1 முதல் 10 ஆம் வகுப்பு வரை சத்துணவால் பயன்பெறும் மாணவர்களுக்கு உணவு பொருள்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உலக அளவில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஒருபுறம் ஏற்படுத்தி வர, இந்தியாவிலும் இதனுடைய தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி நிலையங்கள், மால்கள், தியேட்டர்கள், கோவில்கள் என அனைத்தும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மூடப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் பள்ளிகளுக்கு […]
Tag: மாணவர்கள்
மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நாளையோடு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நிறைவடைய இருக்கிறது. ஊரடங்கு உத்தரவு 6 முறை மாற்றி அமைக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஏழாவது முறையாக மேலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் அறிவித்திருந்தன. அதைத் தொடர்ந்து மத்திய […]
இரண்டு நாட்களுக்குள் விடுதியில் இருக்கும் மாணவர்களை காலி செய்யக் கோரி சென்னை ஐஐடி தெரிவித்தது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரனோ பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கல்வி கற்க வந்த மாணவர்களும், தமிழகத்தில் பணியாற்றி வந்த வட மாநில தொழிலாளர்களும் தங்களது சொந்த மாநிலங்களுக்கு , ஊர்களுக்கு செல்ல முடியாமல் தமிழகத்திலேயே சிக்கி தவித்து வந்தனர். இவர்களுக்கு […]
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் ரூ. 3.75கோடி மதிப்பில் புதிய மணிக்கூண்டை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நாட்கள் குறைவாக இருப்பதால் பாட புத்தகங்களின் பக்கங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார். இதற்கென முதல்வர் ஆணையின் படி 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அளிக்கும் அறிக்கையின் படி பாட புத்தகங்களின் பக்கங்களை குறைக்கப்படும் என அவர் கூறியுள்ளார். இதனிடையே 10ம் வகுப்பு மாணவர்களுக்கு […]
ஆன்லைன் வகுப்பு முறைகளை ஒழுங்குபடுத்த பள்ளிக்கல்வித்துறையின் அலுவலர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆன்லைன் வகுப்பு பற்றிய மத்திய அரசின் கருத்துக்கள் வந்தவுடன் அதைப்பற்றி பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளார். சுழற்சி முறை வகுப்புகள் பற்றி இன்னும் யோசிக்கவில்லை எனவும், இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்லை கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், 6 முதல் 9ம் என […]
கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் , நடப்பு கல்வியாண்டிற்கான பாடங்கள் ஆன்லைன் மூலமாக தற்போது தனியார் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. வழக்கு விவரம் : இந்த நிலையில், ஆன்லைன் மூலமாக அதிக நேரம் வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்களுக்கு உடல், மனரீதியிலான பாதிப்பு ஏற்படும் என விமல்மோகன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆன்லைனில் கற்பிக்கவும் தடை விதிக்க மனுவில் கோரிக்கை […]
சென்னை மாநகராட்சியில் இருந்து தொடர்பு கொண்டால் மட்டுமே மாணவர்கள் விடுதி அறைகளை காலி செய்ய வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக விடுதிகளில் தங்கி உள்ள மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் மாணவர்கள் பாதுகாப்பாக பல்கலை.க்கு வந்து மீண்டும் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளை மாநகராட்சியே மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது. மாநகராட்சியின் ஏற்பாடுகளில் திருப்தி இல்லை என்றால் விடுதிகளுக்கு வந்து செல்ல ஒப்புக்கொள்ள வேண்டாம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நேற்று […]
வரும் 21ம் தேதி சர்வதேச யோகா தினத்தன்று மாணவர், பேராசிரியர்கள் அவரவர் வீடுகளில் இருந்தவாறே யோகா செய்யவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலம் மாணவர்கள், பொதுமக்களுக்கு யோகா செய்வதன் அவசியத்தை பேராசிரியர்கள் விளக்க வேண்டும் என AICTE கேட்டுக்கொண்டுள்ளது. சா்வதேச யோகா தினம் கடந்த 2015ம் ஆண்டு முதல் ஜூன் 21ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பிரதமா் மோடியின் பரிந்துரையை ஏற்ற ஐ.நா.-வும் ஜூன் 21ம் தேதியை சர்வதேச உரோக தினமாக அறிவித்தது. இதையடுத்து […]
வீட்டிலிருந்து படிக்கும் மாணவர்களுக்காக அமேசான் புதிய பிரிவு ஒன்றை தொடங்கியுள்ளது கொரோனா தொற்று பரவலினால் நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் நெருக்கடியான சூழலில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடங்களை படித்து வருகின்றனர். இந்நிலையில் அமேசான் நிறுவனம் வீட்டிலிருந்தே படிக்கும் மாணவர்களுக்காக அவர்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் பொருட்களை உள்ளடக்கிய புது பிரிவு ஒன்றை தொடங்கப் போவதாக அறிவித்திருந்தது. அதன்படி புதிதாக தொடங்கப்பட்டு இருக்கும் பிரிவில் வீட்டிலிருந்து பயிலும் மாணவர்களுக்கு தேவைப்படும் லேப்டாப், ஸ்பீக்கர், பேனா, கணினி, பிரின்டர் […]
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமென பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்து வசதி ஏற்படுத்தித் தர சிறப்பு அதிகாரிகளை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தேவையான பேருந்துகளின் எண்ணிக்கை, வழித்தட விவரங்கள் வரும் 8ம் தேதி பகல் 3 மணிக்குள் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடத்த மார்ச் மாதம் 25ம் தேதி […]
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய மாணவர்களுக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் உள்ள மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத 115 சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என சென்னை மாவட்ட கல்வி நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. இதனால் சென்னை மாநகரில் கொரோனா பாதித்த பகுதிகளில் இருக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வு மையங்களுக்கு செல்லாமல் அவர்களுக்காக இந்த சிறப்பு மையங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனடிப்படையில் தலைநகர் சென்னையை பொறுத்தவரை அதிகமான இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட […]
மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்த பேராசியர்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. கூகுள் டிரைவ், வாட்ஸ்ஆப், ஜி-மெயில், ஸ்கைப் உள்ளிட்ட செயலிகள் மூலம் பாடம் நடத்த பேராசியர்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரி முதல்வர்களுக்கு பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. அதில், செமஸ்டர் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் ஆன்லைனை பயன்படுத்தி பேராசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்தலாம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது அனைத்து கல்வி நிறுவனங்களும் […]
கர்நாடக மாநில வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 7 மற்றும் 8ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என கர்நாடக தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். வருடந்தோறும் பள்ளிகளில் இறுதித் தேர்வுகள் வழக்கமாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும். புதிய அமர்வு பொதுவாக ஏப்ரல் மாதத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது அனைத்து கல்வி நிறுவனங்களும் இந்தியாவில் மூடப்பட்டுள்ளன. அனைத்து பள்ளிகளும் குறிப்பிட்ட காலத்திற்கு மூடப்பட்டுள்ளன. […]
கொரோனா நோய் தொற்று காரணமாக தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, I- ம் வகுப்பு முதல் VIII ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து சிபிஎஸ்சி (CBSE) பள்ளி மாணவர்களும் அடுத்த வகுப்பிற்கு உயர்த்தப்பட வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் டாக்டர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல IX முதல் XI வகுப்பு மாணவர்களை உள் மதிப்பீட்டின் அடிப்படையில் அடுத்த வகுப்புகளுக்கு உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இந்த முறை […]
ஈரோடு மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் கொரோனா தொற்று பற்றி வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியதால், அவர்களின் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். டி.என். பாளையம் பகுதியில் 24 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது என அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் வாட்ஸ் அப்பில் பொய்யாக வதந்தி பரப்பி விட்டனர். இதை அறிந்த போலீசார் அவர்களின் மீது வழக்கு பதிவு செய்தனர். இத […]
11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறுமென்று முதல்வர் தெரிவித்தார். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் விடுமுறை விட்டுள்ள சூழலில் உத்தரப்பிரதேச மாநில அரசு எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வர வேண்டாம். […]
மலேசியாவில் சிக்கி தவித்த இந்திய மாணவர்கள் 150 பேர் விசாகப்பட்டினம் அழைத்து வரப்பட்டனர். கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் மிரண்டு வருகின்றது. பல்வேறு நாடுகளும் அண்டை நாடுகளுடனான போக்குவரத்து சேவையை இரத்து செய்துள்ளது. இந்தியாவில் பரவி உள்ள இந்த வைரஸ் காரணமாக 120க்கும் மேற்பட்ட பாதிக்கபட்டுள்ளனர். இந்நிலையில் மலேசியாவில் 100க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது மலேசியாவில் பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாலும், விமானங்கள் தாமதமாவதாலும் மாணவர்கள் இந்தியா திரும்ப […]
மலேசியாவில் 100க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் மிரண்டு வருகின்றது. பல்வேறு நாடுகளும் அண்டை நாடுகளுடனான போக்குவரத்து சேவையை முடக்கியுள்ளது. இந்தியாவில் பரவி உள்ள இந்த வைரஸ் காரணமாக 100க்கும் மேற்பட்ட பாதிக்கபட்டுள்ளனர். இந்நிலையில் மலேசியாவில் 100க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலேசியாவில் பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாலும், விமானங்கள் தாமதமாவதாலும் மாணவர்கள் இந்தியா திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். மலேசியாவில் […]
இந்தியாவிலேயே மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது தமிழகத்தில் மட்டும்தான் என முதல்வர் பழனிசாமி திண்டுக்கல்லில் நடைபெறும் விழாவில் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மட்டுமின்றி மேலும் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைக்க மத்திய சுகாதாரத்துறையானது ஒப்புதல் வழங்கியது. அதன்படி ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவள்ளூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளானது அமைக்கப்பட உள்ளது என தமிழக அரசு அறிவித்தது. மேலும் அதற்கான அரசாணையும் கடந்த […]
மணல் சரிவில் சிக்கி பலியான மாணவர்கள் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது வேலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவன் அஜித்குமார் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் தினேஷ்குமார் ஏரிக்கு சென்ற பொழுது எதிர்பாராதவிதமாக ஏரியின் உள்ளே விழுந்துள்ளனர். ஏரியின் உள்ளே விழுந்த காரணத்தினால் மணல் சரிவில் சிக்கி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மாணவர்களின் உடலை மீட்க முடியாத காரணத்தினால் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.