மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலர் கூறிய கருத்தை எதிர்த்து கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய ஆயுஷ் அமைச்சகத்தில் இருந்து ஆகஸ்ட் 18ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக நேச்சுரோபதி மருத்துவர்களுக்கு யோகா பயிற்சி நடைபெற்றது. அதில் நாடு முழுவதிலும் இருந்து 350-க்கும் மேலான மருத்துவர்கள் பங்கேற்றனர். அந்த யோகா பயிற்சியில் 37 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த நிகழ்ச்சியின்போது மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலர் ராஜேஷ் கொட்டேச்சா இந்தியில் பேசியுள்ளார். அப்போது […]
Tag: மாநிலம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடை பெற்று வருகின்றன. அந்த வகையில் திருச்சி உச்சி பிள்ளையார் கோவிலில் வருடம் தோறும் கொண்டாடப்படும் பூஜை போன்று இந்த வருடம் கொண்டாடப்படவில்லை. மேலும் எப்பொழுதும் நடக்கும் பூஜைகள் மட்டுமே நடைபெற்று பக்தர்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. அதேபோல் கோவையில் கொரோனா வைரஸ் உருவத்தை விநாயகர் வதம் செய்வது […]
அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகள் கல்லூரிகள் திறப்பது குறித்து முதலமைச்சரே முடிவெடுப்பார் என தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள சொக்குமாரி பாளையத்தில் புதிய பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் கிளை நிலையத்தை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். கூட்டுறவு சங்கத்தின் கிளையை திறந்து வைத்த பின் அமைச்சர் செங்கோட்டையன் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய விதை நெல் உற்பத்தி நிலையம் மற்றும் சேமிப்பு கிடங்கு அமைக்க பூமி பூஜையை தொடங்கி வைத்தார். அதனைஅடுத்து செய்தியாளர்களிடம் […]
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியராக பணிபுரிந்து அதன்பின் குடியரசுத் தலைவராக உயர்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் நினைவு தினத்தை செப்டம்பர் 5ஆம் தேதி கொண்டாடும் வகையில் நாட்டில் ஆசிரியர் பணியில் புகழ்பெற்ற ஆசிரியர்களுக்கு இந்நாளில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதும் 47 ஆசிரியர்களை மத்தியக் கல்வி அமைச்சகம் தேர்வுசெய்து இருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் […]
கேல் ரத்னா விருது பெற இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பனுக்கு பாஜக தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். கேல்ரத்னா விருது பெற இருக்கும் மாரியப்பனுக்கு பாஜக தலைவர் வேல்முருகன் கூறியுள்ள வாழ்த்துச் செய்தியில், “விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான கேல் ரத்னா விருதானது, 2016ஆம் ஆண்டு ரியோவில் நடந்த பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு கொடுக்க பரிந்துரை செய்யப்பட்டது, மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது என்றும் […]
நாடு முழுவதும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பெரும் தலைவர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ள வாழ்த்துச் செய்தியில்,” விநாயகர் சதுர்த்தி, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் அரவணைக்கும் மக்களின் உற்சாகம், மகிழ்ச்சி, சகிப்புத்தன்மை ஆகியவற்றின் வெளிப்பாடு” இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேலும் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ள செய்தியில், “பெரும் கூட்டமும் , பிரம்மாண்ட ஊர்வலங்களும் இதன் அடையாளமாக இருந்தாலும், கொரோனா […]
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் மக்கள் கடைகளில் தேவையான பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர் . சென்னை புதுவண்ணாரப்பேட்டை சந்தைகளில், கடைகளில், வீட்டில் வைப்பதற்காக சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். மேலும் அவல், பொரி, கடலை என விநாயகருக்கு படைக்கும் படைப்பு பொருள்களையும் வாங்கி சென்றதால் வியாபாரம் மிகவும் ஆரவாரத்துடன் நடக்கிறது. திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட்களிலும் பூஜை பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை – தாம்பரம், […]
இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. முழுமுதற் கடவுள் விநாயகப் பெருமான் அவதரித்த திருநாளாக வருடம்தோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை நான்காம் நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலையில் எழுந்து, நீராடி, வீடுகள்தோறும் மாவிலைத் தோரணம் கட்டி, இலையில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகரை வைத்து, அருகம்புல், மல்லிகைப்பூ, எருக்கம்பூ போன்ற பூக்களால் அலங்கரித்து, முக்கனிகளுடன், அப்பம், கொழுக்கட்டை, அவல், பொரி, கொய்யாப்பழம் ஆகிய பொருட்களை வைத்து […]
மேல்நிலை வகுப்புகள் மற்றும் பாலிடெக்னிக் வகுப்புகள் எப்பொழுது துவங்கும் என விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். பள்ளிக்கு சென்று படிக்காமல் நேரடியாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுத ஹால் டிக்கெட் வாங்கியிருந்த மாணவர்களுக்கான தனித்தேர்வர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 11ம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களின் சேர்க்கையானது ஆகஸ்ட் 24ல் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனி தேர்வர்களை எழுத இருந்த மாணவர்களை தேர்ச்சி […]
இ பாசால் தொற்று பரவுவதை கண்டுபிடிக்க முடிந்தது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இயங்கி வருகிறது என்றார். மேலும் ரவுடித்தனம் செய்து வருபவர்களை சட்டப்படி தண்டிக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். நாட்டில் நடந்த ஒரு சில சம்பவங்களை வைத்து காவல்துறையினரை குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் முதலமைச்சர் கூறினார். மேலும் திமுக ஆட்சியில் இருந்த போது […]
வீட்டிலிருந்து கல்வி தொலைக்காட்சியை பார்ப்பதை வைத்து மாணவர்களின் வருகைப் பதிவேடு கணக்கிட முடியும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சிக்கு பாத்தியப்பட்ட சந்தன குளத்தில் உள்ள குடிமராமத்து பணிகளை பூமி பூஜை செய்து, அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். அதன்பின் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பணிகளை சிறப்பாக செய்து வந்ததற்காக நற்சான்றிதழ்களை வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், காலத்தின் தேவைக்கு ஏற்றவாறு பாடங்களை குறைக்கலாமா? வேண்டாமா? […]
மதுரை அல்லது திருச்சியை தலைநகராக மாற்ற வேண்டும் என்று அமைச்சர்கள் பேசியது அவர்களின் கருத்துதான், அரசின் கருத்து கிடையாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னைக்கு அடுத்ததாக மதுரையை 2வது தலைநகரமாக மாற்ற வேண்டும் என்று அமைச்சர்கள் செல்லூர் ராஜூ மற்றும் ஆர்.பி.உதயகுமார் வழியுறுத்தி கூறியிருந்தனர். அதே போலவே திருச்சியை 2 வது தலைநகராக மாற்ற வேண்டும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வலியுறுத்திருந்தார். இந்த அமைச்சர்களின் யோசனைக்கு பல கேள்விகள் எழுந்து வந்தது. அதாவது […]
கடம்பூர் ராஜுவின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். தூத்துகுடி மாவட்டம், கோவில்பட்டி தொகுதியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினராகவும், தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமாக இருப்பவர் கடம்பூர் ராஜூ. இவர் இன்று தனது 61ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இதையடுத்து, அவருடைய பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் இன்று காலை சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இதை தொடர்ந்து, அவர் […]
கொரோனாவால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் மக்களுக்கான திட்டங்கள் குறைவில்லாமல் நடத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி பணிகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக வேலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆங்காங்கே நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்திய அரசிடம் இருந்து நிதி மாநில அரசிடம் வந்ததும், 600 கோடி ரூபாய் செலவில் ராணிப் பேட்டை குரோமியம் […]
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் இன்று மட்டும் 5,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றால் மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இன்று மட்டும் 5986 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இன்று மட்டும் 116 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இன்று ஒரே நாளில் 5742 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் மட்டும் கொரோனாவில் இருந்து […]
பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பி பாலசுப்ரமணியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை மிக மோசமாக உள்ளது என எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார். கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை மோசமான நிலையில் தொடர்ந்து வருவதாகவும், எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும் அவரது மகன் எஸ்பிபி சரண் மிக கவலையுடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சரண் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், […]
பிற மருத்துவத் துறையை ஒப்பிடுகையில் சித்த மருத்துவத்தை மாற்றான் தாய் போல் மத்திய அரசு பார்க்கிறது என கண்டனம் எழுந்துள்ளது. சித்த மருத்துவத்தை மாற்றான் தாய் போல நடத்துவதாக மத்திய அரசு மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது குறித்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத்தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்ற 10 வருடங்களில் ஆயுர்வேதா துறைக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும், […]
ஆலோசனைக் கூட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல கூடாது என்று காவல்துறையினர் அறிவுறுத்தலை எதிர்த்து இந்து மத சார்பினர் வெளிநடப்பு செய்துள்ளனர். காவல் துறையினர் விதித்த கட்டுபாடுகளை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் கட்டாயம் நடைபெறும் என பாரத் இந்து முன்னணி, இந்து சத்திய சேனா, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து துறைசர்ந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன. விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற 22 ஆம் தேதி கொண்டாட இருக்கின்ற நிலையில், கொரோனா நோய் பரவல் காரணமாக […]
இந்த வருடம் நீட் தேர்வு குறித்து சரியான முடிவு எடுக்கவில்லை என்றால் அதிமுக சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது மிகவும் கடினம் என கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 76வது பிறந்தநாளை ஒட்டி திருப்பூர் ராயபுரம் பகுதியில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான சுற்றுப்பயணத்தை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ”நீட் தேர்வு பயம் காரணமாக கோவையில் நேற்று மாணவி […]
தமிழகத்தில் இரண்டு நாட்களில் இபாஸ் விநியோகம் 2 லட்சத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் இ-பாஸ் என்ற அனுமதிச்சீட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கொடுக்கப்பட்டு வருவதால், மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு மீண்டும் வர மக்கள், ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில், ஒரே நாளில் மட்டும் சென்னைக்கு திரும்ப 13,853 பேருக்கு இ- பாஸ் வழங்கப்பட்டு இருப்பதாக மாநகராட்சி விளக்கம் கொடுத்துள்ளது. ஆகஸ்டு 1 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை மொத்தம் 1,27,489 பாஸ்கள் விநியோகிக்கப்பட்டு […]
பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி வழங்க வேண்டுமென எல். முருகன் கோரிக்கை வைத்துள்ளார். கர்நாடகம் போன்ற மாநிலங்களைப் பின்பற்றி தமிழகத்திலும் மக்கள் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி கொடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கோரிக்கை வைத்துள்ளார். சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு நாளை சிறப்பிக்கும் வகையில், அவரது உருவ படத்திற்கு மரியாதை செலுத்திய பிறகு […]
கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருநங்கைகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சேலம் மாவட்டம் ஐந்து ரோடு பகுதியில் அதிகமான திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இங்கு பிரகதி, ரம்யா, நிரஞ்சனா ஆகிய மூன்று திருநங்கைகள் தங்களை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்துவதாக கூறி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளன. மேலும், தற்கொலைக்கு முயற்சி செய்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களை மீட்ட காவல் துறையினர், […]
பவானிசாகர் அணையின் 66வது பிறந்தநாளை முன்னிட்டு அப்பகுதி மக்கள் கேக் வெட்டி ஆரவாரத்துடன் கொண்டாடினர். ஈரோடு மாவட்டத்தின் சத்தியமங்கலம் அருகே முக்கிய நீராதாரமாக விளங்கி வரும் பவானிசாகர் அணை கட்டும் பணி 1948ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1955 ஆகஸ்ட் 19ஆம் தேதி முடிவடைந்தது. இந்த அணை கட்டப்பட்டு இன்றோடு 65 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இதனால் அணையின் 66ஆவது பிறந்தநாளை அப்பகுதி மக்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த அணையின் பிறந்த நாளை முன்னிட்டு பவானிசாகர் பகுதியைச் சேர்ந்த […]
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை வாங்க சென்றாலோ அல்லது சிலை வைத்தாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை கண்காணிப்பு ஆணையர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி கிடையாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதேபோல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விநாயகர் சிலை வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை சார்பில் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிறு […]
திருவள்ளூர் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் நாய் பண்ணையில் புதைக்கப்பட்டிருந்த சம்பவத்தில் பின்னணி என்ன என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்தவர் 35 வயதான பிரியங்கா தனது கணவர் சீனிவாசனை பிரிந்து திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு பகுதியை அடுத்த வாணியமல்லி கிராமத்தில் சென்னை மாதவரத்தை சேர்ந்த நாய் பண்ணை உரிமையாளர் காட்வின் டோமினிக் என்ற காடிபாய் (40) என்பவருடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தங்கை பிரியங்காவை காணவில்லை […]
ஆற்றில் மீன் பிடிக்க சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூரை அடுத்த பூண்டி இந்தியன் வங்கி தெருவில் வசித்து வருபவர் 42 வயதான காளிதாஸ். இவர் திருவள்ளூரில் உள்ள டி.வி., பிரிட்ஜ் விற்பனை செய்யும் வீட்டு உபயோகப்பொருள் கடையில் வேலைப்பர்த்து வருகிறார். இவருடைய மகன் இமான் (16). பூண்டியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு, தற்போது பிளஸ்-1 வகுப்பு போக இருந்தார். நேற்று […]
திருப்பூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொள்ளை சம்பவத்தை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். திருப்பூர் மாநகராட்சிக்கு பாத்தியப்பட்ட குப்பாண்டம்பாளையம் பகுதியில் இருக்கும் கூட்டுறவு சங்கத்தில் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாகவும் இந்த முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். இருப்பினும், இதுவரை இவ்விவகாரத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததை சுட்டிக்காட்டி உள்ளனர். தமிழ்நாடு அரசு இதன் மீது தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கை […]
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நீதிமன்ற ஊழியர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதுவரை 1,570 நபர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இதில் 16 நபர்கள் உயிரிழந்த நிலையில் 865 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 689 பேர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கும் நிலையில், மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள, […]
சுதந்திர தினத்தை முன்னிட்டு பழனி கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சென்ற வருடம் வரை சுதந்திர தினத்தில் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களில் நாட்டின் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தப்படும். மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய கோவில்கள், தேவாலயம், பஸ், ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக […]
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு சொந்தமாக்குதல் என்பது கொள்கை முடிவு என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழக முதலமைச்சராக இருந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் வாழ்ந்து வந்தார். அவர் வாழ்ந்த இடத்தை நினைவிடமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்து அரசுக்கு சொந்தமாக்கிக்கொண்டது. இது பற்றிய தகவல் அரசிதலிலும் வெளியிடப்பட்டது. மேலும் அந்த இல்லத்திற்கான தொகையை நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தி இருந்தது. இதனை எதிர்த்து ஜெ.தீபா […]
கொரோனாவில் இருந்து மீண்டு வந்த துப்புரவு தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு மாகடி ரோடு காவல்துறை எல்லைக்கு பாத்தியப்பட்ட பகுதியில் 44 வயதுள்ள நபர் ஒருவர், மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றிய படி அங்கு வசித்து வந்தார். சென்ற ஒரு வாரத்திற்கு முன்பாக அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் பூரண குணமடைந்து, மருத்துவமனையில் இருந்து துப்புரவு […]
விளையாட்டு காரணமாக ஏற்பட்ட தகராறில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் தாலுகா பாகலூர் அருகே உள்ள கொடியாளம் கிராமத்தில் வசித்து வருபவர் சின்னயப்பா. இவருக்கு 22 வயதான சுனில் என்ற ஒரு மகன் இருக்கிறார். சுனில் கர்நாடக மாநிலத்தில் தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கும் கொத்தப்பள்ளியை சேர்ந்த நவீன் (22) என்பவருக்கும் இடையே கைப்பந்து விளையாடுவது தொடர்பாக […]
கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தங்கியிருந்த வீடு மற்றும் அப்பகுதியை சுற்றியுள்ள தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அங்கு நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. பாரபட்சம் ஏதும் பாராமல் அனைவரையும் கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதைத்தொடர்ந்து தொடர்ந்து, […]
வாடகை கார்களை ஓட்டி வரும் டிரைவர்களுக்கு சாலை வரியை ரத்து செய்யக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். சாலை வரியை ரத்து செய்வது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில்:- ” தமிழ்நாட்டில், கொரோனா வைரஸ் பரவல் அச்சத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பவர்களில் சுற்றுலா உள்ளிட்ட பயன்பாடுகளுக்கான வாடகை கார் ஓட்டுனர்களும், உரிமையாளர்களும் அடங்குவர். பல வழிகளில் வருவாய் இழப்பையும், வாழ்வாதார பாதிப்புகளையும் எதிர் கொண்டு வரும் அவர்களுக்கு மத்திய, மாநில […]
மத்திய பல்கலைக் கழக தேர்வு வாரியம் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 22ம் தேதி அன்று அனைத்து ஆண்டு மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்படும் என திருவாரூர் மத்திய பல்கலைக் கழகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகளை நடத்திக்கொள்ள துறை தலைவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக் கழகங்கள் முழுவதுமாக தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் குறிப்பாக திருவாரூர் மாவட்டம் […]
நாடு முழுவதும் 6 ஆயிரம் ரயில் நிறுத்தங்களை கைவிட ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ள நிலையில் தமிழகத்தில் 62 ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்காது என தெரியவந்துள்ளது. ரயில்வே துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை ரயில்வே வாரியம் எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் குறைவாக வருவாய் உள்ள ரயில் நிலையங்களை கணக்கு எடுத்து இருக்கின்றன. அதன்படி 1728 ரயில் நிலையங்கள் நாடு முழுவதும் வருகின்றன. இந்த ரயில் நிலையங்களில் உள்ள 6000 ரயில் […]
கொரோனா பரிசோதனை முடிவு கிடைப்பதற்காக 60 கிலோமீட்டர் கணவருடன்அலைந்து திரிந்த கர்ப்பிணி பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது. பெங்களூருவில் கொரோனா தொற்று தனது வீரியத்தை தினந்தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை கிடைப்பதிலும், பிற நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைப்பதிலும் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கர்ப்பிணிகள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பெங்களூரு புறநகர் ஒசகோட்டேயை […]
முகக் கவசங்கள் என்ற பெயரில் வந்த பார்சலில் ரூ. 70 லட்சம் மதிப்புள்ள 5ஜி செல்போன்கள் இருந்ததை கண்டறிந்து அவற்றை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை விமான நிலையத்துக்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் மருத்துவ உபகரணங்கள் கொண்டு வருவதற்காக சரக்கு விமானங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. இந்நிலையில் மருத்துவ உபகரணங்கள் என்ற பெயரில் வெளிநாடுகளில் இருந்து போதை மாத்திரைகள் கடத்தப்பட்டு வந்ததை சுங்க இலாகா அலுவலர்கள் கண்டுபிடித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து, ஹாங்காங்கில் […]
வெளிநாட்டில் பணிபுரிந்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன். இச்சம்பவத்தின் பரபரப்பான பின்னணி வெளியாகி உள்ளது. கேரளா மாநிலம் கோட்டயம், மோனிப்பள்ளியை சேர்ந்த மெரின் ஜாய் என்பவருக்கு 26 வயது. இவர் அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியர் ஆக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை இவர் வழக்கமாக வேலைக்கு சென்று விட்டு, மருத்துவமனையை விட்டு வெளியே வரும் போது, திடீரென மர்ம நபர் ஒருவரால் பல முறை கத்தியால் குத்தப்பட்டு […]
மத்திய பாஜக அரசினுடைய புதிய கல்விக் கொள்கையை மறுஆய்வு செய்ய வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். புதிய கல்விக் கொள்கையை மாற்ற வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய முக்கியம் வாய்ந்த கல்வித்துறையில், சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்கும், புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்தும்போதும் விரிவான விவாதங்கள், கலந்தாய்வுகள் நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், நாடாளுமன்ற மக்களாட்சி கோட்பாடுகளை அலட்சியப்படுத்தி வரும் பாஜக அரசு, தற்போது புதிய கல்விக் கொள்கையை […]
புதிய கல்விக்கொள்கை தொடர்பாக முதலமைச்சருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த வேலம்பாளையம் பகுதியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதியதாக அமைக்கப்பட்ட கால்நடை கிளை மருத்துவமனையை அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், கருப்பணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.வி.ராமலிங்கம், சிவசுப்பிரமணி, தென்னரசு, தோப்பு வெங்கடாசலம் ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து 54 பயனாளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான தமிழ்நாடு அரசின் விலையில்லா கோழிகளை வழங்கினர். […]
தமிழகத்தில் நாளை பொது முடக்கம் முடிவடைந்திருக்கும் நிலையில் நேற்று மாவட்ட ஆட்சித் தலைவருடன் முதல்வர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து தற்போது மருத்துவ நிபுணர் குழுவின் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இதில் தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி தேதி வரை பொதுமக்கள் நீட்டிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்
கணவனை இழந்த விதவை பெண்ணை கிராம மக்கள் சூனியம் செய்பவர் என்று கூறி அடித்து துன்புறுத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 36 வயதான ஒரு பெண் தனியாக வசித்து வந்துள்ளார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்துவிட்டார். தன் கணவரை தானே மாந்திரீகம் செய்து கொன்றுவிட்டார் எனவும், அந்தப் பெண்ணை ஒரு சூனியக்காரி எனவும் ஊர் மக்கள் அவள் மீது வீண் குற்றங்களைசுமத்தினர். அத்துடன் அப்பெண்ணை தொடர்ந்து கொடுமை […]
கொரோனா மரணத்தால் பொய்க்கணக்கு எழுதிய அரசு அனைத்து திட்டங்களுக்கும் இதைப்போன்றே பொய்க்கணக்கு எழுதி இருக்கும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நாகை மாவட்ட பா.ஜ.க. பொதுச் செயலாளரும், பூம்புகார் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளருமான அமிர்த விஜயக்குமார் தற்போது திமுகவில் இணைந்து உள்ளார். அவருடன் சேர்ந்து பாஜக, அஇஅதிமுக, பாமக உள்ளிட்ட பல கட்சிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவர்கள் இருந்த கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் […]
கொரோனா நோயாளிகளுக்கு 50% படுக்கை வசதி அளிக்காத தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடியூரப்பா எச்சரித்துள்ளார் சென்ற மார்ச் மாதத்தில் தொடங்கிய கொரோனா தொற்று பரவல் தற்போது அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த 3 மாத காலமாக குறைவான அளவில் இருந்த பாதிப்பு சென்ற ஜூன் மாதம் முதல் தினத்தோறும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த நிலையில் இருக்கிறது. குறிப்பாக பெங்களூருவில் கொரோனா தொற்று […]
தங்களது மாநில மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதற்காக ஹரியானா மாநில அரசு அறிவித்த திட்டம் மற்ற மாநில மக்களிடையேயும் வரவேற்பை பெற்றுள்ளது. கார்ப்பரேட் எனப்படும் பன்னாட்டு தொழில் நிறுவனங்களாக இருக்கட்டும், தொழிற்சாலைகளாக இருக்கட்டும் வளர்ந்து வரக்கூடிய நகரங்களான சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளிலும் அல்லது ஒவ்வொரு மாநிலத்திலும் தலைநகரங்களில் மட்டும் தான் நிறுவப்படுகின்றன. இப்படி நிறுவப்படும் தொழிற்சாலைகளால் அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதை மையமாகக் கொண்டே அரசு முதலில் அனுமதி அளிக்கும். ஆனால் வேலை […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்23,932420 பேர் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கு வருகிற 30-ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் அமலுக்கு வந்துள்ள நிலையில் தினந்தோறும் கொரோனா எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்து கொண்டே வருகிறது. நாடு முழுவதும் கொரானாவின் மொத்த பாதிப்பு 6 லட்சத்து 97 ஆயிரத்து 836 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 162 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் வீடு திரும்பிய வர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து […]
தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தலாமா என்று ஆலோசிக்க 11 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டும், இரத்து செய்யப்பட்டும் உள்ளன. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற கேள்விகள் வலுத்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து ஆராய 11 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. […]
சரக்கு மற்றும் சேவை வரி குறித்த விவரங்களை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது. இதனால் சரக்கு மற்றும் சேவை வரி கணக்குகளை தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே ஜிஎஸ்டி கணக்குகளை தாக்கல் செய்ய முப்பதாம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் இதற்கான காலக்கெடுவை […]
கொரோனா அறிகுறி தெரிந்தால் 3 நாட்களில் கட்டாயமாக மருத்துவரை அணுக வேண்டும் என சுகாதாரத்துறை செயளாலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இன்று தமிழகம் முழுவதும் ஜூலை 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து எல்லா மாவட்டங்களிலும் சோதனை சாவடிகள் கூடுதலாக அமைத்து காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கொரோனா தொற்று அதிகம் உள்ள சென்னை மாவட்டத்திலும் சோதனைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கிருமிநாசினி தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளில் தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னையில் நடைமுறையில் […]