மாணவர்களிடம் அதிக அளவு தேர்வு கட்டணம் வசூல் செய்யப்படவில்லை என்று அண்ணா பல்கலைக் கழகம் சார்பாக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக இறுதியாண்டு பருவத்தேர்வு தவிர மற்ற பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டாளர் ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குள் மாணவர்கள் அனைவரும் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். அதனால் தேர்வு கட்டணம் செலுத்த நிர்பந்திக்க கூடாது என்று அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் சென்னை […]
Tag: மாணவர்கள்
ஆந்திரா மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு கொரோனா பரவியது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பொதுமுடக்கத்தால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு 8 மாதங்களுக்கு பின்பு திறக்கப்பட்டன. மத்திய அரசு தளர்வுகள் அறிவித்ததைத் தொடர்ந்து மாநில அரசுகள் இதற்கான நடவடிக்கை மேற்கொண்டனர். அந்த வகையில் ஆந்திர மாநிலத்திலும் கடந்த 2ம் தேதி பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் பள்ளி திறந்து இரண்டு நாளே ஆன நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருக்கும் பள்ளியில் 150 […]
ஆந்திர மாநிலத்தில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் அனைத்தும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்களில் அம்மா நிலங்களின் விருப்பங்களுக்கு ஏற்ப பள்ளி கல்லூரிகளை திறந்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. […]
கொரோனா வைரஸ் எனும் கொடிய பெருந்தொற்று நோய் பரவியதை அடுத்து நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கல்வி நிலையங்கள் திறப்பு எப்போது ? என்று இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படாத நிலையில், மாணவர்களின் கல்வி சார்ந்த நடவடிக்கைகளை மத்திய – மாநில அரசுக்கள் மேற்கொண்டு வருகிறது. […]
பள்ளி மாணவர்கள் அரசு தேர்வை எழுதி, அதன் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது வழக்கம். பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தங்களது இறுதி ஆண்டு தேர்வு தேர்ச்சி பெற்று அதனை பதிவு செய்கின்றனர். அதேபோல கல்லூரி செல்லும் மாணவர்களும் அடுத்தடுத்து அதற்கான பதிவுகளை செய்துவருகின்றனர். வேலைவாய்ப்பு உறுதி செய்ய மாணவர்கள் இந்தப் பதிவை தொடர்ச்சியாக செய்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது வேலைவாய்ப்பு பதிவு குறித்தான ஒரு அறிவிப்பு மாணவர்களுக்கு […]
நீட் தேர்வு பெரிய குளறுபடி இருப்பது கண்டறியப்பட்டு இருப்பது பெற்றோர்களையும், மாணவர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு ( நீட் ) நடத்தப் பட்ட நிலையில் அதற்கான தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் மாலை வெளியானது. இதனை மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது அதிகார பூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். தேர்வு முடிவுகள் வெளியாகிய இணையதளத்தில் ஒரு சில குளறுபடிகள் […]
செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெற்ற மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இன்று மாலை 5.15 மணி அளவில் நீட் தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. nta.ac.in, ntaneet.nic.in என்ற இணையத்தில் சென்று மாணவர்கள் நீட் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். ஆனால் ஒரே நேரத்தில் பலரும் இந்த வெப்சைட்ட்டிற்குள் சென்றுள்ளதால் தற்போது ஓய்வு நிலையை அடைந்திருக்கின்றது. மீண்டும் சரியாக இன்னும் சிறிது நேரம் ஆகும். சில டெக்னிகல் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது. இன்னும் சில […]
பெற்றோர்கள் சம்மதத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா தொற்றினால் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டது. மீண்டும் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு தொற்று கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் மாநிலங்களில் பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி அளித்தது. இதனையடுத்து இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் பெற்றோர்களின் சம்மதத்துடன் பள்ளிக்கு வரலாம் என்று அறிவுறுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து காங்ரா மாவட்டத்தில் உள்ள பள்ளி […]
தொற்றினால் பாதிக்கப்பட்டு தேர்வு எழுத முடியாத மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதுவதற்கு வாய்ப்பு அளிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற நீட் தேர்வை எழுத முடியாமல் போன மாணவர்கள் அக்டோபர் மாதம் 14ஆம் தேதி தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தடைசெய்யப்பட்ட பகுதியில் இருந்ததால் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களும் அதே நாளில் தேர்வு எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வின் […]
உத்திரபிரதேச அரசு வழிகாட்டுதலின்படி 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 19ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவியதன் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் மாதம் முதல் விடுமுறை விடப்பட்டது. கொரோனா இன்னும் குறையாத காரணத்தால் ஊரடங்கு உத்தரவு முழுமையாக விலக்கிக் கொள்ளப்படவில்லை. பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு இருந்தாலும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடைபெறுகிறது. ஊரடங்கு […]
அரியர் தேர்வு விவகாரத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் ராம்குமார், ஆதித்தன் ஆகியோர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது அரியர் தேர்வு விவகாரத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் விதிகளுக்கு முரணான […]
மத்திய தொல்லியல் துறை பட்டப்படிப்பிற்கான அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் அதில் செம்மொழியான தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. மத்திய தொல்லியல் துறை, சொல்லியல் பட்டப்படிப்பிற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. அதில் கல்வித்தகுதியில் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபி ஆகிய மொழிகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் தமிழ்மொழி மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனை பற்றி அறிந்த மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி எம்பி வெங்கடேசன், ‘செம்மொழியான தமிழ்மொழி படித்தோருக்கு வாய்ப்பை மறுப்பதா?’என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறுமியுடன் பேசிக்கொண்டிருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை பத்தாம் வகுப்பு மாணவர்கள் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் காசியாபாத்தியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவன் தனது நண்பர்களுடன் கடந்த 28ஆம் தேதி பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரை சந்திப்பதற்காக காரில் சென்றுள்ளார். அந்த சிறுமிகளுடன் மாணவன் பேசிக் கொண்டிருந்த சமயம் அப்பகுதிக்கு வந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் அதே காரில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை கோவிந்தபுரம் வனப் பகுதிக்கு கடத்தி சென்றனர். அதோடு […]
ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க செல்போன் சிக்னலுக்காக மாணவர்கள் வனப்பகுதிக்கு செல்வதால் வனவிலங்குகள் தாக்கும் அபாயம் இருக்கின்றது. கொரோனா நோய் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கல்லூரிகள், பள்ளிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல் செல்போன் சிக்னல் மட்டுமே கிடைக்கின்றது. பிற தனியார் செல்போன் சிக்னல்கள் சரிவர கிடைப்பதில்லை அதனால் ஆன்லைன் வகுப்புகள் பங்கேற்க முடியாமல் அதிகமான கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதைத்தொடர்ந்து கூடலூர் பகுதியில் பி.எஸ்.என்.எல் […]
கர்நாடக மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வகுப்புக்கு வர தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந் நிலையில் மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் புதிய வழிகாட்டுதல் ஒன்றை வெளியிட்டது.அதில் கடந்த மாதம் 21ம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு வந்து தங்களின் படிப்பு குறித்த சந்தேகங்களை ஆசிரியர்களிடம் […]
இந்த வருடம் 16 லட்சம் மாணவர்கள் புதிதாக பள்ளியில் சேர்ந்து இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி முதல் அரசு பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை ஆரம்பம் ஆனது. இந்த வருடம் மாணவர்களை பெற்றோர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அரசு பள்ளியில் அதிகமாக சேர்த்து வருகின்றனர். 3,08,000 மாணவர்கள் ஒன்றாம் வகுப்பிலும், 3,66,000 மாணவர்கள் ஆறாம் வகுப்பிலும், 1,04,000 மாணவர்கள் ஒன்பதாவது வகுப்பிலும், 4,14,000 மாணவர்கள் பதினோராம் […]
உடன் பணிபுரியும் ஆசிரியரை பழிவாங்க மழலை மாணவர்களுக்கு விஷம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தை சேர்ந்த Wang என்ற ஆசிரியர் சக ஆசிரியரான Sun என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்து Sun ஆசியையின் மாணவர்கள் சாப்பிடும் உணவில் Wang விஷத்தை கலந்தார். இதனை தொடர்ந்து Sun-ன் கிண்டர்கார்டன் மாணவ மாணவிகள் காலை உணவை சாப்பிட்ட போது வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது […]
மழலை குழந்தைகள் பயப்படுவதால் பள்ளி நிர்வாகம் ஆசிரியரை கற்பிப்பதில் இருந்து விடுவித்து உள்ளது பிரான்ஸ் பாலிசோ பகுதியில் இருக்கும் பள்ளியில் சில்வைன் என்பவர் மழலை குழந்தைகளுக்கு ஆசிரியராக இருந்து வந்தார். ஆனால் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பயங்கரமான கனவுகள் கண்டு தூக்கமின்றி அவதிப்படுவதாகவும் அதற்கு முக்கிய காரணம் ஆசிரியர் சில்வைன் என்றும் புகார் அளித்துள்ளனர். இதனால் பள்ளி நிர்வாகம் மழலைகளுக்கு கல்வி கற்றுக் கொடுத்த சில்வைனை 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கல்வி […]
மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை பற்றிய தகவல்களை உள்ளடக்கிய இணையத்தளங்கள் சில வெளியாகியுள்ளது மாணவர்களுக்கு அவர்களது படிப்பிற்கான செலவை ஈடுசெய்ய பல்வேறு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களின் திறமை, எடுத்திருக்கும் பாடப்பிரிவு, இனம், நாடு ஆகியவற்றின் அடிப்படையில் பல உதவித்தொகைகள் கொடுக்கப்படுகின்றன. வளர்ந்த நிறுவனங்கள் பல உதவித்தொகையை மாணவர்களுக்கு கொடுத்து வருகின்றன. கல்வி உதவித் தொகை பற்றிய தகவல்கள் சிலவற்றை இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும். அவற்றில் சில www.scholarshipsinindia.com www.education.nic.in www.scholarship-positions.com www.studyabroadfunding.org […]
புதுச்சேரி அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உணவு பாதுகாப்பு படி நேற்று வழங்கப்பட்டது. கொரோனா பொது முடக்கம் காரணமாக அரசுப் பள்ளிகள் மூடப் பட்டதால் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்க வேண்டிய மதிய உணவுக்கு பதிலாக பணம் வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்திருந்தது. அதன்படி அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 4 கிலோ அரிசியும், […]
நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை தொடர்கதை ஆக்கி உள்ளார்கள். நீட் தேர்வுக்கு மறைமுக ஆதரவு அளிக்கும் வகையில் மாணவர் மரணங்களை அரசியலாக்க கூடாது என தேமுதிக பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த், இந்த நிலையில் எல்லாத்தையுமே முதலில் அரசியல் ஆக்குவதை நிறுத்திக் கொள்ளுங்கள். மாணவர்கள் உயிரோடு நீங்கள் அரசியல் செய்யாதீர்கள். உங்களின் அரசியலுக்காக மாணவர்களை நீங்கள் துஷ்பிரயோகம் பண்ணுகிறீர்கள். மாணவர்கள் மரணத்தை மீண்டும் மீண்டும் தொலைக்காட்சியில் போட்டு அடுத்த மாணவர்களும் தற்கொலைக்கு ஈடுபடுகிறீர்கள். தயவுசெய்து […]
மாணவர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தற்கொலைகளை தடுக்கவும் சரியான திட்டங்களை தீட்டி செயல்படுத்த தற்கொலைக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பலர் தற்கொலை செய்து கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மற்ற மாநிலங்களில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் அதிகளவில் தற்கொலை நடப்பது ஏன் ? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் ஒரு மனநல ஆலோசகர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன் ? என்பது சமூக […]
தேவிஸ்ரீ துர்காவின் மரணம் மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் பட்டியலின பகுதியை சார்ந்த காவல்துறையின் காவல் உதவி ஆய்வாளர் பணி புரிந்துவரும் முருக சுந்தரத்தின் மகள் தேவி ஸ்ரீ துர்கா. இவர் சென்ற இரு ஆண்டுகளாக நீட் தேர்விற்காக படித்து வந்துள்ளார். இந்த வருடம் தீவிரமாக படித்து வந்த நிலையில் திடீரென்று அவருக்குள் ஒரு பயம் ஏற்பட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தலைவர்கள் பலர் […]
புதுச்சேரியில் கல்லூரி இறுதித் தேர்வை ஒத்திவைக்க கோரி காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநில அரசுக்கு எதிராக மாணவர்கள் முழக்கங்களை எழுப்பியதால் பெரும் பரபரப்பு நிலவியது. கல்லூரிகளை சென்ற மார்ச் மாதம் அரசு உத்தரவால் மூடப்பட்டது. பாதிக்குப் பாதி பாடங்களை மட்டுமே நடத்தியிருக்கிறார்கள், மீதி பாடங்களை நடத்தாத இந்த நிலையில் மாணவர்களால் தேர்வுகளை எழுத முடியவில்லை. அதனால் மாணவர்கள் மிகுந்த உளைச்சலுக்கு ஆளாகிறோம். புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு செல்வதற்கு […]
அருணாச்சல பிரதேசத்தில் மாயமான ஐந்து இளைஞர்கள் தங்கள் பகுதியில் உள்ளதாக சீன ராணுவம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இந்தியாவிடம் அவர்களை ஒப்படைக்க உள்ளது. அருணாசல பிரதேசத்தின் சுமன்ஸ்ரீ மாவட்டத்தில் சீன எல்லைப் பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் சில நாட்களுக்கு முன்பு மாயமாகினர். இவர்களை சீன ராணுவத்தினர் பிடித்துச் சென்றதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக இந்திய ராணுவத்தினர் அனுப்பிய செய்திக்கு சீன ராணுவம் பதில் அனுப்பியது. மாயமான 5 வாலிபர்களும் தங்கள் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீன […]
குழந்தைகள் ஆன்லைன் வகுப்பில் இருக்கும் போது மர்ம நபர்கள் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கொரோனா தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என தற்போது ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் ஜூம் செயலி மூலம் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த […]
சத்துணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உலர் பொருட்களுடன் முட்டைகளையும் சேர்த்து வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு காரணத்தால் பள்ளிகள் மூடப் பட்டிருக்கும் நிலையில் மாணவர்களுக்கு சேரக்கூடிய அனைத்து பொருட்களும் அவர்களை சென்றடையும் விதமாக தமிழக அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் தற்பொழுது சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் தொடக்கப்பள்ளி, உயர் தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரிசி, பருப்பு ஆகிய உலர் உணவுப் பொருட்களுடன் முட்டைகளையும் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலர் […]
ஆன்லைன் வகுப்புகளை மாணவர்கள் சரியாக கவனிக்கிறார்களா ? குறிப்பெடுக்கின்றார்களா? என ஆசிரியை வீடு வீடாக சென்று கவனிப்பது பலரின் பாரட்டை பெற்றுள்ளது. கொரோனா பொது முடக்கம் அமலில் இருப்பதால் பள்ளி கல்லூரிகளில் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. மாணவர்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருப்பதால் மாணவர்கள் கல்வி பாதித்து விடக்கூடாது என்பதற்காக மத்திய மாநில அரசுகள் இந்த முடிவை எடுத்து நாடு முழுவதும் செயல்படுத்தி வருகின்றது. தமிழகத்திலும் ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகிறது. ஸ்மார்ட்போன்கள் இல்லாத மாணவர்களுக்கு […]
முதல்வருக்கு நன்றி தெரிவித்து திண்டுக்கல்லில் மாணவர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது . கொரோனா தாக்கத்தை தடுக்கும் விதமாக மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கல்வி நிறுவனங்கள் காலவரையின்றி மூடப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வியும் கேள்விக் குறியானது. 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் நடைபெறாத நிலையில் தமிழக அரசு பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. அதேபோன்று கல்லூரி மாணவர்களும் தேர்வை சந்திக்க […]
தமிழகத்தில் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் இல்லை என்றாலும் அரசு பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் நகரங்களுக்கு திரும்பி வருகின்றனர். அதே நேரம் வேலை இழந்து பொருளாதாரப் பிரச்சினைகளில் சிக்கி உள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். நடப்பு ஆண்டுக்கான கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் மாற்றுச் சான்றிதழை வழங்க […]
தேர்வு கட்டணம் செலுத்த தவறினால் பல்கலைக்கழகத்திலிருந்து பெயர்கள் நீக்கப்படும் என்ற அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பிற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அண்மையில் கட்டணம் செலுத்துவது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது . அதில் செமஸ்டர் கட்டணத்தை செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செலுத்த தவறும் மாணவர்களது பெயர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்படும் என அறிவித்து உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் […]
10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தவறிய பள்ளி மாணவர்களுக்கு துணைத்தேர்வு தேதி வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன.. இதன் காரணமாக ஏராளமான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.. இதற்கிடையே 10, 11, 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் மற்றும் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் துணைத்தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடத்தப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் கூறியிருந்தது.. இந்த நிலையில் 10, […]
செமஸ்டர் தேர்வுகளுக்கு பணம் செலுத்தாத மாணவர்களின் பெயர்கள் கல்லூரிகளில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.. கொரோனா தாக்கம் இன்னும் குறையாத காரணத்தால் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களை தவிர்த்து, கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களின் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.. இந்த நிலையில் சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு […]
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 25 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகின்றது..இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன.. இதையடுத்து 1ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்தது. தற்போது மாணவர்கள் அனைவரும் வீட்டில் ஆன்லைன் வகுப்புகளில் […]
10ஆம் வகுப்பு மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 17 – 21 ஆம் தேதிவரை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் காலாண்டு, அரையாண்டு, தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்தது. அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வுக்கு விண்ணப்பித்த ஒன்பது லட்சத்து 39 ஆயிரத்து 829 […]
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்து சமீபத்தில் முடிவுகள் வெளியானது.. இதையடுத்து கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, இந்த முறை அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் கல்லூரிக்கு சென்று நேரடியாக விண்ணப்பிக்காமல், ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது. இதையடுத்து மாணவர்கள் தாங்கள் படிக்க விரும்பும் பாடங்களை தேர்வு செய்து விண்ணப்பித்து வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இந்த […]
பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்பு தொடக்கம் முதல் செமஸ்டர் தேர்வு வரையிலான அறிவிப்புகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் அனைத்திற்கும் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் […]
கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், மதிப்பெண் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் இருப்பதால் தேர்வு கட்டணங்களை மாணவர்கள் செலுத்த வேண்டும் என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது. கொரோனாவால் கலை அறிவியல் மற்றும் பொறியியல் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் உயர்கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால் திடீரென மாணவர்களுக்கான கட்டணங்களை எப்படி மொத்தமாக செலுத்துவது என கேள்வி எழுப்பியுள்ளன. கொரோனா ஊரடங்கு காலத்தில் எழுதாத தேர்வுகளுக்கு… சான்றிதழ்கள் தயாரிக்க வேண்டும் என்று கூறி இப்படி கட்டணங்கள் […]
கடந்த 5 மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். இதனிடையே தமிழக அரசாங்கமும் கல்வி குறித்தும், மாணவர்களின் நலன் குறித்தும் பல அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றது. பகுதிநேர பி.இ, பிடெக் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. டிப்ளமோ முடித்து இரண்டு ஆண்டுகள் பணி புரிபவர்கள் ஆகஸ்ட் 10ம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை www.ptbe-tnea.com என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் சான்றிதழ் பதிவேற்றம் சரிபார்ப்பு […]
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமாகும் நிலையில், முதற்கட்டமாக ப்ளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, ஜூலை 31 ஆம் தேதியன்று மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்நிலையில் […]
கல்லூரியில் முதலாமாண்டு சேரும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்பு நடைபெறும் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து கல்லூரிகளிலும் தற்போது இளங்கலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட பாதிக்கும் மேல் பணிகள் முடிந்த நிலையில், ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவது எப்போது என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்து […]
தமிழகத்தில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது குறித்து சென்னையில் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கொரோனா காரணமாக பத்தாம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்த தமிழக அரசு காலாண்டு மற்றும் அரையாண்டில் பெற்ற மதிப்பெண்களின் 80 சதவீதமும் வருகைப் பதிவேட்டை வைத்து 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என்று உத்தரவிட்டு இருந்தது. ஆனால் பல பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் […]
உயர்கல்வி விண்ணப்பங்கள் அனுப்புவதற்காக பல்வேறு சான்றிதழ்கள் வழங்க கோரி நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் சமூக இடைவெளி விதியை காற்றில் பறக்க விட்டு விட்டு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவ மாணவியரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. பல்வேறு கல்லூரிகளுக்கான விண்ணப்பங்களுடன் இணைந்து அனுப்புவதற்காக வருவாய் சான்றிதழ் ,ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களைப் பெறுவதற்காக காரைக்கால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெருமளவில் […]
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான அட்மிசன் இன்று முதல் ஆன்லைனில் தொடங்கவிருக்கிறது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் அனைத்திலும் அட்மிஷன் நடைபெற தாமதம் ஏற்பட்டது. தற்போது பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான முடிவுகள் வெளியான நிலையில், முதற்கட்டமாக பொறியியல் பட்டப்படிப்பை படிக்க விரும்பும் […]
பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 16ம் தேதி வரை அட்மிஷன் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருவதன் காரணமாக கல்லூரிகளில் அட்மிஷன் மிகத் தாமதமாக நடைபெற இருக்கிறது. இந்நிலையில் முதற்கட்டமாக பிஇ பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான அட்மிஷன் தற்போது துவங்கியுள்ளது. அட்மிஷன் தொடங்கியதன் காரணமாக மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு என்று திடீரென பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு […]
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை அறிவிக்கப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டன. உயர்கல்விக்காக பொதுத்தேர்வு முடிவுகளுக்கு காத்திருந்த மாணவர்களுக்கு தமிழக அரசின் திடீர் அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து 12ஆம் வகுப்பு குறித்த அடுத்தடுத்து அறிவிப்புகளை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில் மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விடைத்தாள் மதிப்பெண் மறுகூட்டலுக்கு பள்ளிகள் வழியாக விண்ணப்பிக்கலாம். […]
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி தொடங்கி மார்ச் 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. அந்த சமயத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்பட காரணங்களாலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் நிறைய மாணவர்கள் பங்கேற்கவில்லை. அதனால் அவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி வரும் ஜூலை 27 ஆம் தேதி மீண்டும் எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. மேலும் ஜூலை […]
செப்டம்பர் மாத இறுதிக்குள் செமஸ்டர் தேர்வுகளை நடத்தும் கால சூழ்நிலை தமிழகத்தில் இல்லை என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவர்களின் இறுதியாண்டு தேர்வு குறித்து முடிவெடுக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வந்த மாணவர்களின் தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு […]
வெளிநாட்டில் தங்கி படிக்கும் மாணவர்களை வெளியேற்ற அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக அமெரிக்காவில் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை கல்வி மையங்கள் துவங்க எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை. இதனால் அனைத்து வகுப்புகளையும் ஆன்லைன் முறைக்கு மாற்ற அமெரிக்க பல்கலைக் கழகங்கள் தெரிவித்துள்ளனர். அப்படி ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டால் வெளிநாட்டில் தங்கி பயிலும் மாணவர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை காரணமாக […]
கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வரும் மாணவர்களில் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் சூழ்நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டாம் என கல்வியாளர்கள் அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் கேரள அரசு வெற்றிகரமாக தனது தங்களது மாநில மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தி முடித்தது. ஆனால் தமிழக அரசோ மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு தேர்வை […]