கள்ளக்குறிச்சி பள்ளியில் உயிரிழந்த மாணவி பயன்படுத்திய செல்போனை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்தது தொடர்பாக நியாயமான விசாரணை நடத்த கோரி அவரது தந்தை ராமலிங்கம் தாக்கல் செய்த வழக்கு இன்றைய தினம் உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் முன்பாக விசாரணைக்கு வந்த போது, சிறப்பு புலனாய்வு விசாரணை குழு மற்றும் சிபிசிஐடி போலீசார் ஆகியவற்றின் அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் அரசு தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா […]
Tag: மாணவி மரணம்
வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கியது ஏற்புடையது அல்ல என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் இறந்த மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் சிவசங்கரன், ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியர் கீர்த்திகா ஆகிய ஐந்து பேரை சின்ன சேலம் போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஐந்து பேருக்கும் ஜாமீன் கோரி மனு தாக்கல் […]
நீட் தேர்வு முடிவு நேற்று இரவு வெளியான நிலையில், தமிழகத்தில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த அம்பத்தூர் பகுதியை சேர்ந்த லக்ஷனா ஸ்வேதா(19) நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அனிதா முதல் லக்ஷனா ஸ்வேதா வரை பல உயிர்களை காவு வாங்குகிறது நீட் என்ற கொடூர அரக்கன். தற்கொலை ஒருகாலத்திலும் தீர்வாகாது என்பதை பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் மற்றும் இரண்டு ஆசிரியைகள் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே கனியாமூர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13ஆம் தேதி பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தற்கொலை என பள்ளி தரப்பில் கூறப்பட்டாலும், இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டு பெற்றோர் தரப்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் 4 நாட்களுக்கு […]
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக அவர் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்றைய தினம் வந்த போது, தமிழக அரசின் சிபிசிஐடி தரப்பின் அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞசர் முகமது ஜின்னா ஆஜராகி, மூன்று அறிக்கைகளை சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 1.) பள்ளி கல்வித்துறை சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், கல்வி காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க 800 நடமாடும் மருத்துவக் […]
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக அவர் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு இன்றைய தினம் உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசினுடைய சிபிசிஐடி தரப்பின் அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞசர் முகமது ஜின்னா ஆஜராகி, மூன்று அறிக்கைகளை சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் பள்ளி கல்வித்துறை சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், கல்வி காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க 800 நடமாடும் மருத்துவக் குழு […]
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உததரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே கனியாமூர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 13ஆம் தேதி பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தற்கொலை என பள்ளி தரப்பில் கூறப்பட்டாலும், இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டு பெற்றோர் தரப்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் 4 நாட்களுக்கு பின் 17ஆம் தேதி வன்முறையாக […]
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி தாளாளர் ரவிக்குமார் உட்பட 5 பேரின் சிறைகாவல் ஆகஸ்ட் 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காணொளி மூலம் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், 5 பேரின் காவலை நீட்டித்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோரை முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர்களிடம், “மகளை இழந்து தவிக்கும் உங்கள் நிலையை நினைத்து வருந்துகிறேன். கொரோனாவால் நேரில் வர முடியவில்லை. இந்த விவகாரத்தில் நிச்சயமாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்”என்று உறுதி அளித்துள்ளார். நேற்று மாணவியின் தாய்,ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து மகளின் மரணத்திற்கு நீதி கேட்பேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரண வழக்கில் பள்ளியில் ஏற்பட்ட […]
கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவந்த மாணவி ஒருவர் கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்தத் தற்கொலைக் கடிதத்தின் அடிப்படையில் அதே பள்ளியில் பணியாற்றி வந்த மிதுன் சக்கரவர்த்தி என்ற ஆசிரியர் கைதுசெய்யப்பட்டார். மாணவியிடம் அவர் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட கோவை பள்ளி மாணவி வழக்கில் இரண்டு முதியவர்களை […]
கள்ளக்குறிச்சி மாணவியின் 2 உடற்கூராய்வு முடிவுகளையும் ஆய்வு செய்ய ஜிப்மர் மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் ஜிப்மர் தடயவியல் துறை பேராசிரியர்கள் குஷகுமார் சாஹா, சித்தார்த் தாஸ், அம்பிகா பிரசாத் பத்ரா ஆகியோர் உள்ளனர். ஒரு மாதத்தில் ஜிப்மர் குழு தனது அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஐந்து பேர் […]
மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் மாணவி உடல் காலை 11 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. காவலர்களின் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் ஸ்ரீமதியின் சொந்த கிராமம் தற்போது உள்ளது. சுடுகாட்டில் மாணவியின் உடல் புதைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதற்கு முன்பாக பெரிய நெசலூர் கிராமத்தில் அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீமதியின் உடலுக்கு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கிராம மக்கள், […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். அதன்பிறகு நீதிமன்றத்திலும் மாணவியின் மரணம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. மாணவியின் உடலை மறு உடற்கூராய்வு செய்யும்போது தங்கள் தரப்பு மருத்துவமரையும் […]
தனியார் பள்ளியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 17 வயதான ஸ்ரீமதி விடுதியில் தங்கி படித்து வந்தார். இவர் கடந்த 13ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் மரணம் தொடர்பாக கடந்த 17ஆம் தேதி நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. பள்ளி பேருந்துகள், போலீஸ் வாகனங்கள், பள்ளியில் உள்ள பொருட்கள் அனைத்தையும் கலவரக்காரர்கள் […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் மாணவியின் உடலை மறுஉடற்கூராய்வு நடத்த சென்னை உயர்நீதிமன்ற அனுமதி அளித்தது. மறு பிரேத பரிசோதனைக்கு 3 மருத்துவர்கள் கொண்ட குழுவை சென்னை உயர்நீதிமன்றம் அமைத்தது. இதனையடுத்து […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில் ஸ்ரீமதி ஜூலை 13ம் தேதி இறந்ததாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில்அந்த மாணவி 12ம் தேதி இரவு 10.23க்குஇறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. […]
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் கள்ளக்குறிச்சி மாணவிக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற உள்ளதாக சைபர் க்ரைம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இரவோடு இரவாக 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு ஆலங்குடியில் போராட்டம் நடைபெற உள்ளதாக வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வந்துள்ளது. இதை ஆய்வுசெய்த சைபர் க்ரைம் போலீசார், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 42 பேரை கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி மர்ம மரணம் விவகாரத்தில் நேற்று முன்தினம் போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடினர். இந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் மாணவி மரணம் விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. அதில் முதல் கட்ட நடவடிக்கையாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த […]
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அந்த பள்ளியை போராட்டக்காரர்கள் சூறையாடினர். இதை கண்டித்து தமிழக முழுவதும் தனியார் பள்ளிகள் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்ட நிலையில், தற்போது ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவி உடலை மறுபிரேத பரிசோதனை செய்யும்போது தங்கள் தரப்பு மருத்துவரை சேர்க்க வேண்டும் என்று மாணவியின் தந்தை ராமலிங்கம் […]
மாணவி உயிரிழந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த மாணவி ஸ்ரீமதி விடுதி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென வன்முறையில் ஈடுபட்டு பள்ளியை சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வன்முறையின் காரணமாக அப்பகுதியில் 144 […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்தமாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பான விவகாரம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகிகள் தெரிவித்த நிலையில் ,இது கொலை என்று மாணவியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் பள்ளி மாணவி மரணம் விவகாரத்தில் விசாரணை நடத்த பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. மாணவி மரணம் நடந்த இடத்தில் விசாரணை நடத்தி அறிக்கை […]
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த சின்ன சேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு […]
கரூர் மாவட்டத்தில் பாலியல் தொல்லை காரணமாக மாணவி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அந்தக் கடிதத்தில் பாலியல் தொல்லையால் உயிரிழக்கும் கடைசி பெண் நானாகத் தான் இருக்கணும் என்று அந்த மாணவி குறிப்பிட்டிருந்தார். அந்த வழக்கை தனிக்குழு அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாலியல் புகார் கூறிய பள்ளி மாணவி தற்கொலை வழக்கில், மாணவி படித்த பள்ளி ஆசிரியர் சரவணன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் […]
கோவை மாணவியின் மரணம் மனதை வருந்த செய்ததாக முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். கோவையில் தனியார் பள்ளியில் பயின்று வந்த பிளஸ் டூ மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதனால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதில் தனியார் பள்ளியின் ஆசிரியர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு அமைப்புகள் சார்பாக போராட்டம் நடைபெற்று வந்ததை அடுத்து பள்ளியின் முதல்வர் மீதும் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை […]