தமிழகத்தில் அம்மாபேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 20 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதால் பள்ளிகள் மூடப்பட்டன. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு […]
Tag: மாணவிகள்
தமிழகத்தில் அரசு பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். […]
நைஜீரியாவில் நூற்றுக்கணக்கான மாணவிகள் கடத்தப்பட்டுள்ளது பெற்றோர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரிய நாட்டின் வடமேற்கு பகுதியில் இருக்கும் ஜாம்பாரா என்ற பகுதியில் பள்ளி விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவிகள் கடத்தப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் பீதியடைந்துள்ளனர். ஆயுதமேந்தி விடுதிக்குள் நுழைந்த கொலைகார கும்பல் தான் மாணவிகளை கடத்தியதாக தெரிய வந்துள்ளது. தற்போது நைஜீரியாவில் மாணவிகள் கடத்தப்படுவது என்பது ஒன்றும் புதிதல்ல. அண்மைக்காலமாகவே ஆயுதமேந்திய கிரிமினல் கும்பல்கள் பள்ளி மாணவிகளையும், சிறுமிகளையும் கடத்தி பணம் பறிக்க முயற்சி செய்து […]
20 வருடங்களுக்கு முன்பு மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த ஆசிரியர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கனடா கேல்கரியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் கடந்த 1986ல் இருந்து 2016 வரை மைக்கேல் ஆண்ட்ரீசன் என்ற 57 வயது ஆசிரியர் பணி புரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு பெண் ஒருவர் போலீசிடம் வந்து கடந்த 2001-ஆம் ஆண்டு தான் படித்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என புகார் அளித்தார். இதேபோல 1999 முதல் […]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவ சிலை திறப்புக்கு மாணவிகள் அனைவரும் புடவை அணிந்து தான் வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவ சிலை திறப்புக்கு வரும் மாணவிகள் அனைவரும் புடவை அணிந்து வர வேண்டும் என உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வருகின்ற 28 ஆம் தேதி சென்னை லேடி வெலிங்டன் சீமாட்டி ஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெறும் திறப்பு விழாவுக்கு லேடி வெலிங்டன், ராணி மேரி மற்றும் மாநில கல்லூரி […]
கல்லூரி முதல்வர் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி வந்தது தைரியமிக்க மாணவியின் செயலால் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் நைனிடால் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லூரியின் முதல்வர் ஒருவர் மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல்களை அனுப்பியதாக வழக்கு பதிவாகியுள்ளது என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “கல்லூரி மாணவி அளித்த புகாரின் அடிப்படையிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் கொடுத்த புகாரில் கல்லூரியின் முதல்வர் தகாத முறையில் நடந்து கொள்வதாக குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து […]
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவிகள் கர்ப்பம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலவியில் ஐந்து மாதங்களாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ள நேரத்தில் 7000க்கும் மேலான மாணவிகள் கர்ப்பமாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் பல்வேறு மாணவிகள் வயது 10ல் இருந்து 14 வயதுக்குள் உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த தகவலை அரசு அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர். சென்ற மார்ச் மாதம் கொரோனா காரணமாக நாட்டில் […]