவரது மகன் அபிமன்யு அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று அப்பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. திருவிழாவில் கலந்துகொண்டு சாமியை தரிசனம் செய்துவிட்டு தனது நண்பர்களுடன் அபிமன்யு அங்கு சுற்றித் திரிந்து விளையாடிக் கொண்டிருந்தார். […]
கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் குடிபோதையில் இருந்த நபர் ஒருவர் பள்ளி மாணவனை இரும்பு கம்பியால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி பகுதியில் சிவா என்ற பத்தாம் வகுப்பு மாணவன் படித்து வருகிறார். அவர் தனது தந்தை உடன் பக்கோடா ஸ்டாலில் நின்று கொண்டிருந்தபோது அங்கு குடிபோதையில் வந்த ஒரு நபர் சிவாவின் தந்தையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே கீழே கிடந்த […]
கனடாவில் வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரி திடீரென்று வழக்கில் பின்வாங்கியதால் புகாரளித்த பெண் ஏமாற்றமடைந்துள்ளார். கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவின் Okanagan என்ற பல்கலைக்கழகத்தில் Taylor என்ற மாணவி பயின்று வருகிறார். இந்நிலையில் அவர் குளித்துக் கொண்டிருக்கும் போது குளியலறையில் கல்லூரியில் பயிலும் Sari Siyam என்ற மாணவர் தனது செல்போனை வைத்து குளிப்பதை படம் எடுத்துள்ளார். இதனை கவனித்த Taylor – Siyam-ஐ கையும் களவுமாக பிடித்துக் கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். முதலில் வழக்கை […]
போடி அருகே ஆசிரியர் கண்டித்ததால் பத்தாம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது போடி திருமலாபுரத்தில் ஈ. வே. ரா. பெரியார் தெருவில் வசித்து வரும் கணேசன் என்பவரின் மகனான விஜய் பிரகாஷ் (16) பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அதற்கான தேர்வினை எழுதும்போது ஆசிரியர் அவனை “பிட்”அடுத்ததாக கூறியுள்ளார். அதனால் மனமுடைந்த விஜய் பிரகாஷ் விஷம் குடித்து சிறிது நேரத்திலேயே மயங்கினான். உடனே அக்கம்பக்கத்தில் இருக்கும் மக்கள் அனைவரும் அவனை […]
வேட்டவலம் அருகே கல்லூரி மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேட்டவலம் அருகில் பன்னியூர் கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மூத்த மகன் பிரேம் வயது 21. பிரேம் வேட்டவலத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறான் . கொரோனா பாதிப்பு முடிந்து கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் பன்னியூர் புறாக்கல் மலை பக்கத்தில் மரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான் இச் சம்பவம் […]
சென்னையில் ஆன்லைன் வகுப்பில் நடத்திய பாடங்கள் புரியாததால் 11ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு ஜனவரி 19ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. 9 மற்றும் 11ஆம் […]
சென்னையில் ஆசிரியர் மாணவரை முடிவெட்டி வரச் சொன்னதால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, அரும்பாக்கம் விநாயகம் பகுதியை சேர்ந்த சஞ்சய் குமார் என்பவர் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் கடந்த 10 மாதங்களாக வீட்டிலேயே இருந்ததால் ஆசையாக முடி வளர்த்துள்ளார். இப்போது பள்ளிகள் திறந்து உள்ள காரணத்தினால் சஞ்சயை அவரது ஆசிரியர் தலைமுடியை வெட்டி வர சொல்லி இருக்கிறார். அதன்பின் பள்ளி முடிந்து […]
தஞ்சாவூரை சேர்ந்த மாணவன் தயாரித்த செயற்கை கோள் ஜூன் 2021ல் நாசா ராக்கெட் மூலம் ஏவப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையை சேர்ந்த ரியாஸூதீன் என்பவர் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பி.டெக் மெக்கட்ரானிக்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வடிவமைத்த செயற்கைக்கோள் நாசா விண்வெளி தளத்தில் 2021 ஆம் ஆண்டு ஏவப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து ரியாசுதீன் செய்தியாளர்களை சந்தித்தபோது நாசா விண்வெளி மையம் மற்றும் ஐ டூ லேனிங் அமைப்பு […]
உறவினர் வீட்டிற்கு சென்ற கல்லூரி மாணவர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . சென்னையில் உள்ள சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மோகன். இவருடைய மகன் மேத்யூ(20). இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். நேற்று மோகன் அவருடைய குடும்பத்தினருடன் அரக்கோணத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார் . அப்போது அவர்கள் அங்குள்ள கல்லாற்றில் தண்ணீர் செல்வதை பார்க்க சென்றனர். அங்கு குளிப்பதற்காக மேத்யூ மற்றும் 3 இளைஞர்கள் ஆற்றில் இறங்கியுள்ளனர் .ஆற்றில் தண்ணீர் […]
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஏற்பட்ட கடனை அடைக்க தாய் மற்றும் தங்கையை கொலை செய்த மாணவரை போலீசார் கைது செய்தனர். ஹைதராபாத் மெட்ச்சல் பகுதியை சேர்ந்த சாய்நாத் என்பவர் எம்.டெக். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் படித்துக்கொண்டே வாகன விற்பனை ஷோரூம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது தந்தை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்து விட்டார். இதையடுத்து தந்தையின் சேமிப்பு மற்றும் காப்பீட்டு தொகையாக 40 லட்சம் தாய் சுனிதாவின் பெயருக்கு […]
17 வயது சிறுவன் ஆன்லைன் வகுப்பு புரியாததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருக்கும் திருவிக நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஹேமந்குமார்-சண்முகப்பிரியா தம்பதியினர். இவர்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாதவன் என்ற மகன் இருந்தான். கொரோனா பரவலால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் நிலையில், ஆன்லைன் மூலமாக பாடம் எடுக்கப்படுகின்றது. ஆனால் மாதவனுக்கு ஆன்லைன் வகுப்புகளில் நடத்தும் பாடங்கள் புரியாததால் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளார். இந்நிலையில் நேற்று தனது அறையில் இருந்த மாதவன் […]
மக்கள் தேவை அறிந்து செயலியை உருவாக்கிய பள்ளி மாணவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் எட்டிமடையை சேர்ந்த கோபாலன் என்பவரது மகன் திரிஷாந்து. தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வரும் இவர் சிறு வயது முதலே கணினி, ஸ்மார்ட்போன் போன்றவற்றில் அதிக ஆர்வம் கொண்டவர். ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது தெரிந்த ஒருவர் மூலமாக ஐடி நிறுவனத்தில் பயிற்சி பணியாளராக தனது வேலையை தொடங்கியுள்ளார். அதனை தொடர்ந்து தானாக ஆண்ட்ராய்டு செயலி […]
தோனியின் 5 வயது மகளுக்கு பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்து கருத்து பதிவிட்ட 12 ஆம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார் ஐபிஎல் விளையாட்டில் சிஎஸ்கே அணி தோல்வியற்றதை தொடர்ந்து தோனியின் ஐந்து வயது மகளுக்கு இன்ஸ்டாகிராமில் பாலியல் மிரட்டல் விடுத்து கமெண்ட் செய்யப்பட்டது. இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் மாவட்டத்தை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான். தோனியின் மகளுக்கு பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்து […]
தந்தை இறந்ததால் படிப்பை தொடர முடியாத சூழலில் இருக்கும் பட்டியல் என மானவனுக்கு 8 லட்சம் ரூபாய் அளித்தால்தான் மாற்றுச் சான்றிதழ் அளிக்க முடியும் என்று கல்லூரி நிர்வாகம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. ஒட்றைப்பிடாரத்தை சேர்ந்த சூரிய பிரகாஷ் என்ற மாணவன் இந்த புகாரை கூறியிருக்கிறார். திருச்சி மாவட்டம் சிறுதன் ஊரில் உள்ள நாளந்தா வேளாண்மை கல்லூரிகளில் ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை செலுத்தி பிஎஸ்சி மேலாண்மை படிப்பை அவர் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனாவால் […]
ஆன்லைன் பகுப்பில் பங்கேற்க மலைக்குன்றுக்கு சென்ற மாணவனை சிறுத்தை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குஜராத் மாநிலத்தில் இருக்கும் தாப்பி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் கோவிந்த். இவர் கிராமத்தில் இருக்கும் மலைக்குன்றில் வைத்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இணைய வசதி அங்கு சரியாக கிடைப்பதனால் அவர் மற்றும் அவரது நண்பர் அந்த இடத்தை தேர்ந்தெடுத்தனர். இருவரும் வகுப்பில் பங்கேற்று கொண்டிருந்தபோது திடீரென சிறுத்தை ஒன்று அவர்கள் எதிரே வந்துள்ளது. சிறுத்தையிடம் […]
கரூர் மாவட்டத்தில் பெற்றோர் ஆப்பிள் போன் வாங்கி தராததால் கல்லூரி மாணவன் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் கோதூரை பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு ராகுல் என்ற 20 வயதுடைய மகன் இருக்கின்றான். அவர் கோவையில் இருக்கின்ற தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்ஸி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். அவர் தனது தந்தையிடம் தனக்கு ஆப்பிள் போன் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அவரின் தந்தை ஆப்பிள் போனுக்கு பதிலாக […]
கரூர் மாவட்டத்தில் தங்கச் சங்கிலியை தொலைத்த அச்சத்தில் பிளஸ் டூ மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள பரமத்திகுளம் என்ற பகுதியில் திமுக ஒன்றிய கவுன்சிலராக பூபதி என்பவர் இருக்கிறார். அவருக்கு 18 வயது உடைய தீபக் என்ற மகன் உள்ளார்.அவர் அரசு பள்ளியில் பிளஸ் டூ முடித்துவிட்டு தற்போது வீட்டில் இருந்து கொண்டிருக்கிறார். அவர் தனது கையில் ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலி ஒன்றை அணிந்திருந்தார்.அவர் நேற்று தனது […]
விளையாடடி கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி அருகே அண்ணாமலைச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் தாஸ்.அவரது மகன் நரேன் இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான். பள்ளிகள் விடுமுறை விட்டதால் நண்பர்களுடன் விளையாட செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளான். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சக நண்பர்களுடன் காற்றாடி விட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது காற்றாடி அங்குள்ள உயர் அழுத்த மின் […]
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் ஆன்லைன் வகுப்பால் மன உளைச்சலுக்கு ஆளான பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவிநாசி அருகே உள்ள பி.எஸ். சுந்தரம் வீதியைச் சேர்ந்தவர் செந்தில் நாதன். தனியார் வங்கியில் ஏ.டி.எம். மையத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றிவரும் இவருக்கு பிரதீபா என்ற மனைவியும் 3 மகன்களும் இருந்தனர். இவரது மூத்த மகன் சஞ்சய் அவினாசி அடுத்த நாதம்பள்ளி பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து […]
ஆன்லைன் வகுப்பு புரியாமல் மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் இருக்கும் ஆண்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விக்கிரபாண்டி. இவர் திருச்சியில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் ஆன்லைன் மூலம் தனது வகுப்புகளை படித்து வந்தார். இந்நிலையில் விக்கிரபாண்டி தனது தந்தை இளங்கோவனிடம் தனக்கு ஆன்லைன் வகுப்புகள் புரியவில்லை என கூறியுள்ளார். அதற்கு இளங்கோவன் விக்கிரபாண்டியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் […]
18 மாதங்கள் பள்ளி மாணவனிடம் தவறாக நடந்துகொண்ட உயர்நிலை ஆசிரியை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் அமெரிக்காவில் செர்ரி ஹில் பகுதியை சேர்ந்த பிரிட்ஜெட் சிபிரா என்ற உயர்நிலை ஆசிரியை கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் சுமார் 18 மாதங்கள் பள்ளியில் பயின்று வந்த 17 வயது மாணவனை மயக்கி பல இடங்களுக்கு அழைத்து சென்று அவனிடம் தவறாக நடந்துள்ளார். இதுவரை 60 முறை சிறுவனை அந்த ஆசிரியை அழைத்துச் சென்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதனை […]
பஞ்சாபில் பப்ஜி கேம் விளையாட முடியாததால் B.Com இளைஞர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியை சேர்ந்தவர் சேர்ந்த, பிகாம் படித்து வந்த இளைஞர் ஒருவர் இந்தியா முழுவதும் சிறியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அடிமையாக உள்ள பப்ஜி கேம்க்கு அடிமையாகி நாள்தோறும் அதனை விளையாடி வந்துள்ளார். இந்நிலையில் விளையாட்டில் கவனம் செலுத்துவதை காட்டிலும், வேறு எந்த செயலிலும் கவனம் செலுத்துவதில்லை. விளையாட்டு என்று வந்துவிட்டால் […]
குடும்பத்தினருடன் சேர கல்லூரி மாணவன் 3218 கிலோமீட்டர் தூரம் 7 வாரங்கள் பயணம் செய்து வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது கொரோனா தொற்று பரவலை தடுக்க பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் வெளிநாடுகளுக்கு படிப்பதற்காகவும் பணிநிமித்தமாகவும் சென்றவர்கள் தங்கள் குடும்பத்துடன் சேர முடியாத சூழல் உருவானது. இந்நிலையில் ஸ்காட்லாந்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்த க்லியான் என்ற மாணவன் 3218 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கிரீஸில் உள்ள தனது குடும்பத்தினருடன் சேர்வதற்கு முடிவு செய்துள்ளார். […]
சென்னை முகலிவாக்கம் பள்ளியை 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் செல்வராஜ், இவர் தலைமையாசிரியருக்கு விடுப்பு வேண்டி லீவ் லெட்டர் ஒன்றை எழுதியுள்ளார். அந்த மாணவன் எழுதியுள்ள விடுப்பு கடிதத்தில், ஐயா, “தற்போது கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அது எளிதில் பரவக்கூடிய வைரஸ். எனக்கு சளி, காய்ச்சல் அறிகுறி தெரிகிறது. எனவே மற்ற மாணவர்களின் நலன் கருதி நான் நீண்ட விடுப்பு எடுக்கிறேன். எனது விடுப்பு நாள்களை வருகை நாளாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். […]