Categories
மாநில செய்திகள்

7வருஷமா தவிக்கின்றோம்…! எங்களுக்கு ஒரு வழி சொல்லுங்க… வீட்டுக்கு படையெடுத்த ஆசிரியர்கள்.. ஈரோட்டில் பரபரப்பு …!!

பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் வீட்டிற்கு 500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் படையெடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கோபிசெட்டிபாளையம் குள்ளம் பாளையத்தில் அமைந்துள்ள பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வீட்டிற்கு 500க்கும் மேற்பட்டோர் படையெடுத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் வெள்ளாளபாளையம் எனும் இடத்தில் காவல்துறையினரால் நிறுத்தி வைக்கப்பட்டனர். அதாவது பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வெயிட்டேஜ் முறையின் அடிப்படையில் பணிகள் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். எனினும் தேர்ச்சி பெற்று எட்டு வருடங்கள் கடந்த […]

Categories
ஆன்மிகம் மாநில செய்திகள்

தைப்பூசம்: பக்தர்களே ஹேப்பி நியூஸ்…. முருகனை தரிசிக்க 350 சிறப்பு பஸ் சர்வீஸ்…!!

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து கலக்கம் அறிவித்துள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான மூன்றாம் படை வீடு பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஜனவரி 31ஆம் தேதி வரை இந்த திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தைப்பூச தேரோட்டம் வருகிற 28-ஆம் தேதி நடக்கிறது. தைப்பூசத் திருநாளை முன்னிட்டு ஜனவரி 28ஆம் தேதியை தமிழக அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. மேலும் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

ஆன்லைன் வகுப்பு வழிமுறை வெளியீடு….!!

ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. ஆன்லைன், ஆஃப் லைன் பகுதியளவு  என்று  மூன்று முறைகளில் வகுப்புகளை நடத்தலாம் என்று தெரிவித்துள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொலைக்காட்சிகள் மூலம் பாடம் நடத்தப்படும் என்றும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு வழங்கியுள்ள லேப் டாப்  மூலமாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும்…..!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்புவதுடன் அதில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்  ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கினால்  அரசாங்கத்தை நம்பி படித்து ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நியாயம் செய்வதாக அமையும் […]

Categories
மாநில செய்திகள்

வரும் 7ம் தேதி ரேசன் கடைகள் செயல்படும்…!!

ஆகஸ்ட் மாதத்திற்கான ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் 1,3,4 ஆகிய தேதிகளில் வீடுகள் தோறும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை அடுத்து  ரேஷன் கடைகளில் விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன இம்மாதம் நாள்தோறும் 225 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் பொருட்களை வழங்க ஊழியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. டோக்கனில் குறிப்பிடாத நேரத்தில் பொருள் வழங்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நியாயவிலை கடைகளில் குடும்ப அட்டைத்தார் சார்பாக ஒருவர் மட்டுமே பொருட்கள் வாங்க வேண்டும் என்றும் வரும் […]

Categories
மாநில செய்திகள்

ஓமனில் சிக்கித் தவிக்கும் தமிழக இளைஞர்கள் – மீட்க கோரிக்கை….!!!!!

கொரோனாவால் வேலை இழந்து ஓமனில் சிக்கித் தவிக்கும் 750க்கும் மேற்பட்ட தமிழக இளைஞர்கள் தங்களை மீட்குமாறு சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளனர் ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 750க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஓமனில் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா தாக்கம் காரணமாக அவர்கள் பணிபுரிந்து வந்த நிறுவனம் மூடப்பட்டு போக்குவரத்து முடக்கப்பட்டு உள்ளதால் அவர்கள் அனைவரும் தாயகம் திரும்ப இயலாமல் தவித்து வருகின்றனர். மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊர் திரும்ப அந்தந்த மாநில அரசுகள் […]

Categories
அரசியல்

இந்தியாவிலேயே கொரோனா பரிசோதனையில் தமிழகம் முதலிடம்

இந்தியாவிலேயே கொரோனா பரிசோதனையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் இதுவரை 24 லட்சத்து 70 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாளை மறுநாளுடன் இம்மாதம் 31-ஆம் தேதி ஊரடங்கு முடிவடையும் நிலையில் அதனை நீடிப்பது மற்றும் மேலும் தொடர்புகளை அறிவிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ்  முறையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார் இந்த ஆலோசனை கூட்டத்தில் கிராமப் பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும், சென்னையில் கூடுதல் தளர்வுகளை […]

Categories
மாநில செய்திகள்

தங்கம் விலையில் புதிய உச்சம்… கலக்கத்தில் மக்கள்…!!!

தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடைந்து மக்கள் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் விலையில் இன்றும் புதிய உச்சம் தொட்டு உள்ளது. சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்து 40 ஆயிரத்து 512 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 27 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு 216 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 5 ஆயிரத்து 64 ரூபாய்க்கும் ஒரு சவரன் 40 ஆயிரத்து 512 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. […]

Categories
அரசியல்

ஊரடங்கு மீறல் – ரூ.19.08 கோடி அபராதம் வசூல் …..!!!!

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை 19 கோடியே 8 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. தடையை மீறியவர்களிடம் அபராதம் வசூலித்தல், சிறை தண்டனை மற்றும் வாகன பறிமுதல் என காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வந்தனர். அவ்வகையில் கொரோனா ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் கடந்த 126 நாட்களில் 9 லட்சத்து […]

Categories
மாநில செய்திகள்

மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை…..!!

ஜூலை 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வருகிற ஜூலை 31-ஆம் தேதியுடன் நான்காம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ளது. இதனை அடுத்த முதலமைச்சர் பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுயுடன் காணொளி காட்சி வாயிலாக நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். அதேபோன்று நாளைய தினம் அனைத்து […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….!!!

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலைஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் கூறுகையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால்  அடுத்து  24 மணி நேரத்திற்குள் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி ஆகிய மாவட்டகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றார். தென் தமிழகம் உள்மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

வடமாநிலங்களில் பெய்துவரும் கனமழை – கோவில்பட்டியில் உற்பத்தியாகும் தீப்பெட்டிகள் தேக்கம்….!!

வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் லாரி போக்குவரத்து முடங்கி கோவில்பட்டியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன. தமிழகத்தில் தீப்பெட்டி உற்பத்தியில் முக்கிய பங்காற்றுவது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தான் அரசு அளித்த சில தளர்வுகளால் தீப்பெட்டி தொழிற்சாலையில் உற்பத்தி நடைபெற்று வருகிறது. வடமாநிலங்களில் தொடரும் கனமழையால் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது. இதன் காரணமாக கோவில்பட்டியில் உற்பத்தியான பல கோடி ரூபாய் மதிப்பிலான தீப்பெட்டிகள் தேக்கம் அடைந்துள்ளன. தீப்பெட்டி மூலப்பொருள்கள் 30 சதவிகிதம் […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து இயங்க உச்சநீதிமன்றம் அனுமதி..!!

தமிழகத்தில் பொது முடக்க காலத்தில் டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து இயங்க தடை இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பொது முடக்க காலத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என பொது நல வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தது. தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீடை  வழக்கின் முந்தைய  விசாரணையில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. அதாவது பொது முடக்க காலத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்கலாம் […]

Categories
மாநில செய்திகள்

“செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியீடு”…!!

கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து உயர் கல்வித்துறை அரசு ஆணை வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் அறிவிப்பில் தொடர்ந்து அரசாணை மற்றும் முந்தைய தேர்வுகளில் இருந்து எவ்வாறு மதிப்பெண் கணக்கிடுவது   என்பதற்கான அறிவிப்புகளை உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். முந்தைய செமஸ்டர் தேர்வுகலிருந்து  30வது விழுக்காடு மதிப்பெண்கள் இன்டர்ணல் மதிப்பெண்களில் இருந்து 70வது விழுக்காடு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்மை பாடங்கள் மற்றும் மொழிப் பாடங்களுக்கு எந்த அடிப்படையில் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா யுத்தம்.. நடக்கும் உயிரியல் போர்.. “வரும் முன் காப்போம்” – மு.க. ஸ்டாலின்..!!

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் “வரும் முன் காப்போம்” என்றும் சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறு தெரிவித்துள்ளார். கொரோனா  வைரஸ் பற்றிய அறிவியல் ஆதாரமற்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். மத்திய மாநில அரசுகள் இந்த நோய்க்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை […]

Categories

Tech |