FMGE தேர்வு வருகின்ற டிசம்பர் மாதம் 12 ஆம் தேதியில் நடைபெறும் என்று தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் மருத்துவம் படித்து இந்தியாவில் பயிற்சி பெறுவோருக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு வாரியம் (NBE) நடத்துகிறது. தேர்வுக்கு இன்று முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதில் விருப்பமுள்ள மாணவர்கள் https://nbe.edu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.
Tag: மாணவர்கள்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் வழியாக மின்சார ரயில் சென்றது. அதில் 100 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர். இதனிடையே அதில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் நவீன் என்பவர் புத்தகப் பையில் ஜல்லிக் கற்களை வைத்து இருப்பதை பார்த்த ரயில்வே போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து சக மாணவர்கள் நவீனை விடுவிக்க வேண்டும் என்று ஆவடி ரயில் நிலைய தண்டவாளத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு தகவலறிந்து வந்த […]
சென்னையில் திரு.வி.க நகர் போதை பொருள் தடுப்பு தொடர்பாக பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த சைக்கிள் பேரணி புளியந்தோப்பு காவல் துறை துணை ஆணையர் ராஜேஷ் கண்ணா தொடங்கி வைத்து பின்னர் அவரும் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தி வருகிறோம். அதுமட்டுமில்லாமல் பள்ளி மற்றும் கல்லூரிகளின் அருகில் போதைபொருள் விற்கப்படுவதை கண்டறிந்தால் மாணவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் […]
தமிழகத்தில் 9-12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், 1-8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான வழிமுறைகளையும் அரசு வெளியிட்டிருந்தது. கொரோனா தொற்று நெறிமுறைகளின்படி ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் நகர்ப்புறங்களில் உள்ள பல பள்ளிகளில் உயர் வகுப்பு மாணவர்கள் சமூக இடைவெளியுடன் உட்கார ஆரம்ப வகுப்பறைகளை பயன்படுத்தி […]
தூத்துக்குடி மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர்கள் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இங்கு பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு அரசின் சலுகைகள் மற்றும் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று 2 வது அலை குறைந்துள்ளதால் கல்லூரிகளில் கடந்த ஜூலை மாதம் முதல் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தற்போது மாணவர் சேர்க்கை முடிவடைந்து கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. கலை அறிவியல் கல்லூரிகளை தொடர்ந்து அரசு தொழிற் […]
தமிழகத்தில் 9 -12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் 1-8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் அவற்றிற்கான பணிகளும் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. 18 மாதங்களாக வீட்டிலேயே இருந்து விட்டு மாணவர்கள் தற்போது பள்ளிக்குச் செல்லும்போது அவர்கள் சோர்வடையாத வண்ணம் திட்டமிடப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வி இயக்குனரகத்தில் இருந்து அனைத்து மாவட்ட […]
இந்நிலையில் தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வு நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் கே. நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை குறைக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலமாக 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்றலை மேம்படுத்த புத்தாக்க பயிற்சி கட்டகம் தயாரிக்கப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்த நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9-12 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து 1-8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் […]
தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மருத்துவ படிப்பிற்கான நீட்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் எதிர்காலத்தை எண்ணி அச்சமடைந்து இதுவரை 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தற்கொலை தடுக்கும் வகையில் கல்வித்துறையும் மற்றும் சுகாதார துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் நீட் தேர்வு முடிந்த பிறகு மாணவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் சிறப்பு கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து வருகின்ற நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் உலக பெண் குழந்தைகள் தின விழா […]
மதுரை மாவட்டத்தில் மாணவர்களுக்கு ரூ.54 கோடி கல்விக் கடன் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூடுதலாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் சு.வெங்கடேஷ் எம்.பி கூறியுள்ளார். இது குறித்து அவர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னோடி வங்கி மேலாளர், மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் மற்றும் கல்வித்துறை அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனையில் கூடுதல் கல்வி கடன் வழங்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன்படி மதுரை மாவட்டத்தில் இதுவரை கல்வி கடன் கேட்டு […]
பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டினால் குழந்தைகளின் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் ஆர்லிங்டன் என்னும் இடத்தில் டிம்பர்வியூ என்ற மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்க மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் […]
நாட்டில் கொரோனா பரவலின் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்தது. அதனால் அப்போது ஆன்லைன் வகுப்பிற்காக மாணவர்கள் செல்போனை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பெங்களூருவில் உள்ள 15 வயது சிறுவனுக்கு பெற்றோர்கள் செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர். அதன் பிறகு ஆறு மாதங்களில் அந்த மாணவனின் நடவடிக்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதில் தூக்கமின்மை, படிப்பில் தோல்வி, கடும் கோபம் மற்றும் எரிச்சல் போன்ற நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதால் பெற்றோர் உடனே மனநல […]
தமிழகத்தில் முதுகலை கல்வியியல் பட்டப்படிப்பு மாணவர்கள் முதலாம் ஆண்டு சேர்க்கை பற்றி கல்லூரி கல்வி இயக்குனர் பூரணச்சந்திரன் செய்தி வெளியிட்டுள்ளார். அந்த செய்தியில் தமிழகத்தில் உள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் உள்ள முதுநிலை கல்வியியல் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பமானது இன்று முதல் 13 ஆம் தேதி வரை www.tngasaedu.in , www.tngasaedu.org. போன்ற இணையதளங்களின் மூலமாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது தங்களுக்கு விருப்பமுள்ள கல்லூரிகளை வரிசைப்படி தேர்வு […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் மாணவர்களின் குறைகளையும் கேட்டறிந்து வருகிறார். இந்நிலையில் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள், இன்று தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு ஆதிதிராவிடர் அரசு மாணவர் விடுதிக்கு திடீரென சென்றார். அப்போது மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். முதல்வரிடம் பேச தயங்கிய மாணவர்களிடம், ஏன் பேச தயங்குகிறீர்கள், […]
தமிழகத்தில் பதினோராம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் சான்றிதழில் பள்ளி தலைமை ஆசிரியர் கையொப்பம் கட்டாயம் இருக்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் சார்பில் நடத்தப்படும் ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் என இந்து அறநிலையத் துறை அறிவித்துள்ளது. மூன்று ஆண்டு கால சான்றிதழ் படிப்பில் சேர அக்டோபர் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதில் தேர்வாகும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச உணவு, இருப்பிடம், உடை, ரூ.3000 உதவித்தொகையும் வழங்கப்படும். 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 20 வயதுக்குள் உள்ள மாணவர்கள் அர்ச்சகர் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசித்து முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து நடந்த ஆலோசனைக்கு பிறகு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், […]
நீட் தேர்வுக்கான ஆக்கப்பூர்வமான முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே,மாணவர்களின் உத்தேச மதிப்பெண்களை நீட் பயிற்சி மையங்கள் விளம்பரமாக வெளியிட்டுள்ளதற்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீட் தேர்வு நடைபெற்று முடிந்து இன்றுடன் இரண்டு வாரம் நிறைவு பெற இருக்கிறது. இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. ஆனால் தங்களது நீட் தேர்வு மையங்களில் பயின்ற மாணாக்கர்களின் பெயிட்டர் மார்க்ஸ் எனப்படும் உத்தேச மதிப்பெண்கள் அடங்கிய பட்டியலை நாளிதழ்களில் தனியார் பயிற்சி மையங்கள் விளம்பரமாக வெளியிட்டுள்ளன. 2022ஆம் ஆண்டு நீட் பயிற்சி […]
தமிழகத்தில் மத்திய பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவின்படி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தமிழ்நாடு கல்வித்துறை ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் மாணவர்களின் தேர்ச்சி நிலை மற்றும் பழக்கவழக்கங்களை கண்காணிப்பது மட்டுமல்லாமல் செல்போன் மற்றும் மடிக்கணினியில் தேவை இல்லாத எந்த ஆப்-களை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் கண்காணிக்க வேண்டும். ஆன்லைன் விளையாட்டுகள் அதிகமாக இருக்கும் நிலையில் மாணவர்களை பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வயது வந்தோருக்கான செயலிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். […]
தமிழகத்தின் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது .அதன் பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்துகொண்டு இருக்கின்றன . இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக வளர்ச்சி துறை வெளியிடட்டுள்ள அறிவிப்பில், தேசத்தந்தை என அழைக்கப்படும் மகாத்மா காந்தி பிறந்த […]
சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு சில மகிழ்ச்சியான தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் 2002- 2003 ஆம் ஆண்டு முதல் அரியர் வைத்துள்ள அனைத்து மாணவர்களும் வருகின்ற நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்ததுள்ளது. அதன்படி அரியர் வைத்துள்ள மாணவர்கள் இன்று முதல் http://coe1.annauniv.edu என்ற இணையதளம் மூலம் தேர்வுக் கட்டணத்துடன் ரூ.5000 கூடுதலாக செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பான தேர்வு அட்டவணை, தேர்வு முறை மற்றும் தேர்வு மையம் […]
மாணவர்கள் இசை மற்றும் திரைப்பட தயாரிப்பு தொடர்பான விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு டெல்லி அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் அனைவரும் பாடப் புத்தகங்களைத் தாண்டி சில திறன்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக டெல்லி அரசு பல வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளது. அதன்படி வருங்கால தலைமுறையினர் இசை தயாரிப்பு, திரைப்பட தயாரிப்பு, கிராபிக் டிசைனிங் உள்ளிட்ட விஷயங்களை தெரிந்து கொள்ளும் வகையில் சிறப்பு பேருந்து ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது இசை பேருந்து என்று […]
பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வர் கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து ஜாலியாக நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வந்தது. அடுத்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அமரீந்தர் சிங் மற்றும் நவ்ஜோத் சிங் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அமரீந்தர் சிங் […]
புதிய தேசிய கல்வி கொள்கையை உருவாக்கிய கஸ்தூரிரங்கன் தலைமையில் 12 பேர் கொண்ட பள்ளி பாடத்திட்ட வரைவு குழுவை ஒன்றிய கல்வி அமைச்சகம் நேற்று முன்தினம் உருவாக்கியுள்ளது. இந்தக் குழு குழந்தைப் பருவக் கல்வி, பள்ளிக்கல்வி, உயர்கல்வி மற்றும் ஆசிரியர் கல்விக்கான புதிய பாடத் திட்டங்களை உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த சிறப்பு குழுவில் தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாக நிறுவனத்தின் வேந்தர் மகேஷ் சந்திர பந்த், பஞ்சாப் மத்திய பல்கலைக்கழக வேந்தர் ஜக்பீர் […]
கொரோனாவால் பெற்றோரை இழந்த 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் தேர்வு கட்டணம் கிடையாது என்று சிபிஎஸ்இ அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு 10, 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ மாணவிகளின் பட்டியலை பள்ளிகள் சமர்ப்பிக்கும் போது, பெற்றோரை இழந்த மாணவர்கள் குறித்த விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக பள்ளி கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் நலனை கருதி அனைத்து விவகாரங்களிலும் முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுத்து வருவதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புகழாரம் சூட்டியுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 -12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. மாணவர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கு செல்கின்றனர். ஆனால் இதற்கு மத்தியில் கொரோனா குறித்த அச்சம் நிலவி வருவதால், பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப தயங்குகிறார்கள். இந்நிலையில் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையடுத்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. ஆனால் பள்ளிகள் திறந்து 15 நாட்களில் 84 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருப்பூரில் வீரபாண்டி அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு […]
தலீபான்களின் இடைக்கால அரசின் கல்வித்துறை அமைச்சகம் பள்ளிகளைத் திறக்க உத்தரவிட்டுள்ளது. தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கடந்த மாதம் 15 ஆம் தேதி கைப்பற்றினர். இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக பெண்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகள் பறிபோகும் என்ற அச்சம் அனைவரிடமும் எழுந்தது. ஆனால் தலீபான்கள் தகவல் ஒன்றை வெளியிட்டனர். அதில் “1996 முதல் 2001 வரை இருந்த அரசை போல தற்பொழுது செயல் பட போவதில்லை. மேலும் பெண்களுக்கான அனைத்து உரிமைகள் மற்றும் சுதந்திரம் […]
கன்னியாகுமரி மாவட்டதில் உள்ள அழகிய மண்டபத்தில் சேரிட்டி ட்ரஸ்ட் மூலமாக ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் மருத்துவ உதவித்தொகையும், வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவிற்கு கன்னியாகுமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார்.அதன் பிறகு சிறப்புரை ஆற்றினார். இதை அடுத்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையையும், மருத்துவ உதவித் தொகையையும் வழங்கியுள்ளார். பிருந்தாவன் தொண்டு நிறுவனம் அறக்கட்டளையின் இயக்குனரான ,கோட்சே தலைமையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்த நிகழ்ச்சியில் மாவட்ட […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த ஆண்டுக்கு ஆண்டு முழுவதும் பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்தது . அதன் பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன . அதில் முதல் கட்டமாக 9 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் 50% மாணவர்கள் சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது . இந்நிலையில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட அச்சத்தை சரி […]
சென்னையில் நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகம் இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக உள்ளது. இதனை தரம் உயர்த்தி மனநல ஆராய்ச்சி மையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொருத்தவரை ஓர் ஆண்டுக்கு 15 ஆயிரம் முதல் 16 ஆயிரம் வரை தற்கொலைகள் நடக்கின்றன.இந்த […]
மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் கொரோனா பரவும் மையங்களாக மாறவில்லை என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. கொரோனா தாக்கம் குறைந்து வந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9, 10, 11, 12ம் வகுப்பு மற்றும் அனைத்து வகையான கல்லூரிகளும் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.. இதற்கிடையே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சில பள்ளி, கல்லூரிகளில் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகின்றது.. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பயம் […]
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், IIM, NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டயப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த ஏழை BC, MBC, SC, ST மாணவர்கள் கல்வி உதவித்தொகையை பெற நவம்பர் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர் ஒருவருக்கு ஆண்டிற்கு அதிகபட்சம் 2 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும். இந்த அறிய வாய்ப்பை மாணவர்கள் […]
தமிழகத்தில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் ஒரு சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் தினந்தோறும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாராந்தை அரசு பள்ளியில் பயிலும் 52 மாணவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில்,முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக அக்டோபர் முதல் வாரத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மாணவர்களை பள்ளிக்கு வரும்படி வற்புறுத்தக் கூடாது, […]
இரண்டு பள்ளி மாணவர்களின் வங்கி கணக்கில் ரூ. 960 கோடி பணம் டெபாசிட் செய்து இருப்பதை பார்த்த வங்கி ஊழியர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். பீகார் மாநிலத்தில் மாணவர்களுக்கு சீருடை வாங்குவதற்கு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இதற்காக பள்ளி மாணவர் பெயரில் வங்கிகள் தொடங்கப்பட்டு அதில் தொகைகள் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கதிகார் மாவட்டம் பகுரா பஞ்சாயத்தில் உள்ள பஸ்தியா கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களான குருச்சந்திர விஷ்வா, ஆசிஷ் குமார் […]
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சௌந்தர்யா என்ற மாணவி நீட் தோல்வி பயத்தால் என்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வை சரியாக எழுதவில்லை என்று மாணவி விரக்தியில் இருந்ததாகவும், மதிப்பெண் குறையும் என்ற அச்சத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர்கள் கூறியுள்ளனர். ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்டத்தை சேர்ந்த தனுஷ் என்ற மாணவன் நீட்தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். நேற்று அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்களும் பள்ளிக்கு ஆர்வமுடன் சென்று வருகின்றனர். இதற்கிடையில் ஒரு சில பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவதால் அப்பள்ளிகள் மூடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் […]
கடந்த சில தினங்களுக்கு முன்பு பிளஸ்-2 துணை தேர்வு எழுத இருந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கொரோனா இரண்டாம் அலை காரணமாக தேர்வு இல்லாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இவர்களுக்கான மதிப்பெண்களை அரசு பள்ளி கல்வித்துறை அமைப்பு வெளியிட்டது. இதில் திருப்தியில்லாத மாணவர்கள் தனித்தேர்வர்களாக […]
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதாவை சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து பேசிய அவர், நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் விலக்கு பெறும் மசோதாவை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றி தரவேண்டும். அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு தொடரும் வகையில் மசோதா இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு […]
நீட் தேர்வு அச்சத்தால் மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்ட செய்தி கேட்டு வேதனை அடைந்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர் தனுஷ் மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப் போராட்டம் இப்போது தொடங்குகிறது. நாளை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. மாணவச் செல்வங்கள் மனம் தளர […]
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நீட்தேர்வு அச்சம் காரணமாக 19 வயது தனுஷ் என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூரை சேர்ந்த தனுஷ் என்ற மாணவன் நேற்று இரவு நீட் தேர்விற்காக படித்துக் கொண்டிருந்தான். மகன் படிப்பதை கண்ட பெற்றோர் மற்றொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை எழுந்து தனது மகனை பார்க்க சென்ற தாய்க்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு தனுஷ் வீட்டில் உள்ள முற்றத்தில் தூக்கில் தொங்கிக் […]
நாடு முழுவதும் நடப்பு ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு இன்று நடைபெற உள்ளது. அதற்காக நாடு முழுவதிலும் 3,862 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் நீட் தேர்வை எழுதுவதற்கு 16 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்திலிருந்து மட்டும் 1,12,889 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 11,236 பேர் அரசு பள்ளி மாணவர்கள். தமிழகத்தில் 18 மாவட்டங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. மதியம் 2 மணி முதல் மாலை 5 […]
கலை, அறிவியல் கல்லூரிகளில் 25% மாணவர்களை கூடுதலாக சேர்க்க உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தனியார் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.. அரசு பள்ளியை நோக்கி நிறைய மாணவர்கள் செல்கிறார்கள்.. தமிழகம் முழுவதும் 143 அரசு கலைக்கல்லூரி செயல்படுகிறது. இந்நிலையில் 2021 – 22 கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.. அதன்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வருகிறது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் நேற்றுமுதல் திறக்கப்பட்டதால் ஆசிரியர்களை பார்த்து மாணவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், தமிழகத்தில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த ஒரு வாரத்திற்கு மாணவர்களின் வருகை கண்காணிக்கப்பட்டு எத்தனை […]
இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வர கட்டாயப்படுத்த படமாட்டார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. நெல்லையை சேர்ந்த அப்துல் வஹாப் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் இருந்து பள்ளிகள் திறப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும். பல்துறை நிபுணர்களிடம் ஆலோசனை செய்த […]
இன்று முதல் பள்ளி கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காரணத்தினால் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகள் திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி நடப்பு கல்வியாண்டிற்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று திறக்கப்பட உள்ளது. […]
டெல்லியில் நாளை பள்ளிகள் திறக்கப்படுவதால் வழிகாட்டு நெறிமுறைகளை டெல்லி மாநில அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பெரும் தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதலே பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கு செப்டம்பர் 1ஆம் தேதி பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதன்படி டெல்லியில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்காக டெல்லி மாநில அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது: […]