இன்று முதல் கோவில்கள் திறப்பு அனுமதி அளிக்கப்பட்டதால் பக்தர்கள் கோவிலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தரிசனம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் நேற்றுடன் 3 ஆம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில் இன்று தொடங்கியுள்ளது நான்காம் கட்ட ஊரடங்கு. இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில் பொது போக்குவரத்து, கோவில்கள் திறப்பு, பூங்காக்கள், ஷூட்டிங் அனுமதி, போன்றவை தொடங்கப்பட்டுள்ளன. இன்று முதல் பேருந்து சேவைகள் தொடங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து, திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி […]
Tag: மாநிலம்
பாஜக தனித்து நின்றாலும் நிச்சயம் வெற்றி பெறும் என பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். திருச்சி கருமண்டபம் பகுதியில் பாஜக இளைஞர் அணி மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்க வந்த எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, அதிமுக-பாஜக இடையே உள்ள உறவு சுமுகமாகவே இருக்கிறது என்றும், பாஜக தனித்து நின்றாலும் 60 இடங்களில் வெற்றி பெறும் என நம்பிக்கை அளித்துள்ளார். மேலும் சமீபத்தில் குற்றப்பின்னணி உடையவர்கள் பாஜகவில் இணைவதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு […]
தமிழகத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயங்காது என சம்மேளனத்தின் மாநில செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று இரவுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில் நாளை தொடங்குகிறது நான்காம் கட்ட ஊரடங்கு. இந்த ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்திருக்கிறது. அவற்றில் பொதுப்போக்குவரத்து, கோவில்கள் திறப்பு, ஷூட்டிங், மால்கள், பூங்காக்கள், இவற்றிற்கு அனுமதி என பல தளர்வுகளை கொடுத்துள்ளது. அந்த வகையில் பொது போக்குவரத்தை தொடங்க இருக்கும் நிலையில் தனியார் பேருந்துகள் இயங்காது என சம்மேளனத்தின் மாநில […]
பாஜகவில் இணைய வந்ததாக ஆயுதங்களுடன் வந்த நபர்களை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், ஓட்டேரி பகுதியில் கொரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், மாவட்ட செயலாளர் மற்றும் பிற பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டு, மளிகை பொருட்கள் போன்ற நிவாரணம் பொருள்களை மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு பாஜக தலைவர் எல்.முருகன் வழங்கினார். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகப்படும் நோக்கில் சிலர் சுற்றி வருவதை […]
பூங்காக்கள் சூட்டிங் போன்றவை நாளை அனுமதிக்கப்படும் நிலையில் அரசு சில நெறிமுறைகளை வழங்கியுள்ளது. தமிழகத்தில் இன்று இரவுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடைய இருக்கும் நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி, அதாவது நாளை நான்காம் கட்ட ஊரடங்கு தொடங்குகிறது. அதில் அரசு பல தளர்வுகளை வழங்கியுள்ளது. அந்த வகையில் பொது போக்குவரத்து, சினிமா சூட்டிங், பூங்கா, மால்கள், இவற்றிற்கு அனுமதி உண்டு என அரசு கூறியுள்ளது. மேலும் கோவில்களும் திறக்கலாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது. ஆனால் இந்த […]
தமிழகத்தில் சிறப்பு ரயில்களுக்கான தடை செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு நாளை தொடங்க இருக்கிறது. இந்த ஊரடங்கில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்திருக்கிறது. அந்த வகையில் பொது போக்குவரத்து மாவட்டத்திற்குள் இயங்கலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் விமான போக்குவரத்து ரயில் போக்குவரத்துக்கிற்கான தடை தொடரும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருப்பதன் […]
ஏற்றுமதி செயல்பாட்டில் தமிழகம் தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாநிலத்திலும் தற்போது ஏற்றுமதி என்பது முடக்கப்பட்டிருக்கும் நிலையில், பொதுவாக ஏற்றுமதி செயல்பாட்டில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது என்பது குறித்து, ட்விட்டரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், அரசு கொள்கை, வர்த்தக நிலவரம், ஏற்றுமதி சூழல், ஏற்றுமதி செயல்பாடு ஆகிய 4 அம்சங்களை கருத்தில் கொண்டு 2020ம் ஆண்டு ஏற்றுமதி தயார் நிலை குறியீட்டை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளதாகவும், […]
நான்காம் கட்ட தளர்வில் வங்கிகள் எந்தெந்த நாட்களில் செயல்படும் என்பது குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஊரடங்கு காலகட்டத்தில் மக்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்தனர். அந்த வகையில் தற்போது நான்காம் கட்ட ஊரடங்கில் சில முக்கிய தளர்வகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். இந்த நான்காம் கட்ட தளர்வில் வங்கிகள் குறித்து தமிழக அரசு தற்போது சில முக்கிய அறிவிப்பை கொடுத்துள்ளது. வங்கிகள் நம்முடைய பணத் தேவையைப் பூர்த்தி […]
நாளை முதல் சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்வு அமலாக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. நாடெங்கும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கில் அடி எடுத்து வைக்கும் பொதுமக்களுக்காக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு திட்டம் நாளை முதல் அமலாக்கப்படுகிறது. அதாவது தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 48 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இந்த சுங்கச்சாவடிகளில் வரும் வாகனங்களின் தரத்திற்கு ஏற்றவாறு 5 […]
கொரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்திற்கு அதிகப்படியான ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். கொரோனா காலகட்டத்திலும் மக்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வரும் நமது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவமனைக்கும், மக்களுக்கும் உதவும் எண்ணத்தில் தற்போது தமிழகம் முழுவதும் 1005, 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்கி வருகின்ற நிலையில், இந்த சேவையை விரிவுபடுத்தும் நோக்கில், தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தின் கீழ் 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக, 103 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேலும் 500 ஆம்புலன்ஸ்கள் […]
கேரள மக்களால் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை தமிழகத்திலும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. மலையாள மொழி பேசும் அனைத்து மக்களாலும் வருடம் தோறும் ஆவணி மாதத்தில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, தமிழகத்திலும் கேரள எல்லையோர மாவட்டங்களில் வெகு கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா தாக்கத்தால் எளிமையான முறையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கோவையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு, தனிநபர் இடைவெளியுடன் ஓணம் பண்டிகையை கொண்டாட மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியிருந்தார். அதனை […]
உயிரிழந்த ஆயுதப் படை வீரர் பிரபுவின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் – சென்னிமலை மாநில நெடுஞ்சாலையில், திட்டுப்பரை என்ற இடத்தில் சென்ற ஜூன் 29 ஆம் தேதி அன்று சோதனைச்சாவடி நோக்கி ஒரு லாரி வேகமாக வந்து நிற்காமல் சென்றதால் அந்த இடத்தில் பணியில் நின்று கொண்டிருந்த ஆயுதப் படை வீரர் இரு சக்கர வாகனத்தில் விரட்டி சென்ற சம்பவத்தில் 23 வயது காவலர் பிரபு உயிரிழந்துவிட்டார். […]
மக்கள் வங்கிகளில் பெற்றுள்ள கடன் தொகைக்கு தவணை செலுத்தும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என முக ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா காலகட்டங்களில் பொருளாதாரம் என்பது மிகவும் சரிவடைந்து வருகின்ற நிலையில், மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கு கூட கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வங்கிகளில் பெற்றிருக்கும் கடன் தொகைக்கு தவணை முறையை நீட்டிக்க வேண்டும் என ஏற்கனவே வைத்த கோரிக்கையில் அரசு அவகாசம் கொடுத்திருந்தது. அந்த அவகாசம் ஆகஸ்ட் 31 ல் நிறைவடைய உள்ளது. அதனால் தற்பொழுது […]
எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளுக்காக விண்ணப்பிக்க அரசு செப்டம்பர் 18ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்துள்ளது. நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் என அரசு உத்தரவு தெரிவித்திருந்தது. மேலும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வுக்கு உரிய கட்டணம் செலுத்தி இருந்தால் அவர்கள் அனைவரும் பாஸ் எனவும் அரசு தெரிவித்திருந்தது. தற்பொழுது கல்லூரி பள்ளிகளில் மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில்,தமிழகத்தில் உள்ள அரசு […]
இறுதி செமஸ்டர் தேர்வுகள் எப்பொழுது, எவ்வாறு நடத்தலாம் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா தொற்றால் பல்வேறு துறைகள் முடக்கப்பட்டு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இத்தகைய சூழலில் மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஆல் பாஸ் என்றும் சமீபத்தில் அரசு உத்தரவு தெரிவித்திருந்தது. ஆனால் இறுதிப பருவத்தில் படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு எந்த விலக்கும் கிடையாது என்றும் அவர்களுக்கு தேர்வு என்பது கட்டாயம் என […]
நேற்று ஒரே நாளில் மது பிரியர்கள் அதிக மதுபான பாட்டில்களை வாங்கி கோடிக்கணக்கில் வசூல் அள்ளிக் கொடுத்துள்ளனர். உலகம் முழுவதும் மக்களை முடக்கிப் போட்டு இருக்கும் இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. என்னதான் ஊரடங்கு அமலில் இருந்தாலும் மது பிரியர்களை கட்டுக்குள் கொண்டு வருவது சற்று சிரமமாகத்தான் உள்ளது. ஆனால் அவர்களால் தான் மாநிலத்தில் பொருளாதார இழப்பு மேம்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் நேற்று […]
ஓணம் திருநாளை முன்னிட்டு கேரள மக்களுக்கு பல்வேறு தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். கேரள மாநிலத்தின் சிறப்பாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்றாக ஓணம் பண்டிகை உள்ளது. தற்பொழுது இத்தகைய ஓணம் பண்டிகைக்கு பல்வேறு தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை கேரள அரசுக்கும் மக்களுக்கும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்த பண்டிகை குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இந்த மகிழ்ச்சியான ஓணம் திருநாளில் நமது அன்பு, இரக்கம், உழைப்பு அனைத்தையும் நாட்டின் வளர்ச்சிக்கும், வளமைக்கும் […]
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது குறித்து தமிழக முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக விவசாயிகள் அரசிடம் வைத்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, வைகை அணையில் நாளை முதல் தண்ணீர் திறந்து விடுவது பற்றி முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசனப் பகுதியில் முதல் போக […]
மத்திய அரசு வெளியிட்டுள்ள நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை மாநில அரசுகள் பின்பற்றுமா என கேள்வி எழுந்துள்ளது. நாடு முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடையும் நேரத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு பற்றிய சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஊரடங்குத் தளர்வுகளை தமிழக அரசு முழுமையாகப் பின்பற்றுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றிரவு, தொடங்க உள்ள நாலாம் கட்ட ஊரடங்கு வழிகாட்டு நெறிகளை மத்திய அரசு வெளியிட்டது. மத்திய அரசு […]
தமிழக அரசு 4 மாவட்ட ஆட்சியரை பணியிடை மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 4 மாவட்ட கலெக்டர் களை இடமாற்றம் செய்வது குறித்து தமிழக அரசு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கோவை மாநகராட்சி ஆணையர், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இடமாற்றம் செய்வது குறித்த அறிக்கையில், கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்வரண் குமார் என்பவர் ஜடாவத் வேளாண்துறை துணை செயலாளராக மாற்றம் […]
ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற அண்ணாமலை பாஜக கட்சியின் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை, சென்ற மே மாதம் தனது பணியைத் துறந்து ஓய்வு அறிவித்தார். தான் செய்த பணிக்கு பின் பொதுவாழ்வில் ஈடுபடுவதாகத் கூறியிருந்த அண்ணாமலை, சமீபத்தில் டெல்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் போன்றோர் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்துள்ளார். பாஜக கட்சியில் சேர்ந்த அண்ணாமலை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், […]
செப்டம்பர் மாதத்திற்கான பொருட்கள் வாங்குவதற்கு ரேஷன் கடைகளில் இருந்து டோக்கன்கள் இன்றுமுதல் வீடு வீடாக வழங்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளது அந்த வகையில் ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம் கூடுவதையும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பதற்காக அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்காக தற்பொழுது வரை ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் மக்களுக்கு வீடுகளுக்கே சென்று டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் ரேஷன் கடைகளில் மக்கள் […]
இனியும் ஊரடங்கு தேவைதானா என மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தமிழக அரசிற்கு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் நாடெங்கும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் மிகுந்த அளவு பொருளாதார இழப்பை நாடு சந்தித்திருக்கிறது. மேலும் பொது போக்குவரத்து முடக்கப்பட்டு பணிகளுக்கு செல்ல முடியாமல் பலர் வீட்டில் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பல கட்சித் தலைவர்கள் தொண்டர்கள் இந்த ஊரடங்கு நீக்கம் செய்ய வேண்டும் […]
மாணவர்கள் தேர்வு எழுதாமல் ஆல் பாஸ் என்று அறிவித்ததை முன்னிட்டு தமிழக முதல்வருக்கு போஸ்டர் அடித்து மாணவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிலையங்கள், தேவாலயங்கள் போன்றவை மூடப்பட்டு மக்கள் நடமாட்டம் இல்லாமல் மாணவர்கள் வீட்டில் முடங்கிக் கிடக்கும் நிலையில் உள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழக அரசு தேர்வு எழுதாமல் மாணவர்களை பாஸ் செய்ய வேண்டும் என்று அறிவித்ததில் இருந்து […]
புதுச்சேரியில் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கபட்டு, நடைமுறைப்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். முழு நாடும் கொரோனா வைரசுடன் போராடி கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில், நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இந்தியா முழுவதும் இதற்கான தளர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், வைரஸின் தீவிரம் அதிகரித்து கொண்டு தான் செல்கிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கததில் தற்போது புதுச்சேரி அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 32 பகுதிகளில், வருகின்ற […]
இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கு தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள இந்த காலகட்டத்தில் பல்வேறு கல்வி நிலையங்கள் மூடப்பட்டு மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்தச் சூழலிலும் கல்வி சம்பந்தப்பட்ட அறிவிப்புகளை மாநில அரசு மாணவர்களுக்கு கல்வியில் தாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு அறிவிப்புகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஒரு முக்கிய அறிவிப்பை தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. […]
பள்ளித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக முதல்வர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்ட ஊரடங்கால் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டு மாணவர்கள் வீட்டிலிருந்து வருகின்றனர். இதனிடையே நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும், ஒத்திவைக்கப்பட்டும், வருகிறது. மேலும் இதற்கான அறிவிப்பை மத்திய அரசும், மாநில அரசும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. மாநில அரசைப் பொறுத்தவரை பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கல்லூரி […]
நாடு முழுவதும் இ – பாஸ் சேவை ரத்து செய்யப்படுவது குறித்து வருகிற 29-ஆம் தேதி முதலமைச்சர் தெரிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் 6 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஏற்கனவே இந்த ஊரடங்கில் அரசு ஏராளமான தளர்வுகள் வழங்கியுள்ளது. இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதனைப் போக்க நாடு முழுவதும் […]
கொரோனா வைரஸ்க்கான தடுப்பு மருந்தை சித்த மருத்துவ இயக்குனரகம் தொடங்க இருப்பதாக இன்று கையெழுத்திட்டுள்ளது. உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு நாடுகளில் தடுப்பு மருந்து தயாரிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், சென்னை டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டறிய சித்த மருத்துவக் குழுவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. துணை வேந்தர் சுதா சேஷய்யன் முன்னிலையில், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் கணேஷ், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் […]
மத்திய மாநில அரசுகளை குறைகூறுவதிலேயே குறியாக இருக்கிறார் ஸ்டாலின் என எல் முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தியாகராஜ நகரில் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் எல் முருகன் தற்போதுள்ள அரசியல் பிரச்சனை குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது. வருகின்ற காலம் பாஜகவின் காலம். பாஜகதான் அரசியலை நிர்ணயிக்க உள்ளது. கொரோனா சூழலை கையாளுவதில் உலகிற்கு […]
ரவுடிகளுடன் அரசியல்வாதிகள் தொடர்பு வைத்திருப்பதாக நீதிமன்ற நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் தற்போது பல்வேறு சூழலில் போலீசார் தாக்கப்படும் நிலை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி காவலர் சுப்பிரமணியனின் மரணம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் யாரும் வாய் திறக்காதது வேதனை தருவதாக, உள்ளது என நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததை எதிர்த்து வேலு என்பவர் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு […]
மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி மூலம் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்க வரும் வியாழக்கிழமை வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கல்வி நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள் போன்றவை மூடப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் மாணவர்களுக்கு வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் வழியாக கற்றுத் தரப்படுகிறது. ஆனால் இந்த வகுப்புகள் மூலம் எல்லா மாணவர்களும் பயனடைகிறார்களா? என்றும், ஆன்லைன் மூலம் பாடம் கற்கும் மாணவர்களின் கண்கள் பாதிப்படைவதாகவும், மேலும் ஆபாச படங்கள் குறுக்கீடுவது குறித்தும் உயர் நீதிமன்றத்தில் […]
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நீட் மற்றும் ஜெ.இ.இ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் உள்ள கொரோனா பேரழிவு, வெள்ளப் பாதிப்பு போன்ற நெருக்கடியான சூழ்நிலைகளில், பொதுப் போக்குவரத்திற்கு தடைகள் விதிக்கப்பட்டு மாணவர்கள் தேர்வு எழுதும் மையங்களை அணுக முடியாத சூழல் நிலவி வருகிறது. மேலும் கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களும், வசதி வாய்ப்புகள் குறைந்த மாணவர்களும் தேர்வு எழுதும் மையங்களுக்கு வருவது என்பது இயலாத ஒன்று என மு.க.ஸ்டாலின் மத்திய […]
தேசிய கொடியை அவமதித்த வழக்கில் நடிகர் எஸ்வி சேகர் காவல்துறையில் சரணடைந்துள்ளார். தேசியக் கொடியை அவமதித்ததாக நடிகர் எஸ்வி சேகர் மீது, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜ ரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி. சேகர், தேசியக் கொடியை அவமதித்தும், தமிழ்நாடு முதலமைச்சரின் பெயருக்கு அவதூறு விளைவிக்கும் வகையிலும் பேசி சமூக வலைதளங்களில் பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். எனவே அவர் மீது […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசுகையில் இந்தியாவின் மருத்துவ தலைநகர் தமிழ்நாடு என கூறியுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு பல்வேறு தற்காப்பு வழிமுறைகளை கொடுத்து சிறப்பாக செயலாற்றி வருகிறது. மேலும் பல்வேறு தலைவர்கள் நோய் தடுப்பு மையங்கள் மற்றும் பரிசோதனை மையங்களுக்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பழனிசாமி பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறார். இந்நிலையில் அண்மையில் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றின் பட்டமளிப்பு […]
பிரபல பாடகர் எஸ்பிபி உடல்நிலை குறித்து பரவிய செய்தி பொய்யென்று எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார். பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்பொழுது எஸ்பிபி உடல்நிலை சீராக உள்ளதாக வதந்தி பரவி வருகிறது. இதுகுறித்து எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மகன் சரண் கூறுகையில், “இன்று எனது தந்தை கொரோனாவிலிருந்து மீண்டுவிட்டார் என்ற தகவல் பரவிய செய்தி, துரதிர்ஷ்டவசமானது. எனது தந்தை […]
தலைமைச் செயலாளர் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களிடம் ஆலோசனை நடத்துகிறார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கையைவிட குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று மட்டும் 5,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,79,385 ஆக உள்ளது. […]
இ – பாஸ் முறை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார் என ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு இடங்களில் இயங்கி வரும் தடுப்பு முகாம்கள் மற்றும் பரிசோதனை மையங்களை பல்வேறு தலைவர்கள் சமீப காலங்களில் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் உள்ள கொரோனா தடுப்பு முகாம் மற்றும் பரிசோதனை மையத்தை ஆய்வு செய்ய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சென்றிருந்தார். அதன்பின்அங்கு செய்தியாளரை சந்தித்து […]
உதயநிதி ஸ்டாலின் மண் பிள்ளையாரை கையில் வைத்துக் கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். திமுக இளைஞர் அணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின் மண் பிள்ளையாரை வைத்துக்கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். திமுக கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் பிள்ளையார் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவுசெய்வது என்பது இதுவே முதல்முறை ஆகும். திமுக தலைவர் ஸ்டாலின் பொருளாளராக இருந்தபோது 2014இல் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து அதற்கு மறுப்புத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். தற்போது […]
தமிழகத்தில் இ பாஸ் முறை ரத்து செய்யப்படுவதை குறித்து இன்று முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை கூட்டம் நடத்த இருக்கிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில் சில தளர்வுகளை கொடுக்க வேண்டும் என்றும் ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் பல்வேறு அமைப்புகள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இ பாஸ் முறையை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சித் தலைவர்களான மு க ஸ்டாலின், மற்றும் பலர் அறிவுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே மத்திய […]
இன்று முதல் பிளஸ்-1 படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நாடு முழுவதும் நடத்தப்படுகிறது என அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு அலுவலகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் போன்றவை மூடப்பட்டு இருக்கின்றன. பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில் சென்ற 17ஆம் தேதி ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை […]
சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷின் தந்தை இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தந்தை முன்னாள் தலைமை காவல்துறை அலுவலர் எல்.என். வெங்கடேசன். இவர் முன்னாள் சட்டப்பேரவை காங்கிரஸ் உறுப்பினர் ராணி வெங்கடேசனின் கணவர் ஆவார். இவர் இன்று உடல்நலக்குறைவு காரணமாக மரணமடந்துள்ளார். இவரின் மறைவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ள இரங்களில், ” காவல் துறையில் படிப்படியாக பல்வேறு உயர் பொறுப்புகளைப் பெற்று சிறப்பாக செயல்பட்டவர். […]
தமிழ்நாட்டில் இ – பாஸ் முறை தளர்வு அமலுக்கு வந்தால் அது சற்று சவாலான விஷயமாகம் என விஜய் பாஸ்கர் தெரிவித்துள்ளார். கோவையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி வேலுமணி ஆகியோர் கலந்துகொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். அப்பொழுது பேசிய விஜய்பாஸ்கர், ” கோவையில் இதுவரை 8,532 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். மேலும் இங்கு 78 சதவீத மக்கள் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். கோவையில் மட்டும் ஒரு […]
பள்ளிகளில் திருடு போன மடிக்கணினிகளை குறித்து அறிக்கையாக தயார் செய்து வழங்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. வருடம் தோறும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினிகள் வழங்கப்படுகிறது. இவ்வாறு அரசிடம் இருந்து வழங்கப்படும் மடிக்கணினிகள் திருடு போகிறது என பல்வேறு பள்ளிகளிலிருந்து புகார்கள் நிறைய வந்திருக்கின்றன. இதனால் 2012 முதல் தற்பொழுது வரை காணாமல்போன மடிக்கணினிகளை பற்றிய தகவல்களை பள்ளிகள் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் கொடுக்கப்பட்டுள்ள புகாரை […]
புதுச்சேரியை போன்றே இ – பாஸ் முறையை தமிழகத்திலும் ரத்து செய்ய வேண்டும் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் போடப்பட்ட ஊரடங்கு தற்போது வரை அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் மக்கள் வெளியிடங்களுக்கு சென்று வர மிகவும் அவதிப்படுகின்றனர். இந்நிலையை கருத்தில்கொண்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஏற்கனவே இந்த ஊரடங்கை அப்புறப்படுத்த அறிவுறுத்தல் கூறியும் மாநில அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை கண்டித்து மு க ஸ்டாலின் […]
மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடையை நீக்கம் செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சென்ற மார்ச் மாதம் 25ஆம் தேதி போடப்பட்ட முழு ஊரடங்கை, மே மாதம் 31ஆம் தேதி மத்திய அரசு திரும்ப வாங்கியுள்ளது. அதன் பிறகு நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அமல்படுத்தி வருகின்றன. மாநிலங்களுக்கு சென்றுவர மக்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கு தடை விதிக்கக் கூடாது என்று அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் மத்திய […]
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை கல்வியல் கல்லூரிக்கு மாற்றம் செய்ய கல்லூரி நிர்வாகம் தெரித்துள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கலைக் கல்லூரிகளில் எம்.எட். (M.Ed.) மற்றும் நெட், ஸ்லெட் அல்லது பிஹெச்டி டிகிரி படித்து முடித்து வேலை பார்த்து வரும் உதவி பேராசிரியர்கள் மற்றும் இணை பேராசிரியர்களை கல்வியியல் கல்லூரிகளுக்கு பணியிடை மாற்றம் செய்ய கல்லூரிக் கல்வி இயக்ககம் முடிவு செய்திருக்கிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் உள்ள காலி […]
நாடு முழுவதும் இன்று தளர்வு எதும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் இன்று ஒருநாள் மட்டும், தளர்வுகள் எதும் இல்லாத முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தின் தொடர்ச்சியாக ஆகஸ்ட் மாதத்திலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும், தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால், நள்ளிரவு 12 மணி தொடங்கி, இன்று வரை தளர்வற்ற முழு ஊரடங்கு நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு கிடக்கின்றன. பால் விநியோகம், […]
நடிகர் எஸ்வி சேகர் தன் மீது போடப்பட்டுள்ள குற்றத்திற்காக முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் தனியார் கம்பெனி ஒன்றில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நடிகர் எஸ்.வி.சேகர் மீது, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் மனு ஒன்றை அனுப்பி வைத்தார். அந்த மனுவில், நடிகர் எஸ்.வி.சேகர், யூ-டியூப் சேனலில் இந்திய தேசியக்கொடியை அவமதித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் […]
குடும்ப வறுமை காரணமாக தனது உடல் உறுப்பை விற்பனை செய்ய அனுமதி தாருங்கள் என போக்குவரத்து ஊழியர் ஒருவர் மனு கொடுத்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மாநில அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்தத்தின் பேரில் ஓட்டுநராக வேலை பார்த்து வரும் தமிழ்ச்செல்வம் தனது குடும்ப வறுமை காரணமாக உடல் உறுப்பை விற்க அனுமதி வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். சென்ற 6 மாத காலமாக சம்பளம் கொடுக்காததால், பல சிரமங்களுக்கு […]