சிவகங்கை மாவட்டத்திலுள்ள வி.மலம்பட்டி பகுதியில் ஹோட்டல் தொழிலாளியான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு வள்ளியப்பன்(20), சின்னையா(17), விஜயகுமார்(15) ஆகிய மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இதில் விஜயகுமார் வேலங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று பள்ளியில் நடைபெற்ற சிறப்பு வகுப்புக்கு வழக்கம் போல காலை 7 மணிக்கு விஜயகுமார் சென்றுள்ளார். இதனையடுத்து காலை உணவு இடைவேளையின் போது விஜயகுமார் பள்ளிக்கு வெளியே சென்றுள்ளார். […]
Tag: மாணவர் இறப்பு
கவுகாத்தியிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) பி.டிஇஎஸ் இறுதி ஆண்டு பயிலும் மாணவர் ஒருவர் அவரது விடுதி அறையில் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அதாவது உயிரிழந்த மாணவர் கேரளாவைச் சேர்ந்த சூர்யநாராயண் பிரேம் கிஷோர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்றுகாலை விடுதி அறையில் கண்டெடுக்கப்பட்ட அவரது உடலை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்கொலை குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை எனவும் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு […]
ராட்சத அலையில் சிக்கி ஐடிஐ மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள புளியந்தோப்பு பகுதியில் ஐடிஐ மாணவரான சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணன் தனது நண்பர்களான ஜீவா, தமிழரசன், கிஷோர், பூபாலன் உட்பட 6 பேருடன் மெரினா கடற்கரைக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ராட்சத அலையில் சிக்கிய பூபாலன் மற்றும் ஜீவாவை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி விட்டனர். ஆனால் ராட்சத அலையில் சிக்கி சரவணன் கடலில் மூழ்கி விட்டார். இதுகுறித்து தகவல் […]