குடிமகன்களின் வசதிக்காக சாராய கடை உரிமையாளர் தன் சொந்த செலவில் ஆற்றின் குறுக்கே தெப்பத்தை இயக்கி வருகின்றார். புதுச்சேரி தமிழக ஆற்றின் இடையே தெப்பம் ஒன்றை சாராயக் கடை உரிமையாளர் தன் சொந்த செலவில் இயக்கி வருகின்றார். புதுச்சேரியில் மது விலை குறைவு என்பதால் அப்பகுதியைச் சுற்றியுள்ள தமிழக குடிமகன்கள் அங்கு சென்று மதுவாங்கி குடிப்பதை வழக்கமாக்கிக் கொண்ட நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, தண்ணீர் இன்னும் குறையாமல் இருப்பதால் தமிழகத்தில் இருந்து […]
Tag: மாநிலச்செய்திகள்
இந்தியாவிலேயே முதன்முதலாக குஜராத்தில் எஃகு கழிவுகளை கொண்டு சாலை அமைக்கப் பட்டிருக்கின்றது. இந்தியா முழுவதும் உள்ள எஃகு ஆலைகளில் இருந்து வருடத்திற்கு 1.9 கோடி டன் கழிவுகள் வெளியேறி வீணாக கீழே கொட்டப்படுவதால் அதைப் பயன்படுத்தி சாலை போட ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில் குஜராத்தின் சூரத் நகரில் தொழிற்பேட்டையில் இந்த கழிவுகளைக் கொண்டு சாலை அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த சாலையானது ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு 6 வழி நெடுஞ்சாலையாக அமைக்கப்படுகின்றது. எப்போதும் போல் பிற பொருட்களை பயன்படுத்தாமல் […]
வெளிநாட்டு செல்லும் இந்திய மக்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. நம் நாட்டில் கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது. இதனிடையே 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு’ முதலிய தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு சர்வதேச விமான சேவை துவங்க உள்ள நிலையில் மத்திய அரசு பூஸ்டர் செலுத்துவது குறித்து பரிசீலித்து வருகின்றது. இதுபற்றி மூத்த அரசு […]
மீன் வளம் குறித்த கூட்டத்தில் இந்தியா-இலங்கை பங்கேற்ற ஐந்தாவது கூட்டுக் குழு இன்று நடைபெற்றது. இலங்கையிடம், இந்திய மீனவர்களை கையாளும்போது உயிர் இழப்புகளை தவிர்க்கும் வகையில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கின்றது இந்தியா. மீன் வளம் குறித்து இந்தியா மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையே இன்று ஐந்தாவது கூட்டகுழு கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் இந்தியா சார்பாக மீன்வளத் துறைச் செயலாளர் ஜகிந்திரநாத் தலைமையிலான குழு பங்கேற்றது. இலங்கை தரப்பில் […]
உலக அளவில் பத்திரிக்கை புகைப்படக் கலைஞர்களை கவுரவிக்கும் விதமாக ‘வேர்ல்ட் பிரஸ் போட்டோ’ அமைப்பு சார்பில் வழங்கபடும் விருதுக்கு தமிழர் ஒருவர் தேர்வு. உலக அளவில் பத்திரிக்கை கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் வழங்கப்படும் விருதை “வேர்ல்டு பிரஸ் போட்டோ” அமைப்பு வழங்கி வருகின்ற நிலையில் முதல் முறையாக தென்னிந்தியாவில் மதுரையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் செந்தில்குமரன் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றார். இவர் பத்து வருடங்களாக புலிகளுக்கும் மனிதர்களுக்குமான வாழ்வியலை புகைப்படத்தை பதிவு செய்ததற்காக தேர்வு […]
முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக துபாய் சென்றுள்ள நிலையில் இன்று மாலை அபுதாபி செல்கின்றார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக சென்ற 24-ஆம் தேதி துபாய் சென்றார். இந்நிலையில் துபாயில் இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அபுதாபி செல்ல இருக்கின்றார். வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் நலன் காக்க “புலம்பெயர்ந்த தமிழர் நல வாரியம்” அமைப்பதற்கு தேவையான நிதி வழங்கி உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இந்திய சமூகம் மற்றும் கலாச்சாரம் மற்றும் […]
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியை அம்மாநில பாஜக எம்எல்ஏ ஒருவர் கடுமையாக விமர்சித்திருக்கிறார். பீகாரில் நிதிஷ்குமார் கட்சியுடன் கூட்டணியில் உள்ள பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை அம்மாநிலத்தின் பாஜக எம்.எல்.ஏ ஹரிபூஷன் தாக்கூர் பச்சோல் கடுமையாக விமர்சித்திருக்கிறார். செய்தியாளர் சந்திப்பின்போது அவர் கூறியுள்ளதாவது, “ஒரு ஊழல் வழக்கில் முசாபர்பூர் காவல் கண்காணிப்பாளருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் அளித்திருந்தேன். ஆனால் அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அந்த அதிகாரி சட்டம் மற்றும் ஒழுங்கு நுணுக்கங்களை எனக்கு […]
செய்தியாளர்கள் சந்திப்பின்போது பாஜக எம்.எல்.ஏ மதராச பள்ளிகளை மூட வேண்டும் என கூறியது கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணியும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது தாவணகரே மாவட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ-வும் கர்நாடக முதல்-மந்திரியின் அரசியல் செயலாளருமான ரேணுகாச்சார்யா செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியுள்ளதாவது, “மதராச பள்ளிகளில் அப்பாவி மாணவர்களிடையே தேசவிரோதம் விதைக்கப்படுகிறது. மேலும் வன்முறையை தூண்டும் வகையில் பாடம் கற்பிக்கப்படுவதால் மதராச பள்ளிகளை தடை செய்ய கோரி கர்நாடக முதல்-மந்திரி மற்றும் […]
பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்ட இரு நாட்களிலும் அத்தியாவசியத் தேவைகள் பாதிக்கப்படாமல் கிடைக்கும் என அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வருகின்ற மார்ச் 28 மற்றும் 29 ஆம் தேதி பொது வேலைநிறுத்தம் தமிழகத்தில் நடைபெற இருப்பதால் அத்தியாவசிய சேவைகள் தடைபடாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக பொதுத்துறை நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றது. மத்திய தொழிற்சங்கங்கள், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் துறைக்கு விற்கக்கூடாது, பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வருகின்ற மார்ச் […]
நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சைக்கிள் பேரணி சென்ற அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர். இந்தியாவின் 75வது சுதந்திர அமுத தின விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தி மக்கள் தொடர்பு துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றின் சார்பாக சுதந்திர தின அமுத விழா நிகழ்ச்சிகள் ஒரு வாரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மாரத்தான் மற்றும் படகு போட்டிகள் உள்ளிட்டவை நடந்தது. இதன் விளைவாக இன்று சைக்கிள் பேரணியானது 6 […]
கோவை மாநகராட்சியின் 2022-23ஆம் வருடத்திற்கான பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில் மக்களிடையே எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழகத்தில் சென்றமாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றதில் திமுக அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யும் பணிகளில் ஒவ்வொரு மாநகராட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. இந்த வகையில் கோவை மாநகராட்சியில் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி 2022-2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கப்பட உள்ள நிலையில் பொது கூட்டமானது அன்று காலை 11:00 மணிக்கு […]
அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு மகிழ்ச்சியான செய்தியை கூறியிருக்கின்றது. தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகின்ற நிலையில் அண்மையில் அகவிலைப்படியை உயர்த்தி அறிக்கை வெளியிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு 7 முதல் 14 நாட்கள் தற்செயல் விடுமுறைக்கு தமிழக அரசு அறிவித்து இருக்கின்றது. இதை விரிவாக கூறுவதென்றால் சிகிச்சை பெற்ற நாட்கள், தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் என அனைத்திற்கும் மருத்துவச் சான்றிதழ் கொடுத்து சிறப்பு தற்செயல் விடுப்பு தமிழக அரசு […]
கோவையில் இருந்து செல்லும் மெமோ ரயில்கள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செயல்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈரோடு முதல் கோவை, ஈரோடு முதல் பாலக்காடு, சேலம் முதல் கோவை உள்ளிட்டவைகளில் உள்ளூர் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் 2020 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று காரணத்தினால் இந்த ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதனால் குறைந்த கட்டணத்தில் செல்லும் தொழிலாளர்கள், மாணவ-மாணவிகள் என பலரும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஈரோட்டில் […]
உடுமலை அமராவதி வனச்சரகம் பகுதியிலுள்ள 15 மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்காக வாட்ச் டவரில் அமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடிக்கு வந்து சுமார் 304 பேர் தங்களது வாக்கினை அளித்துள்ளார்கள். உடுமலை அமராவதி வனச்சரகம் பகுதியில் 15 மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளது. இந்த மலை பகுதியில் வசித்து வரும் பொதுமக்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுரிமை வழங்கப்படவில்லை. ஆனால் தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தளி பேரூராட்சியில் மேல் குருமலை, பூச்சி கொட்டாம் பாறை, குருமலை ஆகிய மலைவாழ்மக்கள் […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஜனவரி 31-ஆம் தேதி வரை மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதனால் மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பிப்ரவரி 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் வழக்கம் போல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடக்குமா அல்லது மீண்டும் 100 சதவீத […]
திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு காணொளி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழர்களுக்கு ஆபத்து என்றால் ? அதற்காக நான் எந்த தியாகத்தையும் செய்ய தயார் என்று கூறியுள்ளார். மேலும் நாங்கள் இந்தியை எதிர்ப்பவர்கள் கிடையாது. அதனுடைய ஆதிக்கத்திற்கு எதிரானவர்கள் என்று கூறினார். தமிழ் இனத்தின் மேன்மைக்காகவும், தமிழுக்காகவும் கடந்த ஆறு மாத காலத்தில் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் தமிழ் […]
நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்ப்பது, பொங்கல் பரிசு தொகுப்பில் புகார்கள் எழ காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தினார். அதோடு மட்டுமில்லாமல் அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடப்பதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது, தரமான பொருள்கள் மட்டுமே மக்களுக்கு […]
கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக அரசு இதுவரை தமிழகத்திற்காக எந்த ஒரு திட்டத்தையும் நடைமுறைபடுத்தாமல் அதிமுகவை குறை சொல்வது கடும் கண்டனத்திற்கு உரியது என்று ஓபிஎஸ் சாடியுள்ளார். மேலும் ஓபிஎஸ் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “திமுக அரசு கடந்த 12-ஆம் தேதி பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட 11 மருத்துவ கல்லூரிகளையும் தங்களது சாதனை போல சித்தரித்து வருகிறது. ஆனால் அதிமுக ஆட்சியில் இருந்த போது தான் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளின் […]
மாநில மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பரபரப்பு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில் “கொரோனா பாதித்தவர்களை உரிய மருத்துவ பரிசோதனை இல்லாமல் வீட்டு தனிமைக்கு அனுமதிக்க கூடாது. கோவிட் கேர் சென்டர் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். கொரோனாவின் அடுத்த அலையில் உயிரிழப்பை பெருமளவில் குறைக்க வேண்டும். அதேபோல் ஜி.சி.எம்.ஆர். வழிகாட்டுதலின்படி […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குமாறு பலமுறை அறிக்கை வாயிலாகவும், நாடாளுமன்ற அவைகளிலும் வலியுறுத்தியுள்ளார். ஆனால் அப்போது மத்திய அரசு அதனை கண்டுகொள்ளவில்லை. பின்னர் திமுக உயர் நீதிமன்றத்தை நாடியது. அதன் பிறகு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது. ஆனால் மத்திய பாஜக அரசு அதனை மதிக்கவில்லை. இதனால் திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அதன் பிறகே 27 % இட […]
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், திருவரங்கம் கல்லூரி உட்பட சுமார் 41 அரசு கல்லூரிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு நிலுவை மற்றும் ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் திருவரங்கம் உள்ளிட்ட 10 கலை கல்லூரிகளில் கடந்த 4 மாதங்களாக கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் பல்கலைக்கழகமோ, அரசோ அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இல்லை. அதற்கு மாறாக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு […]
ஓ.பன்னீர்செல்வம் கடந்த சட்டமன்ற தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியிலும், ப.ரவீந்திரநாத் 2019 நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியிலும் போட்டியிட்டனர். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் இருவரும் வேட்புமனு தாக்கல் செய்தபோது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், ஆண்டு வருமானம், விவசாய நிலங்கள், கல்வித்தகுதி, கடன் உள்ளிட்டவை குறித்த விவரங்களை தவறாக தெரிவித்துள்ளனர் என்று திமுக நிர்வாகி மிலானி என்பவர் மனு ஒன்றை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். மேலும் அதற்கான ஆவணங்கள் தன்னிடம் உள்ளதாகவும் […]
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் அம்மா உணவகங்கள் கவனிக்கப்படவில்லை என்றும் அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டு விட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் அம்மா உணவகத்தை கவனிக்கவில்லை அம்மா மினி கிளினிக்குகளை மூடி விட்டோம் என்று பட்டியலை படித்தார். இது போன்ற பட்டியலை படிக்க வேண்டும் என்றால் என்னிடம் எக்கச்சக்கமாக உள்ளது என்று கூறினார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர் மாண்புமிகு பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் ஓமந்தூரார் […]
நேற்று வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்கள் சந்திப்பின் போது பிரதமருக்கு தமிழக மக்கள் மீது ஏழு வருடங்களாக பாசமும், அன்பும் குறையாமல் இன்றளவும் இருந்து வருகிறது என்று கூறியுள்ளார். மேலும் பாஜகவின் முக்கிய நோக்கம் வேலுநாச்சியார் போன்ற சிறந்த தலைவர்களின் புகழை அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் இந்தியா முழுவதும் கொண்டு செல்வது தான் என்றார். அதனை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி […]
சசிகலா ஒவ்வொரு அறிக்கையிலும் தன்னை அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று கூறி வருகிறார். அதாவது தன்னுடைய ஒவ்வொரு அறிக்கையின் முடிவிலும் சசிகலா தன்னை அஇஅதிமுக கழக பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டிருப்பது வழக்கம். ஆனால் கடந்த 24-ஆம் தேதி எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு சசிகலா வெளியிட்டிருந்த அறிக்கையில் அஇஅதிமுக என்பது இடம்பெறவில்லை. இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது சசிகலா மீண்டும் தன்னை அதிமுக பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். […]
ஆள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு நேரத்தில் சாலையில் வலம் வந்த சிங்கங்களின் வீடியோ வலைத்தளங்களில் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள பிபவ் சாலையில் 2 சிங்க குட்டிகள் உட்பட 5 சிங்கங்கள் இரைத் தேடி நள்ளிரவு நேரத்தில் சாலையில் சுற்றித்திரிந்துள்ளன. இதனையடுத்து அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்த சிங்கங்கள் தீடிரென துறைமுகத்தில் நுழைந்தன. இதனைக் கண்ட ஊழியர்கள் அச்சத்தில் அலறியடித்து பாதுகாப்பான இடத்திற்கு சென்று பதுங்கியுள்ளனர். அதன்பின் அப்பகுதியில் உள்ள […]
புதுச்சேரி மாநிலத்தில் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா நோய் தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த பல மாநிலங்கள் முயற்சி செய்து வருகின்றனர். மேலும் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் 12ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 22 […]
சிவகங்கை திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மதுரை மாவட்டம், மதுரை தாலுகாவிலுள்ள அவனியாபுரம், வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறையின் முதன்மைச் செயலாளர் கோபால் வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழகத்தில் சில இடங்களில் 15 ஆம் தேதியிலிருந்து 31ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த கவர்னர் அனுமதி அளித்து […]
பண்டிகை காலம் என்பதால் தியேட்டர்கள் திறப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது நாடு முழுவதும் கொரோனா தோற்று பரவ தொடங்கியதை தொடர்ந்து மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பொது முடகத்தில் தளர்வுவர்கள் அளிக்கப்பட்டது. அக்டோபர் மாதம் 31ஆம் தேதியுடன் தளவர்களுடனான பொது முடக்கம் முடிவடைகிறது. இந்நிலையில் 28 ஆம் தேதி தமிழக முதல்வர் மேலும் சில தளர்வுகள் அளிப்பது தொடர்பாக மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார். நவம்பர் மாதம் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 3 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், ஆங்காங்கே அதனுடைய பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் சில வாரங்களுக்கு முன்பு வரை பாதிப்பு அதிகமாக இருந்தது. சென்னை மக்கள் கொரோனாவை கண்டு மிகவும் அச்சம் அடைந்து இருந்தனர். காரணம் நாளொன்றுக்கு […]
செப்டம்பர் மாத இறுதிக்குள் செமஸ்டர் தேர்வுகளை நடத்தும் கால சூழ்நிலை தமிழகத்தில் இல்லை என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவர்களின் இறுதியாண்டு தேர்வு குறித்து முடிவெடுக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வந்த மாணவர்களின் தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு […]