Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குப்பை தொட்டி வைக்காத கடைகளுக்கு அபராதம்”… மாநகராட்சி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!!!

சென்னை மாநகராட்சி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் இருந்து தினமும் சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. இதில் தென்னை, மரக்கழிவுகள் போன்ற தோட்ட கழிவுகளானது நார்கள் மற்றும் பயோ உருளைகளாக மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதேபோல பிளாஸ்டிக் கழிவுகள் கட்டுகளாக கட்டப்பட்டு மறுசுழற்சியாளர்களிடம் மற்றும் சிமெண்ட் ஆலைகளுக்கு எரிபொருளாக கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள கடைகளில் எளிதில் தரம் பிரிக்கும் விதமாக மக்கும்  குப்பை, மக்காத குப்பை […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் தாக்கம்… சென்னையில் வழக்கத்தைவிட 4 மடங்கு அதிகமான கழிவு…? மாநகராட்சி வெளியிட்ட தகவல்…!!!!

சென்னையில் நேற்று மாண்டஸ் புயல் கரையை கடந்துள்ளது. இந்த புயலினால் சென்னை மாநகரம் முழுவதும் கழிவுகள் அதிகமாகியுள்ளது. அதாவது தண்ணீர் தேங்காமல் மாநகராட்சி ஊழியர்கள் இரவோடு இரவாக இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது 1 முதல் 8 மண்டலம் வரை உள்ள பகுதிகளில் 47.67 மெட்ரிக் டன் தாவர கழிவுகளும், 9 முதல் 15 மண்டலம் வரையில் உள்ள பகுதிகளில் 893.42 மெட்ரிக் டன் கழிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகபட்ச கழிவு  எடுக்கப்பட்டதில் அடையாறு மண்டலம் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே…. வெள்ளம் பற்றி புகார் அளிக்க இந்த எண்ணுக்கு போன் பண்ணுங்க…. மாநகராட்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29ஆம் தேதி தொடங்கிய நிலையில் நவம்பர் இரண்டாம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களாகவே பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நவம்பர் 1 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தெற்கு கடலோர ஆந்திர மற்றும் வட தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

20 மாநகராட்சிகளில் 3,417 புதிய பணியிடங்கள்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!!

சென்னையை தவிர்த்து பிற மாநகராட்சிகளில் மக்கள் தொகையின் எண்ணிக்கைக்கு ஏற்ப 3,147 புதிய பணியிடங்களை தோற்றுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்திருக்கிறார். அதாவது பெருநகர சென்னை மாநகராட்சியை தவிர்த்து இதர மாநகராட்சிகளுக்கான விதிகள் கடந்த 1996 ஆம் வருடம் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் போது புதிய பணியிடங்களை உருவாக்குவது […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இனி சாலையில் மாடுகள் திரிந்தால் 3000 ரூபாய் அபராதம்….. சென்னை மாநகராட்சி அறிவிப்பு….!!!

சென்னை மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் ஏற்படும் சிரமங்களை கட்டுப்படுத்தும் வகையில் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த அபராத தொகையை 1550 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக மாநகராட்சி தற்போது உயர்த்தியுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக தெருக்களில் சுற்றி தெரியும் மாடுகள் மாநகராட்சி பொது சுகாதாரத் துறையினரால் பிடிக்கப்பட்டு மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு 1550 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

முக்கிய செய்தி…! குறைந்தபட்ச மாணவர்கள் இல்லாத பாடப்பிரிவுகள் நீக்கம்…. பள்ளிகளுக்கு பரந்த உத்தரவு…..!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விதத்தில் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள பகுதி மாநகராட்சி, நகராட்சி பகுதியாக இருந்தால் குறைந்தபட்சம் 30 மாணவர்களும், ஏனைய ஊரகப்பகுதியாக இருந்தால் குறைந்தபட்சம் மாணவர்களின் எண்ணிக்கை 15 ஆகவும் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வி த்துறை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அவ்வாறு குறைந்தபட்ச மானவர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் பாடப்பிரிவுகளை நீக்கம் செய்துவிட்டு அந்த பள்ளியில் […]

Categories
மாநில செய்திகள்

160 கடைகளுக்கு சீல்….. சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை….. மேயர் பிரியா உத்தரவு….!!!!

சென்னை சவுகார்பேட்டையில் தொழில் வரி செலுத்தாமல் இயங்கிய 160 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்தது, சென்னை மாநகராட்சி பகுதிகளில் நீண்ட காலமாகத் தொழில் வரி மற்றும் வணிக உரிமம் பெறாமல் கடைகள் நடத்தி வருவதால் சென்னை மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகின்றது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொழில் வரி செலுத்தாத கடைகள், தொழில் உரிமம் பெறாமல் செயல்பட்டு வரும் கடைகள், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை தொகை நிலுவை வைத்துள்ள கடைகள் மீது […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே…. உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற இனி…. மாநகராட்சி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னையில் சொத்து வரி பொது சீர் ஆய்வு அறிவிப்புகள் தபால் துறை மூலமாக சொத்து உரிமையாளர்களின் முகவரி சரிபார்க்கப்பட்டு வருகின்றது. சொத்து உரிமையாளர்கள் சொத்து வரி சீராய்வின் நிர்ணயிக்கப்பட்ட வரியை கணக்கிட்டு அறிய ஏதுவாக ஏற்கனவே மாநகராட்சியின் https://erp.chennaicorporation.gov.in/ptis/citizen/revisionNoticeOne!generateReport.action  என்ற இணையதள இணைப்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.இதில் சொத்து வரி எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் ஆகிய விவரங்களை பதிவு செய்து கணக்கீட்டு விவரத்தை எளிதில் அறிந்து கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து தற்போது குறிப்பிட்ட தெருவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

பொதுஇடத்தில் குப்பை கொட்டாதீங்க….! மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கை….. இதுவரை அபராதம் எவ்வளவு தெரியுமா?….!!!!

சென்னையில் பொது இடங்களில் குப்பை, கட்டிட கழிவுகளை கொட்டியவர்களுக்கு ரூபாய் 15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நகரை தூய்மையாக வைக்கவும், அழகுடன் பராமரிக்க சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் பொது இடங்களில் குப்பைகள் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் வழங்கப்பட்டு வருகின்றது. பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் வரையப்பட்டுள்ள கலர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு அந்த இடங்களில் தமிழக கலாச்சாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கழிவுகளை அகற்றும் மனிதர்கள்….. நீதிமன்றம் அதிரடி….!!!!

மாநகராட்சி, நகராட்சிகளில் பாதாள சாக்கடைகளில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தினால் சம்பந்தப்பட்ட ஆணையர்தான் பொறுப்பு என்றும் பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்ய நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியம் பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் 2,665 கட்டடங்களின் பணிகளை நிறுத்த…. சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு….!!!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2665 கட்டிடங்களின் கட்டுமான பணிகளை நிறுத்த குறிப்பானை வெளியிடப்பட்டுள்ளது.சென்னையில் அனுமதி இன்றி மற்றும் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் பணிகளையும் விதிமீறல்களையும் சரி செய்யவில்லை என்றால் 2403 கட்டுமான இடத்தை பூட்டி சீல் வைக்கப்படும்.விதி மீறல்களை சரி செய்யாத 39 கட்டிடங்கள் ஏற்கனவே போட்டி சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 2665 கட்டிடங்களின் கட்டுமான பணிகளை நிறுத்த பெருநகர சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் விதி மீறல்களை சரி செய்யவும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை பாரிமுலையில்….. 130 கடைகளுக்கு சீல்….. மாநகராட்சி அதிரடி….!!!

சென்னையில் பாரி முனையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 130 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னை பாரி முனையில் உள்ள ரத்தன் பஜார், பிரேசர் பிரிட்ஜ் சாலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 400 கடைகளில் 130 கடைகள் கடந்த சில ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதையடுத்து நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் உள்ள கடைகளுக்கு மாநகராட்சி சார்பில் இருந்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருந்த போதிலும் கடைகளில் இருந்து வாடகை வரவில்லை என்பதால் நிலுவைத் தொகையாக 13வது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையின் பிறந்த நாள்… “சமூக வலைதள ரீல்ஸ் போட்டிகள்”… மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

சென்னை பிறந்த தினத்தை முன்னிட்டு ஓவியம், புகைப்படம், குறும்படம் சமூக வலைதளங்களில்  போட்டிகள் மாநகராட்சி சார்பில் நடைபெறுகின்றது. இது பற்றி பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, நம் சென்னையில் பிறந்த தினமான ஆகஸ்ட் 22ஆம் தேதி கொண்டாட பெருநகர சென்னை மாநகராட்சி சென்னை மக்களுக்கு ஓவிய போட்டி புகைப்பட போட்டி சோசியல் மீடியாவில் மற்றும் குறும்பட போட்டி நடத்த இருக்கின்றது. ஓவியப்போட்டியில் தேசியக்கொடியை தலைப்பாக வைத்து ஓவியங்கள் வரைந்தும் புகைப்பட போட்டியில் சென்னை […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் நாளை மெகா தடுப்பூசி முகாம்….. போடாதவங்க போட்டுக்கோங்க…. மாநகராட்சி அறிவிப்பு….!!!!

சென்னையில் நாளை 2000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடக்க இருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை 2000 இடங்களில் மெகா தடுப்பூசி முகம் நடைபெற உள்ளது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் சென்னையில் மட்டும் இதுவரை 32 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் மூலம் இதுவரை 40 லட்சத்து 34 ஆயிரத்து 27 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே…. சென்னையில் இனி “கியூ – ஆர்” கோடு மூலம் அபராதம்…. மாநகராட்சி புதிய அதிரடி….!!!!

சென்னையில் விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் இனிவரும் நாட்களில் qr கோடு மூலம் அபராதம் வசூலிக்கும் புதிய நடைமுறையை கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்துள்ளார்.சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரிடம் பணம் இல்லா பரிவர்த்தனை மூலம் அபராதம் விதிக்கும் நடைமுறை கலந்த 2018 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் போக்குவரத்து போலீசார் வைத்திருக்கும் கருவில் உடனடியாக அபரத்தை செலுத்தி விடுவார்கள். ஆனால் கார்டு இல்லாதவர்களை அரசு இ சேவை மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் 256 கடைகளுக்கு சீல்…. அதிரடியில் இறங்கிய மாநகராட்சி….!!!!

சென்னை மாந‌க‌ரின் முக்கியமான‌ வ‌ர்த்தக‌/வ‌ணிக‌ மைய‌மாக பரபரப்பு குறையாமல் செயல்பட்டு வருவது பாரிமுனை .இங்கு ஏராளமான நிறுவனங்களின் அலுவலகங்களும், கடைகளும் உள்ளன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த பகுதியில் பழமை வாய்ந்த கட்டிடங்களும் நிறைய உள்ளன. இந்த நிலையில்  மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் 256 கடைகளுக்கு மாநகராட்சி சீல் வைத்துள்ளது. வடக்கு கோட்டை சாலையில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாத கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். 256 கடைகள் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.91 கோடி செலவில்….. 5 இடங்களில்….. சென்னை மக்களுக்கு முக்கிய செய்தி…..!!!!

பெருநகர சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை நகரில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக 2021-22 ஆம் ஆண்டுக்கு 91 கோடியை 15 ஆவது நிதி குழு ஒதுக்கி உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு சென்னை நகர செயல்திட்ட அறிக்கை, நுண்ணறிய திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி சென்னையில் காற்றின் தரத்தை தொடர்ந்து கண்காணிக்க ஐந்து இடங்களில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி…. சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கு…. மாநகராட்சி புதிய அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனா நோயாளிகள் விவரங்களை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

போக்குவரத்துக்கு ஏற்படும் இடையூறு…. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…. ஆக்கிரமிப்புகள் அகற்றம்….!!

சாலைகளில் போக்குவரத்து இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சியினர் அகற்றியுள்ளனர். நெல்லையில் மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படும் வகையில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் பேனர்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் நெல்லை டவுன் வடக்கு ராஜ வீதி, கீழ ராஜவீதி சாலையில் அனுமதியின்றி செயல்பட்ட கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும் சாலைகளில் வைக்கப்பட்ட பேனர்களையும் மாநகராட்சி பணியாளர்கள் அகற்றியுள்ளனர். இந்த பணிகள் மாநகர நகர்நல அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மாநகராட்சியில்… நாளை “கொரோனா தடுப்பூசி முகாம்”… மேயர் பிரியா அறிவிப்பு…!!!

சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருப்பதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக நேற்று முன்தினம் ரிப்பன் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மேயர் பிரியா தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி முன்னிலை வகித்துள்ளார். இதுகுறித்து மேயர் பிரியா பேசியதாவது, சென்னை மாநகராட்சியில் நாளை ஞாயிற்றுக்கிழமை 3300 இடங்களில் மெகா கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் புதிதாக 6 மேம்பாலங்கள்… அமைச்சர் கே.என் நேரு அதிரடி அறிவிப்பு…!!!!!

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நகராட்சி நிர்வாக துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து கே என் நேரு வெளியிட்ட அறிவிப்புகள்,சென்னை மாநகராட்சியில் கூவம் ஆற்றின் குறுக்கே யூனியன் சாலையும், பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் சின்ன நோலம்பூர் மற்றும் ஓம் சக்தி நகர் போன்ற இடங்களில் இரண்டு உயர்மட்ட பாலங்கள் ரூபாய் 120 கோடி மதிப்பில் அமைக்கப்படுகிறது. கொருக்குப்பேட்டையில் உள்ள மணலி சாலையில் 2b ரயில்வே நந்திக்கடலில் ரூபாய் 150 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு மாநகராட்சி…. 7 பதவிகளையும் போட்டியின்றி கைப்பற்றி பெண்கள் சாதனை..!!

ஈரோடு மாநகராட்சியில் 7 பதவிகளுக்கான இடங்களில்  பெண்களே வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். ஈரோடு மாநகராட்சியில் கவுன்சிலர் தேர்தல் சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. அதன்பின் 60 பேர் கவுன்சிலராக பதவியேற்று கொண்டனர். பதவியேற்றவர்களில் ஒருவர் மேயராகவும், மற்றொருவர் துணை மேயராகவும்  போட்டி இல்லாமல் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து நேற்றுமுன்தினம் 4 மண்டலங்களுக்கு தலைவர் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் ஈரோடு மாநகராட்சியின்  நிலைக்குழு தலைவர்கள், நியமன குழு உறுப்பினர் தேர்தலை நேற்று  ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், […]

Categories
மாநில செய்திகள்

உத்தரவை மீறினால்…. கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்படும்…. மாநகராட்சி எச்சரிக்கை…!!!!!

விதிகளை மீறி கட்டப்பட்டும் கட்டிடங்களின் முகவரி மற்றும் உரிமையாளர்களின் விவரங் களை வெளியிட சிஎம்டிஏ முடி வெடுத்துள்ளது. சென்னையில் விதிமீறல் கட்டிடங்கள்  புற்றீசல் போல பெருகிவிட்ட நிலையில், சென்னை மாநகராட்சியும் விதி மீறிய கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண் டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. சென்னை மவுலிவாக்கத்தில் விதிகளை மீறிகட்டப்பட்ட 11 மாடி கட்டிடம் கடந்த ஆண்டு இடிந்து விழுந்தது தொடர்பான வழக்கு, கடந்த செவ்வாய்க்கிழமை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தலைமை வழக்கறிஞர் […]

Categories
மாநில செய்திகள்

அதிரடியாக களம் இறங்கிய திருச்சி மேயர்… அஞ்சி நடுங்கும் அதிகாரிகள்… !!!!!

மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கைக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். திருச்சி மாநகராட்சி மேயராக 3 அன்பழகன் மற்றும் துணை மேயராக திவ்யா போன்றோர் கடந்த 4ஆம் தேதி பதவி ஏற்றுள்ளனர். இரண்டு முறை துணை மேயர், ஐந்து முறை கவுன்சிலிங் என நீண்ட அனுபவம் கொண்ட அன்பழகன் மாநகராட்சி தொடர்பான அனைத்து விவரங்களையும் அறிந்தவர் என கூறப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளும்  மேயர் அன்பழகனுக்கு அத்துப்படி என்று திமுகவினர் பாராட்டு வருகின்றார்கள். அதற்கு ஏற்றார்போல் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே நோட் பண்ணிக்கோங்க…. மேயர் – கவுன்சிலர் தொடர்பு எண்…. வெளியான அதிரடி அறிவிப்பு…….!!!!

சென்னை மேயர் முதல் கவுன்சிலர்கள் வரையிலான அனைவரது தொடர்பு எண்களையும் மாநகராட்சி வெளியிட்டுள்ளது. வார்டு எண்: 74 ஆர்.பிரியா 044-25619300, 044-25384438 சென்னை மாநகராட்சி துணை மேயர்: வார்டு எண்: 169 மகேஷ்குமார் 044-25619210, 044-25382979 சென்னை மாமன்ற உறுப்பினர்கள் (கவுன்சிலர்கள்): வார்டு எண்: 1 சிவக்குமார் 9445727777 வார்டு எண்: 2 கோமதி சந்தோஷ்குமார் 8056161161 வார்டு எண்: 3 தமிழரசன் 9884303000 வார்டு எண்: 4 ஜெயராமன் 9840823517 வார்டு எண்: 5 சொக்கலிங்கம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: மாநகராட்சியில் இதுவரை எந்த ஒரு வெற்றியும் இல்ல!…. தேமுதிகவின் நிலை என்ன?!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#LocalBodyElections2022: தூத்துக்குடியில் தொடர் முன்னிலையில் திமுக….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: நாகர்கோவில் மாநகராட்சி…. 21 வயது இளம்பெண் வெற்றி…. முன்னிலையில் திமுக….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்…. வாக்குச்சாவடிகளுக்கு பொருட்கள் தயார் செய்யும் பணி தீவிரம்… தேர்தல் பார்வையாளர் ஆய்வு..!!

சேலம்  மாநகராட்சியில்   வாக்குச்சாவடிகளுக்கு   அனுப்ப  இருக்கும்  பொருட்கள்  அனைத்தும்  சரியாக   இருக்கிறதா என்று  தேர்தல் பார்வையாளர்  அண்ணாதுரை  ஆய்வு  மேற்கொண்டார்.  சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள்  உறுப்பினர்  பதவிகளுக்கு தேர்தல்  நடத்துவதற்கான  பணிகள்  தீவிரமாக  நடைபெற்றுவருகின்றன.   இதற்காக  மாநகர பகுதியில் 709 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகளுக்கு தேவையான 84 வகையான பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதாவது  கொரோனா நோய் தொற்று தடுப்பு  நடவடிக்கையாக  709 வாக்குச்சாவடிகளில்  வாக்காளர்களுக்கு  தேவையான வெப்பமானி, சானிடைசர், முககவசம்,  கையுறைகள், […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை முழுவதும் இன்று முதல்…. மாநகராட்சி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு சளி, உடல் சோர்வு மற்றும் காய்ச்சல் உள்ளிட்டவை இருந்தால் கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கொள்பவர்களுக்கு இன்று முதல் மருத்துவ தொகுப்பு வழங்கப்படும் என்ற சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்பவர்களுக்கு முடிவு வருவதற்கு முன்பே […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை…. ஜனவரி 31 முதல் பள்ளிகள் மூடல்…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஜனவரி 31-ஆம் தேதி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

#BIG BREAKING: சென்னையில் இனி 15 நாட்களுக்கு ஒருமுறை…. மாநகராட்சி அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான்வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : பேனர்களை அகற்றுங்கள்….. மாநகராட்சி எச்சரிக்கை…..!!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட பேனர்களை உடனே அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் செயல் பொறியாளர் வலுக்கும் மாநகர வருவாய் அலுவலர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து விதிகளின்படி அபராதம் வசூலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“மாஸ் காட்டும் சென்னை மக்கள்”…. சென்னை மாநகராட்சி சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் இரண்டு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நவம்பர் மாதம் இறுதிக்குள் 100% தடுப்பூசி செலுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது வரை 10 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. அதில் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஒவ்வொரு முகாமிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மாடுகள் வெளியே வந்தால் அபராதம்…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் தெரு மற்றும் சாலையில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று திருச்சி மாநகராட்சி அறிவித்துள்ளது. தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்களுக்கும், பொது சுகாதாரத்திற்கு கேடு ஏற்பட்டு வருகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டு கால்நடைகளை வளர்க்கும் நபர்கள் தங்களுக்கு சொந்தமான கால்நடைகளை தங்களது வளாகத்திற்குள்ளேயே கட்டிவைத்து சுகாதார முறைப்படி வளர்த்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அவ்வாறு இல்லாமல் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை மாநகராட்சி மூலம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மக்களே, கவனமாக இருங்க…. கிளம்பிருச்சு புதிய ஆபத்து… மாநகராட்சி கடும் எச்சரிக்கை….!!!!

கோவை மாவட்டத்தில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மாநகராட்சி பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கோவை மாவட்டத்தில் இருவருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வீட்டை விட்டு வெளியே வரும்போது முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக செல்லும்படி கோவை மாநகராட்சி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. வீட்டை தூய்மையாக வைத்திருங்கள். கைகளை அடிக்கடி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: சென்னையில் 17 சுரங்கப்பாதைகளில் மழைநீர் அகற்றம்… சென்னை மாநகராட்சி…!!!

சென்னையில் 17 சுரங்கப்பாதையில் மழைநீர் அகற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் அதிக மழை பெய்தது. இதனால் சென்னையின் பல முக்கிய இடங்கள் வெள்ள காடாக மாறியது. மேலும் வெள்ளநீர் வீட்டுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் சுரங்கப்பாதைகள் முழுவதும் மழை நீரால் மூழ்கியது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி அதனை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில் தற்போது வரை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் 200 வார்டுகளில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்….. மாநகராட்சி அறிவிப்பு…!!!!

சென்னையில் தொடர் கனமழை காரணமாக டெங்கு மற்றும் மலேரியா நோய் பரவுவதை தடுக்கும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். வடகிழக்கு பருவமழை,வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. மாநகராட்சி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.தெருக்களில் தேங்கிய மழை நீரில் அதிக அளவு கொசு உற்பத்தியாகி டெங்கு மற்றும் மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் ஏற்படும் சூழல் உள்ளது. அதனால் சென்னை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

Breaking: சென்னை மழை, வெள்ளம் வீடியோவை யாரும் நம்ப வேண்டாம்…. மாநகராட்சி….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது கரையை கடக்க தொடங்கியுள்ளதால் நேற்று மாலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.அதிலும் குறிப்பாக சென்னையில் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதனை ராட்சச மோட்டார்கள் மூலம் உறிஞ்சும் பணி நடந்து கொண்டிருக்கிறது.மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் உடனடியாக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் 240 இடங்களில் மழைநீர் அகற்றம்…. மாநகராட்சி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. வாகனங்கள் அனைத்தும் மழைநீரில் ஊர்ந்து செல்கின்றன. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் தேங்கியுள்ள மழை நீரை ராட்சத மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னையில் மழை நீர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே இதை கட்டாயம் செய்யுங்க…. மாநகராட்சி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மழைக் காலங்களில் பரவும் வயிற்றுப்போக்கு, காலரா,மஞ்சள் காமாலை மற்றும் டைபாய்டு போன்ற நோய்கள் வராமல் தடுக்க குடிநீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்க வேண்டும். உணவு உட்கொள்ளும் முன்பும், கழிவறையை பயன்படுத்திய பிறகும் சோப்பு பயன்படுத்தி முறையாக 20 நொடிகள் கைகளை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.வீட்டிற்கு வெளியில் செல்லும்போது காலணிகளை அணிந்து செல்லலாம். வீட்டிற்கு வெளியில் சென்று வந்த ஒவ்வொரு முறையும் கை கால்களை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மக்களே…. உடனே நோட் பண்ணிக்கோங்க….. மாநகராட்சி முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. வாகனங்கள் அனைத்தும் மழைநீரின் ஊர்ந்து செல்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் உடனே செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் முன்னெச்சரிக்கை பணிகளை துரிதப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையில் மழை வெள்ள மீட்பு பணிகளை மேற்கொள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே…. அவசர உதவிக்கு இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. மாநகராட்சி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. அதுமட்டுமல்லாமல் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து துறை அதிகாரிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பேரிடர் காலத்தில் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை,வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்களை மாநகராட்சி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே…. பருவமழை, பேரிடர் காலங்களில்…. மாநகராட்சி முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. அதுமட்டுமல்லாமல் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து துறை அதிகாரிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பேரிடர் காலத்தில் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் நெடுஞ்சாலைத் துறை தொடர்பான தகவல்கள் மற்றும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கொரோனா விதிகளை மீறினால்…. கடைகளுக்கு கட்டாயம் அபராதம்…. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமலில் இருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி சில ஊரடங்கு கட்டுப்பாடுகள் நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்க படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. தற்போது பண்டிகை காலம் என்பதால் அதற்கு ஏற்றவாறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுகின்றன. அதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் கூட்டம் கூடுவதை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே அலெர்ட் ஆகுங்க… இதை செய்தால் ரூ.5000 அபராதம்…. மாநகராட்சி எச்சரிக்கை….!!!

சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள  செய்தியில், ” பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளைத் தூக்கி எறிபவர்கள், வாகனங்களிலிருந்து குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தரம் பிரிக்கப்படாத குப்பைகளைக் கொட்டுபவர்களில் தனிநபர் இல்லங்களுக்கு ரூ.100, அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு ரூ.1,000, பெருமளவு குப்பை  உருவாக்குபவர்களுக்கு ரூ.5,000 என அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் கட்டுமான மற்றும் இடிபாடு கழிவுகளைக் கொட்டுபவர்களில் 1 டன் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

2 ஆண்டுகளில் குப்பைகளே இல்லா திருப்பூர்…. மாநகராட்சி புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தை குப்பைகள் அற்ற மாநகராட்சியாக திருப்பூரை மாற்றும் திட்டத்தின் துவக்கமாக “ஜீரோ வேஸ்ட் திருப்பூர்” என்ற இயக்கம் திருப்பூரில் துவங்கியுள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தினமும் ஏறத்தாழ 500 மெட்ரிக் டன் அளவுக்கு சேர்கிறது பல்வேறு வழிகளில் இவை அகற்றும் வகையில் பணிகள் திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகிறது. குப்பைகள் சேர்வதை தவிர்த்தல், குப்பையை தரம் பிரித்து வழங்குதல், மறுசுழற்சி முறையில் பயன்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக குப்பை பிரச்சினைக்கு தீர்வு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆண்டுக்கு 25 ஆயிரம் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு…. சென்னை மாநகராட்சி அதிரடி…!!!!

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்துவற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது . கடந்த 2018 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் தெரு நாய்கள் எண்ணிக்கை  58 ஆயிரமாக இருந்தது. தற்போது உள்ள தெருநாய்களின் எண்ணிக்கை 80 ஆயிரம் ஆக உயர்ந்து இருக்கிறது. சுப்ரீம் கோர்ட் உத்தரவு மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி தெரு நாய்களை அடித்து கொள்ளக்கூடாது. அதன் அடிப்படையில் தெருநாய்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டு எந்த இடத்தில் இருந்து எடுத்துச் செல்லப்படுகிறதோ […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே ரெடியா இருங்க…. வரும் 19 ஆம் தேதி…. மாநகராட்சி அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதில் 28 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில் சென்னையில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 1600 முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு திட்டமிட்டு உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதனால் இந்த அரிய வாய்ப்பை தவற […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய தீவிர ஊரடங்கு?….. அரசு அதிரடி முடிவு…..!!!

சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததையடுத்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். அதனால் திரையரங்குகள் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்டவையும் பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வந்தாலும் ஒரு சில மக்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள அச்சம் கொள்கின்றனர். அதனால் தினந்தோறும் 200 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இது கொரோனா மூன்றாவது அலைக்கு வழிவகுக்கும் என மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.அதனால் கொரோனா […]

Categories

Tech |