Categories
மாநில செய்திகள்

புற்றுநோய் விழிப்புணர்வு! 6 மணி்நேரம் சிறுவன் செய்த செயல்…. உலக சாதனை புத்தகத்தில் கிடைத்த இடம்….!!!!.!!!

புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுவன் கார்த்திக் தொடர்ந்து 6 மணி்நேரம் வாள்வீசி சாதனை படைத்தார். கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த அழகர் சாமி-கீதா தம்பதியினரின் மகன் கார்த்திக்(14) ஆவார். இதில் கார்த்திக் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிலம்பம் கலையின வாள்வீச்சை தொடர்ந்து 6 மணிநேரம் சுற்றி 3 உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். முன்பாக துடியலூர் பகுதியிலுள்ள உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அதிகாலையில் தன் சாதனையை துவங்கிய கார்த்திக் 6 […]

Categories
மாநில செய்திகள்

மே-20 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. எந்த மாவட்டம் தெரியுமா…? அதிரடி அறிவிப்பு…!!!!

உதகையில் நடைபெறும் 124வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். இதையொட்டி 20-ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார். ஆனால் 12-ம் வகுப்பு உட்பட அனைத்து கல்வி தேர்வுகளும் வழக்கம்போல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகம் முழுவதும் இன்று மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதனால் இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுக் கூடங்கள் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மறைமுகமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்போ எதிர்த்தீங்க…. இப்போ அதையே செய்யுறீங்க….! திமுக இரட்டைவேடம்…. ஓபிஎஸ் விளாசல்…!!!!!

தமிழக அரசு 150% சொத்துவரி உயர்வு என்ற அதிர்ச்சி அறிவிப்பால் மக்களை நிலைகுலைய வைத்துள்ளது. ஓய்வூதியம் பெறுவோர் தனக்கென கட்டிய சின்னஞ்சிறு வீடுகளுக்கு சொத்து வரி கட்ட முடியாமல் அல்லல் படும் நிலையையும், வாடகைக்கு குடி இருப்பவர்கள் மீது வீட்டு உரிமையாளர்கள் சொத்து வரியை சேர்த்து உயர்த்துவதும், மேலும் வணிக நிறுவனங்கள் சொத்து வரி உயர்வை பொருட்களின் மீது வைத்து விலையை உயர்த்தும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஆட்சியில் இல்லாதபோது சொத்து வரியை […]

Categories
மாநில செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு…! தரிசனத்திற்கு அனுமதி…. கடலுக்கு செல்ல தடை…!!!!

தமிழகத்தில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக புத்தாண்டையொட்டி  அனைத்து கடற்கரைப் பகுதிகளிலும் பொதுமக்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதி உள்பட அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் பொதுமக்கள் முகக் கவசம், சமூகஇடைவெளியை கடைப்பிடிப்பதை சம்பந்தப்பட்ட நிர்வாகிகள், அலுவலர்கள் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல்…. முதல்வர் அறிவுறுத்தல்…!!!!

தமிழகத்தில் கொரோனா பிரச்சினை இன்னும் ஓயாத நிலையில் ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் ஒமைக்ரான் நுழைந்துள்ளது. எனவே  ஒமைக்ரான் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ஜன-8 முதல் மதுரையிலிருந்து விமானசேவை…. பயணிகளுக்கு குட் நியூஸ்…!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்த சூழலில் அனைத்து விமான சேவைகளும் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி கொரோனா ஊரடங்கிற்கு பின் தற்போது மதுரையிலிருந்து இலங்கை, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜனவரி 8-ந்தேதி முதல் மதுரையிலிருந்து ஐக்கிய அரபு அமீரக நகரங்களில் ஒன்றான சார்ஜாவிற்கு நேரடியாக பயணிகள் விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஒமைக்ரான்: தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு…? வெளியான மிக முக்கிய தகவல்…!!!

கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் ஒமைக்ரான் […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடு…. முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட ஒரு நிமிடம் கூட மது விற்பனை செய்யப்பட மாட்டாது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட நேரம் தவிர மற்ற நேரங்களில் ஒரு நிமிடம் கூட மது விற்பனை செய்யப்பட மாட்டாது. மேலும் விற்பனை நேரம் முடிவடைந்த பிறகு பார்களில் மது விற்பனை செய்யக்கூடாது என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதையும் மீறி விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையின் […]

Categories
மாநில செய்திகள்

EX மினிஸ்டர் மணிகண்டனின் முன் ஜாமீன் மனு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

முன்னாள் அமைச்சரான மணிகண்டன் என்பவருக்கு எதிராக நடிகை சாந்தினி காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து அமைச்சர் மணிகண்டன் மீது கற்பழிப்பு செய்தல், கடுமையாக தாக்குதல், ஏமாற்றுதல், பாலியல் கொடுமை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்ததாக நடிகை சாந்தினி புகார் கூறியதை அடுத்து மணிகண்டனை கைது செய்ய போலீசார் திட்டமிட்டனர். ஆனால் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் கோரி மணிகண்டன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking : நாடு முழுவதும் மாநில, சிபிஎஸ்இ திட்டத்தின் கீழ் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்த அனுமதி!

நாடு முழுவதும் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்த உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை,ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், நாடு முழுவதும் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்த உள்துறை […]

Categories

Tech |