தேர்வு குறித்து மாணவர்கள் பயப்பட வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், பெருநகரில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று கூறினார். மேலும் தனியார் பள்ளியில் பாலியல் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் அதை மறைக்காமல் மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் அரசின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார். […]
Tag: மாணவர்கள்
தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை பெறுவதற்கு ஆதார் விவரங்கள் கட்டாயமான ஒன்றாக உள்ளது. இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் ஆதார் கட்டாயமான ஆவணம். மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்க பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் வழங்கப்படுகின்றது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும் பட்சத்தில் ஆதார் விவரங்கள் […]
பள்ளி மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பொது தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளதாவது: “மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைக்கப்பட்டு இருப்பதால் திட்டமிட்டபடி இந்த முறை பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும். வகுப்பறையில் குழந்தைகள் மீதான பாலியல் தொல்லை தொடர்பாக புகார் தெரிவிக்க இலவச அழைப்பு எண் 1098 14417 ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். வரும் கல்வியாண்டில் அனைத்து புத்தகங்களிலும், குழந்தைகளுக்கான உதவி எண்கள் இடம்பெறும். […]
மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மக்களின் வீட்டின் அருகாமையிலேயே எளிதில் தடுப்பூசி கிடைக்கும் வகையில் இலவச தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இதுவரை பத்து தடுப்பூசி முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்புக்கு வந்து செல்கின்றனர். மேலும் ஆசிரியர்கள், பள்ளியில் […]
அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் இன்று முதல் துவங்கபட்டுள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் முறையிலேயே நடத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் இன்று முதல் தொடங்கப்படும் என்றும், செய்முறைத்தேர்வு, Viva Voce ஆகியவற்றையும் விரைந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜனவரிக்குப் பின் முதலாமாண்டு மாணவர்களுக்கான நேரடி […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெற்றன. மேலும் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு நடைபெறும் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. மதிப்பீட்டு முறையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் நேரடி தேர்வு நடந்தது. தற்போது அவர்களுக்கான […]
முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீண்டும் மாணவர்களுக்காக களமிறங்கியுள்ளார். இதனால் கல்லூரி மாணவர்கள் அனைவரும் குஷியில் உள்ளனர். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “நோய் தொற்று காரணமாக சுமார் 20 மாதங்களுக்கு மேலாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தது. இதில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கடைசி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அனைத்து தரப்பு மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படுகிறது. மக்களின் குறைகளை முன்னதாகவே கண்டறிந்து அதனை முதல்வர் பூர்த்தி செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களின் மாதாந்திர தவணைத் […]
ஆன்லைன் தேர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு நடத்த கோரி கல்லூரி மாணவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இதற்கிடையே போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.. மேலும் மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.. இந்த நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது, தமிழகத்தில் ஜனவரி 20ம் தேதிக்கு […]
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி அடிப்படையில் 10000 ரூபாய் பரிசு மற்றும் பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்க பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் அனைத்து பள்ளிகளிலும் தமிழ் வழியில் படித்து வரும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களை தேர்வு செய்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் காமராஜர் விருது வழங்கப்பட்டு வருகின்றது. […]
தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது தொடர் விடுமுறை காரணமாக மீதமுள்ள பாடங்களை நடத்தி முடிப்பதற்கு சிரமமாக உள்ளது. அதனால் இனி வரும் நாட்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 10, 11, 12 ஆம் […]
தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையொட்டி பள்ளிகளில் மாணவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பள்ளிகளில் மழையால் பாதித்த வகுப்பறை, சுற்று சுவரை மாணவர்கள் பயன்படுத்தாமல் உறுதி செய்ய வேண்டும். மின் இணைப்புகள் சரியாக இருப்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும். திறந்த நிலை நீர்த் தேக்கத் தொட்டி,கிணறு அருகில் மாணவர்கள் செல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது தொடர் விடுமுறை காரணமாக மீதமுள்ள பாடங்களை நடத்தி முடிப்பதற்கு சிரமமாக உள்ளது. அதனால் இனி வரும் நாட்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 10, 11, 12 ஆம் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி , காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் அதிதீவிர கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை முதல் அதிதீவிர கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக கடலூர் நகர பகுதியில் பெரும்பாலான சாலைகளில் வெள்ளநீர் […]
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்ற தன்னாட்சி பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரே மாதிரியான கிரேடு முறை அறிமுகம் செய்யப்பட இருப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுவரை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஒவ்வொரு செமஸ்டர் தேர்விலும், மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களுக்கு ஏற்ப O, A, B, C, D, E என கிரேடுகள் வழங்கப்படும். ஆனால் தமிழகம் முழுவதும் 60 க்கும் அதிகமான தன்னாட்சி பொறியியல் […]
செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தக்கோரி மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுரண்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லைப் பகுதியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகள் அனைத்திற்கும் செமஸ்டர் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காமராஜர் அரசு கல்லூரி மாணவர்கள் தங்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் ஆன்லைனில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இவர்கள் நேற்று வகுப்புகளுக்கு செல்லாமல் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் தற்போது அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. பள்ளிகள் காலதாமதமாக திறக்கப்பட்டுள்ளதால் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை போக்கும் வகையில் இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட திட்டங்களை தமிழக அரசு அறிமுகம் செய்து வைத்துள்ளது. இந்த நிலையில் இதுவரை நடத்தப்பட்ட பாடங்களிலிருந்து திருப்புதல் […]
மதுரையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரி வாசல்களிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நேரடி தேர்வு நடத்துவதை எதிர்த்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த இரண்டு நாட்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. மாணவர்களுக்கு கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் […]
அறிவியல் திறனறித் தேர்வு அடுத்த ஆண்டிலிருந்து தமிழ் உட்பட மற்ற மொழிகளில் நடத்தப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில் கேவிபி ஓய் எனப்படும் கிஷோர் வைத்தியம் புரோட்சகான்யோஜனா திட்டம் வாயிலாக அறிவியலில் ஆர்வம் கொண்ட மாணவர்களை ஊக்குவிக்க உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.ஆனால் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது.அதனால் மாணவர்களுக்கு நடைபெற இருந்த பொதுத்தேர்வுகள் உள்ளிட்ட முழு ஆண்டு தேர்வுகள் அனைத்தும் நடத்தப்படாமல் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.இதையடுத்து கடந்த மாதம் முதல் அனைத்து வகுப்பு மாணவர்களும் பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.இருந்தாலும் பாடங்கள் முழுமையாக நடத்தப்படாமல் மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டும் விதமாக பாடல், ஆடல் மற்றும் ஓவியம் போன்றவற்றை கற்று கொடுத்து மாணவர்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. […]
பொறியியல் கல்லூரியில் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூபாய் 74.28 கோடி கட்டணத்தை தமிழக அரசு விடுவித்துள்ளது. இதில் தரச்சான்று படிப்புகளுக்கு ரூபாய் 50 ஆயிரம், வளர்ச்சி நிதி 5000, விடுதி கட்டணம் 40 ஆயிரம், போக்குவரத்து கட்டணம் 25 ஆயிரம் என கணக்கிடப்பட்டு விடுவிக்கப்படும். அரசு அளிக்கும் கட்டண தவிர வேறு எந்த கட்டணத்தையும் கல்லூரிகள் வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவர் முன்னேற்ற அமைப்பு சார்பில் இன்று பல்வேறு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை அண்ணா நுழைவாயில் அருகில் இருந்து மாணவர்கள் ஊர்வலமாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷமிட்டனர். அப்போது தமிழகத்தில் ஆன்லைன் முறையில் மாணவர்களுக்கு பாடம் எடுத்து விட்டு நேரடி தேர்வு வைப்பது முறையானது இல்லை […]
தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை பெறுவதற்கு நவம்பர் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நாட்டில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கும் நோக்கத்தில் அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது அவ்வகையில் அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையுடன் இலவச கல்வி வழங்கப்படுகிறது. அந்த வகையில் […]
பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு தடுப்பூசியை செலுத்தலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டில் பள்ளிகள் திறக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து மாணவர்களுக்கு பாடங்கள் ஆன்லைன் மூலமாக கற்பிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்த நிலையில் பள்ளிகளை மீண்டும் திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன் படி முதலில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு செப்டம்பர் 1 […]
பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் இருக்கும் பள்ளி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து குறித்து பிரபல நிறுவனம் வெளியிட்டதில் ‘நைஜரில் இரண்டாவது பெரிய நகரம் மராடி ஆகும். அங்குள்ள பள்ளி ஒன்றில் கடந்த திங்கட்கிழமை அன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தினால் கூரையால் வேயப்பட்ட மூன்று மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி வகுப்புகள் தீயில் கருகின. […]
B.E, M.E, B.Tech, M.Tech, B.Arch, M.Arch, M.Plan, MBA, MCA மட்டும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.2,400 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகையைப் பெற http://scholarships.gov.inஎன்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.எனவே இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பித்து கல்வி உதவி தொகையை பெற்றுக் கொள்ளுங்கள்.
தமிழகத்தில் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.இந்த போட்டிகள் நவம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் குருவனம் பாதிப்பு குறைந்தது அடுத்த 19 மாதங்களுக்கு பிறகு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதனால் தற்போது இந்த போட்டிகள் அவரது மனநிலையை கொஞ்சம் மாற்றும் விதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை அடுத்து வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி இந்த போட்டி […]
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் இன மாணவர்களுக்கு அரசு கல்வி பயில உதவித்தொகை வழங்கி வருகிறது. நடப்பு கல்வியாண்டில் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், 1 முதல் 11 ஆம் வகுப்புகள் தொடங்கி பட்டப்படிப்பு வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெற விரும்பும் சிறுபான்மையின மாணவர்கள் www. scholarship.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிக்கலாம். […]
தமிழகம் முழுவதும் நேற்று முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால் உடனடியாக பாடங்கள் நடத்துவதை ஆசிரியர்கள் கைவிட வேண்டும் என்றும் மாணவர்கள் மகிழ்ச்சியாக,ஆர்வத்துடன் பள்ளிக்கு வரும் சூழலை உருவாக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிகளில் ஆய்வு செய்ததில் மாணவர்கள் உற்சாகமாக இருப்பதை காண முடிந்தது. அதனைப்போலவே திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலை ஊராட்சி […]
தமிழகத்தில் ஆதிதிராவிடர் விடுதிகளில் தங்கிப் பயிலும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பண்டிகை கால சிறப்பு உணவு கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆதிதிராவிடர் விடுதி பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு உணவு கட்டணம் 20 ரூபாயிலிருந்து 40 ரூபாயாகவும், கல்லூரி மாணவர்களுக்கு உணவு கட்டணம் 40 ரூபாயில் இருந்து 80 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள 440 பொறியியல் கல்லூரிகளில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கி அக்டோபர் 5 ஆம் வரை ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக நடந்து முடிந்தது. இந்த கலந்தாய்வின் மூலம் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிலையில் பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் […]
டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வருகின்ற 1 ஆம் தேதி திங்கள்கிழமை அன்று திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தற்போது 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில், வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா அறிவித்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க உள்ளதால் விருப்பமுள்ள மாணவர்கள் […]
தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வருகின்ற டிசம்பர் மாதம் முதல் நேரடி செமஸ்டர் தேர்வுகள் நடைபெற வேண்டும் என்று உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், இறுதித் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. பின்பு மாணவர்களின் கற்றல் நலன் கருதி தேர்வுகள் நடக்கும் கட்டாயம் ஏற்பட்டது. அதனால் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக பாடம் நடத்தப்பட்டது. […]
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசன் பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இருக்கிறது. அந்த மேல்நிலைப்பள்ளியில் அரசம்பாளையம் அருகிலுள்ள பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் அரசம்பாளையம் அருகில் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குமாரபாளையத்தில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்த மாணவர்கள் குமாரபாளையத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசன் பாளையத்திற்கு இடையே உள்ள மீட்டர் கேஜ் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பழைய பஸ் பாஸ் காட்டி மாணவர்கள் […]
தமிழகத்தில் பொறியியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 25 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தற்போது பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பொறியியல் சேர்க்கைக்கு SCA to SC பிரிவினருக்கு கலந்தாய்வு நாளையும், நாளை மறுநாளும் ஆன்லைனில் நடைபெற உள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. பொது கலந்தாய்வு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை,துணை கலந்தாய்வில் ஒதுக்கீட்டு ஆணை பெற்ற […]
குடி போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கொரோனா தொற்று குறைந்து வருவதால் தற்போது பல மாநிலங்களில் பள்ளி கல்லூரிகள் செயல்பட தொடங்கியுள்ளன. இதேபோல் யூனியன் பிரதேசமான தாத்ராநகர் ஹவேலியில் தற்போது எட்டாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தாத்ராநகர் ஹவேலியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மராத்திய ஆசிரியராக பணியாற்றி வருபவர் சந்தீப் தேசாலே. சம்பவத்தன்று இந்த ஆசிரியர் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக சென்றுள்ளார். […]
தமிழகத்தில் கல்வியை எளிதில் அணுகக்கூடிய வகையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் வகுப்புகளை நடத்தலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது. இதையடுத்து உடல் நலம் சரியில்லாத மாற்றுத்திறனாளி மாணவர்கள் வகுப்புகளை தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். நேர்வழி இயக்கம் என்ற அறக்கட்டளை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும், கொரோனா தடுப்பூசியை முன்னுரிமை அளித்து வழங்க வேண்டும் என்றும், பள்ளிகளில் காணொளி காட்சி மூலமாக வகுப்புகள் நேரடியாக வழங்க வேண்டும் என்றும், […]
தமிழகத்தில் நவம்பர் 1ஆம் தேதி முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 91,139 சத்துணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 – 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்ற நிலையில் நவம்பர் 1ஆம் தேதி முதல் 1- 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்ததை அடுத்து, பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நவம்பர் மற்றும் டிசம்பர் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவ பொதுத் தேர்வுக்கு தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ள […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக திமுக அரசு நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஒரு சில வாக்குறுதிகள் மட்டுமே இன்னும் கேள்விக் குறியாக உள்ளது. அவை எப்போது நிறைவேற்றப்படும் என்று மக்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. […]
நடப்பு கல்வியாண்டு முதல் பொறியியல் பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முதலாமாண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்படுவதால் விளக்கம் அளித்துள்ளது. மாணவர்கள் மத்தியில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வருகின்ற 25 ஆம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளதாக உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் பொறியியல் மாணவர்களுக்கான பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாடத் திட்டங்களை உருவாக்குவதில் 80 விழுக்காடு தொழில்துறையினர் பங்களிப்பு இருக்கும். 20 விழுக்காடு மட்டுமே […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி பள்ளி கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டு பள்ளிகள் மேம்படுத்தவும், மாணவர்களின் கற்றல் திறமைகளை ஊக்குவிப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் 2020-2021 ஆம் கல்வியாண்டில் ஆர்டிஇ சட்டத்தின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தை ரூ.419.5 கோடியை விடுவித்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. ஆர் டி இ சட்டத்தில் மாணவர்கள் கல்வி பயிலும் பள்ளிகளுக்கு 15 நாட்களுக்குள் கல்வி கட்டணம் வழங்கப்பட […]
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மாணவர்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அமல் படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இலவச நோட்டு, புத்தகம், மிதிவண்டி மற்றும் மடிக்கணினி அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது. 2011 ஆம் ஆண்டு கல்லூரி மற்றும் பள்ளிகளில் பயின்ற அனைத்து மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்கியது. அதன்பிறகு பள்ளிகளில் படிக்கும் 12 ஆம் வகுப்பு பயிலும் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் 9- 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1 – 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது இதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கான சாதி பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]
டிகிரி கல்லூரிகள் திறக்கப்படுவது குறித்து மகாராஷ்டிரா மாநில அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது தொற்று பெருமளவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காரணத்தினால் பள்ளி கல்லூரிகளை திறப்பதற்கு மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. தற்போது மாநிலம் முழுவதும் உள்ள டிகிரி கல்லூரிகள் வரும் 20ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் தொற்று குறைவாக உள்ள பகுதிகளில் மட்டுமே மாணவர்கள் நேரடி வகுப்புக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த மாதம் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு மத்தியில் தேர்வு குறித்த அறிவிப்பும் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ தேர்வுக்கான அட்டவணை அக்டோபர் 18ஆம் தேதி […]
தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 50% தமிழ் வழி வகுப்புகள் கட்டாயமாக வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தொடக்க கல்வி இயக்குனர் முதன்மை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்க அனுமதி கேட்கும் பள்ளிகள் அனைத்து நிபந்தனைகளையும் பரிசீலித்த பின்னரே அனுமதி வழங்க வேண்டும். இதையடுத்து ஆங்கில வழியில் பிரிவு துவங்குவதற்காக அனுமதி கேட்கும் பள்ளிகளில் 50% தமிழ் […]
தமிழகத்தில் படித்து முடித்தவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு பதிவு முக்கியமான ஒன்று. பத்தாம் வகுப்பு முடித்தவுடன் வேலை வாய்ப்பு பதிவு செய்யப்படும். ஒருமுறை பதிவு செய்தால் போதும். அதன் பிறகு 12 மற்றும் டிகிரி என ஒவ்வொரு படிப்பிற்கும் renewal செய்தால் மட்டுமே போதும். இந்தப் பதிவு வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் அரசு பணியில் இட ஒதுக்கீடு வழங்கப்படும். இது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் மாணவர்களின் சிரமத்தை போக்க 2009ஆம் ஆண்டு முதல் […]
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் அறிய தேர்வு எழுத விண்ணப்பித்து கட்டணம் செலுத்த அக்டோபர் 21ஆம் தேதி கடைசி நாள் என்று பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார். தமிழகத்தின் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பல்வேறு தொழில்நுட்ப படிப்புகள் உள்ளடங்கியுள்ளது. அதில் ஏதேனும் ஒன்றில் சேர்வதற்கு பத்தாம் வகுப்பில் 40 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிப்பதற்கு மாணவ மாணவிகள் அனைவரும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனென்றால் இத்தகைய படிப்பில் ஏதேனும் ஒன்றை படித்து தேர்ச்சி பெற்ற […]